என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகை"

    • திருச்சியில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்
    • ஸ்ரீரங்கம் மகமாயி கோவில் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த பாலாஜி (25) என்பவரை போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து டி.வியை மட்டும் பறிமுதல் செய்தனர்

    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு ஆண்டாள் நகர் பகுதியை சேர்ந்தவர் பாக்கியம் (66). இவர் கடந்த மாதம் வீட்டை பூட்டி விட்டு பெங்களூருக்கு சென்றுள்ளார்.

    இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இவருடைய வீட்டிற்கு பக்கத்தில் உள்ளவர்களிடமிருந்து வீட்டின் கதவு உடைக்கப்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பெங்களூரில் இருந்து திரும்பி வீட்டிற்கு வந்துள்ளார்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டுஅதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த டி.வி. மற்றும் மூன்று பவுன் நகை மற்றும் 7 கிராம் எடையுள்ள தோடு என மொத்தம் 53 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் காணாமல் போனது தெரியவந்தது.

    இதையடுத்து பாக்கியம் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் ஸ்ரீரங்கம் மகமாயி கோவில் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த பாலாஜி (25) என்பவர் திருடியது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து டி.வியை மட்டும் பறிமுதல் செய்தனர்.

    • கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு
    • மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டத்தை அடுத்த முளங்குழி, முள்ளஞ்சேரியை சேர்ந்தவர் வினு (வயது 35). நகை கடை நடத்தி வருகிறார்.

    வினுவின் மனைவி அனுஷா (30). சம்பவத்தன்று இவர் வீட்டின் அருகில் உள்ள கடைக்கு பொருள்கள் வாங்க சென்றார். அப்போது அங்கே மறைந்திருந்த வாலிபர் ஒருவர் திடீரென அனுஷா அருகே வந்தார்.

    கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வாலிபர் அனுஷா கழுத்தில் கிடந்த 15 பவுன் தாலி செயினை பறித்தார்.

    அனுஷா திருடன்...திருடன் என சத்தம் போட்டார். அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி யோடி தலைமறைவாகி விட்டார்.

    இதுபற்றி அவர் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அனுஷாவிடம் நகைபறித்த வாலிபரை தேடி வருகிறார்கள்.மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றியும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • தலைமறைவான பெண் மேலாளரை தேடும் பணி தீவிரம்
    • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வேப்பமூட்டில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலையில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று உள்ளது.

    இந்த நிறுவனத்தில் குமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் தங்களது நகைகளை அடகு வைத்து பணம் வாங்கியுள்ளார்கள்.

    நகைகளை அடகு வைத்து பணம் வாங்கிய பொதுமக்கள் தங்களது நகைகளை மீட்க வரும்போது நகைகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது.இது தொடர்பாக அந்த வாடிக்கையாளர்கள் வங்கி மேல் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் அந்த வங்கியில் பணிபுரிந்த மேலா ளர் கடந்த சில நாட்களாக பணிக்கு வரவில்லை. நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து வந்த அதிகாரிகள் வங்கியில் விசாரணை மேற்கொண்ட னர். அப்போது ரூ.30 லட்சம் மதிப்பிலான நகைகள் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வங்கி மேல் அதிகாரிகள் கோட்டாறு போலீசில் புகார் செய்தனர்.இன்று காலை கோட்டார் போலீசார் நிதி நிறுவனத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது நிதி நிறுவனத்தில் வேலை பார்த்த மேலாளர் கடந்த ஒரு வாரமாக வங்கிக்கு வராமல் தலைமறைவானதால் அவர் நகைகளை எடுத்துச் சென்று இருக்கலாம் என தெரிகிறது.அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    வாடிக்கையாளர்களி டமிருந்து பணத்தை பெற்றுக் கொண்டும் தங்களது கணக்கில் பணத்தை செலுத்தாமல் உள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் செட்டிகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பானுப்பிரியா ஜெயங்கொண்டம் சென்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் பஸ் ஏறி செங்குந்தபுரத்திற்கு வந்தார்.
    • பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பானுப்பிரியாவின் கழுத்தில் கிடந்த 4பவுன் தங்க நகையை பறித்து சென்றனர்.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புது குடி கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் மணி கண்ணன். இவரது மனைவி பானுப்பிரியா (வயது 28).

    இவர் நேற்று மதியம் ஜெயங்கொண்டம் சென்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் பஸ் ஏறி செங்குந்தபுரத்திற்கு வந்தார். பின்னர் புதுகுடி கிராமத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பானுப்பிரியாவின் கழுத்தில் கிடந்த 4பவுன் தங்க நகையை பறித்து சென்றனர். அவர் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் மர்மநபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் மர்மநபர்கள் தப்பி சென்றனர்.

    இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


    • நாகர்கோவிலில் அடுத்தடுத்து சம்பவம்
    • சி.சி.டி.வி. காமிரா பதிவு மூலம் போலீசார் விசாரணை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ராமவர்ம புரத்தைச் சேர்ந்தவர் மெல்பாராஜினி (வயது 51). இவர் நேற்று ஆலயத்துக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், முகவரி கேட்பது போல் மெல்பாராஜினியிடம் பேசி உள்ளனர். அப்போது திடீரென அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.

    இதேபோல் நாகர்கோவில் மூவேந்தர் நகரைச் சேர்ந்த லட்சுமி (44) சாலையில் நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்துச் சென்றனர். ஓரே நாளில் அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவம் பெண்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது.

    இதுகுறித்த புகார்களின் அடிப்படையில் நேசமணி நகர் மற்றும் ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர். சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    இதில் 2 நகை பறிப்பு சம்பவங்களிலும் ஒரே கும்பல் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் நகை பறிப்பு திருடர்களை தேடி வருகின்றனர்.

    • மர்மநபர்கள் கைவரிசை
    • சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு

    நாகர்கோவில்:

    ஈத்தாமொழி அருகே கேசவன் புத்தன் துறை பகுதியில் தூய மாசற்ற திரு இருதய அன்னை ஆலயம் உள்ளது.இந்த ஆலயத்தின் எதிர்ப்புறம் மிக்கேல் அதிதூதர் குருசடி ஆலயம் அமைந்துள்ளது.

    இந்த குருசடியில் காலை மாலை நேரங்களில் பிரார்த்தனை நடைபெறும். நேற்று காலை வழக்கம் போல் பிரார்த்தனை முடிந்து அனைவரும் சென்றனர். மாலையில் பிரார்த்தனைக்கு வந்த போது குருசடி இருந்த மிக்கேல் அதிதூதர் கழுத்தில் கிடந்த 12 பவுன் நகை மாயமாக இருந்தது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிர்வாகிகள் ஈத்தாமொழி போலீசுக்கு தகவல் தெரிவித்தன.ர் கன்னியாகுமரி டிஎஸ்பி ராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி னார்கள். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது.

    கொள்ளை நடந்த பகுதியிலிருந்து மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடிய நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து ஈத்தாமொழி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆட்கள் நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்டு யாரோ இந்த கைவரிசையில் ஈடுபட் டுள்ளனர்‌. எனவே இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் கொள்ளையர்க ளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கி றார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • சேலம் மாவட்டம் எடப்பாடி ஆசிரியர் காலனியில் ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் நகையை பறித்து சென்றனர்.
    • 25 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் நாகம்மாள் கழுத்தில் அணிதிருந்த 5½ பவுன் செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றான்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடி ஆசிரியர் காலனியில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற ஆசிரியை நாகம்மாள் (வயது 64). நேற்று இவர் தனது மகள் வசந்தம்மாளுடன் இருசக்கர வாகனத்தில் தாவாந்தெரு நகராட்சி தொடக்கப்பள்ளியில் படித்து வரும் தனது பேரனுக்கு மதிய உணவு கொடுக்க சென்று கொண்டிருந்தார்.

    நகை பறிப்பு

    அப்போது தாவாந் தெரு காளியம்மன் கோவில் முன்பு உள்ள வேகதடையில் மெதுவாக செல்லும் பொழுது பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 25 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் நாகம்மாள் கழுத்தில் அணிதிருந்த 5½ பவுன் செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றான்.

    இதனால் நாகம்மாளின் மகள் வசந்தம்மாள் கூச்சலிட்டவாறு அந்த வாலிபரை விரட்டிச் சென்றார். ஆனால் எடப்பாடி பஸ் நிலையம் அருகே சென்றபோது அந்த வாலிபர் கண்ணிமைக்கும் நேரத்தில் மாயமானார்.

    சி.சி.டி.வி.யில் பதிவான கொள்ளையன் உருவம்

    இது குறித்து நாகம்மாள் எடப்பாடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் தனியார் மருத்துவமனை அருகே மோட்டார் சைக்கிளில் நீண்ட நேரமாக காத்திருந்த வாலிபர் ஒருவர் நாகம்மாள் சென்ற ஸ்கூட்டரை பார்த்து பின் தொடர்ந்து சென்று, நகையை பறித்த காட்சி பதிவாகி இருந்தது.

    எடப்பாடி இன்ஸ்பெக்டர் சந்திரலேகா வழக்கு பதிவு செய்து தப்பிச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர். தகவல் அறிந்த சங்ககிரி டி.எஸ்.பி. ஆரோக்கியராஜ் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கந்தம்பாளையம் பகுதியில் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகையை திருடிக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.
    • புகாரின் பேரில் போலீஸ் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் ராசப்பன் வழக்கு பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கந்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 47). இவர் நில புரோக்கர்தொழில் மற்றும் கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

    நேற்று முன் தினம் இரவு வீட்டில் இருந்த செல்வம் தான் அணிந்திருந்த செயின்,

    கைச்செயின், 2 மோதி ரங்களை பெஞ்ச் மீது வைத்துவிட்டு அறைக்குள் சென்று தூங்கிக் கொண்டி ருந்தார். நேற்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் அந்த பகுதிக்கு காரில் வந்த அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் வந்து கதவை உடைத்து உள்ளே புகுந்து பெஞ்சின் மீது வைத்திருந்த தங்க கழுத்து செயின், தங்க கைச்செயின் ,தங்க மோதிரம் இரண்டு ஆகிய 15 பவுன் நகையை திருடிக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.

    அசந்து தூங்கிக் கொண்டிருந்த செல்வம் எழுந்து வந்து பெஞ்சில் வைத்திருந்த நகைகளை பார்த்த போது நகைகளை காணவில்லை.இது குறித்து செல்வம் நல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் ராசப்பன் வழக்கு பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • கோவிலின் பூட்டை மர்ம நபர்கள் நேற்று நள்ளிரவு உடைத்துள்ளனர்.
    • உள்ளே சென்று அங்கிருந்த உண்டியலை உடைத்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள சந்தூரில் வீரபத்திரன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூட்டை மர்ம நபர்கள் நேற்று நள்ளிரவு உடைத்துள்ளனர். பின்னர் உள்ளே சென்று அங்கிருந்த உண்டியலை உடைத்தனர். அதில் இருந்த நகை மற்றும் காணிக்கை பணம் ஆகியவை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    இதனை இன்றுகாலை பார்த்து அப்பகுதியில் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி போச்சம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்த கோவிலை பார்வையிட்டனர். மர்ம நபர்கள் நோட்டமிட்டு இரவு நேரத்தில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

    இந்த கோவிலில் சுமார் 22 பவுன் தங்க நகைகளும், 16 பவுன் வெள்ளி பொருட்களும் திருடு போனதாக அப்பகுதி மக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதனால் கொள்ளை நடந்த பகுதியில் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டது. போலீசார் கொள்ளையர்களின் கைரேகை பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும் இதே போல் அப்பகுதியை சேர்ந்த சின்ராஜ் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து அங்கிருந்த 2 பவுன் தங்க நகையும், 8 ஆயிரம் பணமும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். சந்தூரில் நடந்த அடுத்தடுத்து கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த மாதம் 15-ந் தேதி கண்ணன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டார். தனது வேலைகளை முடித்துக் கொண்டு மதியம் 2 மணிக்கு அவர் வீட்டுக்கு வந்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
    • உள்ளே சென்று பார்த்த போது, பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்கக் காசு, மோதிரம் உள்பட 2 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தேங்கல்பாளையம் குடித் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 53). விவசாயி.

    நகை திருட்டு

    கடந்த மாதம் 15-ந் தேதி கண்ணன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டார். தனது வேலைகளை முடித்துக் கொண்டு மதியம் 2 மணிக்கு அவர் வீட்டுக்கு வந்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்கக் காசு, மோதிரம் உள்பட 2 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.20 ஆயிரம் ஆகும். இது பற்றி கண்ணன் ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    2 பேர் சிக்கினர்

    இந்நிலையில் நேற்று ராசிபுரம் போலீசார் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் தேங்கல்பாளையத்தில் கண்ணன் வீட்டில் நகை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே மோட்டுபட்டியைச் சேர்ந்த ரமேஷ் (30), தாரமங்கலம் எம்.ஜி.ஆர் காலனியை சேர்ந்த சேட்டு என்கிற பெருமாள்(40) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    நகை பறிமுதல்

    அவர்களிடம் இருந்து ராசிபுரம் மற்றும் சில இடங்களில் திருடிய 5 1/2 பவுன் நகைகளையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட ரமேஷ் மற்றும் பெருமாள் ஆகியோரை ராசிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ராசிபுரம் கிளை சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது தாரமங்கலம், எடப்பாடி, பனைமரத்துப்பட்டி, கெங்கவல்லி போன்ற போலீஸ் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தாரமங்கலம் அருகிலுள்ள பவளத்தானுர் பகுதியில் கடந்த 2 -ந்தேதி வியாபாரம் செய்ய கோவை, பழனி, தாராபுரம், உடுமலைப்பேட்டை ஆகிய ஊர்களுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தார்.
    • வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது 12 பவுன் எடை கொண்ட ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள நகைகள் திருடப்பட்டு இருந்தது.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள பவளத்தானுர் பகுதியை சேர்ந்தவர் விஜயன் (வயது 37). இவர் சொந்தமாக டெம்போ வைத்துக்கொண்டு ஊர் ஊராக சென்று மளிகை பொருட்கள் விற்பனை செய்து வருகிறார்.

    இந்நிலையில் விஜயன், தனது அம்மா பானுமதி, தம்பி பிரகாஷ் ஆகியோருடன் கடந்த 2 -ந்தேதி வியாபாரம் செய்ய கோவை, பழனி, தாராபுரம், உடுமலைப்பேட்டை ஆகிய ஊர்களுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த விஜயன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். படுக்கை அறையில் உள்ள பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த பானுமதியின் தாலிக்கொடி மற்றும் செயின், பிரகாஷின் செயின் உட்பட சுமார் 12 பவுன் எடை கொண்ட ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள நகைகள் திருடப்பட்டு இருந்தது.

    இது குறித்து விஜயன் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பேருந்தில் தவறவிட்ட 15 பவுன் நகைகளை ஒப்படைத்த ஒட்டுநர், நடத்துனரை பொதுமக்கள் பாராட்டினர்.
    • நாகர்கோவில் வங்கி அதிகாரி

    புதுக்கோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் அந்தோணி ராஜ்(வயது 42), இவர் நாகர்கோவிலில் தனியார் வங்கி மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 7-ந் தேதியன்று அறந்தாங்கியிலிருந்து மதுரைக்கு சென்ற அரசுப் பேருந்தில் காரைக்குடிக்கு பயணம் செய்துள்ளார். காரைக்குடியிலிருந்து தேவகோட்டை செல்ல வேண்டிய டேவிட்அந்தோணிராஜ், காரைக்குடி நிறுத்தம் வந்ததும் பேருந்திலிருந்து இறங்கி வேறொரு பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது தாம் கொண்டு வந்த பை மற்றும் உடமைகளை அந்த பேருந்திலேயே தவறவிட்டுவிட்டோம் என உணர்ந்து அதிர்ச்சியடைத்துள்ளார்.

    உடனடியாக சம்பவம் குறித்து காவல்த்துறையினருக்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார். இதற்கிடையில், மதுரைக்கு சென்ற பேருந்து இரவு அறந்தாங்கி திரும்பியதும், பயணிகள் இருக்கைக்கு மேல் லக்கேஜ் வைக்கும் இடத்தில் பை ஒன்று உள்ளதை நடத்துனர் முத்துக்குமார், ஓட்டுனர் ரவி ஆகியோர் பார்த்துள்ளனர். அதனை எடுத்து பார்த்ததில் அதில் நகைகள் மற்றும் லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் இருந்துள்ளதைக் கண்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து உடனடியாக போக்குவரத்து மண்டல மேலாளரிடம் தகவல் தெரிவித்துவிட்டு அறந்தாங்கி காவல் நிலையத்தில் நகை உள்ளிட்ட பொருட்களை ஒப்படைத்துள்ளனர். பொருட்களை வாங்கி விசாரணை மேற்கொண்ட காவல்த்துறையினர் சம்மந்தப்பட்ட வங்கி மேலாளர் டேவிட் அந்தோணிராஜை அறந்தாங்கி காவல் நிலையத்திற்கு வரவழைத்து அவர் தவறவிட்ட சுமார் 15 சவரன் நகை லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை அவரிடமே ஒப்படைத்தனர். ரூ.6 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை உரியவரிடம் சேர உதவிய அரசுப் பேருந்து நடத்துனர், ஓட்னருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    ×