search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உபகரணங்கள்"

    • அப்போது துப்புரவு பணியாளர்கள் கையில் உறைகள் மட்டும் அணிந்திருந்தனர்.
    • ஒப்பந்ததாரரை நேரில் அழைத்தும் வரவில்லையா என கூறி சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. குப்பைகள் அகற்றுவதற்கு தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலமாக 300-க்கும் மேற்பட்ட தற்காலிக துப்புரவு பணியாளர்களைக் கொண்டு குப்பைகள் அகற்றும் பணி நடைபெற்று வருகின்றது. கடலூர் மாநகராட்சி நிரந்தர துப்புரவு பணியாளர்கள் 162 பேர் கால்வாய் சுத்தம் செய்யும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி முழுவதும் குப்பைகள் சரியான முறையில் அகற்றவில்லை. இதன் காரணமாக நோய் பரவும் அபாயம் உள்ளது. கடந்த வாரம் கலெக்டர் அருண் தம்புராஜ், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர், குப்பை அகற்றும் தொழிலாளர்களுக்கு வாகன வசதி, பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவற்றை உடனடியாக வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கடும் எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து , இன்று காலை கலெக்டர் அருண் தம்புராஜ் துப்புரவு பணியாளர்களை மீண்டும் ஆய்வு செய்தார். அப்போது துப்புரவு பணியாளர்கள் கையில் உறைகள் மட்டும் அணிந்திருந்தனர்.

    மேலும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் நேரில் வரவில்லை. அதற்கு மாறாக ஒப்பந்ததாரரிடம் பணிபுரியும் ஊழியர்கள் வந்திருந்தனர். இதனால் கலெக்டர் அருண் தம்புராஜ் கடும் அதிர்ச்சி அடைந்து, ஆய்வு கூட்டத்திற்கு ஒப்பந்ததாரரை நேரில் அழைத்தும் வரவில்லையா என கூறி சரமாரியாக கேள்வி எழுப்பினர். அப்போது தற்காலிக துப்புரவு பணியாளர்கள் பேசுகையில், எங்களுக்கு தற்போது குப்பைகள் அள்ளுவதற்கு கை உறைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வாகன வசதிகள் சரியான முறையில் வழங்கவில்லை . தற்போது வழங்கப்பட்டுள்ள வாகனங்களில் ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டால் அதனை நாங்களே செலவு செய்து சரி செய்து கொள்ள வேண்டும் என கூறுகிறார்கள். இது மட்டுமின்றி குப்பைகள் கொண்டு செல்வதற்கு சாக்குகளும் அதற்கான வசதிகளும் இல்லை. மேலும் அகற்றப்பட்ட குப்பைகள் கொண்டு செல்வதற்கு, ஜேசிபி வசதி இல்லாததால், குப்பைகளும் கொட்ட முடியவில்லை என சரமாரியாக புகார் அளித்தனர்.

    இதனை கேட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பேசுகையில், கடலூர் மாநகராட்சியை சுகாதாரமாக பேணிக்காப்பதற்காக தனியார் ஒப்பந்ததாரர் மூலமாக குப்பைகள் அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் கடந்த வாரம் ஆய்வு செய்த போது, எப்படி இருந்ததோ அதேபோல் தற்போதும் உள்ளது. ஆகையால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு உடனடியாக மாநகராட்சி சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க வேண்டும். இதனை மீறும் பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை மிகக் கடுமையாக இருக்கும் என கடும் எச்சரிக்கை விடுத்தார். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. அப்போது மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ், மாநகர நகர் அலுவலர் எழில் மதனா மற்றும் மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, சங்கீதா, கவுன்சிலர்கள் சுதா அரங்கநாதன், சுபாஷினி ராஜா, சக்திவேல், சரவணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • சந்தேகப்படும்படி நபர்கள் தென்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
    • மீன்பிடிக்க செல்லும்போது தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் எடுத்து செல்ல வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம் அருகே காரங்குடா, மல்லிப்பட்டிணம் ஆகிய இடங்களில் இந்திய கடலோர காவல்படை, தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் மீன்வளத்துறை ஆகியோர் சார்பில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    இதில் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்லக் கூடாது.

    தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க கூடாது. கடத்தல் மற்றும் சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

    கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும்போது தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் இந்திய கடலோர காவல் படை பிரதான அதிகாரி பி.வி.வினு, ரமேஷ்ராஜா மற்றும் அதிகாரிகள், கடலோர பாதுகாப்பு குழும காவல் துணைக் கண்காணிப்பபாளர் பிரான்சிஸ், காவல் ஆய்வாளர் மஞ்சுளா, உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் மணிகண்டன், ஆய்வாளர் கெங்கேஸ்வரி மற்றும் மீனவ பிரதிநிதிகள், மீனவர்கள் கலந்து கொண்டனர்.

    • விடுதியில் தங்கி பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
    • விளையாட்டு பயிற்சி கூடத்தில் மாணவிகளுக்கு வாரம் இருமுறை உடற்பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

    திருப்பூர்:

    கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு திருப்பூர் கருவம்பாளையம் பகுதியில் 37வது வார்டில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் நல மாணவிகள் விடுதியில் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட துணை அமைப்பாளர் சண்முகவிக்னேஷ் ஏற்பாட்டில், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கோபிநாத் முன்னிலையில் விடுதியில் தங்கி பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    மேலும் விடுதியில் தங்கி பயிலும் மாணவிகள் அவர்களின் உடல்நலம் பேணும் வண்ணம் அவர்கள் தங்கி பயிலும் விடுதியின் அருகே கால்பந்து மைதானம், இறகுபந்து அரங்கம் மற்றும் நவீன உடற்பயிற்சி கூடம் போன்றவை உள்ளடங்கிய விளையாட்டு பயிற்சி கூடத்தில் மாணவிகளுக்கு வாரம் இருமுறை உடற்பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் டென் எக்ஸ் விளையாட்டு பயிற்சி கூடத்தின் உரிமையாளர் ஸ்வேதா, ராயபுரம் பகுதியை சேர்ந்த பூர்ணபிரசாத், அஜய், பிரவீன், தினேஷ் மற்றும் மாணவர் அணி செல்வக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • மாநில அளவிலான வீல்சேர் கிரிக்கெட் போட்டி 17-ந் முதல் 19-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • போட்டிக்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு நிதிஉதவி செய்யும்படி கோரிக்கை.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு வீல் சேர் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் வேலூரில் மாநில அளவிலான வீல் சேர் கிரிக்கெட் போட்டி 17-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்தப் போட்டியில் தஞ்சையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான வீல் சேர் கிரிக்கெட் வீரர் அருண்குமார் என்பவர் கலந்து கொண்டு விளையாடுகிறார்.

    அவருக்கு போட்டிக்குத் தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு நிதி உதவி செய்யும்படி அனைத்திந்திய சட்ட உரிமைகள் மற்றும் மக்கள் பாதுகாப்பு கவுன்சில் சார்பாக மாநிலத் தலைவர் சாலமன், மாவட்டத் தலைவர் மோகனசுந்தரம் ஆகியோர் தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனிடம் கோரிக்கை வைத்தனர்.

    அந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மாற்றுத்திறனாளியான அருண்குமாருக்கு போட்டிக்குத் தேவையான உபகரணங்கள் வாங்க ரூ.15 ஆயிரம் உதவித்தொகையை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் வழங்கினார்.

    அப்போது மாவட்டத் தலைவர் மோகனசுந்தரம், மாவட்ட செயலாளர் விஷ்ணு தேவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கிளை செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள், வட்டார மருத்துவ அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    • விழா ஏற்பாடுகளை மாவட்ட மருத்துவ அணியினர் செய்திருந்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேமம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாநில மருத்துவ அணி தலைவர் கனிமொழி, என்.வி.என்.சோமு எம்.பி. மற்றும் செயலாளர் மரு.எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ ஆகியோரின் அறிவுறுத்தல்படி, மாநில மருத்துவ அணி துணை செயலாளர் அஞ்சுகம் பூபதியின் வழிகாட்டுதல் படி, மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ.வின் ஆலோசனை ப்படி அண்ணா பிறந்தநாள் மற்றும் கருணாநிதி நூற்றா ண்டு விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட மருத்துவ அணி சார்பில் திருத்துறைப்பூண்டி அடுத்த விளக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவ அணி தலைவர் சரவணன் வரவேற்புரை ஆற்றினார்.

    மாவட்ட அமைப்பாளர் திவாகரன் சுபாஷ், திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் பிரகாஷ், ஊராட்சி தலைவர் தனலஷ்மி செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கூடுதல் மருத்துவ உபகரணங்கள் வழங்கினார்.

    இதில் ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட மருத்துவ அணி துணை தலைவர்கள், துணை அமைப்பாளர்கள், தொகுதி அமைப்பாளர்கள் வீரராகுல் (திருத்துறைப்பூண்டி), அரவிந்தன் (மன்னார்குடி), ஒன்றிய துணை தலைவர் ராமகிருஷ்ணன், துணை அமைப்பாளர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள், வட்டார மருத்துவ அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் தொகுதி துணை அமைப்பாளர் தீபன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை மாவட்ட மருத்துவ அணியினர் செய்திருந்தனர்.

    • முடல் நீக்கியல் வல்லுநர் ரூபன்ஸ்மித் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    • 19 மாற்றுதிறனாளிகள் உபகரணங்கள் வழங்குவதற்கு தேர்வு செய்யப்பட்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவ ட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்திய செயற்கை அவயங்கள் உற்பத்திக் கழகம் சமூக செயலாற்றுகிற பொறுப்பி ன் கீழ் மாற்று த்திறனா ளிகளுக்கான உதவி உபகரணங்கள் தேர்வு செய்யும் முகாம் நடைபெற்றது.

    கொள்ளிடம் ஒன்றியக் குழு தலைவர் ஜெயபிரகா ஷ் தலைமையே ற்று முகாமை தொடக்கி வைத்து பேசினார். கொள்ளிடம் ஒன்றிய ஆணையர் தியாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாபு, முடல் நீக்கியல் வல்லுநர் ரூபன்ஸ்மித் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    முகாமில் கலந்து கொண்ட 19 மாற்றுதி றனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் பொருத்தப்பட்ட வாகனம், ஊன்றுகோல் மற்றும் இதர உபகரணங்கள் வழங்கு வதற்கு தேர்வு செய்ய ப்பட்டனர்.

    • இதற்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர்‌ டாக்டர்‌ கமலக்கண்ணன்‌ தலைமை தாங்கினார்‌.
    • முடிவில் தொகுதி அமைப்பாளர் டாக்டர்‌ கார்த்திக்கேயன்‌ நன்றி கூறினார்.

    கடலூர்:

    கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் கிழக்கு மாவட்ட மருத்துவர் அணி சார்பாக மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா நடை பெற்றது. இவ்விழாவில் வேளா ண்மை துறை அமைச்ச ரும், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரு மான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கலந்து கொண்டு முட்டம் ஆரம்ப சுகாதார நிலை யத்தில் கூடுதல் மருத்துவ உபகர ணங்களை வழங்கினார். இதற்கு மாவட்ட மருத்து வர் அணி அமைப்பாளர் டாக்டர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட மருத்துவ அணி தலைவர் டாக்டர். ராமச் சந்திரன் வரவேற்றார். தொகுதி அமைப்பாளர்கள் டாக்டர்கள் கடலூர் கலைக் கோவன், சிவசெந்தில், கிருஷ்ணராஜ், வசந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட துணை அமைப்பாளர் டாக்டர்கள் அவினாஷ், அருண், மாவட்டத் துணைத் தலைவர் செல்வம், வடி வேலன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் முட்டம், வடலூர், கடலூர் புதுப்பாளையம், புதுச்சத்திரம், புவனகிரி, கிருஷ்ணாபுரம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்க ளுக்கு மருத்துவ உபகர ணங்கள் வழங்கப் பட்டது. முடிவில் தொகுதி அமைப்பாளர் டாக்டர் கார்த்திக்கேயன் நன்றி கூறினார்.

    • முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் சென்னையில் இருந்து திறந்து வைத்தார்.
    • இணை இயக்குனர் கருணாநிதி வரவேற்பு உரை யாற்றினார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவ ட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதியில் உள்ள விவசாயிகளுக்கு ரூபாய் 2 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தை நேற்று தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் சென்னையில் இருந்து திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ர்வன் குமார் தலைமை தாங்கினார்.

    உளுந்தூர்பேட்டை மணிக்கண்ணன் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி வரவேற்பு உரை யாற்றினார். நிகழ்ச்சியில் புதிய கட்டிடத்தில் குத்து விளக்கு ஏற்றி 25-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையிலான பவர் டில்லர் எந்திரம், தென்ன மரக் கன்றுகள், பழக்க ன்றுகள் கத்திரிக்கன்றுகள், உள்ளிட்ட விவசாய உபகரணங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

    இதில் ஒன்றிய செய லா ளரும், உளுந்தூர்பேட்டை ஒன்றிய குழு தலைவருமான ராஜவேல், நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு, துணைத் தலைவரும் கிழக்கு ஒன்றிய செயலா ளருமான வைத்தியநாதன், மாவட்ட கவுன்சிலர் பிரியா பாண்டியன், முன்னாள் மாவட்ட கவு ன்சிலர் விஜ யகுமார், தொல்காப்பியன், பத்ம நாபன், ஒன்றிய கவுன்சி லர்கள் ஜெயக்குமார், பழனிவேல், கணேசன், பாக்கியராஜ், ஆறுமுகம், சண்முகம், சர்தார், மனோகர் மற்றும் அலுவலக ஊழியர்கள் அரசு அதிகாரிகள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பள்ளிக்கு 400 மீட்டர் சுற்றுச் சுவர் அமைக்க வேண்டும்.
    • பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி ஒன்றியம் பச்சிகானப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் 380 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இந்த பள்ளி மாணவர்கள் தரையில் அமர்ந்து படிப்பதால், பெஞ்ச், டெஸ்க் வழங்குமாறு கிருஷ்ணகிரி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அசோக்குமாரிடம் பள்ளி சார்பில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இதையடுத்து சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்பில், பெஞ்ச் மற்றும் டெஸ்குகள் பள்ளிக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் கண்ணியப்பன் தலைமை தாங்கினார்.

    பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்த்அசோக் ஆண்டர்சன் வரவேற்றார். மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சோக்காடி ராஜன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், பெஞ்ச், டெஸ்குகளை அசோக்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    தொடர்ந்து தலைமை ஆசிரியர் எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அதில், பள்ளியின் பின்புறம் காடு உள்ளது.

    பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால் அடிக்கடி பாம்புகள் பள்ளிக்குள் புகுந்து விடுகிறது. இதனால் மாணவர்கள் அச்சப்படுகின்றனர்.

    எனவே பள்ளிக்கு 400 மீட்டர் சுற்றுச் சுவர் அமைக்க வேண்டும். பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.

    பள்ளிக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்க வேண்டும். சமையல் செய்ய பாத்திரங்களை வழங்க வேண்டும். செப்டிக் டேங்க் ஒன்றை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் இருந்தன.

    விரைவில் இந்த கோரிக்கை களை நிறை வேற்றி தருவதாக அசோக்குமார் எம்.எல்.ஏ. கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, கவுன்சிலர்கள் ஜெயராமன், மகேந்திரன், சோக்காடி ஊராட்சி மன்ற தலைவர் கொடிலா ராமலிங்கம், துணைத் தலைவர்கள் ராஜசேகர், நாராயணகுமார், வங்கித் தலைவர் சூர்யா, ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் சரவணன் நன்றி கூறினார்.

    • தட்டு மற்றும் டம்ளர்கள் மொத்தம் 251 தன்னார்வலர் மூலம் பெறப்பட்டது.
    • மொத்தம் 251 உணவு உண்ணும் மாணவ- மாணவிகளுக்கு வழங்க தட்டு மற்றும் டம்ளர்கள் தயார் நிலையில் உள்ளது

    திருப்பூர் :

    பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாதப்பூர் கிராம ஊராட்சியில்அமைந்துள்ள கீழ்க்குறிப்பிட்டுள்ள பள்ளிகளில் 1 முதல் 5 முடிய கல்வி பயிலும்குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் உணவு வழங்கிடும் பொருட்டு தேவையான தட்டு மற்றும் டம்ளர்கள் மொத்தம் 251 தன்னார்வலர் மூலம் பெறப்பட்டது.

    கள்ளக்கிணர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 40 உணவு உண்ணும் மாணவ- மாணவிகளும், கிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 25உணவு உண்ணும் மாணவ- மாணவிகளும், சிங்கனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 11 உணவு உண்ணும் மாணவ- மாணவிகளும், தொட்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 44 உணவு உண்ணும் மாணவ-மாணவிகளும், நல்லாக்கவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 22 உணவு உண்ணும் மாணவ-மாணவிகளும், மாதப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 109 உணவு உண்ணும் மாணவ-மாணவிகளும் என மொத்தம் 251 உணவு உண்ணும் மாணவ- மாணவிகளுக்கு வழங்க தட்டு மற்றும் டம்ளர்கள் தயார் நிலையில் உள்ளது என பொங்கலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்துள்ளார்.

    பள்ளி திறந்த முதல் நாளே மாணவர்களுக்கு அரசு வழங்கும் விலையில்லா புத்ககம் உள்ளிட்ட உபகரணங்களை வழங்க வேண்டும்.

    சீர்காழி:

    கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திங்கள்கி ழமை பள்ளி திறக்கப்பட்டது. பள்ளி திறந்த முதல் நாளே மாணவர்களுக்கு அரசு வழங்கும் விலையில்லா புத்ககம் உள்ளிட்டஉபகர ணங்களை வழங்க வேண்டும் என உத்தரவிட ப்பட்டுள்ளது.

    அதன்படி சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலை ப்பள்ளியில் தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி தலைமையில் மாண வர்களுக்கு விலையில்லா புத்தகம் மற்றும் சீருடைகள் வழங்ப்பட்டது. அப்போது உடற்கல்வி இயக்குனர் முரளிதரன், தேசிய மாணவர் படை அலுவலர் சிவக்குமார் உடனிருந்தனர்.

    ×