search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுத்தை"

    • நகம், முடி மற்றும் ரத்த மாதிரிகளை மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
    • வனவிலங்குகளிடம் இருந்து பக்தர்களை பாதுகாக்க கம்பு வழங்கப்படும் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    திருப்பதி:

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் அலிப்பிரி மற்றும் ஸ்ரீ வாரி மெட்டு நடைபாதைகளில் நடந்து சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த மாதம் தனது பெற்றோர்களுடன் நடந்து சென்ற 4 வயது சிறுவனை சிறுத்தை ஒன்று கவ்வி இழுத்துச் சென்றது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் பக்தர்கள் கத்தி கூச்சலிட்டனர்.

    இதையடுத்து சிறுத்தை சிறுவனை விட்டுவிட்டு வனப்பகுதிக்குள் ஓடியது. பெற்றோர்களுடன் அலிபிரி நடைபாதையில் நடந்த சென்ற 6 வயது சிறுமியை சிறுத்தை இழுத்துச் சென்று கடித்து கொன்றது.

    சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு அமைக்கப்பட்டது. அடுத்தடுத்து 4 சிறுத்தைகள் கூண்டில் சிக்கியது. இந்த சம்பவங்களால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் நடைபாதையில் செல்வதை தவிர்த்தனர். இதனால் நடைபாதையில் செல்லும் பக்தர்களின் கூட்டம் கணிசமாக குறைந்தது.

    கூண்டில் சிக்கிய 4 சிறுத்தைகளில் சிறுமியை கொன்ற சிறுத்தை எது என்பதை கண்டுபிடிக்க அவைகளின் நகம், முடி மற்றும் ரத்த மாதிரிகளை மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மரபணு பரிசோதனை வர தாமதம் ஆகி வருகிறது.

    மரபணு பரிசோதனை அறிக்கையில் கூண்டில் சிக்கிய 4 சிறுத்தைகளும் சிறுமியை கொல்லவில்லை என்பது தெரிய வந்தால் மீண்டும் சிறுத்தைகளை வனப்பகுதியில் விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    நேற்று முன்தினம் அலிபிரி நடைபாதை அருகே சிறுத்தை ஒன்று நடமாடியது. இதனைக் கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சிறுத்தையைப் பிடிக்க வனத்துறை சார்பில் மீண்டும் கூண்டு வைக்கப்பட்டுள்ளன. வனவிலங்குகளிடம் இருந்து பக்தர்களை பாதுகாக்க கம்பு வழங்கப்படும் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி 15 ஆயிரம் கம்புகள் ஆர்டர் செய்யப்பட்டு உள்ளன. கம்புகள் வந்த பிறகு பக்தர்களுக்கு அலிபிரி நடைபாதையில் கம்புகள் வழங்கப்படும்.

    முழங்கால் மெட்டு என்ற பகுதியில் பக்தர்களிடம் இருந்து கம்பு மீண்டும் பெறப்பட்டு அலிபிரி நடைபாதைக்கு கொண்டு வரப்பட்டு மீண்டும் பக்தர்களிடம் வழங்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதியில் நேற்று 81,655 பேர் தரிசனம் செய்தனர். 38,882 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3. 84 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    குன்னூா் அருகே டைகா்ஹில் பகுதியில் சிறுத்தை நடந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் அண்மை காலமாக குடியிருப்பு பகுதிகளில் கரடி, காட்டெருமை, சிறுத்தை, யானை போன்ற வன விலங்குகள் புகுவது வாடிக்கையாக உள்ளது.

    இந்தநிலையில் குன்னூா் அருகே டைகா்ஹில் பகுதியில் உள்ள தனியாா் தேயிலை எஸ்டேட் சாலையில் நேற்று முன்தினம் இரவு சிறுத்தை நடந்து சென்றதை வாகன ஓட்டி ஒருவா் தனது செல்போனில் படம் பிடித்துள்ளாா்.

    சிறுத்தை நடந்து செல்லும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    சிறுத்தை தென்பட்ட பகுதியில் டால்பின் நோஸ், கரன்சி, லேம்ஸ்ராக் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு செல்லும் முக்கிய சாலை உள்ளது. மேலும் குடியிருப்பு அதிகம் உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமுடன் செல்ல வனத்துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    குன்னூர் ஓட்டு பட்டறை பகுதியில் மார்சல் என்பவரின் ஓட்டு வீட்டின் மேல் கூரையில் இரண்டு பாம்புகள் புகுந்து இருந்தது. இதுபற்றி குன்னூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

    தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் வீட்டின் மேல் ஏறி பாம்தேபை டும் பணியில் ஈடுபட்டனர். பதுங்கி இருந்த 10 அடி நீளமுள்ள சாரைப் பாம்பை தீயணைப்பு துறை வீரர்கள் முரளிதரன், விஜயகுமார், பிரகாஷ் ஆகியோர் தீவிர முயற்சி மேற்கொண்டு பிடித்தனர்.

    பிடிபட்ட பாம்பை பையில் போட்டு அங்கிருந்து தீயணைப்புத்துறை வாகனம் மூலமாக எடுத்துச்சென்று அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.



    ×