என் மலர்
நீங்கள் தேடியது "flowers"
- புகழ்பெற்ற பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்–பட்டது.
- கல்லறைகள் தூய்மை செய்து மெழுகுவர்த்தி ஏந்தி மாலை அணிவித்து வழிபட்டனர்.
பூதலூர்:
கிறிஸ்தவர்கள் தங்கள் இறந்த மூதாதையர்களின் நினைவு கூறப்படும் நாள் கல்லறை திருநாள் என அழைக்கப்படுகிறது. இந்த நாளில் கிறிஸ்தவர்களின் கல்லறை தோட்டத்தில் உள்ள கல்லறைகள் தூய்மைப்படுத்தப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்–பட்டு இறந்த தங்களின் உறவினர்கள் மற்றும் மூதாதையர்களைநினைத்து வழிபடுவார்கள்.
கிறிஸ்தவர்களின் கல்லறை திருநாளில் இன்று காலை தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்ற பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்–பட்டது. திருப்பலியில் பேராலயஅதிபர் சாம்சன், உதவி அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர் மற்றும் உதவி பங்கு தந்தையர்கள் ஆன்மீக தந்தையர் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றினர்கள்.
திருப்பலி முடிந்ததும் பூண்டி மாதா பேராலயத்தில் அருட் தந்தையாக பணியாற்றி மறைந்த லூர்து சேவியர் பேராலயத்தின் உள்ளே அமைந்துள்ள லூர்து சேவியர் கல்லறை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. லூர்து சேவியர் கல்ல–றையை பேராலய அதிபர் சாம்சன்புனிதம் செய்து வழிபட்டார்.
அதனை தொடர்ந்து புள்ளி மாதா பேராலய கல்லறை தோட்டத்தில் அமைந்துள்ள அருட்தந்தை ராயப்பர் கல்லறை புனிதம் செய்தனர்.இதனை தொடர்ந்து பூண்டி பேராலய இணைந்து உள்ள கிராமங்களில் சென்று அங்குள்ள கிறிஸ்தவர்களின் கல்லறைகள்புனிதம் செய்யப்பட்டது. திருக்காட்டுப்பள்ளி பூதலூர் பகுதியில் உள்ள கிறித்துவ கல்லறை தோட்டத்தில் உள்ள கல்லறைகள் தூய்மை செய்து வெடிவெடித்து மெழுகுவர்த்தி ஏந்தி மலர் மாலை அணிவித்து வழிபட்டனர்.
- கடும் குளிர் காலநிலையிலும் பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
- சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் பூக்கள் விற்பனைக்கும் ஏற்றுமதிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
அன்னதானப்பட்டி:
சேலம் பூ மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அதே போல் சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் பூக்கள் விற்பனைக்கும் ஏற்றுமதிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
கடந்த மாதம் ரூ.1200 வரை என விற்கப்பட்டு வந்த மல்லி இன்று கிலோவுக்கு ரூ.600 வரை விலை குறைந்து ரூ.600 என விற்கப்பட்டு வருகிறது. அதே போல ரூ.600 க்கு விற்ற முல்லை ரூ.200வரை விலை குறைந்து இன்று ரூ.400 என விற்கப்படுகிறது. மற்ற ரக பூக்களின் விலையும் கணிசமாக சரிந்துள்ளது.
சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் (1 கிலோவுக்கு) வருமாறு :-
மல்லிகை- ரூ.600, முல்லை- ரூ.400, ஜாதி மல்லி- ரூ.280, காக்கட்டான்- ரூ.200, கலர் காக்கட்டான் - ரூ.200, சி.நந்தியா வட்டம் - ரூ.180, சம்மங்கி- ரூ.15, சாதா சம்மங்கி- ரூ.30, அரளி- ரூ.150, வெள்ளை அரளி- ரூ.150, மஞ்சள் அரளி- ரூ.150, செவ்வரளி- ரூ.180, ஐ.செவ்வரளி- ரூ.180, நந்தியா வட்டம்- ரூ.180. தற்போது ஐப்பசி மாத நிலவரப்படி குளிர் காலநிலை நிலவுகிறது.
வருகிற கார்த்திகை, மார்கழி மாதங்களில் கடும் குளிர் காலநிலை நிலவும். அதற்கடுத்து தை மாதம் பொங்கல் பண்டிகை வரை பூக்கள் விற்பனை சீசன் நன்றாக இருக்கும் என வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர்.
- கார்த்திகை மாத அமாவாசையொட்டி சேலத்தில் பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
- கோவில்கள், வீடுகளில் பூஜைக்காக அதிகளவில் பயன்படுத்துவதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
அன்னதானப்பட்டி:
சேலம் பூ மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அதே போல் சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இன்று கார்த்திகை மாத அமாவாசையையொட்டி கோவில்களுக்கும், வீடுகளில் சாமிக்கு பூஜைகள் செய்து படைக்கவும் பூக்கள் அதிகளவில் மக்கள் வாங்கிச் சென்றனர். இதன் காரணமாக சேலத்தில் உள்ள பூ , மார்க்கெட்டுகளில் அதிகாலை முதலே பூக்கள் விற்பனை களை கட்டியது.
சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் (1 கிலோ கணக்கில்):-
மல்லிகை - ரூ.1000, முல்லை - ரூ500, ஜாதி மல்லிகை - ரூ.280, காக்கட்டான் - ரூ.280, கலர் காக்கட்டான் - ரூ.240, சி.நந்தியா வட்டம் - ரூ.80, சம்மங்கி - ரூ.50, சாதா சம்மங்கி - ரூ.50, அரளி - ரூ.220, வெள்ளை அரளி - ரூ.220, மஞ்சள் அரளி - ரூ.220, செவ்வரளி - ரூ.240, ஐ.செவ்வரளி - ரூ.240, நந்தியா வட்டம் - ரூ.80, என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து வருகிற வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமையில் விற்பனை நன்றாக இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
- பஞ்சமூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.
- சூரிய பகவானுக்கு தீர்த்தவாரி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சீர்காழி:
சீர்காழி திருக்கோலக்காவில் ஓசை நாயகி அம்மன் உடனாகிய தாளபுரீஸ்வரர் சாமி கோவில் உள்ளது.
பிரசித்தி பெற்ற இக்கோவில் தீர்த்த குளத்தில் நீராடி சூரிய பகவான் சுவாமியுடன் எழுந்தருளும் நிகழ்வு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் இரண்டாவது ஞாயிறு சூரிய புஷ்கரணி விழாவாக நடைபெற்று வருகிறது.
அதன்படி நிகழாண்டு சூரிய புஷ்கரணி விழாவையொட்டி விநாயகர், தாளபுரீஸ்வரர் சுவாமி, ஓசை நாயகி அம்மன், முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
பின்னர் பஞ்சமூர்த்தி சுவாமிகள் சிறப்பு மலர்கள் அலங்காரத்தில் மூஞ்சூர், காமதேனு, ரிஷப, மயில் வாகனங்களில் சூரிய புஸ்கரணிக்கு எழுந்தருளினர்.
அங்கு சூரிய பகவானுக்கு தீர்த்தவாரி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- நாளை மறுநாள் சுபமுகூர்த்த தினம் வருவதால் இன்று பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.
- பிச்சிப்பூ இன்று 2 மடங்கு விலை உயர்ந்து ரூ.1,100-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நெல்லை:
பண்டிகை நாட்கள், சுபமுகூர்த்த தினங்களை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்து காணப்படுவது வழக்கம்.
சுபமுகூர்த்த தினம்
அந்த வகையில் நாளை மறுநாள் 4-ந் தேதி சுபமுகூர்த்த தினம் வருகிறது. இதையொட்டி இன்று பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட்டில் இருந்து மாநகர பகுதிகளுக்கு மட்டுமின்றி பல்வேறு இடங்களுக்கும் வியாபாரிகள் பூக்களை வாங்கி செல்வது வழக்கம்.
இன்று ஏராளமான வியாபாரிகள் மட்டுமின்றி, பொது மக்களும் பூக்களை வாங்க வந்தனர். ஆனால் இன்று வழக்கத்தை விட பூக்கள் விலை உயர்ந்திருந்தது.
இரு மடங்கு விலை உயர்வு
நேற்று கிலோ ரூ.650-க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ இன்று 2 மடங்கு உயர்ந்து ரூ.1,100-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று கிலோ ரூ.1,200-க்கு விற்கப்பட்ட மல்லிகை பூ இன்று ரூ.1,600-க்கு விற்கப்பட்டது.
இதே போல் ஒரு கட்டுகள் கொண்ட ரோஜாப்பூ ரூ.100, கேந்தி பூ ஒரு கிலோ ரூ.35, சம்மங்கி ரூ.150, வாடாமல்லி ரூ.40, தாமரை ஒன்றுக்கு ரூ.10 என விற்பனை செய்யப்பட்டது.
பூக்களின் விலை அதிகரித்து காணப் பட்டாலும், முகூர்த்த நாளை முன்னிட்டு வியாபாரிகளும், பொது மக்களும் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
இதுதொடர்பாக சந்திப்பு பூ மார்க்கெட் வியாபாரிகள் கூறும்போது, வழக்கமாக பண்டிகை மற்றும் முகூர்த்த தினங்களில் பூக்களின் விலை அதிகரிப்பது வழக்கம். அந்த வகையில் 4-ந் தேதி முகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று பூக்களின் விலை அதிகரித்துள்ளது. நாளை பூக்களின் விலை மேலும் அதிகரிக்கும்.
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. எனினும் தேவை அதிகரிப்பால் விலை ஏற்றம் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது என தெரிவித்தனர்.
இதேபோல் ஆலங்குளம் பூ மார்க்கெட்டில் நேற்று 1 கிலோ பிச்சிப்பூ ரூ.650-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.1,250 ஆகவும், நேற்று 1 கிலோ மல்லிகை பூ ரூ.1,000-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.1,500 ஆக விற்கப்பட்டது.
- பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பா ளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகை யான பூக்கள் பயிர் செய்யப்பட்டு உள்ளது.
- கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை கிலோ ரூ.300-க்கும் ஏலம் போனது. இந்நிலையில் நேற்று அமாவாசை மற்றும் ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற ஏலத்தில், குண்டு மல்லிகை கிலோ ரூ.1100-க்கும் ஏலம் போனது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பா ளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகை யான பூக்கள் பயிர் செய்யப்பட்டு உள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலா யுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை கிலோ ரூ.300-க்கும், சம்பங்கி கிலோ ரூ.50-க்கும், அரளி கிலோ ரூ.160-க்கும், ரோஜா கிலோ ரூ.160-க்கும், முல்லைப் பூ ரூ.300-க்கும், செவ்வந்திப்பூ ரூ.80-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும், காக்கட்டான் ரூ.200-க்கும் ஏலம் போனது.
இந்நிலையில் நேற்று அமாவாசை மற்றும் ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற ஏலத்தில், குண்டு மல்லிகை கிலோ ரூ.1100-க்கும், சம்பங்கி கிலோ ரூ. 80-க்கும், அரளி கிலோ ரூ.240-க்கும், ரோஜா கிலோ ரூ.240-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.1200-க்கும், செவ்வந்திப்பூ ரூ.120-க்கும், கனகாம்பரம் ரூ.1000-க்கும், காக்கட்டான் ரூ.450-க்கும் ஏலம் போனது. பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் பூ பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- பொங்கல் பண்டிகை வருகிற 15- ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து தேவை அதிகரித்து, சேலம் மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
- கடந்த வாரம் மல்லிகை ஒரு கிலோ ரூ.1200, ரூ.1400, ரூ.1600 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
அன்னதானப்பட்டி:
சேலம் பழைய பஸ் நிலையம் அருகே வ.ஊ.சி. பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு கன்னங்குறிச்சி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், பனமரத்துப்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலவகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. பொங்கல் பண்டிகை வருகிற 15- ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து தேவை அதிகரித்து, சேலம் மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் மல்லிகை ஒரு கிலோ ரூ.1200, ரூ.1400, ரூ.1600 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. குறிப்பாக மல்லிகை பூ கிலோ இன்று ரூ.2000- க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. மற்ற பூக்களும் கணிசமாக விலை உயர்ந்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்கள் இருக்கும் நிலையில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது குறித்து வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் ( 1 கிலோ கணக்கில் ) வருமாறு :-
மல்லிகை - ரூ.2000, முல்லை - ரூ.2000, ஜாதி மல்லி - ரூ.1000, காக்கட்டான் - ரூ.1000, கலர் காக்கட்டான் - ரூ.1000, மலை காக்கட்டான் - ரூ.900, சி.நந்தியா வட்டம் - ரூ.150, சம்பங்கி - ரூ.100, சாதா சம்பங்கி - ரூ.100, அரளி - ரூ.360, வெள்ளை அரளி - ரூ.360, மஞ்சள் அரளி - ரூ.360, செவ்வரளி - ரூ.400, ஐ.செவ்வரளி - ரூ.400, நந்தியா வட்டம் - ரூ.150.
- சேலம் பழைய பஸ் நிலையம் அருகே வ.ஊ.சி. பூ மார்க்கெட் உள்ளது.
- பொங்கல் பண்டிகை இரு நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. இதையடுத்து தேவை குறைந்து, பூக்கள் விலை குறைந்து வருகிறது.
அன்னதானப்பட்டி:
சேலம் பழைய பஸ் நிலையம் அருகே வ.ஊ.சி. பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு கன்னங்குறிச்சி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், பனமரத்துப்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலவகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. பொங்கல் பண்டிகை இரு நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. இதையடுத்து தேவை குறைந்து, சேலம் மார்க்கெட்டில் பூக்கள் விலை குறைந்து வருகிறது.
சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய (20. 1.23) பூக்களின் விலை நிலவரம் ( 1 கிலோ கணக்கில் ) : மல்லிகை - ரூ.1600, முல்லை - ரூ.1600, ஜாதி மல்லி - ரூ.1200, காக்கட்டான் - ரூ.600, கலர் காக்கட்டான் - ரூ.600, மலை காக்கட்டான் - ரூ.500, சி.நந்தியா வட்டம் - ரூ.90, சம்பங்கி - ரூ.100, சாதா சம்பங்கி - ரூ.100, அரளி - ரூ.200, வெள்ளை அரளி - ரூ.200, மஞ்சள் அரளி - ரூ.200, செவ்வரளி - ரூ.220, ஐ.செவ்வரளி - ரூ.220, நந்தியா வட்டம் - ரூ.90, என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திருமணங்கள் நடைபெற்றது. இதனால் பூக்கள் விற்பனை இன்று அமோகமாக நடைபெற்றது.
- சேலம் பூ சந்தையில் இருந்து தினமும் சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள், பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பூக்கள் வாங்கி செல்கின்றனர்.
சேலம்:
சேலம் பழைய பஸ் நிலையம் அருகே வ.உ.சி. பூ மார்க்கெட் உள்ளது. இதைத்தவிர பழைய பஸ் நிலையத்தை யொட்டி மேலும் ஒரு பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுகளுக்கு கன்னங்குறிச்சி, ஓமலூர், காடையாம்பட்டி, மேச்சேரி, மேட்டூர், பனமரத்துப்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலவகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இதைத்தவிர தரும புரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும், பெங்களூருவில் இருந்தும் பூக்கள் கொண்டு வரப்படுகிறது.
சேலம் பூ சந்தையில் இருந்து தினமும் சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள், பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பூக்கள் வாங்கி செல்கின்றனர்.
இந்த நிைலயில் தை மாதத்தில் திருவிழாக்கள், பல்வேறு சுப நிகழ்ச்சிகள், திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் வருகிற 5-ந்தேதி தைப்பூசம் பண்டிகை தினமாகும். இதனால் பூக்கள் தேவை அதிகரித்துள்ளது.
இதனிடையே இன்று சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திருமணங்கள் நடைபெற்றது. இதனால் பூக்கள் விற்பனை இன்று அமோகமாக நடைபெற்றது.
இன்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1000-க்கு விற்கப்பட்டது. இதுபோல் ஜாதி மல்லிகை ரூ.800-க்கும், காக்கட்டான் ரூ.320-க்கும், கலர் காக்காட்டான் ரூ.320, மலை காக்கட்டான் - ரூ.240, சாதா சம்பங்கி ரூ.80, உயர் ரக சம்பங்கி ரூ.50, அரளி -ரூ.70, வெள்ளை அரளி ரூ.70, மஞ்சள் அரளி- ரூ.70, செவ்வரளி ரூ.140, ஐ.செவ்வரளி-ரூ.100, நந்தியாவட்டம் ரூ.150, சி.நந்தியாவட்டம் ரூ.400, என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டது.
- இளநீர், பால், தயிர் உள்ளிட்ட திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம்.
- வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு கிராமத்தில் அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் தனி சன்னதி கொண்டு அருள் பாலித்து வரும் வள்ளி தெய்வானை சமேத ஒரு முகம் ஆறு கரங்களை கொண்ட அமிர்தகர சுப்பிரமணிய சுவாமிக்கு தைப்பூசத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை தந்து பல்வேறு திரவியங்கள் பழச்சார் பஞ்சாமிர்தம் தேன் பன்னீர் இளநீர் பால் தயிர் உள்ளிட்ட திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்பு சுவாமி விபூதி அலங்காரம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தீபாரதனை நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுப்பிரமணியரை வழிபட்டனர்.
- கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
- வண்ண மலர்களால் சிவன்- அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் அந்தணப்பேட்டை ஊராட்சி கருவேலி பகுதியில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த விசாலாட்சி அம்பிகை சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இவ் கோவிலில் மகா கும்பாபிஷேகம் 120 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது.
கடந்த 22 ஆம் கணபதி ஹோமத்துடன் தொடங்கிய யாகசாலை நான்கு காலங்கள் நடைபெற்றது நான்காம் கால யாகசாலை பூஜைக்கு நேற்று காலை கோவிலில் நான்கு பிரகாரங்கள் வழியாக மல்லாரி இசை முழங்க புனித கடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சிவன், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், உள்ளிட்ட கோபுர கலசங்களுக்குபுனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடை பெற்றது.
அதனைத் தொடர்ந்து சிவன் மற்றும் அம்பாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது. குடமுழுக்கு விழாவில்சூரியனார் கோயில் ஆதீனம் தவத்திரு சிவக்கர தேசிக சுவாமிகள்அறநிலை துறை உதவி ஆணையர் இராணிமற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர் குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு சிவவாத்தியங்கள் இசைக்கப்பட்டன.
- தமிழ் புத்தாண்டு விழா நாளை 14-ந்தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது
- பூ மார்க்கெட்டில் தற்போது பூக்கள் அதிகளவில் விற்பனையாகி வருகின்றன.
கடலூர்:
தமிழ் புத்தாண்டு விழா நாளை 14-ந்தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. குறிப்பாக வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள், கோவில்கள் போன்றவற்றில் பூஜை செய்து பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு விமர்சையாக விழா கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பூ மார்க்கெட்டில் தற்போது பூக்கள் அதிகளவில் விற்பனையாகி வருகின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்களுக்கு தேவையான பூக்களை வாங்கி செல்கின்றனர். இதில் ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட சாமந்திப்பூ 300 ரூபாய்க்கும், ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்ட குண்டு மல்லி 600 ரூபாய்க்கும், ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி பூ 300 ரூபாய்க்கும், ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்ட அரும்பு 500 ரூபாய்க்கும், ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட ரோஜா பூ தற்போது 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குறைந்த அளவு பூக்கள் வாங்க சென்றனர். மேலும், தொடர்ச்சியாக விழாக்கள் உள்ளதால் பூக்கள் விலை உயர்ந்த நிலையில் இருந்தாலும் விற்பனையாகிவிடும் என்ற நம்பிக்கையில் பூ வியாபாரிகள் உள்ளனர்.