search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனைவி கைது"

    • கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக சவிதாவுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
    • போலீசில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து தலைமறைவான சவிதாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ காலையில் இருந்து விரதமிருந்த மனைவி, மாலையில் கணவரை விஷம் வைத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரபிரதேசம் மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தை சேர்ந்தவர் ஷைலேஷ் குமார் (32). அவரது மனைவி சவிதா. இவர் கர்வா சவுத் பண்டிகையின் ஒரு பகுதியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை வைலேஷின் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை செயய உண்ணாவிரதம் இருந்துள்ளார். அதற்கான ஏற்பாடுகளை ஷைலேஷ் மும்முரமாக செய்துள்ளார்.

    இதனிடையே, கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக சவிதாவுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து மாலையில் விரதத்தை முடித்து ஷைலேஷிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது. இருப்பினும் இருவரும் சமாதானம் ஆகி ஒன்றாக சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் ஷைலேஷ் மயங்கி விழுந்துள்ளார்.

    இதையடுத்து சவிதா அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். ஷைலேஷ் வீட்டிற்கு வந்த அவரது சகோதரர் ஷைலேஷின் நிலைமைய கண்டு உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஷைலேஷ் உயிரிழந்தார்.

    தான் உணவில் விஷம் கலந்து கொடுத்ததாக சவிதா வீடியோ மூலம் ஷைலேஷின் சகோதரருக்கு தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து தலைமறைவான சவிதாவை போலீசார் கைது செய்துள்ளனர். 

    • நான் குழந்தைகள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த நிலையில் அவரை வீட்டிற்கு வெளியே அழைத்து வந்தேன்.
    • குடிபோதையில் செக்ஸ் டார்ச்சர் செய்து தகாத வார்த்தையால் திட்டி என்னை அடித்து துன்புறுத்தினார்.

    அரூர்:

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள கீரைப்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜா(40). கூலி தொழிலாளி இவரது மனைவி கனகா(34) ராஜா என்பவர் கடந்த 1-ம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இவரது சாவில் சந்தேகம் இருப்பதாக அவர் தாய் ராதாமணி அரூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் அரூர் போலீசார் சடலத்தை தோண்டி பிரேத பரிசோதனை செய்தனர். இந்நிலையில் அவரது மனைவி கனகாவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் தனது கனவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து அளித்துள்ள வாக்குமூலத்தில் எனது கணவர் கூலி தொழில் செய்து வருகிறார். தினமும் மதுபோதையில் வீட்டிற்கு வந்து செக்ஸ் டார்ச்சர் செய்வார். சம்பவத்தன்று இரவில் அதிக மதுபோதையில் வீட்டிற்கு வந்தார்,

    பின்னர் என்னை செக்ஸ் டார்ச்சர் செய்தார் எனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறினேன், அதை பொருட்படுத்தாமல் அவரது ஆசைக்கு இணங்க என்னை வற்புறுத்தினார்.

    நான் குழந்தைகள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த நிலையில் அவரை வீட்டிற்கு வெளியே அழைத்து வந்தேன். பின்னர் அவர் குடிபோதையில் செக்ஸ் டார்ச்சர் செய்து தகாத வார்த்தையால் திட்டி என்னை அடித்து துன்புறுத்தினார்.

    நானும் எனது தற்காப்புக்காக அவரை தாக்கினேன் அதில் அவர் மயக்கம் அடைந்து விட்டார் என எண்ணி நான் கதவை தாளிட்டு உறங்கச் சென்று விட்டேன், மீண்டும் எழுந்து வந்து பார்த்த பொழுது எனது கணவர் அங்கேயே இருந்தார். அவரை நான் தட்டி எழுப்பியபோது இறந்து கிடந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரது உடவை யாருக்கும் தெரியாமல் ஓடையில் வைத்து விட்டு நான் வீட்டிற்கு வந்து விட்டேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.

    • கணவர் தன்னை துன்புறுத்தி வருவதாக சிரஞ்சீவியிடம் உமா தெரிவித்தார்
    • கணவர் காணாமல் போனதாக எலமஞ்சி போலீசில் உமா புகார் செய்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், எஸ் ராயவரத்தை சேர்ந்தவர் கொண்டல ராவ் (வயது 49). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி உமா. இவர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    அதே பகுதியை சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவர் காக்கிநாடாவில் பெண்கள் பயன்படுத்தும் மணி பர்ஸ், பேக் உள்ளிட்டவை வியாபாரம் செய்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சிரஞ்சீவி கடைக்கு சென்ற உமாவுக்கும் அவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

    பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது. கணவரிடம் சிரஞ்சீவி தனது தூரத்து உறவினர் என அறிமுகம் செய்து வைத்தார்.

    சிரஞ்சீவியும் உமாவும் மது அருந்திவிட்டு உல்லாசமாக இருந்து வந்தனர். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கொண்டல ராவுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த கொண்டல ராவ் மனைவியை துன்புறுத்தி வந்தார்.

    கணவர் தன்னை துன்புறுத்தி வருவதாக சிரஞ்சீவியிடம் உமா தெரிவித்தார். இதனால் கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள கணவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.

    சம்பவத்தன்று கொண்டலராவை காக்கிநாடா ஆஸ்பத்திரியில் சர்க்கரை வியாதிக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி காரில் அழைத்துச் சென்றார்.

    சிகிச்சை முடிந்து மறுநாள் இரவு காரில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தனர். ராகில கொத்தூர் என்ற இடத்தில் வந்தபோது தயாராக இருந்த சிரஞ்சீவி மற்றும் அவரது நண்பர் சைதுர்கா ஆகியோர் காரை நிறுத்தினர். அவர்களுடன் உமாவும் சேர்ந்து கொண்டலராவை கழுத்து இறுக்கி கொலை செய்தனர்.

    பின்னர் ராவுல பாலம் அருகே உள்ள கோதாவரி ஆற்றில் கொண்டலராவின் பிணத்தை வீசினர். கணவர் காணாமல் போனதாக எலமஞ்சி போலீசில் உமா புகார் செய்தார்.

    கொண்டலராவின் உறவினர்கள் உமா, சிரஞ்சீவி என்பருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகவும் அவர் மீது சந்தேகம் இருப்பதாக போலீசில் தெரிவித்தனர். போலீசார் சிரஞ்சீவியை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சிரஞ்சீவி கொண்டலராவை அவரது மனைவியுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து உமா, அவரது கள்ளக்காதலன் சிரஞ்சீவி, அவரது நண்பர் சைதுர்கா ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • பிரேத பரிசோதனையில் ரமேஷ் மூச்சு திணறி உயிரிழந்ததற்கான தடயங்கள் இருந்தது.
    • கணவன் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு தகராறு செய்தார்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள வாணியன் சத்திரம் கிராமத்தில் வசித்து வந்தவர் ரமேஷ் (வயது 30). குடிப்பழக்கத்துக்கு ஆளான இவர் கடந்த 11-ந்தேதி மர்மமான முறையில் வீட்டில் உள்ள படுக்கை அறையில் இறந்து கிடந்தார்.

    இது தொடர்பாக வெங்கல் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் ரமேஷ் மூச்சு திணறி உயிரிழந்ததற்கான தடயங்கள் இருந்தது. இதனால் ரமேஷ் மனைவி தங்கலட்சுமி (27) மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே, அவரை பிடித்து போலீசார் துருவித்துருவி விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனது கணவன் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு தகராறு செய்தார். ஆத்திரம் அடைந்து தனது கணவரை முகத்தில் தலையணையால் அமுக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    போலீசார் தங்கலட்சுமி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். திருவள்ளூர் முதல் நிலை குற்றவியல் கோர்ட்டு மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின் பேரில் தங்கலட்சுமியை போலீசார் புழல் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

    • இருந்தபோதிலும் பிள்ளைகளின் நலன் கருதி கணவன், மனைவி இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று அவர்களது உறவினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
    • சம்பவ இடத்திற்கு சாத்தூர் டி.எஸ்.பி. நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள சிந்தப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கற்பகராஜா (வயது 27). அதே பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (25). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இதற்கிடையே மனைவியின் நடத்தை மீது கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கற்பகராஜா, விஜயலட்சுமி ஆகிய இருவரும் சிந்தப்பள்ளி கிராமத்தில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக பிரிந்து தனித்தனியாக வசித்து வந்தனர்.

    இருந்தபோதிலும் பிள்ளைகளின் நலன் கருதி கணவன், மனைவி இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று அவர்களது உறவினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதேபோல் இருவரும் சேர்ந்து வாழ்வோம் எனக்கூறி கற்பகராஜா விஜயலட்சுமியின் வீட்டிற்கு சென்று தினமும் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    நேற்று முன்தினம் இரவும் கற்பகராஜா மதுபோதையில், விஜயலட்சுமியின் வீட்டிற்கு சென்றார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே நேற்று காலை கற்பகராஜா, மனைவி விஜயலட்சுமியின் வீட்டில் மர்மமான முறையில் கழுத்தில் காயத்துடன் இறந்து கிடந்துள்ளார்.

    தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சாத்தூர் டவுன் போலீசார் கற்பகராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு சாத்தூர் டி.எஸ்.பி. நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த சாத்தூர் டவுன் போலீசார் கற்பக ராஜாவின் மனைவி விஜயலட்சுமி மற்றும் மாமியார் ஆகிய இருவரையும் சந்தேகத்தின் பேரில் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் துருவி துருவி விசாரித்தனர்.

    அப்போது விஜயலட்சுமி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    தினமும் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து அடித்து துன்புறுத்தியதால் கணவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்தேன். பின்னர் மதுவாங்கி வைத்துக் கொண்டு அவரை சமாதானம் பேச அழைத்து அவருக்கு மதுவை அதிகமாக ஊற்றிக்கொடுத்தோம். கற்பகராஜூக்கு போதை தலைக்கேறியதும் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தோம். அதற்கு உதவியாக அவருக்கு சித்துராஜபுரம் பகுதியைச் சேர்ந்த திருநங்கை, அவரது கணவர் இருந்தனர்.

    இவ்வாறு அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து கணவனை கொன்ற விஜயலட்சுமி (25), அவரது தாயார் பழனியம்மாள் (48), திருநங்கை ஸ்வீட்டி (25), இவரது கணவர் வேலாயுதம் (25) ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் சாத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த நாட்டுத்துரை தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.
    • கருப்பாத்தாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பழனி:

    பழனி அருகே உள்ள வடபருத்தியூர் கிராமம் தோட்டத்து சாலையில் வசித்து வருபவர் நாட்டுத்துரை(70). இவரது மனைவி கருப்பாத்தாள்(65). இவர்களது ஒரே மகளுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். நாட்டுத்துரை மற்றும் அவரது மனைவி ஆடுகள் வைத்து வளர்த்து வருகின்றனர்.

    நாட்டுத்துரை குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ஒரே வீட்டில் அவர்கள் இருந்தபோதும் தனித்தனியாக உணவு சமைத்து சாப்பிட்டு வந்துள்ளனர்.

    நேற்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த நாட்டுத்துரை தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றவே வீட்டில் இருந்த அரிவாளால் தனது மனைவியை வெட்ட முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த கருப்பாத்தாள் அந்த அரிவாளை பறித்து தனது கணவரை சரமாரியாக வெட்டினார்.

    இதில் நாட்டுத்துரை சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து கீரனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நாட்டுத்துரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கருப்பாத்தாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடும்ப பிரச்சினையில் கணவரை மனைவியே வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • குழந்தைகளை அழைத்துக் கொண்டு செம்மாங்குப்பத்திற்கு வந்து விட்டார்.
    • குடிப்பழக்கத்தை நிறுத்தி விடுவதாகவும், தன்னுடன் சேர்ந்து வாழுமாறும் கேட்டுள்ளார்.

    கடலூர்:

    வடலூர் அருகேயுள்ள திடீர் குப்பத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 29). வெல்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கும் பண்ருட்டி காடாம்புலியூரை அடுத்த சந்தியாவிற்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். ராமமூர்த்திக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இதில் ஆத்திரமடைந்த சந்தியா, குழந்தைகளை அழைத்துக் கொண்டு செம்மாங்குப்பத்திற்கு வந்து விட்டார். இந்நிலையில் நேற்று மாலை சந்தியாவை தேடி ராமமூர்த்தி செம்மாங்குப்பத்திற்கு வந்தார். குடிப்பழக்கத்தை நிறுத்தி விடுவதாகவும், தன்னுடன் சேர்ந்து வாழுமாறும் கேட்டுள்ளார். இதில் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் அங்கிருந்த கயிறை எடுத்த சந்தியா, தனது தந்தையின் உதவியுடன், ராமமூர்த்தியின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். இது குறித்து தகவல் அறிந்த முத்தாண்டிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ராமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா செம்மாங்குப்பத்திற்கு விரைந்து சென்று சம்பவம் குறித்து விசாரனை நடத்தினார். ராமமூர்த்தியின் மனைவி சந்தியாவை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியே கணவனை கொலை செய்த சம்பவம் பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தேவராஜ் குடித்துவிட்டு தொடர்ந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.
    • தேவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த வி.சி.மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 40) லாரி மெக்கானிகான இவர் டிரைவராகவும் வேலை பார்த்து வந்தார்.

    இவரது மனைவி பானுமதி (34). இவர்களுக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன் திருமணமானது. ஒரு மகள், மகன் உள்ளனர்.

    இந்நிலையில் தேவராஜ் குடித்துவிட்டு தொடர்ந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.

    இதனால் சண்டை போட்டுக்கொண்டு பானுமதி தனது தாய் வீடான வாலாஜா அடுத்த சின்னதகரகுப்பம் கிராமத்திற்கு சென்றார். 2 வருடங்களாக அங்கேயே வசித்து வந்தார். அங்கும் தேவராஜ் சென்று தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு சின்ன தகரகுப்பத்திற்கு சென்ற தேவராஜ் அங்கு மனைவி பானுமதியிடம் தகராறில் ஈடுபட்டார்.

    மேலும் மனைவியை தாக்க முயன்றார். இதில் ஆத்திரமடைந்த பானுமதி கீழே கிடந்த கட்டையை எடுத்து தேவராஜை தாக்கினார். இதில் மயங்கி விழுந்த தேவராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

    தேவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தேவராஜின் மனைவி பானுமதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாரதி மனைவி திவ்யா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
    • எனக்கும், கணவருக்கும் இடையே குடும்ப பிரச்சினையால் அடிக்கடி தகராறு ஏற்படும்.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள் அருகே உள்ள கீழ்மாந்தூர் பழைய தெருவை சேர்ந்தவர் உத்திராபதி மகன் பாரதி (வயது 35). இவரது மனைவி திவ்யா (27). இவர்களுக்கு 1 மகன், மகள் உள்ளனர். இதில் பாரதி மட்டும் சென்னையில் தங்கியிருந்து ஒரு டீக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    கணவன்-மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு இருந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த மாதம் கோவில் திருவிழாவுக்காக பாரதி சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போதும் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.

    இந்த சூழ்நிலையில் திருவிழாவுக்கு வந்திருந்த பாரதியை காணவில்லை என அவரது உறவினர் திருப்பனந்தாள் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பாரதியை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் பாரதி மனைவி திவ்யா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் திவ்யாவும், அவரது கள்ளக்காதலன் கீழ்மாந்தூர் ஆர்.ஜே. நகரை சேர்ந்த டேவிட் என்கிற சதீஷ்குமார் ( 38) என்பவரும் சேர்ந்து பாரதியை கழுத்தை நெறித்து கொன்று பாலத்தின் அடியில் புதைத்தது தெரிய வந்தது.

    இது குறித்து போலீசாரிடம், மேலும் திவ்யா கூறிய திடுக்கிடும் தகவல்கள் வருமாறு :-

    எனக்கும், கணவருக்கும் இடையே குடும்ப பிரச்சினையால் அடிக்கடி தகராறு ஏற்படும். அவர் சென்னையில் வேலை பார்த்தாலும் போனில் பேசும் போதெல்லாம் வாக்குவாதத்தில் ஈடுபடுவார்.

    அந்த சமயத்தில் எங்கள் ஊர் அருகே உள்ள சதீஷ்குமார் என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. நாங்கள் தொடர்ந்து பேசி வந்தோம். கடந்த மாதம் கோவில் திருவிழாவுக்காக கணவர் பாரதி ஊருக்கு வந்தார். அப்போதும் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் பாரதியை கொலை செய்ய முடிவு செய்தோம்.

    அதன்படி வீட்டில் இருந்த பாரதியை, நானும் சதீஷ்குமாரும் சேர்ந்து அடித்து கழுத்தை நெறித்து கொன்றோம். பின்னர் அவரது உடலை யாருக்கும் தெரியாமல் மினிலாரியில் போட்டு கொண்டு திருப்பனந்தாள் அருகே பட்டம் குறுக்கு ரோடு மேலே உள்ள பாலத்தின் அடியில் புதைத்தோம். பின்னர் யாருக்கும் சந்தேகம் எதுவும் வராமல் இருக்க மற்றவர்களிடமும் சகஜமாக பேசினேன். ஆனால் எப்படியோ போலீசார் உண்மையை கண்டுபிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் போலீசாரிடம் கூறினார்.

    இதனை தொடர்ந்து திருவிடைமருதூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜாபர்சித்திக் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு பாரதி உடலை தோண்டி எடுத்தனர். அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

    இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து திவ்யா, சதீஷ்குமார் ஆகியோரை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கள்ளக்காதலனோடு சேர்ந்து தொழிலாளியை மனைவியே தீர்த்து கட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தொழிலாளி சாவில் மர்மம் இருப்பதாக அவரது தம்பி பழனிசாமி கொளத்தூர் போலீசில் புகார் செய்தார்.
    • கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தனது கணவரை விஷம் கொடுத்து கொன்றதாக மனைவி தெரிவித்தார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா கொளத்தூர் அருகே உள்ள காரைக்காடு வீரகாரன் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 37). விவசாய கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி புகழரசி (27). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் சக்திவேல் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மனைவி புகழரசி, தனது கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்களிடம் தெரிவித்தார். பின்னர் உறவினர்கள் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்து கொண்டு இருந்தனர்.

    இதனிடையே சக்திவேல் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தம்பி பழனிசாமி கொளத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் சக்திவேலின் மனைவி புகழரசி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தனது கணவரை விஷம் கொடுத்து கொன்றதாக தெரிவித்தார்.

    தொடர்ந்து அவர் போலீசில் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

    எனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் சக்திவேல் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்து வந்தார். இதனிடையே எனக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த முத்துக்குமார் (27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் நாங்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தோம். இந்த கள்ளக்காதல் விஷயம் எனது கணவர் சக்திவேலுக்கு தெரியவந்தது. இதனால் அவர் என்னை கண்டித்தார்.

    மேலும் கள்ளக்காதலை கைவிடுமாறு கூறி என்னிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இது பற்றி கள்ளக்காதலன் முத்துகுமாரிடம் தெரிவித்தேன். அப்போது, அவர் உனது கணவரை கொன்று விடு, அதன் பிறகு நாம் இருவரும் எந்த இடையூறும் இல்லாமல் சந்தோஷமாக வாழலாம், உனக்கும், உனது குழந்தைகளுக்கும் தேவையான வசதிகளை செய்து தருவதாக கூறினார். பின்னர் யாருக்கும் சந்தேகம் வராதபடி இந்த கொலையை எப்படி செய்வது மற்றும் மறைப்பது குறித்தும் திட்டம் தீட்டினோம்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் குடிபோதையில் எனது கணவர் சக்திவேல் வீட்டுக்கு வந்தார். அவருக்கு முதலில் 10 தூக்க மாத்திரைகளை உணவில் கலந்து கொடுத்தேன். ஆனால் அவர் அதில் உயிர் பிழைத்துக் கொள்வார் என்ற எண்ணத்தில் மீண்டும் தேனீர் போட்டு, அதில் தோட்டத்திற்கு வைத்திருந்த விஷத்தை கலந்து கொடுத்தேன். எனினும் அவர் பிழைத்துக்கொண்டால் என்ன செய்வது என்று எண்ணிய நான், மீண்டும் சாப்பாட்டில் விஷத்தை கலந்து அவருக்கு ஊட்டி விட்டேன். தொடர்ந்து விஷம் ஏறியதால், அவர் துடிதுடித்து இறந்து விட்டார்.

    தொடர்ந்து அவர் உயிரிழந்ததை உறுதி செய்ய, முத்துக்குமாரை போனில் தொடர்பு கொண்டு வீட்டுக்கு வரும்படி கூறினேன். நள்ளிரவில் வீட்டுக்கு வந்த முத்துக்குமார், சக்திவேல் இறந்ததை உறுதி செய்த பின்பு, அவரது வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதைத்தொடர்ந்து எனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினேன். எனினும் போலீஸ் விசாரணையில் உண்மையை ஒத்துக்கொண்டேன்.

    இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    இதையடுத்து போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து, புகழரசியையும், அவரது கள்ளக்காதலன் முத்துக்குமாரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை மேட்டூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட், அவர்கள் இருவரையும் ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார்.

    அதன்படி போலீசார் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் ஜெயிலில் புகழரசியையும், சேலம் மத்திய ஜெயிலில் முத்துக்குமாரையும் அடைத்தனர்.

    ×