search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fraud"

    • பைபிட் (Bybit) நிறுவனம் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சேவைகளை வழங்கி வருகிறது.
    • திருடப்பட்ட நிதி அந்த அடையாளம் தெரியாத வாலட்டில் இருந்து வெவ்வேறு வாலட்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.

    கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை நிறுவனமான பைபிட் (Bybit) மிகப்பெரிய கிரிப்டோ ஹேக்கிங் திருட்டுக்கு இரையாகி உள்ளது.

    நேற்று (வெள்ளிக்கிழமை) பைபிட் நிறுவனம், அதன் ஆஃப்லைன் ஹாட் வாலட்களில் ஒன்றிலிருந்து Ethereum (ETH) திருடப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

    அந்நிறுவனத்தின் அறிக்கைப்படி, 401,346 ETH டோக்கன் (1.13 பில்லியன் டாலர் மதிப்பு) பைபிட்டின் ஹாட் வாலட்டில் இருந்து அடையாளம் தெரியாத வாலட் முகவரிக்கு மாற்றப்பட்டது.

    பரிமாற்றத்தைத் தொடர்ந்து, திருடப்பட்ட நிதி அந்த அடையாளம் தெரியாத வாலட்டில் இருந்து வெவ்வேறு வாலட்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் விசாரித்து வருகிறோம். இதனால் மற்ற பரிமாற்றங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என பைபிட் தலைமை நிர்வாக அதிகாரி பென் சோவ் தெரிவித்துள்ளார்.  

    • தன்னை டெல்லி காவல்துறையின் சைபர் பிரிவு அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொள்வார்.
    • அகமதாபாத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து ஹிமான்ஷு கைது செய்யப்பட்டார்.

    திருமண வரன் தேடும் மேட்ரிமோனி தளத்தில் பெண்களுடன் நட்பு கொண்டு நேரில் வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்த குஜராத் இளைஞர் பிடிபட்டுள்ளார்.

    குற்றம் சாட்டப்பட்டவர் 26 வயதான ஹிமான்ஷு யோகேஷ்பாய் பஞ்சால் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஹிமான்ஷு ஒரு திருமண தளம் மூலம் பெண்களிடம்  தன்னை டெல்லி காவல்துறையின் சைபர் பிரிவு அதிகாரி என்று அறிமுகப்படுத்தி நட்பு  கொள்வார்.

    மேட்ரிமோனியில் நட்பாக பேசி பழகியபின் நேரில் சந்தித்து அவர்களுக்கு விலையுயர்ந்த பரிசுகளை வழங்கி, பின்னர் திருமணம் செய்துகொள்வதாக கூறி அவர்களை ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துவந்தார்.

    மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஹிமான்ஷுவை போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து ஹிமான்ஷு கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், சுமார் 15 பெண்களை அவர் ஏமாற்றி வன்கொடுமை செய்துள்ளதாக தெரியவந்தது.

    மோசடிக்கு ஹிமான்சு பயன்படுத்திய ஐந்து உயர் ரக தொலைப்பேசிகள் மற்றும் மடிக்கணினியை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

    விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ. 1 லட்சம் மோசடி நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா பாக்கு வெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் (வயது 30).இவர் ஐ.டி.ஐ.படித்து முடித்துள்ளார். தற்போது முதுகுளத்தூரில் உள்ள கேஸ் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் இணைய தளத்தில் ஏர்போர்ட் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்துள்ளார். 

    இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் 12- ந்தேதி ராமரின் மொபைல் எண்ணில் தொடர்பு கொண்ட மர்ம நபர் வேலை வாய்ப்பு பதிவு குறித்து விபரம் கேட்டு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் வேலைக்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறியுள்ளார். 

    மேலும் அவர் அதற்கான பதிவு கட்டணம் மற்றும் பல்வேறு காரணங்களை கூறி ரூ. 96 ஆயிரத்து 950 கேட்டுள்ளார். அதனை அவர் தெரிவித்த அவர்களால் தெரிவிக்கப்பட்ட வங்கி கணக்கிற்கு ராமர் அனுப்பி உள்ளார். வேலைக்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறி ஒரு வருடம் ஆகியும் எவ்வித தகவலும் இல்லாத தால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

    இதுகுறித்து மதுரை விமான நிலையத்தில் விசாரித்த போது போலி நபர்கள் என தெரிய வந்தது. இதையடுத்து ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில் ராமர் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    ×