என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Superbike"
- இந்த பைக் ரூ.16.5 லட்சத்திற்கு விற்பனையாகிறது.
- இந்த பைக் தொடக்கத்தில் கிளாசிக் சிவப்பு நிறத்தில் கிடைக்கும்.
உலகின் சக்திவாய்ந்த மோட்டார்சைக்கிலான டுகாட்டி 698 மோனோ பைக்கை டுகாட்டி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த பைக் ரூ.16.5 லட்சத்திற்கு விற்பனையாகிறது. இந்த பைக்கிற்கான முன்பதிவு ஏற்கனவே தெடங்கிய நிலையில், இம்மாத இறுதியில் டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பைக் தொடக்கத்தில் கிளாசிக் சிவப்பு நிறத்தில் கிடைக்கும். டுகாட்டி 698 மோனோ பைக் மாடலில் 659சிசி, லிக்யூட் கூல்ட் சூப்பர் குவாட்ரோ மோனோ என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த என்ஜின் 77.5 ஹெச்பி பவர், 63 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.
தேவைப்பட்டால் இந்த என்ஜினை 84.5 ஹெச்பி பவர், 67 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை வரை அதிகரித்து கொள்ளலாம்.
இந்த பைக் தான் உலகின் சக்திவாய்ந்த ஒற்றை சிலிண்டர் என்ஜின் ஆகும். இந்த பைக்கின் முன்பக்கத்தில் 330 மிமீ டிஸ்க் பிரேக்கும் பின்பக்கத்தில் 245 மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது.
- கவாசகி H2 SX சீரிஸ் மாடல்களில் 998சிசி, சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட, இன்-லைன் 4 சிலிண்டர் என்ஜின் உள்ளது.
- இரண்டு சூப்பர்பைக் மாடல்களிலும் அட்வான்ஸ்டு ரைடர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
கவாசகி இந்தியா நிறுவனம் 2024 நின்ஜா H2 SX மற்றும் நின்ஜா H2 SX SE மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இரு சூப்பர்பைக் மாடல்களிலும் புதிய புகை விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இவைதவிர பைக்கின் பெரும்பாலான டிசைன், அம்சங்கள், ஹார்டுவேர் மற்றும் எலெக்ட்ரிக் அம்சங்கள் முந்தைய வெர்ஷனில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.
2024 கவாசகி மாடலில் கூர்மையான முன்புறம், எல்.இ.டி. ஹெட்லைட்கள், டிரான்ஸ்பேரன்ட் வைசர், சைடு ஃபேரிங்குகள் உள்ளன. இவை பைக்கிற்கு அதிரடி தோற்றத்தை வழங்குகின்றன. இரு மாடல்களிலும் ஸ்ப்லிட்-சீட் செட்டப், பக்கவாட்டில் மவுன்ட் செய்யப்பட்ட எக்சாஸ்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய கவாசகி H2 SX மற்றும் H2 SX SE மாடலில் 998சிசி, சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட, இன்-லைன் நான்கு சிலிண்டர் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 200 ஹெச்.பி. பவர், 137.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
இரண்டு சூப்பர்பைக் மாடல்களிலும் அட்வான்ஸ்டு ரைடர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம், டயர் பிரெஷர் மானிட்டரிங் சிஸ்டம், வெஹிகில் ஹோல்டு அசிஸ்ட், பிலைன்ட் ஸ்பாட் டிடெக்ஷன், அடாப்டிவ் குரூயிஸ் கன்ட்ரோல், ஃபார்வேர்டு கொலிஷன் வார்னிங், ரைடு மோட்கள், டிராக்ஷன் கண்ட்ரோல், 6.5 இன்ச் டி.எஃப்.டி., ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, ஏ.பி.எஸ். மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன.
2024 கவாசகி நின்ஜா H2 SX மற்றும் நின்ஜா H2 SX SE மாடல்களின் விலை முறையே ரூ. 31 லட்சத்து 95 ஆயிரம், ரூ. 32 லட்சத்து 95 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதன் ஸ்டான்டர்டு வேரியன்ட் மெட்டாலிக் டயப்லோ பிளாக் நிறத்திலும், H2 SX SE மாடல் மெட்டாலிக் கிராஃபைட் கிரே நிறத்திலும் கிடைக்கின்றன.
- புதிய கவாசகி Z900RS மாடலில் 948சிசி, நான்கு சிலிண்டர்கள் கொண்ட லிக்விட் கூல்டு என்ஜின் உள்ளது.
- 2024 கவாசகி Z900RS மெட்டாலிக் டயப்ளோ பிளாக் என ஒற்றை நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது.
கவாசகி நிறுவனத்தின் 2024 Z900RS சூப்பர்பைக் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய பைக்கின் விலை ரூ. 16 லட்சத்து 80 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 2024 கவாசகி Z900RS மாடல்- மெட்டாலிக் டயப்ளோ பிளாக் நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது. ஸ்டைலிங்கை பொருத்தவரை புதிய மாடல் அதன் முந்தைய வெர்ஷனை போன்றே காட்சியளிக்கிறது.
அதன்படி இந்த பைக்கின் முன்புறத்தில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், டுவின் பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டியர்-டிராப் வடிவம் கொண்ட ஃபியூவல் டேன்க், சிங்கில்-பீஸ் சாடில், சைடு ஸ்லங் எக்சாஸ்ட், ஸ்போக் ஸ்டைல் கேஸ்ட் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன. முந்தைய மாடலை போன்றே 2024 மாடலிலும் ஃபுல் எல்இடி லைட்டிங், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டூயல் சேனல் ஏபிஎஸ், கவாசகி டிராக்ஷன் கண்ட்ரோல், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.
மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை புதிய கவாசகி Z900RS மாடலில் 948சிசி, இன்லைன் நான்கு சிலிண்டர்கள் கொண்ட லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 107 ஹெச்பி பவர், 95 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.
பிரேக்கிங்கிற்கு 300 மில்லிமீட்டர் முன்புற டிஸ்க் பிரேக்குகள், பின்புறம் 250 மில்லிமீட்டர் ரோட்டார், அப்சைடு டவுன் முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் புதிய 2024 கவாசகி Z900RS மாடல் டிரையம்ப் போன்வில் T100 மற்றும் ஸ்பீடு டுவின் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
- 2023 கவாசகி Z H2 சீரிசில் 998சிசி, இன்லைன் நான்கு சிலிண்டர்கள் கொண்ட, லிக்விட் கூல்டு என்ஜின் உள்ளது.
- புதிய கவாசகி Z H2 சீரிஸ் மாடல்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
கவாசகி நிறுவனத்தின் 2024 Z H2 மற்றும் Z H2 SE மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றின் விலை ரூ. 23 லட்சத்து 48 ஆயிரம், என்று துவங்குகிறது. இதன் பிரீமியம் மாடல் விலை ரூ. 27 லட்சத்து 76 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இரு மாடல்களிலும் ஒரே மாதிரியான டிசைன் மற்றும் கூர்மையான ஹெட்லைட் கொண்டிருக்கிறது. இத்துடன் பிரமாண்ட பியூவல் டேன்க், ஸ்ப்லிட் ஸ்டைல் சீட்கள், சைடு ஸ்லங் எக்சாஸ்ட் மற்றும் 17 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் ஸ்டான்டர்டு மாடல் மெட்டாலிக் கார்பன் கிரே மற்றும் எபோனி பெயின்ட் நிறங்களில் கிடைக்கிறது.
அதிக பிரீமியம் மாடலான Z H2 SE மெட்டாலிக் மேட் கிராஃபீன்ஸ்டீல் கிரே மற்றும் எபோனி நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் ஃபிரேம் மற்றும் என்ஜின் கவர்கள் பச்சை நிறம் கொண்டிருக்கின்றன. இரு மாடல்களிலும் ஒரே மாதிரியான மெக்கானிக்கல் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி இவற்றில் 998சிசி, இன்லைன் நான்கு சிலிண்டர்கள் கொண்ட, லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த என்ஜின் 197.2 ஹெச்பி பவர், 137 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவியை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. பிரேக்கிங்கிற்கு முன்புறத்தில் 320mm டிஸ்க் பிரேக்குகள், பின்புறம் ஒற்றை 260mm டிஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது. சஸ்பென்ஷனுக்கு மேனுவல் அட்ஜஸ்ட் வசதி கொண்ட சஸ்பென்ஷனும், SE வேரியண்டில் ஷோவா ஸ்கைஹூக் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் புதிய கவசாகி Z H2 சீரிஸ் மாடல்கள் டுகாட்டி ஸ்டிரீட்ஃபைட்டர் V4 மற்றும் பிஎம்டபிள்யூ S 1000 R மாடல்களுக்கு போட்டியாக அமைகின்றன. இரு மாடல்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
- புதிய டுகாட்டி சூப்பர்பைக் மாடலில் பவர் மோட்கள், ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.
- டுகாட்டி டயவெல் V4 மாடலில் 1158சிசி, V4 கிரான்டூரிஸ்மோ என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
டுகாட்டி இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய டயவெல் V4 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய டுகாட்டி டயவெல் V4 மாடலின் விலை ரூ. 25 லட்சத்து 91 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மாடலின் சில அம்சங்கள் அதன் முந்தைய வெர்ஷனை விட மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.
மேலும் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. அந்த வகையில், இந்த மாடலில் 1158சிசி, V4 கிரான்டூரிஸ்மோ என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 168 ஹெச்பி பவர், 126 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 17 இன்ச் கேஸ்ட்-அலுமினியம் அலாய் வீல்கள் மற்றும் டயப்லோ ரோஸோ III டயர்கள் வழங்கப்படுகின்றன.
சஸ்பென்ஷனுக்கு முன்புறத்தில் 50mm அப்சைடு-டவுன் ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்படுகிறது. இவற்றை முழுமையாக அட்ஜஸ்ட் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது. பிரேக்கிங்கிற்கு முன்புறத்தில் இரட்டை 330mm டிஸ்க், பிரெம்போ ஸ்டைல்மா மோனோபிளாக் கேலிப்பர்கள், பின்புறம் ஒற்றை டிஸ்க் பிரேக் வழங்கப்படுகிறது.
இந்த மாடலில் 5-இன்ச் TFT ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. இது பவர் மோட்கள், ரைடிங் மோட்கள், 6 ஆக்சிஸ் IMU சார்ந்த பிட்களான கார்னெரிங் ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், பவர் லான்ச், குயிக்ஷிஃப்டர் மற்றும் குரூயிஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. புதிய டுகாட்டி டயவெல் V4 மாடல் டுகாட்டி ரெட் மற்றும் த்ரில்லிங் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
- புதிய பிஎம்டபிள்யூ M 1000 RR மாடல் இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது.
- 2023 பிஎம்டபிள்யூ M 1000 RR பைக் மணிக்கு அதிகபட்சம் 314 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும்.
பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் இந்திய சந்தையில் 2023 பிஎம்டபிள்யூ M 1000 RR சூப்பர்பைக் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. பெயருக்கு ஏற்றார்போல் இது பிஎம்டபிள்யூ S 1000 RR மாடலின் ஸ்போர்ட் வெர்ஷன் ஆகும். இந்தியாவில் புதிய பிஎம்டபிள்யூ M 1000 RR மாடல் ஸ்டான்டர்டு மற்றும் காம்படீஷன் என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது.
விலை விவரங்கள்:
2023 பிஎம்டபிள்யூ M 1000 RR ஸ்டான்டர்டு ரூ. 49 லட்சம்
2023 பிஎம்டபிள்யூ M 1000 RR காம்படீஷன் ரூ. 55 லட்சம்
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
2024 பிஎம்டபிள்யூ M 1000 RR மாடல் தோற்றத்தில் அதிக ஸ்போர்ட் தோற்றம் மற்றும் டிராக் சார்ந்த மாடல் போன்று காட்சியளிக்கிறது. தற்போது இந்திய சந்தையில் கிடைக்கும் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள் இது ஆகும். இந்த மாடல் முழுக்க கார்பன்-ஃபைபர் பாடிவொர்க், விங்லெட்கள், கார்பன் வீல்கள், பிஎம்டபிள்யூ M தீம் கொண்ட பெயின்டிங் செய்யப்பட்டுள்ளது.
பிஎம்டபிள்யூ M 1000 RR மாடலில் 999சிசி, இன்லைன், 4 சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 211 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், பை-டைரெக்ஷனல் குயிக்ஷிப்டர், ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய 2023 பிஎம்டபிள்யூ M 1000 RR மோட்டார்சைக்கிள் மணிக்கு அதிகபட்சம் 314 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல், ஏழு ரைடு மோட்கள் மற்றும் ஏராளமான வசதிகள் இந்த சூப்பர் பைக்கில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் முன்புறம் டூயல் 320mm டிஸ்க்குகள், பின்புறம் 220mm டிஸ்க் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது.
இந்திய சந்தையில் புதிய பிஎம்டபிள்யூ M 1000 RR சூப்பர்பைக் டுகாட்டி பனிகேல் V4R மாடலுக்கு போட்டியாக அமைகிறது. டுகாட்டி பினிகேல் V4 R மாடலின் விலை ரூ. 69 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ் ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- டுகாட்டி நிறுவனத்தின் புதிய சூப்பர் பைக் மாடல் கணிசமான அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன.
- புதிய டுகாட்டி மாடலில் நான்கு விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
டுகாட்டி இந்தியா நிறுவனம் தனது 2023 பனிகேல் V4 R சூப்பர் பைக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய 2023 டுகாட்டி பனிகேல் V4 R விலை ரூ. 69 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த மாடலில் 998சிசி, நான்கு சிலின்டர்கள் கொண்ட லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 215 ஹெச்பி பவர், 111.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.
இத்துடன் அக்ரபோவிக், ஃபுல் சோர்ஸ் எக்சாஸ்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்த பைக்கின் எடை 5 கிலோ வரை குறைந்துள்ளது. மேலும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் பை-டைரெக்ஷனல் குயிக்ஷஃப்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.
சஸ்பென்ஷனிற்கு முன்புறம் 43mm ஆலின்ஸ் NPX 25/30 ஃபோர்க்குகள், பின்புறம் ஆலின்ஸ் TTX 36 மோனோ ஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங்கிற்கு டுவின் 330mm முன்புற டிஸ்க், பிரெம்போ ஸ்டைல்மா M4.30 கேலிப்பர்கள், பின்புறம் 245mm சிங்கில் ரோட்டார், 2 பிஸ்டன் கேலிப்பர்கள் உள்ளன.
இந்த மாடலில் உள்ள காம்ப்ரிஹென்சிவ் எலெக்டிரானிக்ஸ் பேக்கேஜ் நான்கு ரைடிங் மோட்கள், கார்னெரிங் ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல், லான்ச் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், ஸ்லைடு கண்ட்ரோல், என்ஜின் பிரேக் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோ டயர் கலிபரேஷன் போன்ற வசதிகளை வழங்குகிறது.
இத்துடன் மெஷின்டு மிரர் பிளாக் ஆஃப் பிளேட்கள், டுகாட்டி டேட்டா அனலைசர் மற்றும் ஜிபிஎஸ் மாட்யுல் வழங்கப்படுகிறது. இதுதவிர புதிய மாடலிலும் டுவிட் பாட் ஹெட்லைட், ஃபுல் ஃபேரிங், ஏரோடைனமிக் விங்லெட்கள், ரைடர் இருக்கை, சிங்கில் சைடு ஸ்விங்ஆர்ம் வழங்கப்படுகிறது.
- சுசுகி நிறுவனத்தின் 2023 ஹயுசா சூப்பர்பைக் மாடல் புதிய நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
- புதிய மாடலுக்கான முன்பதிவு இந்தியாவில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் 2023 ஹயபுசா சூப்பர்பைக் மாடலை அறிமுகம் செய்தது. புதிய 2023 ஹயபுசா மாடலின் விலை ரூ. 16 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய மாடலை விட ரூ. 49 ஆயிரம் வரை அதிகம் ஆகும். புதிய மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
சர்வதேச மாடலில் உள்ளதை போன்ற அப்டேட்களே அதன் இந்திய வேரியண்டிலும் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இவை புதிய நிற ஆப்ஷன்கள் வடிவில் வழங்கப்பட்டுள்ளன. 2023 சுசுகி ஹயபுசா மாடல் ஸ்டிரைகிங் மெட்டாலிக் கிரே மற்றும் கேண்டி ரெட் ஹைலைட்களை கொண்டுள்ளது. இதே போன்ற அக்செண்ட்கள் வைகர் புளூ நிறத்திலும் வழங்கப்படுகிறது. இதன் முதன்மை நிறம் பியல் வைட் ஆகும்.
இதுதவிர 2023 சுசுகி ஹயபுசா மாடல் ஃபுல் பிளாக் நிற ஆப்ஷனிலும் வழங்கப்படுகிறது. இதன் பக்கவாட்டில் கிரே நிற எழுத்துக்கள், பக்கவாட்டில் க்ரோம் ஸ்டிரைப் உள்ளது. புதிய நிறம் தவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் இந்த மாடலிலும் 1340சிசி, இன்லைன், நான்கு சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த என்ஜின் 190 ஹெச்பி பவர், 142 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இவற்றுடன் இதர எலெக்ட்ரிக் அம்சங்கள், பிரேகிங் மற்றும் சஸ்பென்ஷன் ஹார்டுவேர் உள்ளிட்ட அம்சங்களிலும் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்