search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Swine Flu Symptom"

    நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற பேராசிரியை காய்ச்சல் பாதிப்பு காரணமாக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பன்றிகாய்ச்சல் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #Swineflu
    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் பெண்கள் பள்ளி விடுதியில் தங்கி இருந்த பிளஸ்-1 மாணவி அனிட்டா மர்மகாய்ச்சலுக்கு பலியானார்.

    இதையடுத்து நாகர் கோவில் பகுதியில் மர்ம காய்ச்சல் பாதிப்பு இருக்கிறதா? என்பதை சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்குச் சென்று உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

    மேலும் நகரில் சுகாதாரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. கழிவு நீர் ஓடைகளை சுத்தப்படுத்தும் பணிகளும் நடந்து வந்தது.

    இந்நிலையில் நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியை ஒருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். 60 வயதான அவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்ததாகவும், இதற்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவித்தார். அங்கு ரத்த பரிசோதனை செய்தபோது அவருக்கு பன்றி காய்ச்சல் நோய்க்கான அறிகுறி இருப்பதாக தெரிய வந்தது.

    இதையடுத்து ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பன்றிகாய்ச்சல் தனி வார்டில் அந்த பெண் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நெல்லையில் உள்ள ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. 2 நாளில் ரத்த ஆய்வு முடிவுகள் தெரிய வரும். அப்போது அந்த பெண்ணுக்கு பன்றிக் காய்ச்சல் நோய் தானா? என்பது உறுதிப்படுத்தப்படும்.

    இதுபற்றி மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் மதுசூதனன் கூறியதாவது:-

    நாகர்கோவில் பகுதியில் உள்ள மக்கள் காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

    தாங்களாகவே சுய மருந்து எடுத்துக் கொள்ள வேண்டாம். அது ஆபத்தில் முடியும். அரசு ஆஸ்பத்திரிகளில் போதுமான மருந்து, மாத்திரைகள் உள்ளன. அங்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Swineflu

    நெல்லை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் டாக்டர் கல்யாண்குமார் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். #Swineflu
    நெல்லை:

    தமிழகத்தில் கடந்த ஆண்டு பல பகுதிகளில் பன்றி காயச்சல் பாதிப்பு இருந்தது. சுகாதார துறை நடவடிக்கையை தொடர்ந்து இந்த காய்ச்சல் பாதிப்பு வெகுவாக குறைந்தது. இந்த நிலையில் நெல்லையில் அரசு டாக்டர் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    பாளை ரகுமத் நகரைச் சேர்ந்தவர் டாக்டர் கல்யாண்குமார். இவர் நெல்லை அரசு மருத்துவ மனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவருக்கு கடந்த 4 நாட்களாக தீராத காய்ச்சலும், இருமலும் இருந்துள்ளது.



    இதையடுத்து சந்தேகமடைந்த அவர் ரத்த பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவக்கல்லூரி டீன் கண்ணன் தலைமையிலான டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.

    மேலும் அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளதா எனவும் சோதனை நடத்தி வருகின்றனர். இது குறித்து டீன் கண்ணன் கூறியதாவது:-

    பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் டாக்டர் கல்யாண்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். ஆரம்ப கட்டத்தில் நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் உரிய சிகிச்சையளிக்கப்படுகிறது. தற்போது அவர் ஆபத்தான நிலையில் இல்லை. விரைவில் அவர் வீடு திரும்புவார். அதற்காக ஏற்பாடுகள் நடைபெறுகிறது. இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கும் சோதனை நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் யாரும் அனுமதிக்கப்பட்டது இல்லை. இப்போது தான் முதன் முதலில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதையடுத்து சுகாதாரத் துறையினர் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் இந்நோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். பாளை ரகுமத் நகரில் வேறு யாருக்கேனும் பன்றிக் காய்ச்சல் உள்ளதா? எனவும் ஆய்வு நடத்தி வருகின்றனர். #Swineflu

    ×