search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழிபாடு"

    • பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மாரியம்மனை மனம் உருகி தரிசித்தனர்.
    • இன்று மாலை கோவிலில் விளக்கு பூஜை நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    ஆடிமாதம் முழுவதுமே அம்மன்களுக்கு உகந்த மாதம் ஆகும். அதுவும் குறிப்பாக ஆடிமாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாளாகும்.

    ஆடி மாதங்களில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலில்களில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி பிரசித்தி பெற்றது.

    கடந்த 18-ந் தேதி ஆடி முதல் செவ்வாய்க்கிழமைகளில் அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக வழிபாடு நடந்தன.

    இன்று ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

    தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் இன்று காலை முதலே பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

    வளையல் பாவாடை அலங்காரத்தில் மாரியம்மன் காட்சியளித்தார்.

    ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மாரியம்மனை மனம் உருகி தரிசித்தனர்.

    பல பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.

    தீபம் ஏற்றி வழிபட்டனர்.

    இன்று மாலை கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது.

    தஞ்சை கீழவாசல் வடபத்திரகாளியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    பக்தர்கள் பூமாலை, எலுமிச்சை மாலைகளை சாமிக்கு வழங்கி, அகல்விளக்குகள், எலுமிச்சை தோளில் எண்ணெய், நெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

    வடக்குவாசல் சிரேஸ்சத்திரம் சாலையில் உள்ள மகிசாசுரமர்த்தினி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    இதேபோல் கோடியம்மன் கோவில், எல்லையம்மன் கோவில், பர்மாகாலனி அங்காளஈஸ்வரி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    தஞ்சை புதுஆற்றங்கரை ஜி.ஏ.கெனல் ரோட்டில் உள்ள முனியாண்டவர் கோவிலில் ஆடி வெள்ளி வழிபாடு நடந்தது.

    இதேபோல் பட்டுக்கோட்டை, கும்பகோணம், திருவையாறு, வல்லம் பாபநாசம் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் ஆடி வெள்ளிக்கிழமை வழிபாடு நடைபெற்றன.

    அன்பு மற்றும் பக்தி நெறியை வளர்த்த நாயன்மார்களைப் போன்று, அறிவு நெறியை வளர்த்த நால்வர், சந்தானக்குரவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
    சைவநெறியை வளர்த்தவர்களில் முக்கியமானவர்கள், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும். தேவாரம், திருவாசகம் பாடி அன்பையும், பக்தி நெறியையும் வளர்த்த இவர்களை சமயக்குரவர்கள் என்றும் அழைப்பார்கள். அன்பு மற்றும் பக்தி நெறியை வளர்த்த நாயன்மார்களைப் போன்று, அறிவு நெறியை வளர்த்த நால்வர், சந்தானக்குரவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். (இவர்களில் அகசந்தானக் குரவர்கள், புற சந்தானக்குரவர்கள் என்று இருவகை உண்டு. நாம் இங்கே பார்க்கப்போவது புற சந்தானக்குரவர்கள்.) சமயக்குரவர்கள் மற்றும் சந்தானக் குரவர்களின் அவதார தலம் மற்றும் முக்தி தலங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

    சமயக்குரவர்கள்

    திருஞானசம்பந்தர்:
    அவதார தலம் - சீர்காழி
    முக்தி தலம் - ஆச்சாள்புரம்

    திருநாவுக்கரசர்:

    அவதார தலம் - திருவாமூர்
    முக்தி தலம் - திருப்புகலூர்

    சுந்தரமூர்த்தி சுவாமிகள்:

    அவதார தலம் - திருநாவலூர்
    முக்தி தலம் - திருவஞ்சைக்களம்

    மாணிக்கவாசகர்:

    அவதார தலம் - திருவாதவூர்
    முக்தி தலம் - தில்லை (சிதம்பரம்)

    சந்தானக் குரவர்கள்

    மெண்கண்டார்:

    அவதார தலம் - திருப்பெண்ணாடகம்
    முக்தி தலம் - திருவண்ணாமலை

    அருள் நந்திதேவநாயனார்:

    அவதார தலம் - திருத்துறையூர்
    முக்தி தலம் - சீர்காழி

    மறைஞானசம்பந்தர்:

    அவதார தலம் - பெண்ணாடகம்
    முக்தி தலம் - சிதம்பரம்

    உமாபதி சிவம்:

    அவதார தலம் - சிதம்பரம்
    முக்தி தலம் - சிதம்பரம்
    இறைவனுக்கு, அலங்காரம் முடிந்து திரை விலக்கப்பட்டதும் மணியடித்து தீபாராதனை காட்டுவதற்கான நோக்கம் என்ன? என்பது பற்றி, காஞ்சி மகா பெரியவர் அளித்த விளக்கத்தை இங்கே பார்ப்போம்..
    ஆலய கருவறையில் வீற்றிருக்கும் இறைவனுக்கு, அலங்காரம் முடியும் வரை திரையிடப்படும். அலங்காரம் முடிந்து திரை விலக்கப்பட்டதும் மணி அடிக்கப்பட்டு, தீபாராதனை காட்டுவார்கள். இப்படி மணியடித்து தீபாராதனை காட்டுவதற்கான நோக்கம் என்ன? என்பது பற்றி, ஒருமுறை காஞ்சி மகா பெரியவர் என்று அழைக்கப்படும் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த விளக்கத்தை இங்கே பார்ப்போம்..

    "வழிபாட்டின் போது நம்மனம் பக்தியில் நிலைத்திருக்க வேண்டும். அதை விடுத்து கவனத்தை எங்கோ சிதறவிட்டு விட்டு, இறைவனை வணங்குவதால் எந்த பலனும் இல்லை. மந்திரம் ஜெபிக்கும் போதும், தியானம் செய்யும் போதும் மனம் மந்திரத்திலேயே கருத்தூன்றி இருக்க வேண்டியது எவ்வளவு அவசியமோ , இறை தரிசனத்தின்போதும் மனஒருமைப்பாடு அந்த அளவுக்கு முக்கியமானது.

    கோவிலில் வழிபடும் போது, இறைவனைத் தவிரவேறு எந்த எண்ணமும் மனதில் நிழலாடக் கூடாது. ஐம்புலன்களான கண், காது, மூக்கு, வாய், உடல் அனைத்தும், நம்மனதை திசை திரும்பும் சக்தி படைத்தவை. அவற்றை இறைவனை நோக்கி திருப்புவதுதான் வழிபாட்டின் நோக்கம் ஆகும். அலங்காரம் முடித்து மூலவர் சன்னிதி முன்புள்ள திரையை விலக்கும்போது, கடவுளின் திருமேனி அழகில் கண்கள் ஈடுபடுகின்றன.

    கோவிலில் பிற சப்தங்கள் நம் கவனத்தை ஈர்க்காத வகையில், அந்த சப்தங்களை அடக்குவதற்காகவே மணியோசை ஒலிக்கப்படுகிறது. திரை விலகி, இறை தரிசனத்தைக் கண்டவுடன், நம்முடையவாய் இறைவனின் நாமத்தை உச்சரிக்க வேண்டும். பூ மாலை, கற்பூர ஆரத்தி, தீபம், தூபம் போன்றவற்றால் வெளிப்படும் தெய்வீக நறுமணம், மற்ற எந்த வாசைனையையும் நுகர விடாமல் மூக்கை தடுக்கிறது.

    கரங்கள் இரண்டும் குவிந்து இறைவனை வணங்கும்போது, உடல் பணிவுடன் இறைவனின் அருளை வேண்டுகிறது. இப்படி ஐம்புலன்களும் வழிபாட்டில் ஈடுபட்டால்தான் ஒருவரின் மனம் ஒருமுகப்படும். அந்த நிலையில் பக்தனின் உள்ளமும் கூட கோவிலாக மாறும். அதுதான் வழிபாட்டின் தத்துவம்" என்று பதிலளித்தார் காஞ்சி சங்கராச்சாரியார்.

    குமாரபாளையத்தில் வைகாசி மாத வெள்ளிக்கிழமையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    வைகாசி வெள்ளிக்கிழமையையொட்டி   குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது. 

    இதேபோல் அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், சவுண்டம்மன் கோவில்கள், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன்   கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. 

    பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    ×