என் மலர்
நீங்கள் தேடியது "முதியவர்"
- நேற்று மாலை சிறுமி மாடியில் தனியாக இருந்தபோது அங்கு சென்ற முதியவர் மிட்டாய் தருவதாக ஏமாற்றினார்.
- சிறுமி மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள்.
உத்தரப் பிரதேசத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த 4 வயது சிறுமியை 80 வயது முதியவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷஹாரில் புக்ராசி சௌகி பகுதியில் 80 வயது முதியவர் தனது பக்கத்தில் வீட்டில் வசித்த 4 வயது தலித் சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
நேற்று மாலை சிறுமி தனது வீட்டு மாடியில் தனியாக விளையாடிகொண்டிருந்தபோது அங்கு சென்ற முதியவர் மிட்டாய் தருவதாக ஏமாற்றி அங்கு வைத்தே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். இதையறிந்த குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.
சிறுமி மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் முதியவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
சிறுமியின் மருத்துவ அறிக்கை கிடைத்த பின்னர் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இனி நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் அவர்கள் தனது தந்தையிடம் பொய் கூறினர்
- சில நாட்களுக்குப் பிறகு போலீசார் அவரைக் கைது செய்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் வசிக்கும் குர்மீத் சிங்கிற்கு 103 வயது. 2018 ஆம் ஆண்டில் அவர் தனது ஐந்து ஏக்கர் நிலத்தை குருத்வாராவிற்கு நன்கொடையாக வழங்க முடிவெடுத்தார்.
இது அவரது மகன்களான கமல்ஜீத் மற்றும் ஹர்பிரீத் சிங்கிற்குப் பிடிக்கவில்லை. தந்தை குருத்வாராவிற்கு நிலத்தை நான் கொடுப்பதைத் தடுக்க விரும்பினர்.
இதனால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கும் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் முதியவரின் மகன்கள் ஒரு தந்திரமான திட்டத்தை வகுத்தனர்.
நிலம் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் முடிந்துவிட்டதாகவும், இனி நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் அவர்கள் தனது தந்தையிடம் பொய் கூறினர். முதியவர் தனது மகன்களை நம்பினார். நீதிமன்றத்திற்குச் செல்லவில்லை.
ஆனால் மகன்கள் கமலும் ஹர்ப்ரீத்தும் தொடர்ந்து நீதிமன்றத்திற்குச் சென்று வந்தனர். எனவே விசாரணைகளுக்கு ஆஜராகத் தவறியதற்காக குர்மீத்துக்கு நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது. சில நாட்களுக்குப் பிறகு போலீசார் அவரைக் கைது செய்தனர். அதன்படி முதியவர் கைது செய்யப்பட்டு கடந்த 18 மாதங்களாக சிறையில் இருந்துள்ளார்.

இதற்கிடையே சிறைக்குச் சென்ற உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர்கள் குர்மீத்தைப் பற்றி அறிந்து கொண்டனர். அவருடைய கதையைக் கேட்டு அவர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.
குர்மீத்தை விடுதலை செய்வதற்கான முயற்சிகள் தொடங்கியுள்ளன. இந்த முயற்சிகளை குர்மீத்தின் மகன்கள் முறியடிக்க முயன்றனர். ஜாமீன் கிடைக்காமல் இருக்க அவர்கள் நிறைய முயற்சி செய்தனர்.
இருப்பினும், அந்த தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர்கள் பின்வாங்கவில்லை. பல மாத முயற்சிக்குப் பிறகு, குர்மீத்துக்கு ஜாமீன் கிடைத்தது.
அவர் சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்தார். இதன்மூலம் அவரது கதை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தனது மகன்கள் செய்த காரியத்தால் அவர் மிகவும் மனமுடைந்து போயுள்ளார். எந்தத் தந்தைக்கும் தன்னைப் போன்ற ஒரு நிலைமை வரக்கூடாது என்று அவர் கண்ணீர் மல்க கூறுகிறார்.
- நாமக்கல்லில் கார் மோதி முதியவர் பலியானார்.
- இவர் இன்று காலை நாமக்கல் புதன் சந்தை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
நாமக்கல்:
நாமக்கல்லில் கார் மோதி முதியவர் பலியானார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 60).
இவர் இன்று காலை நாமக்கல் புதன் சந்தை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரங்கசாமி தலையில் பலத்த காயமடைந்தார். தகவல் அறிந்த நல்லிபாளையம் போலீசார், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரங்கசாமி உயிரிழந்தார்.
இது குறித்து நல்லிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து குறித்து அறிந்த ரங்கசாமியின் உறவினர்கள் ஆஸ்பத்திரியில் குவிந்துள்ளனர்.
- கார் மோதி முதியவர் பலியானார்.
- பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டவர்கள் கார்களில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் பருத்தியூர் பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 70). சேந்தகனி பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன்(65). இவர்கள் திருவாடானையை அடுத்த சின்னக்கீரமங்கலம் ரவுண்டானா பகுதியில் உள்ள கடை முன்பு நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டவர்கள் கார்களில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
இதில் ஒரு கார் வேகமாக வந்தது. அது கடை முன்பு நின்று கொண்டிருந்த சிதம்பரம், வேல்முருகன் ஆகியோர் மீது பயங்கரமாக மோதியது. இதில் அவர்கள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
இந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விபத்தில் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். வேல்முருகன் முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சை்காக காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து திருவாடானை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேர் மீது மோதிய காரை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி சென்ற கார் டிரைவரை தேடி வருகின்றனர்.
- ரெயில் நடுவழியில் நிறுத்தம்
- வாகன ஓட்டிகள் அவதி
நாகர்கோவில்:
கன்னியாகுமரி அருகே சுக்குப்பாறை தேரிவிளை பகுதியில் நேற்று மாலை சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார்.
இது பற்றி நாகர்கோவில் ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
இந்த நிலையில் கன்னியாகுமரியில் இருந்து புனலூருக்கு பாசஞ்சர் ரயில் வந்தது.
சுக்கு பாறை தேரிவிளை பகுதியில் ரயில் வந்த போது தண்டவாளத்தில் பிணம் கிடந்ததால் டிரைவர் ரயிலை நடு வழியில் நிறுத்தினார்.சுமார் அரை மணி நேரமாக ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டு இருந்தது.
ெரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டு இருந்ததை யடுத்து அந்த பகுதியில் உள்ள ரயில்வே கேட்டுகள் மூடப்பட்டு இருந்தன. மூடப்பட்ட ரயில்வேகேட் திறக்க தாமதம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.
அரசு பஸ்கள் இருசக்கர வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டு இருந்தது. ஒரு சில வாகன ஓட்டிகள் வாகனங்களை திருப்பி மாற்று பாதை வழியாக சென்றனர். சுமார் அரை மணி நேரத்துக்கு பிறகு தண்டவாளத்தில் கிடந்த உடலை போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.
பின்னர் ெரயில் அங்கிருந்து புறப்பட்டு நாகர்கோவிலுக்கு வந்தது. கன்னியாகுமரி புனலூர் பாசஞ்சர் ெரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டிருந்ததால் பயணிகள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். நாக ர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு சென்ற ெரயில்களும் தாமதமாக சென்றது.
பிணமாக கிடந்தவரின் உடல் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை போலீசார் இது தொடர்பாக விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- கடந்த சில ஆண்டுகளாக தீராத வயிற்று வலியுடன் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
- இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
இரணியல் அருகே நெய்யூர் ஹாக்கர் தெருவினை சேர்ந்தவர் பிறைட் சாலமன் (வயது 70). இவர் கடந்த சில ஆண்டுகளாக தீராத வயிற்று வலியுடன் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி ஏதோ மாத்திரைகள் சாப்பிட்டு மயங்கிய நிலையில் வீட்டின் அருகே உயிருக்கு போராடியபடி கிடந்ததாக தெரிகிறது.
உறவினர்கள் அவரை மீட்டு நெய்யூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி இன்று காலை பிறைட் சாலமன் உயிர் இழந்தார். இது குறித்து அவரது மருமகன் ஜெரின் அளித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முருகன் குன்றம் அருகே முட்புதருக்குள் இருந்து நேற்று மாலையில் துர்நாற்றம் வீசி யது.
- அழுகிய நிலை பிணமாக கிடந்தவர் அப்பகுதியில் பிச்சை எடுத்து வந்தவர்
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அடுத்துள்ள முருகன் குன்றம் அருகே முட்புதருக்குள் இருந்து நேற்று மாலையில் துர்நாற்றம் வீசி யது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் தென்தாமரை குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்த முட்புதருக்குள் அழுகிய நிலையில் கிடந்த சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வரு கின்றனர். முதல் கட்ட விசாரணையில் அழுகிய நிலை பிண மாக கிடந்தவர் அப்ப குதியில் பிச்சை எடுத்து வந்தவர் எனவும், அவரை பற்றிய வேறு தகவல் எதுவும் தெரியவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
- மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
- சாதனை புரிவதற்கு வயது, ஒரு தடையல்ல என்பதை ரமேஷ் சந்திரபாபு நிரூபித்து வருகிறார்.
ஓசூர்,
கின்னஸ் சாதனைக்காக ஹைதராபாத்தில் இருந்து 72 வயது முதியவர் ஒருவர், மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஹைதராபாத்தை சேர்ந்த ரமேஷ் சந்திரபாபு(72), என்ற அந்த முதியவர் தனது மோட்டார் சைக்கிள் பயணத்தை கடந்த 10.09.2022 அன்று ஹைதராபாத்தில் தொடங்கினார். தெலுங்கானா, ஆந்திரா மற்றும் கேரளா வழியாக தமிழகத்திற்குள் நுழைந்த அவர் கடந்த புதன்கிழமை இரவு ஓசூர் வந்தார். இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து 55 நாட்கள் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
நேற்று ஓசூரிலிருந்து கர்நாடகம் புறப்பட்ட அவர், கர்நாடகா வழியாக கோவா, மகாராஷ்டிரா மற்றும் நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் பயணம் மேற்கொண்டு தனது லட்சியத்தை அடையப்போவதாக உறுதியுடன் தெரிவித்தார். சாதனை புரிவதற்கு வயது, ஒரு தடையல்ல என்பதை ரமேஷ் சந்திரபாபு நிரூபித்து வருகிறார்.
- சேலம் அரிசிப்பாளையம் மெயின்ரோட்டில் வசித்து வந்த முதியவர் மாயமானர்
- இது குறித்த புகாரின்பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வேணுகோபாலை தேடி வருகின்றனர்.
ேசலம்:
சேலம் அரிசிப்பாளையம் மெயின்ரோட்டில் வசித்து வந்தவர் வேணுகோபால் (வயது 70). இவர் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர். இவருக்கு திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில் வேணுகோபால் கடந்த 21-ந்தேதி 4 ரோடு பூக்கடை காம்ப்ளக்ஸ் பஸ் நிறுத்தம் அருகே வசித்து வரும் தன்னுடைய தங்கை வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் அங்கு செல்லவில்லை. இதனால் உறவினர்கள், பல்வேறு இடங்களில் வேணுகோபாலை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வேணுகோபாலை தேடி வருகின்றனர்.
- செங்கட்டி பாலம் பகுதியில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இன்று காலை பிணமாக கிடந்தார்.
- .இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை
கன்னியாகுமரி :
சுசீந்திரம் அருகே செங்கட்டி பாலம் பகுதியில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இன்று காலை பிணமாக கிடந்தார்.
இது பற்றி சுசீந்திரம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்தவர் வாயிலிருந்து நுரை வந்திருந்தது.
மேலும் அவரது நெற்றி மற்றும் கண் பகுதியில் காயங்கள் இருந்தது. எனவே அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிணமாக கிடந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.
- மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
மணவாளக்குறிச்சி காந்தாரிவிளையை சேர்ந்தவர் மாகீன் (வயது 60). கூலித்தொழிலாளி. மது அருந்தும் பழக்கும் உடைய இவர் சம்பவத்தன்று மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தார். கட்டிலில் படுத்த அவர் விஷம் குடித்து வாந்தி எடுத்தார். இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மாகீன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது மனைவி பதர்நிஷா (55) மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் திருவாக் கவுண்டனூர் பைபாஸ் ரவுண்டானா அருகில் கடந்த 2-ம் தேதி முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார்.
- இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சீனிவாசன், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலம்:
சேலம் திருவாக் கவுண்டனூர் பைபாஸ் ரவுண்டானா அருகில் கடந்த 2-ம் தேதி முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து போடிநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன், சம்பவ இடத்திற்கு வந்து முதியவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார்.
போலீசாரின் விசாரணை யில், மயங்கி கிடந்த முதியவர் தூத்துக்குடி மாவட்டம் அழகேசபுரம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (வயது 75) என்பது தெரியவந்தது. இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சீனிவாசன், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.