என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அகவிலைப்படி"
- அகவிலைப்படி உயர்வு ஜூலை 1-ந்தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும்.
- அரசுக்கு ரூ.16 கோடி கூடுதலாக செலவாகும்.
புதுச்சேரி:
தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டது. அதுபோல் தமிழக அரசும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியது.
இந்த நிலையில் மத்திய அரசின் உத்தரவை பின்பற்றி, புதுச்சேரியில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு மேலும் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதி துறை சார்பு செயலர் சிவக்குமார் வெளியிட்டுள்ளார். இந்த உத்தரவு அனைத்து துறை தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இதன் மூலம் புதுவை அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.580 முதல் ரூ.6 ஆயிரத்து 800 வரை கிடைக்கும்.
இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1-ந்தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். இதன் மூலம் 20 ஆயிரம் புதுவை அரசு ஊழியர்கள் பயன் பெறுவார்கள். இதனால் அரசுக்கு ரூ.16 கோடி கூடுதலாக செலவாகும்.
- மாநில ஊழியருக்கான அகவிலைப்படியை 01.01.2024 முதல் 9 சதவீதம் உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- மாநில அரசு ஊழியருக்கான அகவிலைப்படி வீதம், அடிப்படை ஊதியம், அகவிலை ஊதியத்தில் 239 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,
2016-ம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வகையில் மாநில ஊழியருக்கான அகவிலைப்படியை 01.01.2024 முதல் 9 சதவீதம் உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, மாநில அரசு ஊழியருக்கான அகவிலைப்படி வீதம், அடிப்படை ஊதியம், அகவிலை ஊதியத்தில் 239 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.
ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கு அகவிலைப்படி நிலுவைத்தொகை நடைமுறையில் உள்ள பணமில்லா பரிவர்த்தனை முறையான மின்னணு சேவை மூலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பல்வேறு கோரிக்கைகளை நிதி நிலைமைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றுவதில் இந்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
- அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.
சென்னை:
தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மக்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தும் பல முன்னோடித்திட்டங்களை நாடே வியந்து பார்க்கும் வகையில் நடைமுறைபடுத்துவதில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கை இந்த அரசு நன்கு உணர்ந்துள்ளது. கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையே அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிதி நிலைமைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றுவதில் இந்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை முதலமைச்சர் கனிவுடன் பரிசீலித்து, 01.07.2023 முதல் ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதைப் பின்பற்றி அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கிட அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.
அவ்வகையில், ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு 01.01.2024 முதல் 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 50 சதவீதமாக உயர்த்தி வழங்கிட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், மாநில அரசு பணியாளர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி 50 சதவீதமாக 01.01.2024 முதல் உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்கள்.
இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூபாய்.2587.91 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.01.2024 முதல் 50 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/LTaVhms9cj
— TN DIPR (@TNDIPRNEWS) March 12, 2024
- அகவிலைப்படி உயர்வை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.
- ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் அறிவுறுத்தினர்.
சிங்கம்புணரி
தமிழ்நாடு அரசில் பணிபுரியும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நாட்டில் முக்கிய நகரங்க ளின் விலைவாசி புள்ளி உயர்வு அடிப்படையில் 6 மாதத்திற்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வு அறிவிப்பது வழக்கம்.
மத்திய அரசு ஊழியர்க ளுக்கு எப்பொழுதெல்லாம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறதோ, அதே தேதியில் மாநில அரசு ஊழி யர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரி வித்துள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசும் மத்திய அரசை பின்பற்றி அகவிலைப்படி உயர்வை அளிக்க வேண்டும் என ஆசிரியர், அரசு ஊழியர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
தி.மு.க. அரசு பொறுப் பேற்று கடந்த இரண்டரை ஆண்டுகளில் பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி பல கட்ட போராட்டங் களை நடத்தி வந்திருக்கி றோம். ஒவ்வொரு முறையும் நிதி நிலையை காரணம் காட்டி எங்கள் கோரிக்கைகள் கிடப்பில் போடப்படு கிறது.
ஊக்க ஊதியம், சரண் விடுப்பு ஒப்படைப்பு, பதவி உயர்வு போன்ற பலன்களை கடந்த சில ஆண்டுகளாகவே எங்களிடம் இருந்து பறிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் விலைவாசி புள்ளி உயர்வுக்கு ஏற்றால்போல் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு எப்பொழு தெல்லாம் அகவிலைப்படி உயர்வு அளிக்கிறதோ அதை யொட்டி தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் அக விலைப்படி உயர்வு வழங்கட்டு வந்தது.
கொரோனா பெருந்தொற்றை காரணம் காட்டி அகவிலைப்படி காலம் தாழ்த்தி வழங்கப் பட்டது. இதனால் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழி யர்களிடம் ஏற்பட்ட அதி ருப்திக்கு பின்னர் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு எப்பொழுதெல்லாம் அகவிலைப்படி உயர்வை அறிவிக்கிறதோ அதே தேதி யில் தமிழ்நாடு அரசில் பணி புரியும் ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என கடந்த மே 2023-ல் வெளியான அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே முதல்- அமைச்சர் தனது செய்தி குறிப்பில் அளித்த உறுதியின் அடிப்படையில் தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள 4 சதவீத அகவிலைப்படி உயர்வை ஜூலை 1 முதல் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழக அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு மத்திய அரசு வழங்கியது போல 4 சதவிகித அகவிலைப்படி உடனடியாக வழங்க வேண்டும்.
- 4 சதவிகித அகவிலைப்படி வழங்க வேண்டும் என முதலமைச்சரை அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்கத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
சென்னை:
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.மதுரம், அகில இந்திய தலைவர் கே.கணேசன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்கள், ஓய்வூதியர்கள் அனைவருக்கும் மத்திய அரசு வழங்கியது போல 4 சதவிகித அகவிலைப்படி உடனடியாக வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்கத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
- வழக்கமாக ஆண்டுக்கு 2 முறை விலைவாசி உயா்வின் அடிப்படையில் அகவிலைப்படி அதிகரிக்கப்படுகிறது.
- அகவிலைப்படி உயா்வு 2023 ஜூலை 1-ந்தேதியில் இருந்து கணக்கிட்டு வழங்கப்படுமென்று தெரிகிறது.
புதுடெல்லி:
மத்திய அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் அளவுக்கு உயா்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்கள் பயன் அடைவாா்கள்.
விலைவாசி உயா்வை அரசுப் பணியாளா்கள் எதிா்கொள்ளும் வகையில் அகவிலைப்படி உயா்த்தப்பட்டு வருகிறது. இப்போது 42 சதவீதமாக உள்ள அகவிலைப்படி விரைவில் 45 சதவீதமாக உயா்த்தப்பட இருக்கிறது.
இந்த அகவிலைப்படி உயா்வு 2023 ஜூலை 1-ந்தேதியில் இருந்து கணக்கிட்டு வழங்கப்படுமென்று தெரிகிறது. இதற்கு முன்பு கடந்த மாா்ச் 24-ந்தேதி அகவிலைப்படி உயா்த்தப்பட்டு, ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்பட்டது. வழக்கமாக ஆண்டுக்கு 2 முறை விலைவாசி உயா்வின் அடிப்படையில் அகவிலைப்படி அதிகரிக்கப்படுகிறது.
இது தொடா்பாக அகில இந்திய ரெயில்வே பணியாளா்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலா் சிவ கோபால் மிஸ்ரா கூறுகையில், '4 சதவீத அகவிலைப்படி உயா்வு கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால், 3 சதவீதம் அளவுக்கு உயா்வு கிடைக்கும் என்று தெரிகிறது. இதனால், அரசுக்கு கூடுதலாக எவ்வளவு செலவாகும் என்பதை நிதியமைச்சகத்தின் செலவினங்கள் துறை கணக்கீட்டு மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கும்' என்றாா்.
- நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் அகவிலைப்படி உயர்வினை வழங்குமாறு கோரிக்கை
- அகவிலைப்படி உயர்வால் ஆண்டொன்றுக்கு 73 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் என அரசு தகவல்
சென்னை:
கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலைக்கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 22.02.2021 முதல் ஊதியம் மறுநிர்ணயம் செய்யப்பட்டு 14% அகவிலைப்படி பெற அனுமதிக்கப்பட்டிருந்தது.
1.01.2022 முதல் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 14% அகவிலைப்படி உயர்வினை வழங்குமாறு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் விடுத்த கோரிக்கையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசீலித்து 1.01.2022 முதல் நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 28% அகவிலைப்படி பெறவும், அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது உயர்த்தி வழங்கப்படும் அகவிலைப்படி வீதங்களை பெறவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த அகவிலைப்படி உயர்வினால் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள நியாயவிலைக்கடைகளில் பணிபுரியும் 19,658 விற்பனையாளர்கள் மற்றும் 2,852 கட்டுநர்கள், என மொத்தம் 22,510 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டொன்றுக்கு 73 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் என அரசு தெரிவித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்