என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 194459
நீங்கள் தேடியது "கண்டித்து"
நிதி ஒதுக்காததை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம்
பெரியபட்டினம் ஊராட்சிக்கு நிதி ஒதுக்கா ததை கண்டித்தும், ஊராட்சி பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் தனிநபர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் திருப்புல்லாணி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி தலைவர் அக்பர் ஜான் பீவி, துணைத்தலைவர் பெரோஸ்கான் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து ஒன்றிய ஆணையாளர் ராஜேந்திரன் போராட்ட த்தில் ஈடுபட்டவ ர்களை அழைத்து சமரச பேச்சு வார்த்தை நடத்தி னார். அப்போது ஊராட்சி தலைவர் அக்பர் ஜான் பீவி ஆணையாளரிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பெரியபட்டினம் ஊராட்சியின் மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும், மக்கள் பணியை தொடர்சியாக செய்யக்கூடாது என்றும் சிலர் திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகின்றனர்.
இதில் குறிப்பாக பெரிய பட்டினம் காயிதே மில்லத் தெருவைச் சேர்ந்த ஒரு நபர் ஊராட்சி நிர்வாகம் பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை தொடர்ச்சியாக 50-க்கும் மேற்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனுக்களை அனுப்பி வருகிறார்.
பெரியபட்டினம் ஊராட்சி குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக அவதூறுகளை பரப்பி வருகிறார்.
ஆகவே, சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொண்டு பெரியபட்டினம் ஊராட்சி தொடர்ந்து சிறப்பான முறையில் மக்கள் பணியாற்றிட ஆவண செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
பள்ளிப்பாளையம்:
நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை ஒன்றியம் கொத்தமங்கலம் கிராமம் அரசம்பாளையம் அருந்ததியர் மக்கள் பயன்படுத்தி வந்த பொதுஇடத்தில் 1.5 ஏக்கர் பொது இடத்தை ஊராட்சி மன்றத்தின் மூலம் குப்பைகள் கொட்டும் இடமாக மாற்ற நடவடிக்கை மேற்ெகாள்ளப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் உள்ள மதுரை வீரன் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள இடத்தில் திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் நடைபெற்று வந்தது. மேலும் குழந்தைகள் விளையாடும் இடமாகவும் இருந்தது. காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள 1.5 ஏக்கர் நிலத்தில் குப்பை கொட்டும் இடமாக மாற்றும் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் கொட்டப்பட்ட குப்பை கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கவேண்டுமென அருந்ததியர் இளைஞர் பேரவை மற்றும் மாவீரன் பொல்லான் பேரவை தலைவர் ஈரோடு வடிவேல் ராமன் தலைமையில் பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் தலித் விடுதலை இயக்க மாவட்ட தலைவர் பொன்.சுந்தரம், மாவீரன் பொல்லான் பேரவை பொதுச் செயலாளர் சண்முகம், துணைத்தலைவர் கண்ணையன், அரசம்பாளையம் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X