என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பொது மக்கள்"
- உலகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
- த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் ஈஸ்டர் வாழ்த்து பதிவு.
கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் முடிந்துவிட்டது. இதையொட்டி இயேசு சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி தினம் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது.
3-வது நாள் அவர் உயிர்த்தெழுவார் என்ற அடிப்படையில் உலகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, உலக தலைவர்கள் பொது மக்களுக்கு ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
உலக மக்கள் அனைவரிடமும் அமைதி நிலவ, அன்பு, சகோதரத்துவம், ஒற்றுமை, தியாகம் தழைத்தோங்க, புனிதமான இந்நன்னாளில் அனைவருக்கும் ஈஸ்டர் பெருவிழா வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சில பகுதிகளில் ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
- குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் பகுதிகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீரை கட்டணமில்லாமல் வழங்க வேண்டும்.
சென்னை:
சென்னை மேற்குமாம்பலம் பகுதியில் கோடை காலம் தொடங்கும் முன்பே கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் டேங்கர் லாரி குடிநீரையே நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. டேங்கர் லாரிகளில் குடிநீரை பெறுதற்காக பொதுமக்கள் மாதம் ரூ.10 ஆயிரம் வரை செலவழிக்க வேண்டிய அவலநிலை இருப்பதாக வேதனைப்படுகின்றனர்.
மேற்கு மாம்பலம் விவேகானந்தபுரம் 1-வது தெரு, பாலகிருஷ்ண முதலி தெரு, பாலகிருஷ்ண நாயக்கர் தெரு, சீனிவாச பிள்ளை தெரு, சீனிவாச அய்யங்கார் தெரு, வேலு தெரு, கணபதி தெரு ஆகிய பகுதிகளில் உள்ள பல வீடுகளுக்கு சென்னை குடிநீர் வாரியம் சார்பில் போதிய குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி கடந்த ஒரு மாதமாக வறண்டு கிடப்பதால், அந்த பகுதி மக்கள் தண்ணீர் லாரிகளையே நம்பியுள்ளனர்.
இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
தி.நகர் மற்றும் மேற்கு மாம்பலம் பகுதிகளுக்கு தினமும் சுமார் 17 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்குகிறோம். சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்காக 150 மில்லியன் லிட்டர் குடிநீரை நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலை, செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் வீராணம் ஏரியை சுற்றியுள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து பெறுகிறோம்.
கடந்த ஜனவரி மாதத்தில், தி.நகர் மற்றும் மேற்கு மாம்பலத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யும் ஆற்காடு சாலையில் உள்ள குடிநீர் குழாய் மெட்ரோ ரெயில் பணியின் போது சேதமடைந்தது. அந்த குடிநீர் குழாய் சரி செய்யப்பட்டு, குடிநீர் பிரச்சினையை சரி செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'சென்னை குடிநீர் வாரியம், சேதம் அடைந்த குழாய்களை சரி செய்தாலும், தண்ணீரின் அழுத்தம் மற்றும் அளவு ஆகியவை கணிசமாக குறைந்துள்ளது. 50 ஆண்டுகள் பழமையான குடிநீர் குழாயை பெரியதாக மாற்றுமாறு சென்னை குடிநீர் வாரியத்துக்கு கடிதம் எழுதினோம். வெறும் 35 வீடுகள் இருந்த இடத்தில், இப்போது கிட்டத்தட்ட 200 வீடுகள் உள்ளன. இதனால் தண்ணீர் போதவில்லை.
சில பகுதிகளில் ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த பகுதி மக்கள் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை சரியாக செலுத்துவதால், குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் பகுதிகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீரை கட்டணமில்லாமல் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- எடையூர் இ.சி.ஆர். சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் பொது மக்கள் அவதியடைந்துள்ளனர்.
- மழையால் பாலத்தின் சாலையில் மணல் உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
பல்வேறு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது, முத்துப்பேட்டை அருகே எடையூர் இ.சி.ஆர். சாலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி எதிரே சாலை ஏற்பட்ட பள்ளத்தால் பொது மக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
இந்த சாலை திருத்துறைப்பூண்டி- பட்டுக்கோட்டை பிரதான சாலையாகும்.
இந்த சாலையில் கனரக வாகனங்களும் அரசு பேருந்துகளும் தனியார் வாகனங்களும் அதிக அளவில் செல்லும்.
இந்த சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலத்தின் நடுவே போடப்பட்ட சிமெண்ட் குழாய் உடைந்து பள்ளம் உருவானது.
பின்னர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஒரு குழாயை கொண்டு வந்து பாலத்தில் வைத்து மேற் பரப்பில் மணலை நிரப்பி சென்று விட்டனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் பாலத்தின் சாலையில் மணல் உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியை சேர்ந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் விபத்து நடப்பதற்கு முன்னர் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் புதிய பாலத்தையும் கட்டி தரவேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது பற்றி அப்பகுதிளை சேர்ந்த நடையழகன் கூறியதாவது:-
இந்த பாலம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது பாசன வாய்க்காலின் நடுவே ஏற்பட்ட10 அடி ஆழத்திற்கும் 2 அடி அகலத்திற்கும் ஏற்பட்ட பள்ளத்தில் வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைந்து வந்து போக்குவரத்தை மாற்றி அமைத்து பாலத்தின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை இடித்து அகற்றி விட்டு புதிய பாலம் கட்டி தரவேண்டும் அதுவரையில் மாற்று வழியில் போக்குவரத்து இயக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- இரவு நேரங்களில் அடிக்கடி தொடர் மின் தடை ஏற்படுகிறது.
- மின் பாதையில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளது
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமரு கல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சி பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதிக்கு திட்டச்சேரி துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி தொடர் மின் தடை ஏற்படுகிறது.
பல மணி நேரம் தொடரும் மின் தடையால் பள்ளி,கல்லூரி மாணவ-மாணவியர்கள்,முதியவர்கள், நோயாளிகள், பொதுமக்கள் என பலரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
குத்தாலத்திலிருந்து பனங்குடி வரை காரை மேடு வழியாக மின் விநியோகம் செய்யப்படும் மின் பாதையில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்து மின்கம்பிகளின் மீது படர்ந்து கிடப்பதால் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாகவும் அதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
- இன்னாத்துக்க ன்பட்டியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொது சாலை பகுதி கையகப்படுத்தப்பட்டது.
- அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தஞ்சாவூர்,
தஞ்சை - புதுக்கோட்டை சாலையில் விமானப்ப டைத்தளம் அமைந்துள்ளது.
இந்த விமானப்படை தளத்திற்கு கூடுதலாக சுற்றுச்சுவர் கட்ட கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்னாத்துக்கன்பட்டியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொது சாலை பகுதி கையகப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் மீதமுள்ள சாலையும் கையகப்ப டுத்தப்பட்டு சுற்றுச் சுவர் கட்டும் பணி தொடங்கியது.
இன்று காலை இந்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து இனாத்துக்கான்பட்டி பொது மக்கள் ஏராளமானோர் திரண்டனர் .
தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகா ரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள், சாலையை கையகப்படுத்தி சுற்று சுவர் கட்டுவதால் நாங்கள் நகருக்குள் செல்ல வேண்டு மென்றால் வேறு வழியில் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது .
இதனால் கால விரயம் ஏற்படுகிறது.
1எனவே எங்களுக்கு வேறு வழி ஏற்படுத்தி தர வேண்டும் என்றனர்.
அதற்கு அதிகாரிகள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.இதனை ஏற்று க்கொண்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவ த்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- சாலையில் விழுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
- பஸ் பயணிகள், பெண்கள் முகம் சுளித்தபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
தக்கலை :
தக்கலை அருகே உள்ள முட்டைக்காடு பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பலரும் வந்து மது குடிக்கின்றனர்.
இதில் சிலர் போதை தலைக்கேறி, சாலையில் அங்கும் இங்கும் தள்ளாடுவது, ஆபாச வார்த்தைகளை சத்தமாக பேசுவது போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். இதனால் அந்த பகுதியில் நடமாடும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முட்டைக்காடு பகுதியசை் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவர், போதையில் அப்பகுதியில் உள்ள மக்களிடம் ஆபாசமாக பேசி தகராறில் ஈடுபட்டார். இதுகுறித்து அப்பகுதி வியாபாரிகள், கொற்றிகோடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதற்குள் ரகளையில் ஈடுபட்டவர், போதை அதிகமாகி சாலையிலேயே விழுந்து விட்டார். ஆடை அவிழ்ந்த நிலையில் என்ன நடக்கிறது என தெரியாமலே அவர் அங்கு படுத்து கிடந்தார். இதனை கண்ட பஸ் பயணிகள், பெண்கள் முகம் சுளித்தபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இது சம்பந்தமாக அப்பகுதியில் ஜவுளி கடை நடத்தி வரும் வியாபாரி ஒருவர் கூறுகையில், தினமும் 5 முதல் 10 பேர் இது போல் மது அருந்திவிட்டு போதையில் தகராறு செய்வது வழக்கமாக உள்ளது. இதற்கு காரணம் அருகில் உள்ள டாஸ்மாக் கடை தான். ரோட்டோரத்தில் மது அருந்தி விட்டு போக்குவரத்து இடையூறு செய்வதும் போதை தலைக்கேறியதும் அருகில் உள்ள கடைகளில் படுத்து கிடப்பதும் வாடிக்கையாக உள்ளது. இது சம்பந்தமாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர். காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் தான் இந்த நிலை மாறும் என்றார்.
- நாளை (27-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை
- பொது மக்கள் ஒத்துழைப்பு வேண்டும் என குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி :
குழித்துறை உப கோட்டத்திற்குட்பட்ட மார்த்தாண்டம், குழித்துறை, அருமனை, களியக்காவிளை, புத்தன்சந்தை, கண்ணுமாமூடு, களியல் பிரிவுக்குட்பட்ட சில பகுதிகளில் நாளை (27-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் மார்த்தாண்டம் பிரிவுக்குட்பட்ட கொல்லஞ்சி, மாம்பள்ளித்தோட்டம், விரிகோடு மற்றும் மாமூட்டுக்கடை, குழித்துறை பிரிவுக்குட்பட்ட நெடியப்பனவளை, பாறைகுளம், ஆசாரிகுடிவிளை, குலகுழிகுளம் மற்றும் இளம்பிலாந்தோட்டம், அருமனை பிரிவுக்கு உட்பட்ட மஞ்சாலுமூடு, தாணிமூடு, ஜெயந்தி காலனி மற்றும் முக்கூட்டுகல், களியக்காவிளை பிரிவுக்குட்பட்ட சமுதாயப்பற்று, மலையடி, மலைகோயில் மற்றும் மூவோட்டுகோணம், புத்தன்சந்தை பிரிவுக்குட்பட்ட தெற்றிகுழி, மேக்கேதட்டுவிளை, மணலுக்காலை மற்றும் அம்பேற்றின்காலை, கண்ணுமாமூடு பிரிவுக்குட்பட்ட மேழக்கோடு, வெட்டுக்குழி மற்றும் குருவிக்குந்நு, களியல் பிரிவுக்குட்பட்ட ஆலஞ்சோலை, மருதம்பாறை, பத்துகாணி, ஆறுகாணி மற்றும் அணைமுகம் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
மின் தடை நாட்களில் பொது மக்கள் ஒத்துழைப்பு வேண்டும் என குழித்துறை மின்விநியோக செயற்பொறி யாளர் தெரிவித்துள்ளார்.
- பொதுமக்கள் தண்ணீர் வடியும் வரை வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்படும்.
- மழைநீர் செல்லக்கூடிய கால்வாய்கள் அமைக்காமல் சாலை அமைப்பதும், சாலையின் சந்திப்பில் சிறு பாலங்கள் அமைப்பதும் பயனற்றது.
மதுராந்தகம்:
செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட 5- வது வார்டு பகுதியில் உள்ளது. வி.ஐ.பி நகர் குடியிருப்பு . இந்த பகுதியில் 100 - க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த புதிய குடியிருப்பு பகுதி முறையான சாலை வசதி இல்லாத தாழ்வான இடம் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் இடுப்பளவிற்கு மேல் மழை தண்ணீர் தேங்கி நிற்கும். பொதுமக்கள் தண்ணீர் வடியும் வரை வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்படும்.
எனவே இந்த பகுதியில் சாலை அமைத்து,மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று பேரூராட்சியின் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.41 லட்சத்தில் தார் சாலைகள் மற்றும் 6 சிறு பாலங்களை அமைக்க பணிகள் செய்வதற்காக கடந்த ஜனவரி மாதம் ஒப்பந்தம் விடப்பட்டது . 90 நாட்களுக்குள் பணிகள் முடிவடைய வேண்டும் என திட்ட காலம் தீர்மானித்து டெண்டர் விடப்பட்டது.
அதன்படி,டெண்டர் விடப்பட்டு 6 மாதங்கள் ஆகியும் இதுவரை பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது.
மேலும், தற்பொழுது தான் ஒரு சாலையின் சந்திப்பு பகுதிகளில் மற்றும் சாலையின் முகப்பு பகுதியில் மழை நீர் செல்லும் 6 சிறு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பகுதியில் திட்டமிட்டபடி கால்வாய்கள் அமைக்காமல் சாலை மற்றும் சிறு பாலங்கள் அமைப்பதால் வரும் மழை காலத்தில் தண்ணீர் கால்வாயில் செல்ல முடியாமல் சாலையில் செல்லும் நிலை ஏற்பட்டு சாலைகள் பெயர்ந்து முழுவதும் வீணாகி விடும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
எனவே மழைநீர் செல்லும் வகையில் கால்வாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இதேபோல் சாலை மற்றும் சிறு பாலங்கள் அமைக்கும் பணியையும் உடனடியாக முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் மழைக்காலத்தில் அதிக அளவு தண்ணீர் தேங்கும். தண்ணீர் செல்ல வழி இல்லாததால் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி மழை காலங்களில் கடும் சிரமம் அடைந்து வருகிறோம்.
எனவே இந்த பகுதியில் கால்வாய் அமைத்து சாலை வசதி செய்து தர வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்தோம். அதனை ஏற்று சாலை மற்றும் கால்வாய் அமைப்பதற்கான பணிகள் இறுதி செய்யப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி இன்னும் முடிக்கப்படவில்லை.
மழைநீர் செல்லக்கூடிய கால்வாய்கள் அமைக்காமல் சாலை அமைப்பதும், சாலையின் சந்திப்பில் சிறு பாலங்கள் அமைப்பதும் பயனற்றது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து பேரூராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, வி.ஐ.பி. நகர் பகுதியில் முதலில் சாலைகளும், சிறு பாலங்களும் அமைப்பதற்கு தான் நிதி ஒதுக்கப்பட்டது.ஆனால் பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது பற்றி சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளோம் என்றனர். அச்சரப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட வி. ஐ பி நகரில் குடியிருப்பு பகுதிகளின் தேவைக்கேற்ப கால்வாய் அமைத்து சாலைகள் அமைத்த பின்னர் சிறு பாலங்கள் அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும்என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
- மைதானத்தில் பெருகும் மழை வெள்ளம் வெளியேற இடையூறு இல்லாமல் மைதான கட்டுமான பணிகள்
- பேச்சுவார்த்தையின்படி நில அளவு செய்யும் பணியை விரைந்து தொடங்கிட அதிகாரிகளை வலியுறுத்துவது
கன்னியாகுமரி :
குளச்சல் அருகே உள்ளது சைமன்காலனி. இங்கு சுமார் 2 ஏக்கர் பரப்பில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது.இந்த நிலத்தில் இளைஞர்கள் விளையாட்டு மைதானம் அமைத்து விளையாடி வருகின்றனர்.
மழைக்காலத்தில் விளையாட்டு மைதானத்தில் வெள்ளம் பெருகுவதால் இளைஞர்கள் மண் போட்டுள்ளனர்.இந்நிலையில் மழை நீர் வழிந்து ஓட கடந்த வாரம் இளைஞர்கள் மைதானத்தின் தெற்கு பகுதியில் ஓடை தோண்டினர்.இதற்கு அப்பகுதி இரண்டு வீட்டினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தகவலறிந்த ஊர் மக்கள் இளைஞர்களுக்கு ஆதரவாக அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவவலறிந்த கல்குளம் தாசில்தார் கண்ணன்,குளச்சல் கிராம வருவாய் ஆய்வாளர் தக்கலை டி.எஸ்.பி.உதயசூரியன் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு அவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார்.
மைதானத்தில் பெருகும் மழை வெள்ளம் வெளியேற இடையூறு இல்லாமல் மைதான கட்டுமான பணிகள் மேற்கொள்வது எனவும்,
இது தொடர்பாக பத்மநாபபுரம் சப் - கலெக்டர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக முடிவு எடுப்பது எனவும் தீர்வு காணப்பட்டது. இதையடுத்து சப் - கலெக்டர்அ லுவலக த்தில்காணப்பட்டது.
பேச்சுவார்த்தையின்படி நில அளவு செய்யும் பணியை விரைந்து தொடங்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டது. நடந்த பேச்சுவார்த்தையில் பிரச்சி னைக்குரிய பகுதியில் நில அளவு செய்வது என தீர்மானிக்கப்பட்டது.இந்நிலையில் விஜய்வசந்த் எம்.பி. நேற்று மாலை சைமன்காலனி சென்று அங்கு பங்குத்தந்தை மற்றும் ஊர் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.ஆலோசனையில் பேச்சுவார்த்தையின்படி நில அளவு செய்யும் பணியை விரைந்து தொடங்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
- கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் தட்டாம்பாளையம் கிராமத்தில் மரக்கன்றுகள்நடும் விழா நடந்தது.
- நிகழ்ச்சியில் செவ்வாடை பக்தர்களும் பொது மக்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
கடலூர்:
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீட ஆன்மிக குரு பங்காரு அடிகளார் அருளாணையின் படி கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் தட்டாம்பாளையம் கிராமத்தில் மரக்கன்றுகள்நடும் விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக ஊராட்சி மன்ற தலைவர் சுதாவேணுகோபால், ரமேஷ், ரவி மற்றும் பிரச் சாரக் குழு உறுப்பி னர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இயற்கை வளத்தை போற்றி பாது காக்கும் இந்த நிகழ்ச்சியில் செவ்வாடை பக்தர்களும் பொது மக்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
- சங்கராபுரத்தில் பொது மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- சங்கராபுரம் அருகே ஆரூர் கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பாட்டை புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வருகின்றனர்.
கள்ளகுறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ஆரூர் கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பாட்டை புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் உரியநடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் ஆரூர் கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் பாட்டை புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என கோரி கோஷங்களை எழுப்பி அங்கு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்