என் மலர்
நீங்கள் தேடியது "Collector inspection"
- தலைக்காட்டுபுரம் தரிசு நிலத்தொகுப்பில் இருந்த கருவேல மரங்கள் அகற்றப்பட்டு சாகுபடிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
- தற்போது 7 ஏக்கர் பரப்பளவில் சூரியகாந்தி பயிரும், 24 ஏக்கரில் உளுந்தும் பயிரிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:
விளாத்திகுளம் அருகே உள்ள தலைகாட்டுபுரம் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2021-2022-ல் தரிசுநிலத் தொகுப்பினை கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
விவசாயிகள் குழு
தலைக்காட்டுபுரம் தரிசு நிலத்ெதாகுப்பில் 32 ஏக்கர் பரப்பளவில் இருந்த தரிசு நிலத்தில் இருந்த கருவேல மரங்கள் அகற்றப்பட்டு சாகுபடிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தொகுப்பில் 16 விவசாயிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு 2 ஆழ்துளை கிணறு ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒரு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது.
சூரியஒளி சக்தியில் இயங்கும் மின்மோட்டார் அமைக்கப்பட்டு நுண்ணீர்பாசனம் மூலம் பழமரக்கன்றுகள் பயிரிடப்படும். தற்போது 7 ஏக்கர் பரப்பளவில் சூரியகாந்தி பயிரும், 24 ஏக்கரில் உளுந்தும் பயிரிடப்பட்டுள்ளது.
பண்ணைக்குட்டைகள்
தொகுப்பில் அமைக்கப்பட்ட 2 பண்ணைக்குட்டைகள், தூர் வாரப்பட்ட ஊரணி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற் கொள்ளப்பட்டுள்ளது.
தலைக்காட்டுபுரம் ஊராட்சியில் ஊராட்சி அலுவலகம், குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, அங்கன்வாடி கட்டிடம் பணிகளை பழைய பள்ளி கட்டடம், பொது விநியோக கட்டிடம் ஆகியவற்றில் நடைபெறும் பணிகள் பார்வையிட்டு விரைந்து, பணிகளை முடிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள், செயற்பொறியாளர் கிளாட்சின் இஸ்ரேல், வேளாண்மை உதவி இயக்குனர் கீதா, தோட்ட க்கலை உதவி இயக்குனர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 174 மின்கம்பங்கள் சேதம்
- உடைந்த தரை பாலத்தை உடனடியாக கட்ட நடவடிக்கை
செய்யாறு:
மாண்டஸ் புயலால்செய்யாறு, வெம்பாக்கம் பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை கலெக்டர் பா. முருகேஷ் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
கலெக்டர் செய்யாறு அரசினர் மகளிர் பள்ளி சுற்றுச்சுவர்இடிந்து விழுந்துள்ளதையும், வெம்பாக்கம் தாலுக்கா பிரம்மதேசம் வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதையும், பின்னர் அனக்காவூர் ஒன்றியம், அளத்துரை கிராமத்தில் தரைப்பாலம் சேதம் அடைந்த வெள்ளத்தினால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட சேதமடைந்த பாலத்தை கலெக்டர் பா.முருகேஷ் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அளத்துறையில் பாதிக்கப்பட்ட தரைப்பாலத்திற்கு சிறிய பாலம் கட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் இதே கிராமத்தில் சிறிய கல்வெட்டும் விரைவாக கட்டித் தரப்படும். செய்யாறு, வெம்பாக்கம் பகுதிகளில் 25 குடிசைகள் பகுதியாகவும், 10 குடிசைகள் முழுமையாகவும், சேதம் அடைந்துள்ளது. 53 மரங்கள் சாய்ந்துள்ளது. 11 கால்நடைகள் இறந்துள்ளன.
174 மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளது சேதம் அடைந்த மின்கம்பங்கள் போர்க்கால அடிப்படையில் சரி செய்யப்படும். பாதிக்கப்பட்டவர்களின் சேதத்தை கண்காணித்து அரசுக்கு உடனடியாக அறிக்கையை அனுப்பி வைத்து விரைவாக நிவாரணம் பெற்று தரப்படும். இவ்வாறு அவா கூறினார்.
- சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ்சாலை துறையினரிடம் கலெக்டர் அறிவுறுத்தினார்.
- 20 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றி கிராம பகுதிகளுக்கு செல்ல கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
அரவேணு,
கோத்தகிரியில் இருந்து கூக்கல் தொரை வழியாக கோத்தகிரி செல்லும் சாலையில் அமைந்துள்ள உயிலட்டி நீர்வீழ்ச்சி அருகே திடீரென மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டு மண்,ராட்சத பாறைகள் சாலையில் விழுந்து பெரும் சேதமடைந்தது.
இதனால் கூக்கல்தொரை பகுதியில் இருந்து கோத்தகிரி போன்ற நகர்புற பகுதிகளுக்கும் போக்குவரத்து தடைபட்டது. இதுதொடர்பாக நெடுஞ்சாலை துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை துறையினர் மண், ராட்சத பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து மாநில நெடுஞ்சாலை துறையினர் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டு சாலையில் விழுந்த பாறை மற்றும் மண் சரிவுகளை கனரக எந்திரம் மற்றும் ஜே.சி.பி. எந்திர வாகனங்களை கொண்டு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சாலையில் ஏற்பட்ட மண் சரிவு பாதிப்புகளை நீலகிரி கலெக்டர் அம்ரித் நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் குழந்தைராஜ், ஊட்டி ஊராட்சி மன்ற தலைவர் மாயன், நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் தடுப்பு சுவர்கள் அமைத்து சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ்சாலை துறையினரிடம் கலெக்டர் அறிவுறுத்தினார்.
மண்சரிவால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லக் கூடிய போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிப்படைந்துள்ளதால், பஸ்கள் மற்றும் வாகனங்கள் மாற்று பாதையான கூக்கல், கக்குச்சி வழியாக சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றி கிராம பகுதிகளுக்கு செல்ல கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
புவியியல் துறையினர் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை நேரில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் வரும் காலங்களில் இப்பகுதியில் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு பேரிடர்கள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் குழந்தைராஜ் தெரிவித்தார்.உதவி கோட்ட பொறியாளர் சாமியப்பன், உதவி பொறியாளர் ரமேஷ், சாலை ஆய்வாளர்கள் சேகர்,ஜெயக்குமார், சிவ க்குமார், கிருஷ்ணன்,முருகன் மற்றும் நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் மூலம் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பணியில் 2280 பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்
- எந்த வித முகாந்திரமும் இல்லாததை கண்டு ஏமாற்றமடைந்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் 13 யூனியன்களில் 688 ஊராட்சிகளில் 2286 உட்கிடை கிராமங்களில் 3689 பெரிய தண்ணீர் தொட்டிகள், 1872 சிறிய தண்ணீர் தொட்டிகள் உள்ளன. இந்த தண்ணீர் தொட்டிகளில் இருந்து கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பணியில் 2280 பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த தண்ணீர் தொட்டிகள் 15 நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் சரியான முறையில் பராமரித்து சுத்தம் செய்து பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும். அவ்வாறு பராமரிக்கவில்லை எனில் இன்று காலையில் சுத்தம் செய்ய வேண்டும் என்று ஊராட்சி தலைவர், செயலாளர்களுக்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் சுற்றறிக்கை அனுப்பி உத்தரவிட்டார். மேலும், சுத்தம் செய்யப்படுகிறதா என்பது ஆய்வு செய்யப்படும் என்றும் கலெக்டர் அறிவுறுத்தினார். எனவே, அனைத்து தண்ணீர் தொட்டிகளையும் சுத்தம் செய்ய தேவையான பணியாளர்களை பணியமர்த்திட கலெக்டர் அறிவுறுத்தினார்.
அதன்படி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பொன்னம்பலம், கோலியனூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஜானகி, அனந்தலட்சுமி மற்றும் அதிகாரிகள் இன்று காலை கோலியனூர் ஊராட்சியில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சுத்தம் செய்யும் பணியை பார்வையிட்டு, பொது மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். இதையடுத்து கோலியனூரை அடுத்த பாளை அகரம் ஊராட்சிக்கு சென்ற கலெக்டர், அங்குள்ள தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கான எந்த வித முகாந்திரமும் இல்லாததை கண்டு ஏமாற்றமடைந்தார்.
இதையடுத்து பாளைஅகரம் ஊராட்சி செயலர் விநாயகம் அழைத்து விசாரித்தார். அவரின் பதில் கலெக்டருக்கு திருப்தியளிக்காததால் விநாயகத்தை தற்காலிகமாக சஸ்பெண்டு செய்து கலெக்டர் மோகன் உத்தரவிட்டார். தொடர்ந்து பாளைஅகரம் ஊராட்சி தலைவர் லதாவை அழைத்து வாட்டர் டேங்குகளை சுத்தம் செய்ய ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று விளக்கம் அளிக்க வேண்டுமென நோட்டீஸ் வழங்கினார். இதைத் தொடர்ந்து பணங்குப்பம் ஊராட்சி, தொடர்ந்தனூர் ஊராட்சிகளுக்கும் கலெக்டர் மோகன் ஆய்வு செய்தார். விழுப்புரம் கலெக்டர் மோகனின் இந்த அதிரடி நடவடிக்கை ஊராட்சி செயலர்களின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பெரணமல்லூர் பகுதியில் நடந்தது
- பசுமை வீடுகள் கட்டப்பட்டு வருகிறது
சேத்துப்பட்டு:
பெரணமலூர் ஊராட்சி ஒன்றியம் கெங்காபுரம், கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய சிமெண்டு, சாலை மற்றும் கல்வெர்ட் அமைக்கும் பணி, பெரிய கொழப்பலூர், கிராமத்தில் பொது நிதியிலிருந்து ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பள்ளி சீரமைப்பு பணி மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலம் 21-22-ம் ஆண்டிற்கான ரூ.11 லட்ச மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடத்தை ஆய்வு செய்தார்.
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில், பெரிய கொழப்லூர், கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்ட வீட்டை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சந்திரம்பாடி, கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மூலம் கால்நடை துறை பராமரிப்பு சார்பில் தீவன வளர்ப்புகள், குளம் அமைத்தல், அரியபாடி, கிராமத்தில் இருளர் இன மக்கள் மேம்பாட்டு நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் வீதம் எட்டு பசுமை வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.
இந்த பணிகளின் தன்மை, மற்றும் பணி நிலவரம், குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் பெரிய கொழப்பலூர் கிராமத்தில் ஆவின் போதுஅரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்றார். அப்போது அங்கு சிறப்பு வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவிகளிடம் நன்றாக படித்து வாழ்வில் நல்ல நிலைக்கு நீங்கள் வரவேண்டும். படிப்பில் கவனம் செலுத்துங்கள். என்று கூறினார்.
- பால் குளிரூட்டும் நிலைய த்தினை மாவட்ட கலெக்டர் ஷ்வரன்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
- ஒன்றிய அலுவலகம் அமைத்து தரவும், ஆயத்த பணிகள் மேற்கொள்ளவும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட பால் உற்பத்தி யாளர் கூட்டுறவு ஒன்றியத்தி ற்குட்பட்ட சின்னசேலம் பால் குளிரூட்டும் நிலைய த்தினை மாவட்ட கலெக்டர் ஷ்வரன்குமார் ஆய்வு மேற்கொண்டார். இதில் பால் குளிரூட்டப்படுவது மற்றும் குளிரூட்டு நிலையங்களில் உள்ள இயந்திரங்களின் செயல்பாடுகளை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் ஒன்றியத்தில் பால் பதப்படுத்துதல், குளிரூட்டுதல் பணிகளை ஆய்வு செய்து, ஒன்றியத்தின் வளர்ச்சிக்கான ஆலோசனைகள் வழங்கினார். கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், புதிய அலுவலகம் அமைத்தல், புதிய ஆவின் பாலகங்கள் அமைத்தல், பணிகள் தொடர்பாக அறிவு ரைகளை வழங்கினார்.பால் பெருக்கு மற்றும் பால் உப பொருட்கள் தயாரிக்கவும் ஒன்றிய அலுவலகம் அமைத்து தரவும், ஆயத்த பணிகள் மேற்கொள்ளவும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது சின்னசே லம் தாசில்தார் இந்திரா ,சின்னசேலம் யூனியன் துணை தலைவர் அன்புமணிமாறன்,, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய தலைவர் ஆறுமுகம்,ஒன்றிய துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், ஒன்றிய பொது மேலாளர் ஈஸ்வர் மற்றும் இயக்குனர்கள் ஆவின் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது.
- கலெக்டர் ரவிச்சந்திரன் ஆலங்குளம் பேரூராட்சி பகுதிகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் பேரூராட்சி ராஜீவ்காந்தி நகரில் கடந்த மாதம் 28-ந் தேதி பள்ளி மாணவனான பூனிஷ்(வயது 9) என்ற சிறுவன் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது.
கலெக்டர் திடீர் ஆய்வு
இந்நிலையில் தென்காசி மாவட்ட புதிய கலெக்டர் ரவிச்சந்திரன் ஆலங்குளம் பேரூராட்சி பகுதிகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆலங்குளம் தாலுகா மருத்துவமனைக்கு சென்ற அவர் அங்குள்ள பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது இந்த மருத்துவமனை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தி 7 ஆண்டுகளாகியும் இங்கு அவசர சிகிச்சை பிரிவு, ஸ்கேன், மகப்பேறு வசதி, செவிலியர்கள் பற்றாக்குறை, மருத்துவர்கள் பற்றாக்குறை, துப்புரவு பணியாளர்களை நியமிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்தனர்.
டெங்கு தடுப்பு பணி
அப்போது கலெக்டர் ரவிச்சந்திரன், விரைவில் மருத்துவமனையை தரம் உயர்த்த ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தார். தொடர்ந்து ஆலங்குளம் அருகே உள்ள உடையாம்புளி, ஓடை மரிச்சான் கிராமங்களுக்கு சென்ற அவர் தெருக்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் மேற்கொண்ட டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து உடை யாம்புளி கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் பொருள்களின் தரத்தினை பரிசோதனை செய்தார்.மேலும் மருதம் புத்தூர் கிராமத்தில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் உள்ள வீடுகள் மற்றும் புதிய பஞ்சாயத்து அலுவலகத்தைத் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது ஆலங்குளம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்தசாரதி, திலகராஜ், சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன், நிஷாந்த் குமார்,செயற்பொறியாளர் மற்றும் மருதம் புத்தூர் பஞ்சாயத்து தலைவர் பூசத்துரை, பஞ்சாயத்து செயலாளர் கோபால கிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனி ருந்தனர்.
- பரமத்தி வேலூர் வட்டம், படமுடிபாளையம் குழந்தைகள் மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
- குழந்தைகளுக்கு மாதா, மாதம் எடை மற்றும் உயரம் அளவிடுதல், ஊட்டச்சத்து நிலை குறித்தும் பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம், படமுடிபாளையம் குழந்தைகள் மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது குழந்தைகள் மையத்தில் குழந்தைகளுக்கு கற்பிக்கும் முறைகள் குழந்தைகளுக்கு வழங்கும் இணை உணவு, குழந்தைகளின் கற்றல் திறன், குழந்தைகளுக்கு வழங்கும் உணவின் தரம் ஆகியவை குறித்து அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து காவேட்டிபட்டி குழந்தைகள் மையத்தில் சத்துணவின் தரம், குழந்தைகளுக்கு தினசரி வழங்கப்பட வேண்டிய உணவுப் பட்டியலின் படி உணவு வகைகள் வழங்கப்படுகின்றதா எனவும், பணியாளர்களிடம் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும், குழந்தைகளின் வருகை எண்ணிக்கை குறித்தும், மேலும் குழந்தைகளுக்கு மாதா, மாதம் எடை மற்றும் உயரம் அளவிடுதல், ஊட்டச்சத்து நிலை குறித்தும் பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
- அருப்புக்கோட்டை யூனியனில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் ஆய்வு செய்தனர்.
- இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (மாவட் ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி மற்றும் பலர் பங்கேற்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர், மாற்றுத்திறனாளி நலத்துறை செயலர் ஆனந்த்குமார், கலெக்டர் ஜெயசீலன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதன்படி கூரைக்குண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை பார்வையிட்டு ஆசிரியர்களிடம் மாண வர்களின் வருகை பதிவு, கல்வி கற்பிக்கும் முறை குறித்து கேட்டறிந்ததுடன் கழிவறைகளை பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். கழிவறையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.
பின்னர், குல்லூர் சந்தையில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் மானிய விலையில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வரும் கவுசிகாநதி உழவர் உற்பத்தியாளர் நிறு வனத்தின் ஒருங்கிணைந்த முதல்நிலை சுத்திகரிப்பு மற்றும் மதிப்பு கூட்டுதல் நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் உற்பத்தி செய்யப்படும் மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய உணவு வகைகள் தயாரிக்கும் முறைகள், தரம், சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனர்.
குல்லூர்சந்தை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மருந்துகள், அங்கு வழங்கப்படும் சிகிச்சை, மருத்துவர்களின் வருகை குறித்தும், நாய்க்கடி மூலம் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
குல்லூர்சந்தையில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு ரூ.340 லட்சம் மதிப்பில் 68 தொகுப்பு வீடுகளும், ரூ.11.30 லட்சம் மதிப்பில் 2 தனி வீடுகளும் என மொத்தம் ரூ.3.51 கோடி மதிப்பில் 70 புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகளையும் மாவட்ட கண்காணிப்பு அலுவல, கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (மாவட் ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி மற்றும் பலர் பங்கேற்றனர்.
- கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
- ரூ.5.65 லட்சம் மதிப்பீட்டில் ஒரு தனி வீடும் கட்டப்பட்டு வருகின்றது.
கோவை,
கோவை மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆழியார் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் பழுதடைந்த நிலையில் உள்ள வீடுகள் புதியதாக கட்டப்பட்டு வருகிறது.
இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி நேரில் பார் வையி ட்டு ஆய்வு மேற ்கொண் டார். இந்த ஆய் வின ்போது கூடுதல் கலெ க்டர் (வள ர்ச்சி) அலர் மேல் மங்கை, பொள் ளாச்சி சப்-கலெ க்டர் பிரிய ங்கா மற்றும் வள ர்ச்சித் துறை அலு வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி கூறியதாவது:-
தமிழ்நாடு முதல்- அமைச்சர் தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித் தருவது உள்பட பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார். இலங்கை அகதிகள் முகாம் என்பதை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்' என பெயர் மாற்றினார்.
மேலும் இலங்கை அகதிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு தனியே ஒரு குழுவை உருவாக்கி செயல்பட்டு வருகின்றது.முதல்-அமைச்சர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் பழுதடைந்த நிலையில் உள்ள வீடுகளை புதிதாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக நடப்பு நிதி ஆண்டில் 300 சதுர அடி கொண்ட 4 வீடுகளை தொகுப்பு வீடாக கட்டுவதற்கு வீடு ஒன்றிக்கு ரூ.5 லட்சம் மற்றும் தனி வீடுகள் கட்டுவதற்கு வீடு ஒன்றிக்கு ரூ.5.65 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார்.
மேலும் இத்திட்டம் ஊரக வளர்ச்சி- ஊராட்சித் துறை மற்றும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக செயல்படுத்தப்படுகின்றது.கோவை மாவட் டத்திலுள்ள மேட்டு ப்பாளையம் வேடர் காலனி, பேரூர் பூலுவபட்டி, கோட்டூர் ஆழியார் ஆகிய 4 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 1059 குடும்பங்களை சேர்ந்த 3,002 மக்கள் வசித்து வருகின்றனர்.
ஆனைமலை வட்டார த்திற்குட்பட்ட கோட்டூர் பேரூராட்சியில் அமைந்துள்ள ஆழியார் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 4 வீடுகள் கொண்ட தொகுப்பு வீடுகள் தலா ரூ.5 லட்சம் வீதம் 397 வீடுகள் மற்றும் கோட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 4 வீடுகள் கொண்ட தொகுப்பு வீடுகள் தலா ரூ.5 லட்சம் வீதம் 112 வீடுகள் என மொத்தம் 429 வீடுகள் ரூ.240 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வருகின்றது. ஆழியார் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.5.65 லட்சம் மதிப்பீட்டில் ஒரு தனி வீடும் கட்டப்பட்டு வருகின்றது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- சிவகாசி யூனியனில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
- இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சிவகாசி யூனியன், நடையனேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.27 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறை கட்டிடங்களையும், செவலூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ரூ.311.3 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீடுகளையும், மங்களம் ஊராட்சி, மேட்டுப்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.49.9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சிறு பாலப்பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
எம்.புதுப்பட்டி ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியத்தின் (சுகாதாரம்) கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய வட்டார பொது சுகாதார மையக் கட்டிடத்தையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சி, கங்காகுளம் அரசு நடுநிலைப்பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் II-ன் கீழ் ரூ.5.17 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் மாணவிகளுக்கான கழிவறை கட்டிடங்களையும், செங்கமலநாச்சியார்புரம் கிராமத்தில் ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.2.56 லட்சம் மதிப்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டிடப் பணிகளையும், தேவர் குளம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் II-ன் கீழ் ரூ.13.57 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய அங்கன்வாடி மைய கட்டிட பணிகளையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
இந்த பணிகளை விரைவா கவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அலுவலர்களை கலெக்டர் அறிவுறுத்தினார்.
மேலும் எம்.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்து மருத்துவர்களிடம் அரசு மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் சிகிச்சை முறைகள் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
- நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்
- உணவுகளை தயார் செய்வது குறித்து பணியாளர்களுக்கு அறிவுரை
வாலாஜா:
வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்து வமனையில் மாவட்ட கலெக் டர் வளர்மதி ஆய்வு செய்தார். அப்போது பிரசவ வார்டு, பெண்கள் வார்டு, மருந்தகங்கள், இயற்கை வைத்தியசாலை உள்ளிட்ட பல்வேறு பகுதி களை பார்வையிட்டார். மேலும் அவர் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இதனைத்தொடர்ந்து மருத் துவமனையில் வழங்கப்படும் உணவு,சமையல் அறையை பார்வையிட்ட கலெக்டர் அங்கு வைக்கப்பட்டிருந்த காய்கறி மற்றும் உணவு தயார் செய்வதற்கான பொருட்க ளின் தரங்கள் குறித்து கேட்டறிந்து, சுகாதாரமான முறை யில் உணவுகளை தயார் செய்வது குறித்து சமையல் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும் மருத்துவமனையில் நோயாளிகள் பயன்படுத்தும் கழிவறைகளை ஆய்வு செய்த அவர் மருத்துவர்களிடம் மருத்துவமனைக்கு தேவைப்ப டுகின்ற தேவைகள் குறித்து கேட்டறிந்து அதனை நிவர்த்தி செய்யும் விதமாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.