என் மலர்
நீங்கள் தேடியது "வழிப்பறி"
- பல நூற்றாண்டுகளாக செயல்முறையில் உள்ள இது ஒரு வங்கிக்கு இணையான அமைப்பாகும்.
- ஹோரி கேட் பகுதியில் உள்ள மார்கெட்டில் முகமூடி அணிந்த நபர் நுழைந்தார்.
"அங்காடியா" என்பது, வணிகர்கள் தங்கள் பணத்தை ஒரு இடத்திலிருந்து மற்றோரு இடத்திற்கு கொண்டு செல்ல பயன்படுத்தும் ஒரு பாரம்பரிய முறையாகும். பல நூற்றாண்டுகளாக செயல்முறையில் உள்ள இது ஒரு வங்கிக்கு இணையான அமைப்பாகும். பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்லும் நபர்கள் அங்காடியாக்கள் ஆவர்.
இவ்வாறான ஒரு அங்காடியாவை டெல்லியில் முகமூடி அணிந்த நபர் துப்பாக்கிமுனையில் கொள்ளையடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
டெல்லியின் லஹோரி கேட் பகுதியில் உள்ள மார்கெட்டில் முகமூடி அணிந்த ஒருவர் அங்காடியா வர்த்தகரிடம் துப்பாக்கி முனையில் 80 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்தார்.
அந்த நபர் வர்த்தகரை பின்தொடர்ந்து துப்பாக்கியை காட்டி மிரட்டி அவரது பையை எடுத்துக்கொண்டு ஓடுவது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. மேலும் அங்கிருந்து செல்வதன்முன் பல முறை தனது துப்பாக்கியால் அந்த நபர் சுட்டார்.
இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும் எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வழிப்பறியில் ஈடுபட்ட 4 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.
- மதுரை ஆரப்பாளையம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த மாதவன், சல்மான், கரிமேடு கார்த்திக், புட்டுத்தோப்பு பார்த்தசாரதி ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 2 செல்போன், பணத்தை பறிமுதல் செய்தனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கப்பலூரை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 47). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
தீபாவளியையொட்டி சொந்த ஊருக்கு வந்த பொன்ராஜ் பண்டிகை முடிந்ததும் நேற்று முன்தினம் இரவு பெரம்பலூர் செல்வதற்காக கப்பலூர் பஸ் நிறுத்தத்திற்கு நடந்து வந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் மர்ம நபர்கள் பொன்ராஜை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.1500 ரொக்கம் மற்றும் செல்போனை பறித்து விட்டு சென்று விட்டனர்.
திருப்பரங்குன்றத்ைத சேர்ந்தவர் விஜயகுமார் (35). இவர் மினி வேனில் ஆவின் பால் எடுத்து கொண்டு திருமங்கலம் பகுதியில் விநியோகம் செய்ய சென்றார். அப்போது 4 மர்ம நபர்கள் அவரை மிரட்டி அவர் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றனர்.
இதுபற்றிய புகாரின்பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் 2 கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பல்தான் என தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வழிப்பறியில் ஈடுபட்ட மதுரை ஆரப்பாளையம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த மாதவன், சல்மான், கரிமேடு கார்த்திக், புட்டுத்தோப்பு பார்த்தசாரதி ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 2 செல்போன், பணத்தை பறிமுதல் செய்தனர்.
- விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கும்பல் கைது செய்யப்ட்டனர்.
- சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் கொள்ளை கும்பலை அதிரடியாக பிடித்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புகையிலை உள்ளிட்ட போதை பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனை கட்டுக்குள் வந்த நிலையில் தற்போது வழிப்பறிக் கொள்ளை நடைபெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டம் புதிய பஸ் நிலையம் அருகில் அதிகாலை முதலே மீன் வியாபாரம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் மீன் வியாபாரிகள் அதிகளவில் விழுப்புரத்திற்கு வந்து மீன்களை வாங்கி விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர். தற்போது அதிகாலையில் மீன்களை வாங்க வரும் மீன் வியாபாரிகள் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்லும் பொதுமக்களை மர்ம கும்பல் ஒன்று தாக்கி அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது.
மேலும் இந்த வழிப்பறி கொள்ளை கடந்த ஒரு மாதமாக விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள செஞ்சி அனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் அரங்கேறியுள்ளது. இதனால் விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் அனைவரும் இரவில் அத்தியாவசிய பொருள் வாங்க வெளியில் வர பயந்து போய் வீட்டில் முடங்கியுள்ளனர். தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் டிஎஸ்பி பார்த்திபன் தலைமையிலான போலீசார் இரவு முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் போலீசார் முக்கியமான பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு ஆய்வு செய்ததில் இந்த மர்ம கொள்ளை கும்பல் பதிவு எண் இல்லாத திருட்டு மோட்டார் சைக்கிளில் பொதுமக்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை எடுத்து சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் கொள்ளை கும்பலை அதிரடியாக பிடித்தனர்.
இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் போலீசார் அவர்களிடம் விசாரணை செய்ததில் திருவண்ணாமலை மாவட்டம் சோமாட்சிபாடி பகுதியைச் சேர்ந்த சிவா என்கிற ராஜி (வயது 25), கலையரசன் (22), வீரமணி (20), செயின்ஷா (22), அருணாச்சலம் (25) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் திருவண்ணாமலை ஆரணி செஞ்சி போளூர் உள்ளிட்ட பகுதிகளில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- அப்போது அந்த வழியாக வந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை கொண்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள சிதம்பரப்பட்டியை சேர்ந்தவர் எபினேஸ்வர் (வயது 30). இவர் கடந்த மாதம் வேலை முடிந்து அவருடைய மோட்டார் சைக்கிளில் சிதம்பரப்பட்டி நோக்கி சென்றாா். புதுக்குடி அருகே சென்ற போது அவருக்கு பின் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் எபினேஸ்வரை வழிமறித்து கத்தியால் குத்தி அவரிடம் இருந்து பணத்தை பறித்து சென்றனர். இதில் எபினேஸ்வர் குடல் சரிந்து படுகாயமடைந்தார்.
இது குறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் செங்கிப்பட்டி போலீசார் தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை கொண்டனர். பின்னர் அவர்களை செங்கிப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணை யில் அவர்கள் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் நகர் பகுதியை சேர்ந்த சுதாகரன் (21), தஞ்சை சேப்பன நாயக்கன்வாரியை சேர்ந்த இளம்பாரதி (22), தஞ்சையை சேர்ந்த 17 வயது சிறுவன் என தெரியவந்தது.
மேலும் இவர்கள் கடந்த மாதம் எபினேஸ்வரை கத்தியால் குத்தி பணத்தை பறித்து சென்றதும் தெரியவந்தது. இது குறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவன் உள்பட மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உத்தரவின் பேரில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- மருத்துவன்பாடி கிராம சாலையில் நடந்து மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்வோரை வழிமறித்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை உத்திரமேரூர் போலீசார் மடக்கி பிடித்தனர்.
உத்திரமேரூர்:
உத்திரமேரூரை அடுத்த மருத்துவன்பாடி கிராமம் அருகே இரவு நேரங்களில் சாலையில் செல்வோரை மர்ம நபர்கள் வழிமறித்து வழிப்பறியில் ஈடுபடுவதாக உத்திரமேரூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உத்தரவின் பேரில் போலீசார் நேற்று முன்தினம் இரவு அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மருத்துவன்பாடி கிராம சாலையில் நடந்து மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்வோரை வழிமறித்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை உத்திரமேரூர் போலீசார் மடக்கி பிடித்தனர்.
அவர்களை விசாரணை செய்ததில் அவர்கள் திருப்புலிவனம் பகுதியை சேர்ந்த ருத்ரா என்ற ருத்ரகுமார் (வயது 28), அண்ணாத்தூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற அண்ணாத்தூர் மணி (26) மற்றும் எடமச்சி பகுதியை சேர்ந்த தமிழ்மணி (23) திருப்புலிவனம் பகுதியை சேர்ந்த பாலாஜி (26) என்பதும் தெரிய வந்தது.
இதில் ருத்ரா, மணிகண்டன் இருவரும் 2 கொலை வழக்குகள் உள்பட 12 க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது. போலீஸ் விசாரணையில் 4 பேரும் வழிப்பறியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்த உத்திரமேரூர் போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- 3 மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் அதி வேகமாக சென்றனர்.
- பெண் முதியவரிடம் அவரது பையை பிடுங்கிக் கொண்டு அதில் உள்ள ரூ. 500 யை எடுத்துக்கொண்டு சென்றதை ஒப்புக்கொண்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் வெள்ளிக்கிழமையில் இயங்கி வரும் வாரச்சந்தையின் பொழுது அதிக அளவில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். இதனால் வார சந்தையில் வாராவாரம் இருசக்கர வாகன திருட்டு மற்றும் வழிப்பறி செல்போன் திருட்டு போன்றவை நடைபெற்று வந்தன. நேற்று போலீசார் வாரச்சந்தையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது 3 மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் அதி வேகமாக சென்றனர். இதைப் பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த சிறுப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் அவர்களை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தை நிறுத்துமாறு கூறியுள்ளார். அதனையும் பொருட்படுத்தாமல் அவர்கள் அதிவேகமாக விரைந்து கீழ் ஒரத்தூர் வழியாக சென்றனர்.
இதை அறிந்த போலீசார் கீழ் ஒரத்தூர் பகுதியில் உள்ள தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து அப்பகுதி ஊர் மக்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் அப்பகுதியில் வந்த அந்த இருசக்கர வாகனத்தை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் அவர்களை பிடித்து வேப்பூர் போலீஸ் நிலையத்தில் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் வேப்பூர் கூட்டு ரோட்டில் வயதான பெண் முதியவரிடம் அவரது பையை பிடுங்கிக் கொண்டு அதில் உள்ள ரூ. 500 யை எடுத்துக்கொண்டு சென்றதை ஒப்புக்கொண்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து இந்த திருட்டு வழக்கில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி மாவட்டம் புக்குரவாரி கிராமம் மேல தெருவை சேர்ந்த 17 வயது கொண்ட 3 மாணவர்களை ேபாலீசார் கைது செய்தனர்.
- நாமக்கல் பஸ் நிலையப் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
- அப்போது அங்கு வந்த வாலிபர், அவரை மிரட்டி, அவரிடம் இருந்த பணத்தை பறித்து விட்டு தப்பி ஓடினார்.
நாமக்கல்:
நாமக்கல் பஸ் நிலையப் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர், அவரை மிரட்டி, அவரிடம் இருந்த பணத்தை பறித்து விட்டு தப்பி ஓடினார். இதுகுறித்த புகாரின் பேரில் நாமக்கல் நகர போலீசார் விசாரணை நடத்தினர்.
பின்னர் அந்த பகுதியில் உள்ள சிசிடி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில், பணத்தை பறித்து சென்றது சேலத்தை சேர்ந்த கொள்ளையன் பூபாலகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த பூபாலகிருஷ்ணனை நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- பண்ருட்டியில் மோட்டார் சைக்கிள் திருடன் கைது செய்யப்பட்டார்.
- அவரைப் பிடித்து போலீசார் விசாரித்த ேபாது முன்னுக்கு பின் முரனாக கூறினார்.
கடலூர்:
புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் சாலையில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தார். அவரைப் பிடித்து போலீசார் விசாரித்த ேபாது முன்னுக்கு பின் முரனாக கூறினார். இதனால் அந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் பணப்பாக்கத்தைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 30) என்பது போலீசாருக்கு தெரிய வந்தது.
மேலும், பண்ருட்டி-செஞ்சி சாலையில் வழிப்பறியில் ஈடுபட்டு செல்போன், மோட்டார் சைக்கிள் மற்றும் பணத்தை திருடியது தெரியவந்தது. மேலும், தஞ்சாவூர் பகுதியிலும் இவர் வழிப்பறி, மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து பாலமுருகனிடம் இருந்து செல்போன்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் ஜெயிலில் அடைத்தனர்.
- வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- தவமுருகன், சேதுராமன் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா மேல கிடாரத்தைச் சோந்தரவர் மலைராஜன் (50),லாரி டிரைவர். இவர் கிழக்கு கடற்கரை சாலையில் லாரியை ஓட்டி வந்தபோது 6 பேர் கொண்ட கும்பல் காரில் வந்து லாரியை மடக்கியது.
பின்னர் லாரி டிரைவர் மலைராஜன் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி ரூ. 2 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில் கீழசெல்வனூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி வழக்குப்பதிவு செய்து கடலாடியை சேர்ந்த சண்முகநாதன் (27), சண்முகய்யா பாண்டி யன்(27), கே.காளீஸ்வரன் (25), பி.காளீஸ்வரன்(23) ஆகியோரை கைது செய்தார்.
பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படு த்தப்பட்டு ராமநாதபுரம் சிறையில் அடைக்க ப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய தவமுருகன், சேதுராமன் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- அசரப் அலி உக்கடம் - பேரூர் பைபாஸ் ரோட்டில் நடந்து சென்றார்.
- கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்தார்.
கோவை,
கோவை கரும்பு கடையை சேர்ந்தவர் அசரப் அலி (வயது 26). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் உக்கடம் - பேரூர் பைபாஸ் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென அசரப் அலியை தடுத்து நிறுத்தினார்.
பின்னர் அவரிடம் பணம் கேட்டார். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்தார்.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் இதுகுறித்து அசரப் அலி பெரியகடை வீதி போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அசரப் அலியிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுப்பட்டது கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சிவா (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிவாவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- மூன்று மர்ம நபர்கள் திடீரென்று ஜோதி மணியை வழிமறித்தனர்.
- செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டு ஆகியவற்றை பறித்து தப்பித்து சென்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே வடலூர் பார்வதிபுரம் சேர்ந்தவர் ஜோதிமணி (வயது 37). இவர் நேற்று வழுதலம்பட்டு செந்தாமரை வாய்க்கால் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த மூன்று மர்ம நபர்கள் திடீரென்று ஜோதி மணியை வழிமறித்தனர். பின்னர் ஜோதி மணியை மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டு ஆகியவற்றை பறித்து தப்பித்து சென்றனர். இது குறித்து ஜோதிமணி குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து 3 மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- சந்தேகத்தின் பேரில் போலீசார் கார்த்திக்கிடம் விசாரித்தபோது அவர் நண்பர்களுடன் சேர்ந்து வழிப்பறி நாடகமாடியது தெரிந்தது.
- வழிப்பறி நாடகத்தின்போது போலீசாருக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக கார்த்திக்கை உண்மையிலேயே செங்கலால் தலையில் தாக்கி இருந்தனர்.
திருநின்றவூர்:
ஆவடி, பூந்தமல்லி சாலையில் கேஸ் பங்க் உள்ளது. இங்கு புதுப்பேட்டையை சேர்ந்த கார்த்திக் என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மதியம் அவர் ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்தை வங்கியில் டெபாசிட் செய்ய மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது, ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியப் பகுதியில் உள்ள வங்கி அருகே சென்றபோது மர்மநபர்கள் தன்னை தாக்கி பணத்தை கொள்ளை யடித்து சென்றுவிட்டதாக கார்த்திக் தெரிவித்தார். அவருக்கு காயமும் ஏற்பட்டு இருந்தது.
இதுகுறித்து அவர் ஆவடி போலீசில் புகார் அளித்தார். உதவி ஆணையர் புருசோத்தமன், ஆவடி இன்ஸ்பெக்டர் டில்லிபாபு ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். சந்தேகத்தின்பேரில் கார்த்திக்கிடம் விசாரித்த போது அவர் நண்பர்களுடன் சேர்ந்து வழிப்பறி நாடக மாடியது தெரிந்தது. கார்த்திக் தனது நண்பர்களான தங்கமுத்து, ஆனந்த் ஆகியோருடன் சேர்ந்து இந்த வழிப்பறி நாடகத்தை அரங்கேற்றி இருந்தார். இதையடுத்து கார்த்திக் உள்ளிட்ட 3 பேரையும் இன்று காலை போலீசார் கைது செய்தனர்.
கார்த்திக் பெட்ரோல் பங்க் வசூல் பணம் ரூ.60 ஆயிரம் வரை கையாடல் செய்து பங்குச் சந்தையில் முதலீடு செய்து இருந்தார். பின்னர் அவரால் அந்த பணத்தை திரும்ப செலுத்த முடியவில்லை. இதனால் வங்கிக்கு பணம் கொண்டு செல்லும்போது வழிப்பறி நாடகமாடி அந்த பணத்தை வைத்து விடலாம் என்று நினைத்து அவர் நண்பர்களுடன் சேர்ந்து இந்த திட்டத்தை அரங்கேற்றி உள்ளனர். வழிப்பறி நாடகத்தின்போது போலீசாருக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக கார்த்திக்கை உண்மையிலேயே செங்கலால் தலையில் தாக்கி இருந்தனர். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். எனினும் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர் நண்பர்களுடன் சிக்கிக்கொண்டார்.