என் மலர்
நீங்கள் தேடியது "வாலிபர் சாவு"
- தன்னிடம் தகவல் தெரிவிக்காததால் விரக்தி
- போலீசார் விசாரணை
வாணியம்பாடி,
வாணியம்பாடி அருகே கலந்திரா கிராமத்தை சேர்ந்தவர் ரஜினி (வயது 25). இவர் வெளியூரில் பொக்லைன் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார்.
தீபாவளி விடுமுறையையொட்டி ரஜினி ஊருக்கு வந்துள்ளார். அப் போது அவருடைய அண்ணன் ராஜே சுக்கு இன்னும் 2 நாட்களில் திருமணம் நடைபெற உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தன்னிடம் எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல் அண்ணனுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்ததால் மனமுடைந்த ரஜினி வீட்டில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்க வில்லை. இந்த நிலையில் ரஜினிக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் மற்றும் அவரது உடைகள், செல்போன் ஆகியவை கிராமத்துக்கு அருகில் உள்ள பாப்பானேரி குளம் பகுதியில் இருப்பதாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
வாணியம்பாடி தீயணைப்பு துறையினர் மற்றும் தாலுகா போலீசார் விரைந்து சென்றனர். தீயணைப்பு துறையினர் சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பின்பு ரஜினியை பிணமாக மீட்டனர். உடலை தீயணைப்பு துறையினர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் வழக்குப்ப திவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அண்ணனின் திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் தம்பி உயிரிழந்த சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- திருவப்பூர் ரெயில்வே கேட்டை ஒட்டிய தண்டவாள பகுதியில் இன்று காலை சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் உடல் பாகங்கள் சிதறிய நிலையில் பிணமாக கிடந்தார்.
- காரைக்குடியில் இருந்து சென்னை வரை செல்லும் பல்லவன் எக்பிரஸ் ரெயில் மோதி அவர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை திருவப்பூர் ரெயில்வே கேட்டை ஒட்டிய தண்டவாள பகுதியில் இன்று காலை சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் உடல் பாகங்கள் சிதறிய நிலையில் பிணமாக கிடந்தார்.
அவர் யார், எந்த ஊரைச்சேர்ந்தவர் என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை. இன்று காலை காரைக்குடியில் இருந்து சென்னை வரை செல்லும் பல்லவன் எக்பிரஸ் ரெயில் மோதி அவர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அவர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது விபத்து ஏற்பட்டதா அல்லது தற்கொலை செய்யும் எண்ணத்தோடு ரெயில் முன்பு பாய்ந்தாரா? என்று புதுக்கோட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி
- யார் அவர்? விசாரணை
அணைக்கட்டு:
பள்ளிகொண்டா அடுத்த கிங்கினி அம்மன் கோவில் அருகே 38 வயது மதிக்கத்தக்க ஒருவர் நேற்று முன்தினம் பைக்கில் இருந்து தவறி சாலை ஓரம் விழுந்து கிடந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த நிலையில் அந்த வழியாக வந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து யார் அவர் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அவ்வழியாக வந்த லாரி ஒன்று ஜாகத் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- இதில் தூக்கி வீசப்பட்ட ஜாகத் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
ஓசூர் நகர் பகுதியை சேர்ந்தவர் சபியுல்லா . இவரது மகன் ஜாகத் (வயது 22). இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஜூஜூவாடி செக்போஸ்ட் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த லாரி ஒன்று ஜாகத் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ஜாகத் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரை மாட்டுத்தாவணியில் ஓடும் பஸ்சில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
- தனியார் பஸ்சில் வந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
மதுரை
மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து தனியார் பஸ் பயணிகளை ஏற்றிக் கொண்டு மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கு வந்தது. பயணிகள் அனைவரும் இறங்கிய நிலையில் பஸ்சின் இருக்கையில் வாலிபர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மாட்டுத்தாவணி போலீசார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பஸ்சில் பிணமாக கிடந்தவர் மேலூர் அருகே உள்ள எஸ்.கல்லம்பட்டியைச் சேர்ந்த சேக் தாவூத் (வயது 35) என்பது தெரியவந்தது. இவருக்கு ஏற்கனவே இதய நோய்க்காக ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டிருந்தது.
நாகர்கோவிலில் வேலை பார்த்து வந்த சேக் தாவூத் சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். மதுரையில் வேலை தேடுவதற்காக சம்பவத்தன்று தனியார் பஸ்சில் வந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இதில் அவர் இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன் அடிப்ப டையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முத்து இன்று காலை வாடியூர் பகுதியில் உள்ள ஒரு தொழுவத்தில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.
- முத்து தற்கொலை செய்த கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுரண்டை:
சுரண்டை அருகே உள்ள வரகுணராமபுரத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் முத்து ( வயது 19). கூலித்தொழிலாளி. இவர் இன்று காலை வாடியூர் பகுதியில் உள்ள ஒரு தொழுவத்தில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.
தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவர் தற்கொலை செய்த கொண்டாரா? அல்லது யாரேனும் அடித்து தொங்க விட்டார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நிலை தடுமாறி சாலையில் உள்ள சென்டர் மீடியன் மீது எதிர்பாராதவிதமாக மோதினார்.
- சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கர்நாடகா மாநிலம், பெங்களூரு கஞ்சகொண்டாம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் அப்துல்சாகிப் (வயது29). இவர் செருப்பு வியாபாரம் செய்து வந்தார்.
நேற்று இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி சாலையில் உள்ள சென்டர் மீடியன் மீது எதிர்பாராதவிதமாக மோதினார். இதில் சம்பவ இடத்திலேயே அப்துல்சாகிப் பரிதாபமாக உயிரிழந்தார்.
- பி.சி.நாசம்பட்டி பிரிவு சாலையில் வந்த போது இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தார்.
- சம்பவ இடத்திலேயே தாமோதரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள கொட்டுகாரன்பட்டி பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (வயது36). இவர் இருசக்கர வாகனத்தில் சிங்காரபேட்டை- ஊத்தங்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பி.சி.நாசம்பட்டி பிரிவு சாலையில் வந்த போது இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே தாமோதரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சிங்கார பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கவுதம் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார்.
- நண்பர்களுடன் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார்.
கோவை,
கோவை இடையர்பாளையம் பஜனை கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் கவுதம் (வயது 26). இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று கவுதம் தனது நண்பர்களுடன் கணுவாய் பகுதியில் உள்ள மைதானத்திற்கு கிரிக்கெட் விளையாட சென்றார்.
அங்கு நண்பர்களுடன் விளையாடி கொண்டு இருந்தார்.அப்போது திடீரென அவர் நிலைகுலைந்து மயங்கி சுருண்டு விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் அவரை மீட்டு டி.வி.எஸ் நகர் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்ைசக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு கவுதமை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதை கேட்டு அவரது நண்பர்கள் கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கவுதமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிய வாலிபர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்தார்
- மோட்டார் ஸ்விட்ச்சை போடும் பொழுது
திருச்சி,
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கோவாத்குடி கிராமம் ஹரிசன தெருவைச் சேர்ந்தவர் அங்கமுத்து. இவரது மகன் நந்தகுமார் (வயது 24) . இவர் கோவத்தகுடி கிராமத்தில் உள்ள கோரக்கர் சித்தர் பீடத்தில் உள்ள பூஜை அறையில் மின் மோட்டார் ஸ்விட்ச்சை போடும் பொழுது அதிலிருந்து மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிருந்த மண்ணச்சநல்லூர் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக திருவரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார்வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- கடந்த 2 மாதம் முன்பு ராஜி மற்றும் ராஜுயுடன் சேர்ந்து 10 பேர் டெலிபோன் கேபிள் பதிக்கும் கூலி வேலைக்கு சென்றனர்.
- உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்று திரண்டுராஜி சாவில் மர்மம் உள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே கண்டாச்சிபுரம் போலீஸ் சரகம் மேல்வாழை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயவேல். அவரது மகன் ராஜி (வயது 34). இவர் ஊரில் வேலை இல்லாமல் இருந்தார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வடநெமிலி பகுதியை சேர்ந்த சங்கர் என்ற மேஸ்திரி மூலம் மும்பையில் வேலை பார்த்தால் அதிக சம்பளம் பெறலாம் என்று கடந்த 2 மாதம் முன்பு ராஜி மற்றும் ராஜுயுடன் சேர்ந்து 10 பேர் டெலிபோன் கேபிள் பதிக்கும் கூலி வேலைக்கு சென்றனர். இதனையடுத்து சம்பவத்தன்று ராஜி மும்பை அருகே உள்ள ெரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக ெரயிலில் அடிபட்டு இறந்தார் என்று பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. பின்னர்இறந்த ராஜியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து ஒப்பந்ததாரர் முன்னிலையில் போலீசார் ராஜி உடலை ராஜி ஊரான மேல்வாழைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த ராஜி உடல் இன்று காலை மேல்வாழைக்கு வந்தது. இதை அறிந்த ராஜியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்று திரண்டுராஜி சாவில் மர்மம் உள்ளது. ராஜியை மும்பையில் வேலையில் சேர்த்த மேஸ்திரி சங்கர் நேரடியாக இங்கு வர வேண்டும் என்று கூறி அவர்கள் இறந்த ராஜி உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கண்டாச்சிபுரம் போலீசார், போலீஸ் டி.எஸ்.பி. பார்த்திபன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போரா ட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இது பற்றி உரிய நடவடிக்கை எடுக்க ப்படும் என்று உறுதி அளி க்கபட்டது. அதனை தொட ர்ந்து போராட்டம் விலக்கி கொ ள்ள ப்பட்டது.
- வேலைமுடிந்து தனசேகர் ஒத்தையடி பாதையில் நடந்து வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார்.
- அப்போது அவரை ஒரு பாம்பு கடித்து விட்டது.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் காஞ்சி கோவில் அருகே உள்ள பொன்னான்டா வலசு பகுதியை சேர்ந்தவர் சென்னியப்பன். இவரது மகன் தனசேகர் (25). தொழிலாளி.
சம்பவத்தன்று இவர் இரவு வேலைமுடிந்து ஒத்தையடி பாதையில் நடந்து வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார்.
அப்போது அவரை ஒரு பாம்பு கடித்து விட்டது. இது தெரியாமல் தனசேகர் இருந்து வந்தார்.
பின்னர் பெருந்துறை அரசுஆஸ்பத்திரிக்கு சென்ற போது தான் தனக்கு பாம்பு கடித்தது என்பது தனசேகருக்கு தெரியவந்தது.
இதையடுத்து அவரை டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தனசேகர் பரிதாபமாகஇறந்தார்.
இது குறித்து காஞ்சி கோவில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் விசாரணை நடத்தி வருகிறார்.