என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 101697"

    மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தொழிலாளி படுகாயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவரை கைது செய்தனர்.
    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம்  குமாரபாளையம் அருகே உள்ள ஆனங்கூர் ரோடு பழைய அஞ்சல் அலுவலகம் அருகே வசிப்பவர் சுரேஷ் (வயது 30). கட்டிட கூலி தொழிலாளி. 

    இவர் தனது மொபட் வாகனத்தில் ஒட்டன்கோவில் அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி திடீரென மொபட்  மீது மோதியது. இதில்  சுரேஷ் பலத்த காயமடைந்தார். 

    இதையடுத்து அவர் குமாரபாளையம்  அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரித்ததில் லாரி டிரைவர் திருச்சியை சேர்ந்த (சுரேஷ் 45), என்பது தெரியவந்தது. லாரி டிரைவர் சுரேஷ் கைது செய்யப்பட்டார்.

    தாரமங்கலம் அருேக வாகனம் மோதி தொழிலாளி இறந்தார்.
    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம்  தாரமங்கலம் அருகில் உள்ள ஆரூர்பட்டி கிராமம் பைப்பூர் பகுதியை சேர்ந்தவர் மணி ( வயது 57). கூலி தொழிலாளி.

    இவர் கடந்த 20- ந்தேதி காலை சாலையோரம் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு சென்றதால் படுகாயம் அடைந்தார்.  

    மணியை மீட்டு உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மணி நேற்று  பரிதாபமாக இறந்தார். இது குறித்த  புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    திருப்பூரில் போலீஸ் விசாரணைக்கு பயந்து மோதிரங்களை விழுங்கிய தொழிலாளிக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    திருப்பூர்:

    திருப்பூரை அடுத்த வஞ்சிபாளையம் மேம்பாலத்தில் அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி காஜா(வயது45), சதாம் உசேன், உதயகுமார் உள்பட 4 பேர் மது குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த காஜா, உதயகுமார் மற்றும் அவருடைய நண்பர் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து சதாம் உசேனை கத்தி மற்றும் உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர்.

    இதில் படுகாயமடைந்த சதாம் உசேன் வலி தாங்க முடியாமல் கூச்சல் போட்டார். அவருடைய சத்தம் கேட்டு அங்கு சென்ற அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த திருமுருகன்பூண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட காஜா, உதயகுமார் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட 5 பேரை போலீசார் ஜீப்பில் ஏற்றி திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    அப்போது காஜா போலீஸ் விசாரணைக்கு பயந்து திடீரென தான் அணிந்திருந்த 2 மோதிரங்களை கழற்றி விழுங்கினார். சிறிது நேரத்தில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளிக்குடி அருகே கட்டித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே கள்ளிக்குடி, கல்லணையை சேர்ந்தவர் பழனியாண்டி(வயது35). இவர் கட்டித்தொழி லாளியாக பணிபுரிந்து வந்தார். 

    இந்தநிலையில் கடந்த சில தினங்களாக கணவன், மனைவிக்குள் குடும்பபிரச்னை ஏற்பட்டு உள்ளது. இதனால் மனவிரக்தியில் இருந்த பழனியாண்டி நேற்று மருதங்குடி கிராமத்திற்கு சென்று பெற்றோரை சந்தித்துபேசியுள்ளார். 

    பின்னர் மருதங்குடி ஊரணிக்கு சென்ற அவர் அங்கு விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு மதுரை அரசுமருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். செல்லும் வழியில் பழனியாண்டி உயிரிழந்தார்.
    கொளத்தூர் அருகே யானை தாக்கி ஆடு மேய்க்கும் தொழிலாளி படுகாயடைந்தார்.
    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள சின்னதண்டா பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 55). 

    இவர் ஆடு மேய்க்கும் பணியினை மேற்கொண்டு வருகிறார். நேற்று லக்கம்பட்டி கிராமத்தை கிராமத்தைச் சேர்ந்த ரங்க போ என் கார்டு அருகே வனப்பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார். மாலையில் வீடு திரும்பி வரும்போது ஒரு ஆண் யானை ஒன்று பின்பக்கமாக வந்து தந்தத்தால் கோவிந்தனை முதுகில் குத்தியது. 

    இதனால் மிரண்டு போன அவர் சுதாரித்துக்கொண்டு வனப்பகுதியில் இருந்து யானையிடம் தப்பி கிராமத்துக்கு வந்தார். கிராம மக்கள் ஆம்புலன்சை வரவழைத்து உடனடியாக கோவிந்தனை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    அங்கு அவருக்கு  முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து மேட்டூர் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கபிலர்மலை அருகே கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை அருகே உள்ள செம்மடைபாளையத்தை சேர்ந்தவர் பாபு (வயது27), கட்டிட தொழிலாளி.இவரது மனைவி சூர்யா (23). பாபு கடந்த இரண்டு வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாக கூறப்படுகிறது. 

    இந்த நிலையில் கணவன், மனைவி இருவரும் பாபுவின் சொந்த ஊரான பரமத்தி அருகே உள்ள பிள்ளைகளைத்தூரில் தனது பெரியப்பா வீடு அருகே வாடகை வீடு எடுத்து கடந்த 4 மாதங்களாக தங்கியிருந்தனர். 

    கடந்த 1-ந் தேதி பாபுவின் மனைவி சூர்யா வேலைக்கு சென்று விட்டு மீண்டும் மாலை வீட்டிற்கு வந்த போது தனது கணவர் வீட்டில் துப்பட்டாவால் தொங்கிக்கொண்டிருந்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

    பின்னர் அவரை  வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பாபு ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    தகவல்‌ அறிந்து அங்கு வந்த பரமத்தி போலீசார் பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    மேலும் சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தபோது டயாலிசிஸ் செய்தால் இறந்து போவீர்கள் என்று நர்சு ஒருவர் கூறியதால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளி மாரடைப்பால் பரிதாபமாக இறந்தார்.
    கோவை:

    திருப்பூர் மாவட்டம் முருகானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் அன்வர் அலி (வயது 57), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சவுராமா. இவர்களுக்கு சர்மிளா பானு, ஆதிதா பானு ஆகிய மகள்களும், மன்சூர் அலிகான் என்ற மகனும் உள்ளனர். இதில் சர்மிளா பானு, ஆதிதா பானு ஆகியோருக்கு திருமணம் ஆகிவிட்டது.

    அன்வர் அலிக்கு சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த 19-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு டயாலிஸ் சிகிச்சைக்காக சென்று உள்ளார். அப்போது பணியில் இருந்த நர்சு ஒருவர் அன்வர் அலியிடம் டயாலசிஸ் செய்தால் நீங்கள் இறந்துவிடுவீர்கள் என்று தெரிவித்து உள்ளார். இதைக்கேட்ட 5 நிமிடத்தில் அவர் மயங்கி விழுந்து இறந்துவிட்டார். நோயின் தன்மை குறித்து நோயாளியிடம் வெளிப்படையாக தெரிவித்ததால் அவர் இறந்ததாகவும், சம்பந்தப்பட்ட நர்சு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்வர் அலியின் உறவினர்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து அன்வர் அலியின் மகள்கள் சர்மிளா பானு, ஆதிதா பானு ஆகியோர் கூறியதாவது:-

    எங்களது தந்தை அன்வர் அலி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உடல் முழுவதும் அரிப்பு மற்றும் உடல் சோர்வு காரணமாக அவதியடைந்து வந்தார். இதற்காக அவரை ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பதை அறிந்தனர்.

    இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக கடந்த மாதம் 9-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவரை மறுநாள் 10-ந் தேதி காலையில் அரசு ஆஸ்பத்திரி புதிய கட்டிடத்தில் இயங்கும் சிறுநீரக சிகிச்சை பிரிவில் சேர்த்தோம். இதைத்தொடர்ந்து அவருக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்று எங்களிடம் டாக்டர்கள் தெரிவித்தனர்.

    அத்துடன் அங்கு பணியில் இருந்த நர்சு ஒருவர் எங்களது தந்தையிடம் உங்களுக்கு டயாலிசிஸ் செய்தால் 90 சதவீதம் இறப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து உள்ளார். இதனால் பயந்துபோன அவர் டயாலிசிஸ் செய்ய வேண்டாம் என்று கூறியவாறு ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறினார்.

    இந்தநிலையில் கடந்த 19-ந் தேதி அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவரை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றோம். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் அன்று இரவு மேல்சிகிச்சைக்காக அங்குள்ள டாக்டர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    அங்கு மறுநாள் 20-ந் தேதி ஏற்கனவே நாங்கள் சென்ற சிறுநீரக சிகிச்சை பிரிவுக்கு டயாலிசிஸ் செய்ய மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு பணியில் இருந்த நர்சு எங்களிடம் கையெழுத்து வாங்கினார். அதேபோல் எங்களுடைய தந்தையிடம் டயாலிஸ் செய்தால் உங்கள் உடலில் வயிற்றுப்பகுதியில் ஓட்டை போட்டு 2 லிட்டர் தண்ணீர் செலுத்தி ரத்தத்தை சுத்தம் செய்வோம். அதில் நீங்கள் உயிர் இழப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

    இதை ஏன் சம்பந்தப்பட்ட நோயாளியிடம் தெரிவிக்கிறீர்கள் என்று நாங்கள் கண்டித்தோம். அதற்கு அவர்கள் இது எங்கள் பணி. நாங்கள் அவ்வாறு தான் சொல்வோம் என்று அலட்சியமாக பதில் அளித்தனர்.



    இந்தநிலையில் நர்சு கூறிய வார்த்தையை கேட்டு அதிர்ச்சியடைந்த எங்கள் தந்தை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நெஞ்சை பிடித்துக்கொண்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை அங்குள்ள டாக்டர்கள் மற்றும் நர்சுகள் வார்டில் உள்ள படுக்கைக்கு அழைத்து சென்றனர். பின்னர் சிறிது நேரத்தில் எங்களுடைய தந்தை டயாலிசிஸ் செய்வதற்கு முன்பே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். எனவே எங்கள் தந்தை போன்று வேறு யாருக்கும் இந்தநிலை வரக்கூடாது. இதில் சம்பந்தப்பட்ட நர்சு மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் அசோகனிடம் கேட்டபோது, கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளிடம் நோய் குறித்து தெரிவிக்கக்கூடாது என்று டாக்டர்கள் மற்றும் நர்சுகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனவே டயாலிசிஸ் செய்ய வந்த நோயாளியிடம் அவரின் நிலை குறித்து நர்சு தெரிவிக்க வாய்ப்பு இல்லை.

    மேலும் இங்கு வரும் நோயாளிகளிடம் கனிவாக பேசி சில புரோக்கர்கள் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்கிறார்கள். எனவே அவர்கள் இதுபோன்று நோயாளியிடம் தெரிவித்து இருக்கலாம். இதில் உண்மை தன்மை இருந்தால் சம்பந்தப்பட்ட நர்சு மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    ஒரத்தநாடு அருகே மகள் திருமணத்திற்காக வைத்திருந்த 15 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து தொழிலாளியின் மகன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
    ஒரத்தநாடு:

    ஒரத்தநாடு அருகே பாச்சூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பிச்சைமுத்து. கூலித் தொழிலாளி. இவரது மகன் பாலமுருகன்(வயது28). பி.இ. படித்துள்ளார். மகள் கனிமொழி.

    கனிமொழிக்கு திருமண ஏற்பாடுகளை பிச்சை முத்து செய்து வந்தார். அதற்காக 15 பவுன் நகைகள் மற்றும் ரூ. 10 ஆயிரம் ரொக்கத்தை வீட்டில் பீரோவில் வைத்திருந்தனர். பிச்சைமுத்து, அவரது மனைவி கூலி வேலைக்கு செல்லும்போது வீட்டை பூட்டி சாவியை வாசல் நிலைப் படியில் வைத்துவிட்டு செல்வது வழக்கமாம்.

    இந்நிலையில் கடந்த 14-ந்தேதி பாலமுருகன் வெளியூர் சென்றிருந்ததால் பிச்சைமுத்து வீட்டை பூட்டி வழக்கம்போல் சாவியை நிலைப் படியில் வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அனைவரும் மாலையில் வீடு திரும்பினர். நேற்று காலை பீரோவில் இருந்த நகைகளை சரிபார்க்க திறந்தபோது 15 பவுன் நகைகளையும், ரூ.10 ஆயிரத்தையும் காணாமல் அதிர்ச்சியடைந்தனர்.

    அப்போதுதான் வீட்டு நிலைப்படியில் வைத்திருந்த சாவியை யாரோ எடுத்து திறந்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பாலமுருகன் ஒரத்தநாடு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
    வேலூர் மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி குருவை பூபாலன் மோடி மீண்டும் பிரதமராக வேண்டி திருவண்ணாமலையில் 31 நாட்கள் கிரிவலம் சென்று வருகிறார். #PMModi #Arakkonamworker
    திருவண்ணாமலை:

    வேலூர் மாவட்டம் அரக்கோணம் குருவராஜப்பேட்டையை சேர்ந்தவர் குருவை பூபாலன் (வயது 48), கூலி தொழிலாளி. இவர் மீண்டும் பிரதமர் மோடி ஆட்சி தொடர வேண்டும் என்று கடந்த 4-ந் தேதி முதல் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று வருகிறார்.



    மோடி பிரதமராகிய பின்னர் மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனால் அவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு மீண்டும் பிரதமராக மோடி நல்லாட்சி தொடர வேண்டி கடந்த 4-ந் தேதி முதல் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரார்த்தனை செய்து வருகிறேன். வருகிற மார்ச் மாதம் 6-ந் தேதி வரை தொடர்ந்து 31 நாட்கள் கிரிவலம் செல்ல உள்ளேன்.

    முன்னதாக மத்தூர் மகிஷாசூரமர்த்தினி கோவிலில் இருந்து நடைபயணமாக சென்று திருத்தணி சுப்பிரமணிய சுவாமியை வேண்டி பிரார்த்தனை செய்துள்ளேன்.

    அதுமட்டுமின்றி அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டியும், திருவாசகம் சிவபுராணம், திருப்பள்ளி எழுச்சி ஆகியவை 18 ஆட்சிமொழிகளில் மொழி பெயர்க்க வேண்டும். தேசிய நதிநீர் இணைப்பும் தென்னக நதிகளை இணைக்க வேண்டும். இயற்கை விவசாயம் செய்பவருக்கு இந்த அரசு உறுதுணையாக இருக்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்க வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தியும் கிரிவலம் செல்கிறேன். இதுவரை நான் அரசியலில் ஈடுபட்டதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #PMModi #Arakkonamworker


    ஈரோடு அருகே சமையல் தொழிலாளி திடீர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு, சூரம்பட்டி, மாரப்பா வீதியை சேர்ந்தவர் பிரகாஷ்(வயது 36). இவரது மனைவி பவித்ரா.

    பிரகாஷ் லஞ்ச்பாக்ஸ் என்ற பெயரில் ஹோம் டெலிவரி சர்வீஸ் வைத்து போன் செய்பவர்களுக்கு சாப்பாடு, டிபன் போன்றவற்றை வீடுகளுக்கு கொண்டு சென்று கொடுக்கும் வேலை பார்த்து வந்ததார்.

    இந்நிலையில் கடந்த 5 -ந் தேதி மதியம் வாடிக்கையாளர் ஒருவர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி விட்டு பிரகாஷ் சென்றார். ஆனால் அதன் பின் அவர் வீடு திரும்பி வரவில்லை. திடீரென மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இது குறித்து பிரகாஷ் மனைவி பவித்ரா சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் மாயமான தனது கணவரை மீட்டு தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

    மாயமான அன்று பிரகாஷ் வெள்ளை சட்டையும், கருப்பு கலர் பேண்ட்டும் அணிந்திருந்தார். அவரது இடது கால் பாதத்தில் பாம்பு கடித்த தடிப்பு உள்ளது.

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பிரகாசை தேடி வருகின்றனர்.

    தொழிலாளிக்கு ரத்தநாள மாற்று நவீன அறுவை சிகிச்சை செய்து கோவில்பட்டி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே இளம்புவனத்தை சேர்ந்த மாயக்கண்ணன் (வயது 30). கூலித்தொழிலாளியான இவர் கடந்த மாதம் 8-ந் தேதி ஊரில் இருந்து மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். இளம்புவனம் விலக்கு பகுதியில் வந்தபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மாயக்கண்ணனின் வலது கால் மீது பின்னால் வந்த தனியார் பேருந்து ஏறி இறங்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்தனர். ஒட்டு உறுப்பு அறுவை சிகிச்சைக்காக நிபுணர் மருத்துவர் பிரபாகர் சிகிச்சை அளித்து வந்தார்.

    அவருக்கு ப்ரீ பிளாப் முறையில் மைக்ரோ வேஸ்குலர் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டது. அதற்கான அறுவை சிகிச்சை நேற்று காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 3 மணிக்கு முடிவடைந்தது. இதில் பாதிக்கப்பட்ட மாயக்கண்ணனின் தொடைப் பகுதியில் இருந்து சதை எடுத்து, அதனை கால் பாதத்தில் வைத்து, அதிலுள்ள ரத்த குழாய்கள் இணைக்கப்பட்டது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் ரத்த ஓட்டம் சீராக உள்ளதா எனவும் சோதனை நடத்தினர்.

    அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்ததை தொடர்ந்து மருத்துவர் பிரபாகர், மயக்கவியல் மருத்துவர் இளங்கோ, மருத்துவர்கள் பிரபா, ராமலட்சுமி, சரவணன் ஆகியோரை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் கமலவாசன் பாராட்டினர். இந்த அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனைகளில் செய்தால் ரூ.5 லட்சம் வரை செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து டாக்டர் பிரபாகர் கூறுகையில், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ரத்த குழாய் அறுவை சிகிச்சை செய்துள்ளோம். இந்த வகையான அறுவை சிகிச்சை தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரியில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் கூட செய்யவில்லை என்பது குறிப்பிடதக்கது. இந்த ப்ரீ பிளாப் மைக்ரோ வேஸ்குலர் அறுவை சிகிச்சை ஒரு மி.மீட்டருக்கு குறைவாக உள்ள ரத்த குழாய்களை இணைக்கும் அறுவை சிகிச்சையாகும்.

    இதில் உள்ள நன்மை, பெரிய அளவில் விபத்தில் காயம் ஏற்பட்டவர்களுக்கு உடனடியாக ஒரு சதையை மூடி அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றால், அதற்குள் உள்ள ரத்த குழாய்கள், எலும்புகள் சேதமடையாமல் பாதுகாக்க முடியும். அது இந்த அறுவை சிகிச்சையால் மட்டுமே முடியும். இந்த அறுவை சிகிச்சை செய்ய 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை தேவைப்படும். அதிக நேரம் தேவைப்படும் என்பதால், யாரும் இதனை எடுத்து செய்வதில்லை. நாங்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் நிறை வேற்றி உள்ளோம், என்றார்.#tamilnews
    ராஜபாளையத்தில் பொங்கல் பரிசு ரூ.1000 வாங்கி கணவர் மது குடித்ததால், மனைவி வாக்குவாதம் செய்தார். இதனால் அவரை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் சுந்தர ராஜபுரம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் வடிவேல் (வயது 35) தொழிலாளி. இவர் அடிக்கடி மது அருந்தி வந்தார்.

    இதனால் குடும்ப செலவுக்கு பணம் கொடுப்பதில்லை. இந்த நிலையில் தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கிய ரூ.1,000-த்தை மனைவிக்கு தெரியாமல் வாங்கி, வடிவேல் மது குடித்துள்ளார்.

    இது தெரியவந்ததும் மனைவி பேச்சியம்மாள் கணவரை கண்டித்தார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த வடிவேல் மனைவியை சரமாரியாக தாக்கினார். இது குறித்து சேத்தூர் புறக்காவல் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து மனைவியை தாக்கிய வடிவேலுவை கைது செய்தார். #tamilnews
    ×