search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Disabled"

    சேலம் புதிய பஸ் நிலைய பிளாட்பாரத்தில் படுத்திருந்த மாற்றுத்திறனாளி மீது பஸ் சக்கரம் ஏறி பரிதாப இறந்தார்.
    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் நேற்று இரவு அந்த பகுதிகளில் இருந்துவரும் மாற்றுத்திறனாளி செல்வராஜ் (வயது 70)என்பவர் ஏற்காடு பஸ் நிறுத்தம் பகுதியில்  தூங்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு நின்றிருந்த அரசு பேருந்து திடீரென பின்னால் இயக்கப்பட்டது. இதில் பஸ்சின் பின் சக்கரம் செல்வராஜ் காலின் மீது ஏறி இறங்கியது. இதனால் வலியால் துடித்த செல்வராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ்சை ஓட்டிய தர்மபுரியை சேர்ந்த பச்சமுத்து (வயது44) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ராஜபாளையத்தில் 300 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    ராஜபாளையம்

    ராஜபாளையம்- தென்காசி ரோட்டில் உள்ள   முத்துராமலிங்கதேவர் திருமண மண்டபத்தில்  முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99 -வது பிறந்த நாளையொட்டி  ராஜபாளையம் தொகுதியில் உள்ள 300 மாற்றுத்திறனாளிகளுக்கு எம்.எல்.ஏ.வின் 8,9,10-வது மாத ஊதியத்தில் இருந்து ரூ.3 லட்சத்து 15 ஆயிரம்  மதிப்பீட்டில்  தலா ரூ.  1000- ஐ நிதி உதவியாக தங்கப்பாண்டியன்  எம்.எல்.ஏ. வழங்கினார்.

    இந்த நிகழ்வில் எம்.எல்.ஏ. பேசுகையில்,   தமிழர்களுக்காகவும் தமிழுக்காகவும் ஓயாமல் உழைத்து கொண்டிருந்தவர்   கருணாநிதி தான். அவர் வழியில் முதல்வர்  மு.க.ஸ்டாலின்  தமிழின் வளர்ச்சிக்காகவும், தமிழர்களின் வளர்ச்சி க்காகவும், உறுதியான நடவடிக்கை  எடுத்து அல்லும் பகலும்   உழைத்துக் கொண்டிருக்கிறார்.

    தற்போது  பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகைபுரிந்தபோது  தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் மொழியின்  வளர்ச்சிக்காகவும்  முதல்வர் மு.க.ஸ்டாலின்,  கச்சத்தீவை மீட்க வேண்டும்,   நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி. வரியை உடனடியாக வழங்கவேண்டும்.

    பழமையான தமிழ் மொழியை இந்திக்கு நிகராக அலுவல் மொழியாகவும் உயர்நீதி மன்றத்தில் வழக்காடும் மொழியாகவும் அறிவிக்க வேண்டும்,  நீட் விலக்கிற்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும், மத்திய அரசின் நிதி பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என முக்கிய 5 கோரிக்கைகளை வைத்தார். இதை உலகமே வியந்து பாராட்டுகிறது.

    ராஜபாளையம் தொகுதியில் கருணாநிதி  பிறந்த நாளையொட்டி  வரும் மாதம் முழுவதும் ரூ. 50 லட்சம்  மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.  இனிவரும் சட்ட மன்ற உறுப்பினர் ஊதியத்தில் இருந்து தொகுதியில்  உயர்கல்வி  பயில இருக்கும் ஏழை, எளிய  மாணவ-மாணவியர்களில் அந்த பகுதியிலுள்ள கிளைச்செயலாளர், வார்டு செயலாளர்கள், ஒன்றிய, நகர செயலாளர்களின் பரிந்துரையின்படி 25 மாணவ-மாணவிகளை தேர்வு செய்து   அவர்களின்  படிப்பு செலவை முழுவதுமாக  ஏற்றுக் கொள்ள இருக்கிறேன் என்றார்.

    விழாவில் பங்கேற்ற   மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைவருக்கும் மதிய உணவு   வழங்கப்பட்டது. 

    இந்த  நிகழ்வில் நகர் மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் ராஜா, தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா,  பொதுக்குழு உறுப்பினர்கள் கனகராஜ், ஷியாம்ராஜா, சேத்தூர் சேர்மன் பாலசுப்பிரமணியன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதிராமமூர்த்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன்,  பேரூர்  செயலாளர் இளங்கோவன்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 6-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளனர்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 6-ந்தேதி உண்ணா விரத போராட்டம் நடத்த உள்ளனர்.

    இது குறித்து நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் பழனிவேல் கூறுகையில், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் தரை தளத்தில் அமைய வேண்டும். 

    இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி குமாரபாளையம் தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டோம். ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர்.

    இருப்பினும் குறிப்பிட்டபடி அடுத்த மாதம் 6-ந்தேதி அதே இடத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்றார்.
    ×