search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொருட்கள்"

    சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை.
    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி அருகே உள்ள கொண்டப்பநாயக்கன்பட்டி காவிரி நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழழகன் (வயது 61). இவர் தனக்கு சொந்தமான வீட்டை பூட்டிவிட்டு தற்போது அரூர் பகுதியில் வசித்து வருகிறார். 

    இன்று காலை அக்கம்பக்கத்தினர் இவரது வீட்டை பார்த்தபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

    உடனடியாக  இது குறித்து தமிழழகன்க்கு  தகவல் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து அவரது மனைவி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த வெள்ளி கொலுசு, வெள்ளி டம்ளர் ஆகிய பொருட்கள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இவற்றை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.  

    இதுகுறித்து  கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.    
    பரமத்திவேலூர் அருகே சாலைப்புதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ரூ.40.63 லட்சத்துக்கு வேளாண் பொருட்கள் விற்பனையானது.
    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் அருகே உள்ள சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டுவருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய், எள் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. 

    இதில் அருகில் உள்ள கரூர் ஒன்றியம், பரமத்தி வேலூர் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். 

    அங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணை நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 40.77 ½ குவிண்டால் எடை கொண்ட 11ஆயிரத்து 97  தேங்காய்கள் விற்பனைக்கு வந்தன. இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.25.69-க்கும், குறைந்த விலையாக ரூ.22.15-க்கும், சராசரி விலையாக ரூ.24.55-க்கும் என்று ரூ 95ஆயிரத்து 12-க்கு விற்பனை ஆனது.

    அதேபோல் 165.68½ குவிண்டால் எடை கொண்ட 376மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.84.19-க்கும், குறைந்த விலையாக ரூ.83.05-க்கும், சராசரி விலையாக ரூ.84.05-க்கும் மற்றும் 2-ம் தரம் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.82.95-க்கும், குறைந்த விலையாக ரூ.70.89-க்கும், சராசரி விலையாக ரூ.77.89க்கும் என்று ரூ.13லட்சத்து 37ஆயிரத்து 129க்கு விற்பனை ஆனது. 254.80குவிண்டால் எடை கொண்ட 343 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. 

    இதில் கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.110.79-க்கும், குறைந்த விலையாக ரூ.97.49-க்கும், சராசரி விலையாக ரூ.101.99க்கும் மற்றும் சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.112.59-க்கும், குறைந்த விலையாக ரூ.94.42-க்கும், சராசரி விலையாக ரூ. 109.42-க்கும் என ரூ.26 லட்சத்து 31ஆயிரத்து 765க்கும், தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவை அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மொத்தமாக ரூ.40லட்சத்து 63 ஆயிரத்து 906-க்கு விற்பனை ஆனது.
    எடப்பாடி அருகே 30 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
    சேலம்:

    எடப்பாடி அருகேவுள்ள ஒட்டப்பட்டி கிராமத்தில் ரமேஷ் என்பவரின் குடோனில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை சப்ளை செய்வதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. 

    இதையடுத்து குடோனில் ஆய்வுசெய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விற்பனைக்காக பாக்கெட்டுகளில் பொட்டலங்களாக  தயார் செய்து வைக்கப்பட்டிருந்த 30 டன் புகையிலை பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கதிரவன், கூறுகையில் கடந்த மாதம் இதே குடோனில் புகையிலையை பாக்கெட் செய்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

     உடனடியாக ஆய்வு செய்து எச்சரிக்கை விடுத்து சென்றோம். தற்போது மீண்டும் அதே தவறை செய்து வந்ததால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 டன் புகையிலையை பறிமுதல் செய்தோம் என்றார்.
    ×