search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "swami narayan temple"

    • சிட்னி நகரில் அமைந்துள்ள சுவாமி நாராயண் கோவில் சுவரை மர்ம நபர்கள் நேற்று சேதப்படுத்தினர்.
    • கோவிலை தாக்கிய அந்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கான்பெரா:

    ஆஸ்திரேலியாவில் சமீப காலமாக இந்து கோவில்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சிட்னி நகரில் அமைந்துள்ள சுவாமி நாராயண் கோவில் சுவரை மர்ம நபர்கள் நேற்று சேதப்படுத்தினர்.

    அங்கு வாழும் இந்துக்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் அந்த கோவிலில் காலிஸ்தான் கொடி பறந்ததையடுத்து தாக்குதல் நடத்தியது காலிஸ்தான் ஆதரவாளர்கள் என்ற முடிவுக்கு போலீசார் வந்துள்ளனர். எனவே கோவிலை தாக்கிய அந்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலிய அதிபர் அந்தோணி அல்பனீஸ் இந்தியா வந்திருந்தபோது கோவில்கள் மீதான தாக்குதல்களை ஆஸ்திரேலியா பொறுத்துக் கொள்ளாது என்று உறுதியளித்திருந்தார்.

    • ஆஸ்திரேலியாவில் இந்து கோவில் மீது இனவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
    • இந்தியாவுக்கு எதிரான வாசகங்களையும் அதில் எழுதி உள்ளனர்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் நகரில் சுவாமி நாராயண் என்ற இந்து கோவில் ஒன்று உள்ளது. இதன்மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தியதுடன், இந்தியாவுக்கு எதிரான வாசகங்களையும் அதில் எழுதி உள்ளனர்.

    இதுபற்றி தி ஆஸ்திரேலியா டுடே வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

    நாட்டின் மெல்போர்ன் நகரின் வடக்கு புறநகர் பகுதியில் உள்ள மில் பார்க் என்ற இடத்தில் பிரபல சுவாமி நாராயண் கோவிலின் சுவர் மீது இந்தியா ஒழிக என பொருள்படும் வகையிலான இந்துஸ்தான் முர்தாபாத் என வர்ணம் பூசி உள்ளனர்.

    இந்துக்கள் மீது வெறுப்பை உமிழும் இந்த செயல்களால், பல்வேறு இந்தியர்கள் மற்றும் சீக்கிய தலைவர்களும் வருத்தம் அடைந்து உள்ளனர். இதற்கு கேரள இந்து சமூகமும் கண்டனம் தெரிவித்து உள்ளது. பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோவில் சுவர்களில் வாசகங்கள் எழுதப்பட்டு உள்ளன.

    இந்த காலிஸ்தான் அமைப்பு, இந்திய பயங்கரவாதி என கூறப்படும் ஜர்னைல் சிங் பிந்திரவாலே என்பவரின் புகழ் பாடியுள்ளது. காலிஸ்தானின் தனி மாநில கோரிக்கையின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட அவர், பின்னாளில் புளூஸ்டார் அதிரடி நடவடிக்கையின்போது, இந்திய ராணுவத்தினரால் கொல்லப்பட்டார்.

    இந்து சமூகத்தினரின் சார்பில் எம்.பி.க்கள் மற்றும் போலீசாரிடம் முறைப்படியான புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இருந்து இதுபோன்ற தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இந்த தாக்குதலுக்கு கோவிலின் நிர்வாகம் கடும் அதிர்ச்சியும், கண்டனமும் தெரிவித்துள்ளதுடன் அமைதி மற்றும் இறையாண்மைக்காக இறைவனை வேண்டி கொள்கிறோம் என தெரிவித்துள்ளது.

    • கனடாவின் டொரண்டோவில் பாப்ஸ் சுவாமிநாராயண் கோயில் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
    • இந்து கோவில் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்துக்கு இந்தியத் தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    டொரன்டோ:

    கனடாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான டொரன்டோவில் பாப்ஸ் சுவாமிநாராயண் கோயில் அமைந்துள்ளது.

    இந்நிலையில், சுவாமிநாராயண் கோவில் சேதப்படுத்தப்பட்டு, கோயில் சுவரில் 'காலிஸ்தான் ஜிந்தாபாத்' என்று எழுதப்பட்டிருந்தது. டொராண்டோவில் உள்ள சுவாமி நாராயண் கோயிலின் சுவர்களில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. இதற்கு கனடாவில் உள்ள இந்திய உயர் ஆணையரகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஒட்டாவாவில் உள்ள இந்திய உயர் ஆணையரகம், கனடா நிர்வாகத்தை இது குறித்து விசாரணை செய்து குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக, இந்திய உயர் ஆணையரகம் தனது டுவிட்டர் பதிவில், டொராண்டோவில் அமைந்துள்ள சுவாமி நாராயண் கோவிலுக்கு சேதம் விளைவித்து, இந்தியாவுக்கு எதிரான விஷயங்களை எழுதியதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக கனடா அதிகாரிகள் விரைவான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படுகிறார்கள் என பதிவிட்டுள்ளது.

    ×