என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இன்ஸ்பெக்டர்"
- தகாத வார்த்தைகளில் பேசுவதாகவும் தொடர் புகார்கள் வந்துள்ளது.
- வேலூர் எஸ்.பி. மணிவண்ணன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
வேலூரில் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் ராஜா. இவர் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க தவறியதாகவும் இன்ஸ்பெக்டர் ராஜா மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில் புகார் அளிக்க வரும் பொதுமக்களை தகாத வார்த்தைகளில் பேசுவதாகவும் தொடர் புகார்கள் வந்துள்ளது.
இதையடுத்து வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா மீது அடுக்கடுக்காக புகார் எதிரொலி காரணமாக இன்ஸ்பெக்டர் ராஜாவை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து வேலூர் எஸ்.பி. மணிவண்ணன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
- 100 வருடங்களுக்கு மேல் இந்த பாரம்பரியா மரியாதை தொடர்வதாக பெரியவர்கள் கூறுகிறார்கள்.
- நடைமுறையும், மரியாதையும் மிகவும் புதுமையாக உள்ளது.
சென்னிமலை:
சென்னிமலை முருகன் கோவிலில் விழாக்கள் அனைத்தும் சென்னிமலை டவுன் கிழக்கு ரத வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலிலும், திருத்தேரோட்டம் நகரின் நான்கு ரத வீதிகளில் தான் நடக்கும்.
சென்னிமலை முருகன் கோவில் தேரோட்டத்தில் தேர் ரதம் பிடிக்கும் போது போலீஸ் நிலையம் சென்று அழைத்து வருவது. அதேபோல் நிலை சேர்ந்தவுடன் தேர் நிலையில் இருந்து சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு மாலை அணிவித்து மேள, தாளம் முழங்க கோவில் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் தலைமையில் ஊர்வலமாக சென்னிமலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விடுவார்கள்.
இந்த பழக்கம் பல நீண்ட வருடங்களாக உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கின்றனர். இது நடைமுறை என்பதை விட பழக்கம் என கூறலாம். 100 வருடங்களுக்கு மேல் இந்த பாரம்பரியா மரியாதை தொடர்வாதக பெரியவர்கள் கூறுகிறார்கள். இன்னும் இந்த மரியாதை மாறாமல் தொடர்ந்தது.
இதில் சென்னிமலை இன்ஸ்பெக்டராக புதியதாக பொறுப்பேற்றுள்ள செந்தில்பிரபு நான் பல இடங்களில் பணியாற்றி உள்ளேன். இங்கு இந்த நடைமுறையும், மரியாதையும் மிகவும் புதுமையாக உள்ளது. மிகுந்த மன நெகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது. கோவில் நிர்வாகத்திற்கும், தேரோட்டத்தில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான முருகபக்தர்களுக்கும் என்றும் நான் தொண்டு செய்ய சென்னிமலை முருகன் அருள்புரிய வேண்டும் என்றார்.
- இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்கு ஆவணங்கள் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசனை அழைத்து விவரம் கேட்டுள்ளார்.
- போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சீதரரெட்டிக்கு தெரியவந்தது.
புதுச்சேரி:
புதுவை நெட்டப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக ராஜ்குமார் பணிபுரிந்து வருகிறார். சப்-இன்ஸ்பெக்டராக கதிரேசன் உள்ளார்.
இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்கு ஆவணங்கள் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசனை அழைத்து விவரம் கேட்டுள்ளார்.
இதற்கு சப்-இன்ஸ்பெக்டர் கொடுத்த விளக்கம் இன்ஸ்பெக்டர் ராஜ்குமாருக்கு திருப்தி ஏற்படவில்லை.
இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அங்கிருந்த போலீசார் 2 பேரையும் சமாதானம் செய்தனர். பின்னர் 2 பேரும் போலீஸ் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு சென்றுவிட்டனர்.
போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சீதரரெட்டிக்கு தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் ஆகியோரை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரித்து அவர்களை கண்டித்துள்ளார். அதன் பிறகு 2 பேரும் பணிக்கு திரும்பினர்.
பொதுமக்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டிய போலீசாரே போலீஸ் நிலையத்தில் மல்லுக் கட்டிய சம்பவம் நெட்டப்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
- ராஜேஸ்வரி என்ற மனைவியும் பிரித்தி, நிவேதா ஸ்ரீ என்ற 2 மகள்களும் உள்ளனர்.
நாகர்கோவில் :
சுசீந்திரத்தைச் சேர்ந்த அய்யப்பன் (வயது 52), தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். 2 நாட்கள் விடுமுறையில் வீட்டுக்கு வந்த இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். அய்யப்பனுக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும் பிரித்தி, நிவேதா ஸ்ரீ என்ற 2 மகள்களும் உள்ளனர்.
- நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் பதவிக்கு கிச்சிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் நியமிக்கப்பட்டார்.
- நகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி மற்றும் துணை கமிஷனர்கள் மதிவாணன், கவுதம் கோயல், நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் சரவணன் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார்.
சேலம்:
சேலம் மாநகர நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ஆக இருந்த கற்பகம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாறுதல் செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து காலியாக இருந்த நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் பதவிக்கு கிச்சிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் நியமிக்கப்பட்டார்.அவர் இன்று காலை பொறுப்பேற்றுக்கொண்டு மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி மற்றும் துணை கமிஷனர்கள் மதிவாணன், கவுதம் கோயல், நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் சரவணன் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார்.
- வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் மின்னல் வேகத்தில் சென்றனர்.
- முதற்கட்ட விசாரணையில் அந்த வாலிபர்கள் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்பது தெரியவந்தது.
சூலூர்:
கோவை அருகே உள்ள சூலூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் மாதையன். இவர் இன்று அதிகாலை 2.45 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்.
ெதன்னம்பாளையம் பிரிவு அருகே சென்றபோது அந்த வழியாக நம்பர் பிளேட் இல்லாத மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படியாக 2 வாலிபர்கள் சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக சென்றனர்.
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் மாதையன் மற்றும் டிரைவர் சிவக்குமார் ஆகியோர் அந்த வாலிபர்களை ரோந்து வாகனத்தில் விரட்டி சென்றனர். 5 கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்றனர். ஆனால் அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் மின்னல் வேகத்தில் சென்றனர்.
இதனையடுத்து டிரைவர் சிவக்குமார் வாலிபர்களை பிடிப்பதற்காக அவர்களின் மோட்டார் சைக்கிளை முந்திச் சென்று பின் பக்கத்தில் இடித்தார். அப்போது ரோந்து வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் வலது பக்கத்தில் இருந்த தடுப்பு கம்பியில் மோதியது.
மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த வாலிபர்கள் இருட்டில் ஓடி தப்பித்தனர். ரோந்து வாகனம் விபத்தில் சிக்கியதில் இன்ஸ்பெக்டர் மாதையனின் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் அவரை நீலாம்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
போலீசார் வாலிபர்கள் விட்டுச் சென்ற கைப்பையை சோதனை செய்தனர். அதில் பட்டாகத்தி, வீடுகளை உடைக்க பயன்படுத்தும் இரும்பி கம்பி 2, ஸ்குரு டிரைவர், கையுறை, 2 டார்ச் லைட், சிறிய கத்தி ஆகியவை இருந்தது. வாலிபர்கள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் ஆயுதங்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதற்கட்ட விசாரணையில் அந்த வாலிபர்கள் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்பது தெரியவந்தது. இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கணியூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பாப்பம்மாள் (72) என்ற மூதாட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையை செய்தவர்கள் யார், எதற்காக செய்தனர் என்று இதுவரை கண்டுபி டிக்கப்படவில்லை. போலீசார் கொலையாளிகளை தேடி வரும் நிலையில் சந்தேகத்துக்கு இடமான வகையில் 2 பேர் தப்பிச் சென்றுள்ளனர்.
இதனால் அவர்களுக்கு கொலை வழக்கில் எதுவும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- செல்வம் பதவி உயர்வு பெற்று பணியிட மாறுதலில் சென்றார்.
- ரசேகர் குறிஞ்சிப்பாடி இன்ஸ் பெக்டராக மாறுதல் செய்யப் பட்டார்.
கடலூர்:
குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய செல்வம், துணை போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று பணியிட மாறுதலில் சென்றார். அதனைத் தொடர்ந்து, சென்னை உளவுத்துறையில் இன்ஸ் பெக்டராக பணியாற்றி வீரசேகர் குறிஞ்சிப்பாடி இன்ஸ் பெக்டராக மாறுதல் செய்யப் பட்டார். இவர் நேற்று குறிஞ்சிப் பாடி போலீஸ் நிலையத்திற்கு வந்து பொறுப்பேற்றுக் கொண்டார். புதியதாக பொறுப்பேற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் வீரசேகருக்கு, சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்