search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sudharshan patnaik"

    • ஒடிசா பூரி கடற்கரையில் மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் 125 மணல் ரதங்களை உருவாக்கியுள்ளார்.
    • ரத யாத்திரை திருநாளில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை இனி பயன்படுத்த வேண்டாம்.

    ஒடிசா மாநிலம் பூரியில் புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயில் யாத்திரை விழா இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. கொரோனா காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு அனுமதி தரப்பட்டதால் யாத்திரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.

    பக்தர்களின் வெள்ளத்தில் அலங்கரிக்கப்பட்ட 3 ரதங்களில் ஜெகந்நாதர், தேவி சுபத்ரா, பாலபத்ரா வலம் வர உள்ளனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பூரி ஜெந்நாதர் யோயில் யாத்திரை திருவிழாவையொட்டி, ஒடிசா பூரி கடற்கரையில் மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் 125 மணல் ரதங்களை உருவாக்கியுள்ளார்.

    இதுகுறித்து சுதர்சன் பட்நாயக் கூறுகையில், " ஜெகநாதரின் புனித ரத யாத்திரையைக் குறிக்கும் வகையில் 125 மணல் ரதங்களை உருவாக்கியுள்ளோம். இது எங்களின் புதிய உலக சாதனையாக இருக்கும்.

    மேலும், இந்த ரத யாத்திரையில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை பயன்படுத்த வேண்டாம் என்று குறிக்கும் வகையிலும் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது" என்றார்.

    ×