என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Swamimalai Murugan Temple"
- 1-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை பூஜை, வாஸ்து சாந்தியுடன் தொடங்குகிறது.
- சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி, வீதிஉலா காட்சிகள் நடைபெறும்.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை பூஜை, வாஸ்து சாந்தியுடன் தொடங்குகிறது.
விழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி, வீதிஉலா காட்சிகள் நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 7-ந்தேதி காலை சுவாமி படிச்சட்டத்தில் வீதிஉலா வந்து, 108 சங்காபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அர்ச்சனை, ஆராதனை நடைபெறும்.
பின்னர், அன்று மாலை சண்முகர் அம்பாளிடம் சக்திவேல் வாங்கி சூரசம்காரம் செய்து, சுவாமி தங்கமயில் வாகனத்தில் காட்சியளித்து வீதிஉலா வைபவம் நடைபெறும். இதில் தஞ்சை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வர்.
தொடர்ந்து, வருகிற 12-ந்தேதி யதாஸ்தானம் சேரும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் சிவக்குமார், துணை ஆணையர் உமாதேவி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
பிரபவ முதல் அட்சய முடிய 60 தமிழ் ஆண்டுகளின் தேவதைகளும் இக்கோவிலின் திருப்படிகளாக அமையப்பெற்று தமிழ்க்கடவுளான முருகனுக்கு சேவை செய்து வருவதாக ஐதீகம்
பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கார்த்திகை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தின்போது சுப்பிரமணியசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மங்களவாத்தியம் முழங்க விழா கொடியேற்றம் நடைபெற்றது.
விழாவில் இன்று (வெள்ளிக்கிழமை), நாளை (சனிக்கிழமை) ஆகிய தேதிகளில் ஊஞ்சல் உற்சவமும், 15-ந் தேதி பஞ்சமூர்த்தி புறப்பாடும், 19-ந் தேதி திருக்கார்த்திகை அன்று இரவு 8 மணிக்கு தீபக்காட்சியும், அதைத்தொடர்ந்து சுவாமி புறப்பாடும் உள் பிரகாரத்தில் நடைபெற உள்ளது. தொடர்ந்து, சொக்கப்பானை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 7-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் காலை, மாலை இரு வேளையும் சாமி வீதி உலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் நேற்று இரவு நடைபெற்றது. முன்னதாக காலை 11 மணிக்கு 108 சங்காபிஷேகமும், மாலை 6 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், 7 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சாமி புறப்பட்டு அம்மனிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு சன்னதி தெரு மற்றும் தெற்கு வீதியில் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து இன்று (புதன்கிழமை) காலை 11 மணிக்கு சண்முகசுவாமி புறப்பாடும், காவிரி ஆற்றில் தீர்த்தவாரியும், இரவு 7 மணிக்கு திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
சுவாமிநாத சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி வருகிற 5-ம் தேதி காலை 5 மணிக்கு அபிஷேக ஆராதனைகளும் இரவு 8 மணிக்கு தங்க மயில் வாகனத்தில் சாமி வீதி உலாவும் நடைபெற உள்ளது.
விழாவினை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் சாமி தரிசனம் செய்யசிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம் சார்பில் கும்பகோணம், திருவையாறு, ஜெயங்கொண்டம், தஞ்சாவூர் அரியலூர் ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் சுவாமிமலைக்கு இயக்கப்பட உள்ளது. சுவாமிமலை காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்