search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி"

    • ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர்
    • மழையின் காரணமாக நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் அருகே ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு லிங்க வடிவிலான பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சாமி சமேத வள்ளி, தெய்வானை கோவில் அமைந்துள்ளது.

    ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சிக்கு வரும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் இயற்கை எழில் மிகுந்த இக்கோவிலில் தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஜலகா ம்பாறை நீர்வீழ்ச்சிகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு இருந்தது.

    தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த கன மழையின் காரணமாக நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் நேற்று நீர்வீழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மேலும் நீர்வீழ்ச்சியில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர்.

    • ஜலகாம்பாறை அருவியில் வெள்ளம்
    • வனத்துறையினர் எச்சரிக்கை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று மாலை முதலே மேகம் மந்தமாக காணப்பட்டது. திருப்பத்தூர், நாட்டறம்பள்ளி ,ஆம்பூர் ஜோலார்பேட்டை ஆகிய இடங்களில் சாரல் மழை பெய்தது. மற்ற இடங்களில் மழை பெய்யவில்லை.

    தொடர் மழை காரணமாக திருப்பத்தூர் அருகே உள்ள ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் அதிகளவில் தண்ணீர் கொட்டுகிறது.இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் அருவி பகுதியில் சுற்றுலா பயணிகள் ஜாக்கிரதையாக செல்ல வேண்டும். மழை வெள்ளத்தில் இறங்கி குளிக்க வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    திருப்பத்தூர் 15.7 ஆம்பூர் 7.4 நாட்றம்பள்ளி 7.2, ஜோலார்பேட்டை 6, வாலாஜா 45, ஆற்காடு 56.2, காவேரிபாக்கம் 89, அம்மூர் 38, கலவை 82.4.

    ×