என் மலர்
நீங்கள் தேடியது "ஆட்டோ"
- இந்த அரசாங்க ஆதரவு சேவை மூலம் அனைத்து வருமானமும் ஓட்டுநருக்கே செல்லும்.
- ஓலா, ஊபர் உள்ளிட்ட டாக்சி சேவைகள் மற்றும் ராபிடோ உள்ளிட்ட பைக் டாக்சி சேவைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
ஓலா, ஊபர் உள்ளிட்ட டாக்சி சேவைகள் மற்றும் ராபிடோ உள்ளிட்ட பைக் டாக்சி சேவைகள் பெருநகரங்களில் மக்களால் தினந்தோறும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இவற்றுக்கு போட்டியாக பைக், கார் மற்றும் ஆட்டோ சேவைகளை வழங்கும் "சஹ்கார் டாக்ஸி" (Sahkar Taxi) என்ற புதிய கூட்டுறவு அடிப்படையிலான டாக்சி சேவையை தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தனியார் நிறுவனங்களைப் போலல்லாமல், இந்த அரசாங்க ஆதரவு சேவை மூலம் அனைத்து வருமானமும் ஓட்டுநருக்கே செல்லும்.
பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா பேசியதாவது, "சஹ்கார் டாக்சி சேவை வரும் மாதங்களில் தொடங்கப்படும்.
சஹ்கார் டாக்சியின்கீழ் நாடு முழுவதும் பைக் டாக்சிகள், ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் கார் டாக்சிகளைப் பதிவு செய்யப்படும். இந்த சேவையின் லாபம் எந்த பெரிய தொழிலதிபருக்கும் செல்லாது. மாறாக வாகன ஓட்டுநர்களுக்கு மட்டுமே செல்லும் என்று தெரிவித்தார்.
- அதிர்ச்சி அடைந்த போலீசார் டிரைவருக்கு அபராதம் விதித்து சல்லான் வழங்கியுள்ளனர்.
- வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நாள்தோறும் நடைபெறும் சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கத்தில் காவல்துறையினர் பயணிகள் வாகனங்களில் பயணிப்பதற்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். வாகனங்களுக்கு ஏற்ப பயணிகள் பயணிக்க வேண்டும்.
அதாவது, இருசக்கர வாகனங்களில் இருவர் பயணிக்கும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். மூன்று சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது குறைந்தது 4 பேர் வரை பயணிக்கலாம். அதேபோல் நான்கு சக்கர வாகனத்தில் பயணிக்கும் டிரைவரை தவிர்த்து 3 பேர் பயணிக்கவும் முன் இருக்கையில் அமர்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாட்டு உள்ளது.
இதேபோல் மாணவர்களை அழைத்து செல்லும் பள்ளி வாகனங்கள், தனியார் வாகனங்களுக்கும் கட்டுப்பாடுகள் உள்ளது. ஆனால் இதையெல்லாம் தனக்கு இல்லை என்பது போல ஒரு ஆட்டோவில் 14 பள்ளி குழந்தைகளை ஆட்டோ டிரைவர் ஒருவர் அழைத்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேசத்தின் ஜான்சி BKD சந்திப்பில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு ஆட்டோவில் பள்ளி சீருடையில் பல குழந்தைகள் இருப்பதை கண்ட போலீசார் உடனே அந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, டிரைவரின் முன்பக்க இருக்கையில் குறைந்தது 3 பள்ளி குழந்தைகள், பின் இருக்கையில் 11 பள்ளி குழந்தைகள் அமர்ந்திருந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் டிரைவருக்கு அபராதம் விதித்து சல்லான் வழங்கியுள்ளனர்.
இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உடனே உயர்த்தி நிர்ணயிக்குமாறு கோரி நாளை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
- மருத்துவமனை போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் ஆட்டோ இயங்கும்.
சென்னை:
சென்னை மற்றும் புறநகரில் ஆட்டோக்களில் இப்போது யாருமே மீட்டர் போடுவது கிடையாது. ஆட்டோவில் செல்ல வேண்டும் என்றால், தோராயமாக ஒரு தொகை கேட்பார்கள். பயணிகள் அப்போது பேரம் பேசுவார்கள். இதில் உத்தேசமாக ஒரு தொகையை கேட்டு அதன் பிறகுதான் பயணம் செய்ய முடியும்.
இதுதான் இன்றைய யதார்த்தம். ஓலா, ஊபர், ராபிட்டோ, ஆட்டோ, கார்களில் அந்த அளவுக்கு பேரம் பேசுவதில்லை. ஒரு சிலர் தான் கூடுதலாக 20 ரூபாய் 50 ரூபாய் கேட்பது இப்போது தொடர் கதையாகி வருகிறது.
இது பற்றி ஆட்டோ சங்க நிர்வாகிகளிடம் கேட்டால் 2013-ம் ஆண்டுக்கு பிறகு ஆட்டோ கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயிக்கவில்லை என்கிறார்கள். தவறு எங்கள் மீது கிடையாது. அரசு மீதுதான் என்று கூறுகின்றனர். இப்போது ஆட்டோ சங்கங்கள் ஒன்று சேர்ந்து நாளை 'ஸ்டிரைக்' அறிவித்து உள்ளனர். அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவித்து உள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் பன்னீர் செல்வம் கூறியதாவது:-
இன்றைய காலகட்டத்தில் ஆட்டோ ஓட்டுவது பெரும் சிரமமாக உள்ளது. பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதற்கேற்ப அரசு கட்டணத்தை முறைப்படுத்தவில்லை.
2013-ம் ஆண்டுதான் ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போது குறைந்தபட்ச தூரத்துக்கு ரூ.25-ம், கி.மீ.க்கு ரூ.12 என்றும் உயர்த்தி நிர்ணயித்தது அன்றைய அரசாங்கம். இப்போது விலைவாசி பல மடங்கு ஏறி விட்டது. அன்றைக்கு 1 லிட்டர் பெட்ரோல் ரூ.55-க்கு கிடைத்தது. இன்று 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்து விட்டது.
எனவே ஆட்டோ கட்டணத்தை ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.25 என்று நிர்ணயிக்குமாறு கேட்டு உள்ளோம். குறைந்தபட்ச கட்டணம் 50 ரூபாய் தாருங்கள் என்கிறோம். அரசு இதில் இன்னும் முடிவெடுக்காமல் உள்ளது.
எனவே ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உடனே உயர்த்தி நிர்ணயிக்குமாறு கோரி நாளை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் சுமார் 1½ லட்சம் ஆட்டோக்கள் நாளை ஓடாது. மருத்துவமனை போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் ஆட்டோ இயங்கும்.
எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை கலெக்டர் அலுவலகம், ராஜரத்தினம் ஸ்டேடியம், அண்ணாசாலை, தாராபூர் டவர் சாலை, தாராபூர் டவர் ஆகிய இடங்களில் நாளை காலை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகிறோம். இதில் அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களும் பங்கேற்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னை, புறநகர்பகுதிகளில், 2 ஆயிரம் திருநங்கைகள் வசித்து வருகின்றனர்.
- 10 திருநங்கைகள் ஓட்டுனர் பயிற்சிக்கு தேர்வு செய்து அவர்களுக்கு வாகன ஓட்டுனர் பயிற்சியகத்தில் நாளை முதல் பயிற்சி அளிக்கப்படுகிறது.
சென்னை:
சென்னையில் 50 திருநங்கைகளுக்கு கார், ஆட்டோ ஓட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கவுரவமான தொழிலில் ஈடுபடும் வகையில், 50 திருநங்கைகளுக்கு சகோதரன் அமைப்பு, அரிமா சங்கம் இணைந்து கார், ஆட்டோ ஓட்ட பயிற்சி அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
சென்னை, புறநகர்பகுதிகளில், 2 ஆயிரம் திருநங்கைகள் வசித்து வருகின்றனர். அவர்களில், மிகக்குறைந்த அளவினர் மட்டுமே, சுயதொழில் செய்கின்றனர். பெரும்பாலானோர் ரெயில்களிலும், கடைகளிலும் காசு பெற்று வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருநங்கையர் வாழ்வாதார மேம்பாட்டிற்காக, சகோதரன் அமைப்பு சார்பில், பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக சென்னை நகரில் வசிக்கும், 50 திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கார், ஆட்டோ ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
அரிமா சங்க உதவியுடன் 50 திருநங்கைகளுக்கு ஓட்டுனர் பயிற்சி அளிக்கும் திட்டத்தை சகோதரன் அமைப்பு தொடங்கி உள்ளது. இத்திட்டத்தை, திருவல்லிக்கேணி சேப்பாக்கம் வாகனம் தொகுதி தி.மு.க., எம். எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முதல் கட்டமாக, 10 திருநங்கைகள் ஓட்டுனர் பயிற்சிக்கு தேர்வு செய்து அவர்களுக்கு வாகன ஓட்டுனர் பயிற்சியகத்தில் நாளை முதல் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சி முடித்தவர்கள் ஆட்டோ, கார் ஓட்டுனராக வலம் வர உள்ளனர். எதிர்காலத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு சொந்த வாகனம் வாங்க அமைப்பின் வாயிலாக ஏற்பாடு செய்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- தாதகாப்பட்டி உழவர் சந்தை அருகில் தனது ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் திடீரென வழிமறித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.
- இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்த வர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அன்னதானப்பட்டி:
சேலம் தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 45). ஆட்டோ டிரைவர். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டும் சேகர் என்பவரும் நண்பர்கள் எனக் சொல்லப்படுகிறது.
இவர்கள் இருவருக்கும் இடையே ஒரு பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ராஜ்குமார் நேற்று முன்தினம் இரவு தாதகாப்பட்டி உழவர் சந்தை அருகில் தனது ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் ராஜ்குமாரை திடீரென வழிமறித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்த வர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீ சார் , அடிதடி வழக்கில், தாதகாப்பட்டி சண்முக நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சேகர் (47), அவரது மகன் அரவிந்த் (25) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள சிலரை தேடி வருகின்றனர்.
- பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மினிமம் இரண்டு கிலோமீட்டர் ஆட்டோவில் பயணம் செய்ய ரூ. 59 வசூலிக்கப்படுகிறது.
- பொதுமக்கள் தங்களது மீட்டர் ஆட்டோ தொடர்புக்கு 63800 91343 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்
தஞ்சாவூர்:
தஞ்சையில் புதிதாக ஆட்டோ ஓட்டுநர்கள் ஒன்றிணைந்து லட்சுமி நாராயணன் மீட்டர் ஆட்டோ என்று புதிதாக ஆரம்பித்து உள்ளனர்.
இந்த மீட்டர் ஆட்டோ வாகனமானது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மினிமம் இரண்டு கிலோமீட்டர் ஆட்டோவில் பயணம் செய்ய ரூ. 59 வசூலிக்கப்படுகிறது .
அதனை தொடர்ந்து அதிகரிக்கும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.18 வீதம் வசூலிக்கப்படுகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இந்த ஆட்டோ ஓட்டுநர்களை தஞ்சை மாவட்டத்தில் தமிழ்நாடு லட்சுமி நாராயணன் அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் சங்கம் மாநில பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வி என்பவர் வழிநடத்திச் செல்கின்றார்.
குறிப்பாக பொதுமக்கள் தங்களது மீட்டர் ஆட்டோ தொடர்புக்கு 63800 91343 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த லட்சுமி நாராயணன் மீட்டர் ஆட்டோ குடும்பத்தில் இணைவதற்கு ஆட்டோ ஓட்டுநர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்பு கொண்டு தங்களது வாகனத்தின் அசல் சான்றுகளை சமர்ப்பித்து தங்களுடன் சேர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம் என லட்சுமி நாராயணன் மீட்டர் ஆட்டோ சார்பாக தமிழ்ச் செல்வி தெரிவித்துள்ளார்.
மேலும் முற்றிலும் எந்த ஒரு வாகனம் நிறுத்தும் ஸ்டேன்ட் இடம் இல்லாத சூழ்நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ ஓட்டுநர்களை கருத்தில் கொண்டு அவர்களை ஒன்றிணைத்து மீட்டர் ஆட்டோ என்று தொடங்கப்பட்டுள்ளதாக தமிழ்ச்செல்வி தெரிவித்தார்.
குறைந்த கட்டணத்தில் இயக்கப்படுவதால் பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.
- பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2021-2022 மூலமாக குப்பை சேகரிக்கும் மி்ன்னணு ஆட்டோ வாகனத்தை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- நிகழ்ச்சிகயில் உள்ளாட்சி பிரதிநிதிகள், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2021-2022 மூலமாக குப்பை சேகரிக்கும் மி்ன்னணு ஆட்டோ வாகனத்தை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பொத்தனூர் பேரூராட்சி தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். துணைத் தலைவர் அன்பரசன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மதுரா செந்தில் கலந்து கொண்டு வாகனத்தை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், கபிலர்மலை அட்மா தலைவரும், ஒன்றிய கவுன்சிலரும், ஒன்றிய கழக செயலாளருமான சண்முகம், இளநிலை உதவியாளர் ஜெயசேகர், துப்புரவு மேற்பார்வையாளர் குணசேகரன், வார்டு கவுன்சிலர்கள், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பூக்கடை சுந்தர், மாவட்ட துணை செயலாளர்கள் அன்பழகன், மயில்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் ரங்கசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் சாமிநாதன், சிவக்குமார், பேரூர் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- ஆட்டோ, ரிக்க்ஷா வாகனங்களை நடப்பில் உள்ள ஆவணங்களுடன் இயக்க வேண்டும்.
- நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது.
நாகப்பட்டினம்:
நாகூர் தர்காவில் 466-வது ஆண்டு கந்தூரி விழா வருகிற 24-ந் தேதி தொடங்கி ஜனவரி 6-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு ஆட்டோ, ரிக்க்ஷா வாகனங்களை ஒழுங்குப்படுத்தும் பணி தொடர்பான ஆலோசனை கூட்டம் நாகை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் நாகூர் பகுதியில் உள்ள 150 ஆட்டோ, ரிக்க்ஷா ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.
இதில் மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு பேசும்போது:-
ஆட்டோ, ரிக்க்ஷா வாகனங்களை நடப்பில் உள்ள ஆவணங்களுடன் இயக்க வேண்டும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது, வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட நபர்களை விட அதிக நபர்களை ஏற்றக்கூடாது, அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்கள் சிறைபிடிக்கப்படும் என்றார்.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிசு வழங்கி பாராட்டு
- ஆட்டோ டிரைவர் சரவணன் பீச் ரோடு பகுதியை சேர்ந்தவர்
நாகர்கோவில்:
நாகர்கோவில், பீச் ரோடு பகுதியை சேர்ந்தவர் சரவணன். ஆட்டோ டிரைவர்.
இவர் நாகர்கோவில் பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த 28-ந் தேதி இவரது ஆட்டோவில் 2 பவுன் தங்க செயின் ஒன்று கிடந்தது. இதை பார்த்த சரவணன் அந்த நகையை எடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
போலீசார் விசாரணையில் அவரது ஆட்டோவில் பயணம் செய்த வாலிபர் நகையை தவற விட்டு சென்றது தெரியவந்தது. அந்த வாலிபர் யார்? என்பது குறித்து போலீசார் பீச் ரோடு பகுதியை சேர்ந்தவர் சரவணன். ஆட்டோ டிரைவர்.சாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் சரவணன் ஆட்டோவில் நகையைதவற விட்டது திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த பிரமோத் (வயது 40) என்பது தெரிய வந்தது. இவர் துபாயில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
தற்பொழுது விடுமுறையில் ஊருக்கு வந்த இவர் குமரி மாவட்டம் வில்லுகுறி பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டு நாகர்கோவிலில் உள்ள நகைக்கடையில் நகை வாங்குவதற்காக வந்துள்ளார்.
அப்போது சரவணன் ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். அப்போது தான் பிரமோத் 2 பவுன் நகையை தவறவிட்டது தெரியவந்தது. இதையடுத்து பிரமோத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
இன்று காலை கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு வந்த பிரமோத் நகையின் அடையாளங்களை தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரிடம் 2 பவுன் நகை ஒப்படைத்தனர். நகையை எடுத்துக் கொடுத்த ஆட்டோ டிரைவர் சரவணனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன் அவருக்கு நினைவு பரிசையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் வழங்கினார். ஆட்டோவில் தவறவிட்ட இரண்டு பவுன் நகையை எடுத்து போலீசிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் சரவணனை போலீசார் மட்டுமின்றி சக ஆட்டோ டிரைவர்களும் பாராட்டினார்கள்.
- ஆரல்வாய்மொழி போலீசார் ஆட்டோ டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை
- பலியானவரின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது.
கன்னியாகுமரி:
ஆரல்வாய்மொழி மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 46). செங்கல்சூளை தொழிலாளி. இவர் நேற்று மாலை பஞ்சாயத்து அலுவலகம் முன்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்று பெருமாள் மீது மோதியது.
இதில் பெருமாள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த பெருமாளை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். செல்லும் வழியிலேயே பெருமாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது உறவினர் முருகன் ஆரல் வாய்மொழி போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் ஆட்டோ டிரைவர் ரவி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான பெருமாளின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் அங்கு திரண்டு உள்ளனர். பலியான பெருமாளுக்கு மல்லிகா என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளது.
- குமரகிரி அடிவாரம் சிவன் கரடு பகுதியைச் நேற்று இரவு 9.30 மணியளவில் மதன்ராஜ், சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் குமரகிரி அருகே சாலையை கடக்க முயன்றார்.
- அப்போது அந்த வழியே வந்த ஒரு மோட்டார்சைக்கிள் எதிர்பாராத விதமாக மதன்ராஜ் மீது பயங்கரமாக மோதியது. சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலம்:
சேலம் சன்னியாசிகுண்டு குமரகிரி அடிவாரம் சிவன் கரடு பகுதியைச் சேர்ந்தவர் மதன்ராஜ் (வயது 38). ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணம் ஆகி உஷா (36) என்ற மனைவியுடன் வசித்து வந்தார். நேற்று இரவு 9.30 மணியளவில் மதன்ராஜ், சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் குமரகிரி அருகே சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியே வந்த ஒரு மோட்டார்சைக்கிள் எதிர்பாராத விதமாக மதன்ராஜ் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மதன்ராஜ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபரும் பலத்த காயமடைந்தார். இவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மதன்ராஜ் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மோட்டார்சைக்கிள் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய மாசிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த தேவராஜ் மகன் விஜய் (22) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ரத்தினம் புதிய பஸ்நிலையத்தில் இருந்து ஆட்டோவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
- செல்போனை பறித்த அந்தோணி சூர்யா,சக்திகுமாரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தாளமுத்து நகரை சேர்ந்தவர் ரத்தினம் (வயது 60). இவர் நேற்றிரவு வெளியூர் சென்று விட்டு புதிய பஸ்நிலையத்தில் இருந்து ஆட்டோவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஆட்டோவை பின்தொடர்ந்து சென்றவர்கள் திடீரென ஆட்டோவை வழிமறித்து ரத்தினத்திடம் இருந்து செல்போனை பறித்து சென்றனர். இதுதொடர்பாக அவர் தாளமுத்து போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி வழக்குப்பதிவு செய்து செல்போனை பறித்து சென்ற தாளமுத்துநகர் பகுதியை சேர்ந்த அந்தோணி சூர்யா (வயது 22) அவரது நண்பர் சக்திகுமார் ஆகியோரை கைது செய்தனர்.