என் மலர்
நீங்கள் தேடியது "தூய்மை பணி"
- பல்வேறு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
- அலுவலர்கள் பங்கேற்று தூய்மை இந்தியா திட்டம் குறித்து எடுத்துரைத்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டதித்தில் மத்திய அரசின் இளையோர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேரு இளையோர் மையம் சார்பில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் தருமபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பில் ராமக்கா ஏரி பகுதியில் 2.0 இரண்டாம் கட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் தூய்மை பணி நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு திட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் வரவேற்றார். நகர மன்ற தலைவர் லட்சுமி தலைமை வகித்தார். நேரு யுவகேந்திரா மாவட்ட அலுவலர் பிரேம் பரத்குமார் திட்டம் குறித்து விளக்கினார். வார்டு உறுப்பினர்கள், நகராட்சி ஆணையர் சித்ரா சுகுமாரன் முன்னிலை வகித்தனர். தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பெரியார் யூனிவர்சிட்டி மாணவ,மாணவிகள் மற்றும் தொன்போஸ்கோ கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.
ராமக்காள் ஏரி தருமபுரி நகராட்சி பகுதியில் இருப்பதால் அதை எப்போதும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் 2.0 நிகழ்ச்சிகளை செயல்படுத்தி வருகிறது.
நிகழ்ச்சியில் பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்று தூய்மை இந்தியா திட்டம் குறித்து எடுத்துரைத்தனர்.
- நாட்டு நலப்பணி முகாம் நடந்தது
- மாணவிகளும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
தமிழ்நாட்டில் மிக சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு உயர்நிலை பள்ளிகள் 2 அமைந்துள்ளது.
ஏலகிரி மலை மாணவ மாணவிகள், ஜவ்வாது மலை பகுதிகளில் இருந்தும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் இப்பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் நாட்டு நலப்பணி முகாம் கடந்த 3-ந்தேதி உயர்நிலை பள்ளிகளில் நாட்டு நல திட்ட பணிகள் துவங்கப்பட்டது.
இந்த நாட்டு நலப்பணி திட்ட முகாம் 7 நாட்கள் நடைபெற உள்ளது. நாட்டு நலப்பணி திட்ட தூய்மை பணி, அத்தனாவூர் பகுதிகளில் மாரியம்மன் கோவில், பள்ளிகளில் அருகிலுள்ள நெடுஞ்சாலை பகுதிகளிலும், பெருமாள் கோவில் சாலைகளிலும் தூய்மை பணி, சாலை மேம்படுத்துதல், போன்ற பணிகள் நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் விக்டோரியா அருள் ராணி, அருள் ஆரோக்கிய, நாட்டு நலப்பணி ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் பாபு, மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தூய்மைப்படுத்தி வருகின்றனர்.
- மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பைகளை எடுத்துச் சென்றனர்.
- அதிரடி படையினருடன் இணைந்து போலீஸ் சூப்பிரண்டு குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் போலீஸ் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
ஆய்வின் போது போலீஸ் நிலைய வளாகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரைகளை வழங்கி வருகிறார். இந்தநிலையில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் தூய்மை பணி நடந்தது.அதிரடி படை யினருடன் இணைந்து வளா கத்தில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது அந்த பகுதியில் கிடந்த குப்பைகளை போலீ சாருடன் இணைந்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் அகற்றி னார். பின்னர் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு அங்கிருந்த குப்பைகளை எடுத்துச் சென்றனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்தில் ஆங்காங்கே பூந்தொட்டிகளை வைத்து பராமரிக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.
- அரசு கலைக்கல்லூரியை சேர்ந்த தேசிய மாணவர் படையினர், புனித் சாகர் அபியான் திட்டத்தின் கீழ் ராசிபுரம் ஏரிக்கு அருகே கிடந்த பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணிகளை மேற்கொண்டனர்.
- இப்பணிகள் கல்லூரி யின் என்.சி.சி அதிகாரி மேஜர் சிவகுமார் முன்னிலையில் நடைபெற்றது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியை சேர்ந்த தேசிய மாணவர் படையினர், புனித் சாகர் அபியான் திட்டத்தின் கீழ் ராசிபுரம் ஏரிக்கு அருகே கிடந்த பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணிகளை மேற்கொண்டனர். இப்பணிகள் கல்லூரியின் என்.சி.சி அதிகாரி மேஜர் சிவகுமார் முன்னிலையில் நடைபெற்றது. ராசிபுரம் நகராட்சித் தலைவர் கவிதா சங்கர், நகராட்சி துப்புரவு பணியாளர்களை அனுப்பி வைத்து நீர் நிலைகளில் உள்ள குப்பைகளை அகற்ற உதவி செய்தார். இந்த நிகழ்ச்சியில் ராசிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம், நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் முத்தமிழன் மற்றும் 40 தேசிய மாணவர் படை மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பிளாஸ்டிக் பொருட்களை அகற்றினர்.
- என்.சி.சி. 10-வது பட்டாலியன் சார்பில் நடந்தது
- 100 பேர் கலந்து கொண்டனர்
வேலூர்:
பிரதமர் தொடங்கிய "புனித் சாகர் அப்யான்" திட்டப்படி காட்பாடி காந்திநகர் 10-வது பட்டாலியனின் என்சிசி மாணவர்கள் பாலாற்றில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் பிற கழிவுப் பொருட்களை சுத்தம் செய்யும் பணி நேற்று நடைபெற்றது.
என்சிசி 10-வது பட்டாலியனின் கமாண்டிங் அதிகாரி லெப்டினன்ட் கர்னல் சஞ்சய் ஷர்மா தலைமை தாங்கினார். நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கர்னல் எஸ். கே. சுந்தரம், என்சிசி மக்கள் தொடர்பு அலுவலர் க. ராஜா, என்சிசி அலுவலர்கள் லெப்டினன்ட் காயத்திரி, லெப்டினன்ட் ஷைனி, லெப்டினன்ட் பரசுராமன், சுபேதார் அரவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுபேதார் தினேஷ்சிங், ராணுவ வீரர்கள் அவில்தார்கள் வெங்கடேசன், தீபு, துரைமுருகன், ரஞ்சித், சுனில்தத் உள்பட பலர் பாலாறு சுத்தம் செய்யும் பணியை ஒருங்கிணைத்தனர்.
வேலூர் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி, தனபாக்கியம் மகளிர் கல்லூரி, ஊரீஸ் கல்லூரி மற்றும் ஹோலிகிராஸ் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த என்சிசி மாணவ, மாணவிகள் 100 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாலா சுத்தம் செய்தனர்.
- அந்தியூர் வட்டாரத்தில் வேளாண்மை அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் செய்து வருகின்றனர்.
- பத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தை தூய்மை செய்யும் பணியிலும் கல்லூரி மாணவிகள் ஈடுபட்டு சிறப்பான முறையில் செய்தனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டாரத்தில் ஜே.கே.கே. முனிராஜா வேளாண்மை அறிவியல் கல்லூரியை சேர்ந்த 4-ம் ஆண்டு மாணவிகள் தங்கள் திட்டத்தின் கீழ் 75 நாட்கள்அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் செய்து வருகின்றனர்.
விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்களை கற்று கொடுத்தல், மண் மாதிரி எடுத்தல், ஜீவாமிர்தம் தயாரிப்பு முறை, வாழைக்கன்று நேர்த்தி பண்ணை, குட்டை அமைத்தல், சூரிய ஒளி உலர்த்தி, உயிர் உரம் ஆகியவற்றை பற்றி விவசாயிகளிடத்தில் எடுத்து கூறும் வகையில் பச்சாம்பாளையம், கீழ்வாணி, அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று விவசாயிகளிடத்தில் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.
மேலும் அந்தியூரில் புகழ் பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தை தூய்மை செய்யும் பணியிலும் கல்லூரி மாணவிகள் ஈடுபட்டு சிறப்பான முறையில் செய்தனர்.
இதில் காவியா, கீர்த்தனா, கவுசல்யா, காவியாஸ்ரீ, மதிமிதா, கீர்த்தனா, மாளவிகா, கவுசல்யா, மரியா தெரஸ்மனோஜ், மேக்னா விஸ்வின், மோனிகா உள்ளிட்ட மாணவிகள் செய்திருந்தார்கள்.
- உடன்குடி அரசு கிளை நூலகத்தை சுற்றி ஏராளமான காட்டு செடிகள் வளர்ந்து கிடந்தன.
- நூலகம் முழுவதும் இருந்த புல்,புதர்களை மாணவர்கள் அகற்றினர்.
உடன்குடி:
உடன்குடி பஸ் நிலையம் அருகில் உள்ள அரசுகிளை நூலகத்தை சுற்றி ஏராளமான காட்டு செடிகள் வளர்ந்துகிடந்தன.இதனால் நூலகத்திற்கு புத்தகம் படிக்க வரும் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தது.
இதையடுத்து கிறிஸ்டியா நகரம் றி.டி.றி.ஏ பள்ளி மாணவர்கள் விளையாட்டு ஆசிரியர் கிருபாகரன் மற்றும் நூலகர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலைமையில் கிளை நூலகம் முழுவதும் உள்ள புல், புதர்கள் அகற்றப்பட்டது. நூலகம் உள்ளேயும் வெளியேயும் அனைத்து பகுதிகளிலும் தூய்மை செய்யபட்டது. பள்ளிமாணவர்களின் செயலுக்கு ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பாராட்டும், நன்றியையும் தெரிவித்தனர்.
- சாயர்புரம் பேரூராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க பணி நடைபெற்றது.
- புளிய நகர் விநாயகர் கோவில் குளக்கரைகளில் குப்பைகள் அகற்றப்பட்டது.
சாயர்புரம்:
சாயர்புரம் பேரூராட்சியில் உள்ள 10- வது வார்டு புளிய நகரில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க பணி நடைபெற்றது. சாயர்புரம் பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமை தாங்கி பணியினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் புளிய நகர் விநாயகர் கோவில் குளக் கரைகளில் உள்ள குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி மரகன்றுகள் நட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதில் புளிய நகர் ஊர் கமிட்டி தலைவர் அறவாழி, ஞானராஜ், முன்னாள் கவுன்சிலர் வேல்முருகன், நந்தகோபால புரம் பரமசிவன், புளிய நகர் இளைஞர் நற்பணி மன்றத்தினர், சாயர்புரம் பேரூராட்சி ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சாயர்புரம் பேரூராட்சி மேற்பார்வையாளர் நித்திய கல்யாண் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி நன்றி கூறினார்.
- மத்திய அரசின் “புனீத் சாகர் அபியன்” திட்டத்தின் கீழ் நடந்தது
- பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தார்
கன்னியாகுமரி:
இந்தியாவின் கடற்கரை பகுதியை குப்பைகள் இல்லாமல் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதற்காக மத்திய அரசு "புனீத் சாகர் அபியன்" என்னும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.
கடற்கரையில் குவிந்து கிடக்கும் குப்பைகளை சேகரித்து கடற்கரையை அழகான பாதுகாப்பான சுத்தமான இடமாக மாற்று வதுடன் கடற்கரை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும். அதன்படி நாகர்கோவில் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த என்.சி.சி. மாணவ- மாணவிகள் கன்னியா குமரியில் முக்கடலும் சங்க மிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியில் தூய்மை பணி யில் ஈடுபட்டனர்.
இந்தப் பணியை கன்னி யாகுமரி சிறப்பு நிலை பேரூ ராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச் சிக்கு 11-வது தமிழ்நாடு பெட்டாலியன் என்.சி.சி. அதிகாரி கேப்டன் கே.ஆர். அஜீந்திரநாத் தலை மை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி முன்னாள் வார்டு கவுன்சிலர் தாமஸ் தி.மு.க. நிர்வாகிகள்அன்பழகன், ரூபின், ஷியாம்தாமஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கடற்கரை தூய் மை பணியில் 70-க்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவ-மாண விகள் கலந்து கொண்டு கடற்கரையில் கிடந்த குப்பைகள் மற்றும் கழிவு களை அப்புறப்படுத்தி னார்கள்.
முன்னதாகபொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணி களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக காந்தி மண்டபம் முன்பு இருந்து முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி த்துறை கடற்கரைவரை என்.சி.சி. மாணவ-மாண விகள் கடற்கரையை தூய்மை யாக வைப்பது குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பிடித்தபடி விழிப்புணர்வு பேரணி நடத்தினார்கள்.
- சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்கள் தூய்மை பணியை மேற்கொண்டனர்
- இந்த அணையிலிருந்து குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளுக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் ரேலியா அணை பகுதியில் கேத்தி சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்கள் தூய்மை பணியை மேற்கொண்டனர்.குன்னூர் நகரின் ஒரே குடிநீர் ஆதாரம் ரேலியா அணை. சுமார் 510 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட காப்புகாட்டில், 10 ஏக்கர் நீர்ப்பிடிப்பு பகுதியில், கடந்த 1938ம் ஆண்டு இந்த அணை கட்டப்பட்டது. மொத்தம் 46.3 அடி உயரம் உள்ள இந்த அணையிலிருந்து குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளுக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த அணையை சுற்றி உள்ள பகுதிகளில் கேத்தி சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரி தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர் மனோஜ்பிரபாகர் தலைமையில் தேசிய மாணவர் படை மாணவர்கள் செடிகள் மற்றும் குப்பைகளை அகற்றி தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.
- விடுமுறை நாட்களில் சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருவது வழக்கம்.
- பழவேற்காடு கடற்கரை மணற்பகுதி குப்பைகளாக காட்சி அளிக்கிறது.
பொன்னேரி:
பழவேற்காடு கடற்கரை சுற்றுலா தளமாக விளங்குகிறது. தினமும் காலை, மாலை நேரத்தில் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள்.
விடுமுறை நாட்களில் சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருவது வழக்கம். சுற்றுலா வருபவர்கள் தாங்கள் கொண்டு வரும் திண்பண்டங்கள், பிளாஸ்டிக் கவர்கள் தண்ணீர் பாடல்களை கடற்கரை மணலிலேயே ஆங்காங்கே போட்டு விட்டு செல்கிறார்கள்.
இதனால் பழவேற்காடு கடற்கரை மணற்பகுதி குப்பைகளாக காட்சி அளிக்கிறது. மேலும் குப்பைகள் காற்றில் பறந்து கடலில் விழுவதால் கடல் நீரும் மாசு அடைகிறது.
பழவேற்காடு கடற்கரை மணற்பகுதியை சுத்தப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் பொன்னேரி வருவாய்த்துறையின் சார்பில் பழவேற்காடு கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. பயிற்சி கலெக்டர் கேத்ரின் சரண்யா தலைமை தாங்கினார். மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர், தாசில்தார் செல்வக்குமார், ஒன்றிய கவுன்சிலர் செல்வழகி எர்ணாவுரான் ஊராட்சி மன்ற தலைவர் கஜேந்திரன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு தூய்மைப்படுத்தினர்.
- கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் இருந்தது.
- சிறப்பு தூய்மைப் பணிமேற்கொள்ளப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட 7வது வார்டில் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, எல்.ஐ.சி. காலனி, பாலாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் இருந்தது.
இது குறித்து தகவல் அறிந்த நகர்மன்ற தலைவர் பரிதாநவாப் அப்பகுதிக்கு துப்புரவு பணியாளர்களுடன் சென்று, கழிவுநீர் கால்வாய் அடைப்பினை, நீண்ட நாட்கள் தேங்கியிருந்த குப்பைகளை அகற்றுதல், முட்புதர்களை அகற்றுதல் போன்ற சிறப்பு தூய்மைப் பணியினை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது சுகாதார அலுவலர் ராமகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் தேவேந்திரன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஆயிஷா முகமதுஜான், தேன்மொழி மாதேஷ் மற்றும் வட்ட பிரதிதிநி ஜெயசிம்மன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.