search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கமல்ஹாசன்"

    • மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் பொதுக்குழு கூட்டம்.
    • மநீம தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் கட்சி தொடர்பான எந்த முடிவையும் எடுப்பதற்குரிய அதிகாரம் தலைவர் கமல்ஹாசனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களாலும் ஏகமனதாக அளிக்கப்படுவது உட்பட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட உள்ளன.

    இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பகுத்தறிவுச் சிந்தனையும் சமத்துவ நோக்கமும் கொண்டு பணியாற்றிவரும் அருமை நண்பர் கமல்ஹாசன்

    அவர்கள் மீண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் - அவரது அரசியல் பயணம் மென்மேலும் சிறக்கவும் என்னுடைய வாழ்த்துகள்!

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • இந்த படத்தின் மூலம் கமல்ஹாசன் மற்றும் மணி ரத்னம் சுமார் 34 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளனர்.
    • இந்த படத்தை ராஜ்கமல் இண்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளன.

    இயக்குநர் மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம் தக் லைஃப். இந்த படத்தின் மூலம் கமல்ஹாசன் மற்றும் மணி ரத்னம் சுமார் 34 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளனர்.

    தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

    இந்த படத்தை ராஜ்கமல் இண்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளன.

    படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையொட்டி சிம்பு, கமல்ஹாசன், மணிரத்னம் , சுஹாசினி மற்றும் சிலர் ஒன்றாக புகைப்படக் எடுத்துள்ளனர். இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஆற்றல் மிகு இளைஞர்களின் பங்களிப்பை அரசியலில் அதிகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
    • உடல் உறுப்புகள் தானத்தில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கிறது.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் இன்று நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் நிலைப்பாடு, கூட்டணி மற்றும் கட்சியை பலப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    தன்னுடைய துறையில் அளப்பரிய சாதனைகளைச் செய்த தன்னிகரற்ற தமிழ் ஆளுமையாகவும் கடந்த காலத்தை அறிந்து, நிகழ்காலத்தைப் புரிந்து எதிர்காலத்தைக் கணித்துச் செயலாற்றுகிற முன்னோடியான கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமைப் பொறுப்பை மீண்டும் ஏற்று, இந்த இயக்கத்தை வழிநடத்த வேண்டும் என்று கூட்டத்தில் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

    கூட்டத்தில் மேலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    கட்சியை மேலும் வலுப்படுத்தும் விதமாக, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் வருகிற ஜூன் 25-ந்தேதிக்குள் குறைந்தது 5 ஆயிரம் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க உறுப்பினர் சேர்க்கை முகாம்களை நடத்த வேண்டும். இந்தப் பணிகளில் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் முழுமூச்சுடன் ஈடுபட வேண்டும்.

    அனைத்து வாக்குச்சாவடிகளுக்கு, தலா ஒரு பூத்துக்கு குறைந்தபட்சம் 5 பேர் நியமிக்கப்பட வேண்டும்.

    பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. இந்தக் குற்றங்களின் ஆணி வேரைக் கண்டறிந்து களையவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அறிஞர்கள், சமூக சேவகர்கள், வல்லுனர்களை உள்ளடக்கிய ஒரு குழுவை மக்கள் நீதி மய்யம் உருவாக்கி விரிவான ஆய்வுகள் செய்து அதன் அறிக்கையை, பரிந்துரைகளை தமிழ்நாடு மற்றும் மத்திய அரசுக்கு சமர்ப்பிப்பது.

    போதை வஸ்துக்களின் புழக்கமற்ற தமிழ்நாட்டை உருவாக்கும் அரசின் முயற்சிகளுக்கு எங்கள் தலைவர் கமல்ஹாசனும், மக்கள் நீதி மய்யம் கட்சியும் என்றும் உறுதுணையாக நிற்கும்.

    சாதி வாரியான கணக்கெடுப்பு இந்தியா முழுவதிலும் உடனடியாக தொடங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

    தமிழ்நாட்டுக்கு உரிய நிதிப்பகிர்வை அரசியலாக்கி, விவாதப்பொருளாக்கி தமிழ்நாட்டு மக்களைத் தண்டிக்கும் போக்கை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

    தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நிகழ்த்தும் கொடூர தாக்குதல்களையும், அத்துமீறல்களையும் மக்கள் நீதி மய்யம் வன்மையாகக் கண்டிக்கிறது.

    ஏற்கனவே சிறைபட்டிருக்கும் தமிழக மீனவர்களையும், அவர்களது உடமைகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அதற்கேற்றபடி இரு நாடுகளிடையே புதிய ஒப்பந்தங்களை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும்.

    மக்கள்தொகையின் அடிப்படையில் பாராளுமன்றத் தொகுதிகளை உருவாக்குவது, தங்களது மாநிலங்களின் பிறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்.

    பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்த திட்டத்தை எதிர்க்கும் சூழலில், ஒருமித்த கருத்தின்றி மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புத் திட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்கக் கூடாது.

    ஒரே நாடு ஒரே தேர்தல் நாட்டிற்கு ஆபத்தானது. ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் முயற்சி கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. மாண்புமிக்க ஜனநாயகத்தை மண் கொண்டு புதைக்கும் செயல்.

    தேசத்தின் ஜனநாயகத்தை ஒற்றை கட்சியின் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வரும் இந்த முயற்சியை பன்மைத்துவத்தின் மீது நம்பிக்கைக் கொண்ட ஜனநாயகத்தின் காவல் வீரர்களான மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

    ஆற்றல் மிகு இளைஞர்களின் பங்களிப்பை அரசியலில் அதிகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

    தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பு 25 என்பது சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியபோது தீர்மானிக்கப்பட்ட ஒன்று. இன்றைய கால மாற்றத்தையும், கல்வி வளர்ச்சியையும் கவனத்தில் கொண்டு, இளைஞர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பை 21-ஆக குறைக்க மத்திய அரசு உரிய சட்டதிருத்தம் மேற்கொள்ள வேண்டும்.

    உடல் உறுப்புகள் தானத்தில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கிறது. அதற்காக தமிழ்நாடு அரசையும், தமிழக மக்களையும் பாராட்ட மக்கள் நீதி மய்யம் கடமைப்பட்டுள்ளது.

    கமல்ஹாசன் வழிகாட்டுதலின் படி மக்கள் நீதி மய்யமும், மோகன் பவுண்டேசனும் இணைந்து நடத்திய உடல் உறுப்புகள் தான முகாமில் 1081 பேர் தங்களைப் பதிவு செய்துள்ளனர். பத்தாயிரம் பேர் என்ற இலக்குடன் இந்த முகாம் தொடர்ந்து நடைபெறும் என்பது உள்பட 16 தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.

    • பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
    • முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட உள்ளன.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தொடங்கியது.

    இந்தக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் நிலைப்பாடு, கூட்டணி மற்றும் கட்சியை பலப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    கட்சி தொடர்பான எந்த முடிவையும் எடுப்பதற்குரிய அதிகாரம் தலைவர் கமல்ஹாசனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களாலும் ஏகமனதாக அளிக்கப்படுவது உட்பட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட உள்ளன.

    இதில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம், துணைத் தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா, ஆர்.தங்கவேலு, தலைமை நிலையச் செயலாளர் செந்தில் ஆறுமுகம், தொழில் முனைவோர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் மயில்வாகனம் தணிகைவேலு, விழுப்புரம் மண்டலச் செயலாளர் ஆர்.பி. ஸ்ரீபதி, மீனவர் அணி செயலாளர் ஆர்.பிரதீப் குமார், ஊடகப் பிரிவு மாநில செயலாளர் முரளி அப்பாஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் என 1000 பேர் கலந்து கொண்டனர்.

    • மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து வெளியிட்டுள்ளார்.
    • பேரறிஞர் அண்ணா அவர்களைப் பார்த்ததும், அவரது வெள்ளம் போன்ற மேடை உரையை நேரடியாகக் கேட்டதும் இல்லை.

    பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பல முதல்வர்களோடு பழகியிருக்கிறேன்; பார்த்திருக்கிறேன்.

    இந்த வகையில் என் மனதோரம் ஒரு குறை இருந்தது. பேரறிஞர் அண்ணா அவர்களைப் பார்த்ததும், அவரது வெள்ளம் போன்ற மேடை உரையை நேரடியாகக் கேட்டதும் இல்லை என்கிற குறை.

    அவருடனான என் தொடர்பெல்லாம் அவரின் எழுத்துக்களை வாசிப்பதன் மூலமாகத்தான் அமைந்தது.

    இன்றைய அவரது பிறந்தநாளில் அவரை வாழ்த்தும் நேரத்தில் முன்பொரு நிகழ்ச்சியில் என் அக்கா சொன்ன இந்த இனிய சம்பவம் நினைவுக்கு வந்தது.

    பேரறிஞர் அண்ணா புகழ் ஓங்குக.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன். 'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.

    இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம்  செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று கோயம்புத்தூரில் மிக பிரம்மாண்ட முறையில் நடைபெற்றது. 96 திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தில், 'நான் போகிறேன்' மற்றும் 'யாரோ இவன் யாரோ' எனத் துவங்கும் இரு பாடல்களை நடிகர் கமல்ஹாசன் பாடியுள்ளார்.

    இந்நிலையில் மெய்யழகன் படத்தில் பாடல்கள் பாடிய உலகநாயகன் கமல்ஹாசனுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து யாரோ இவன் யாரோ என்ற பாடல் உருவான விதமும், கமல்ஹாசன் பாடியதும் தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளனர்.

    இப்பாடல் மிகவும் எமோஷனலாக அமைந்து இருக்கிறது. கமல்ஹாசனின் குரல் இப்பாடலிற்கு உயிரோட்டத்தை தந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மெய்யழகன் படத்தை சூர்யா- ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.
    • இப்படம் இந்தாண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன். 'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.

    இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் இந்தாண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கோயம்புத்தூரில் மிக பிரம்மாண்ட முறையில் நடைபெற்றது. 96 திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தில், 'நான் போகிறேன்' மற்றும் 'யாரோ இவன் யாரோ' எனத் துவங்கும் இரு பாடல்களை நடிகர் கமல்ஹாசன் பாடியுள்ளார்.

    இந்நிலையில் மெய்யழகன் படத்தில் பாடல்கள் பாடிய உலகநாயகன் கமல்ஹாசனுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

    அவரது பதிவில், "மெய்யழகன் படத்தில் பாடல்களை பாடிய உலகநாயகன் கமல்ஹாசன் அண்ணாவுக்கு மனமார்ந்த நன்றிகள். உங்கள் அன்பிலும் ஆதரவில் நான் பெருமைப்படுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நாளை மற்றும் செப்டம்பர் 1-ம் தேதிகளில் சென்னை தீவுத்திடலைச் சுற்றி பந்தயம் நடைபெறுகிறது.
    • முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதிக்கு கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் வாழ்த்து.

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, நாளை மற்றும் செப்டம்பர் 1-ம் தேதிகளில் சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கிலோமீட்டர் தூரத்துக்கு பார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுகிறது.

    இதைமுன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதிக்கு கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து கமல் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்துவதால் உற்சாகம். நம் விருந்தோம்பல் மற்றும் விளையாட்டுத் திறமை ஆகியவற்றைக் காண்பதில் ஆவலுடன் இருக்கிறேன்.

    தமிழகத்தை இந்தியாவின் விளையாட்டு தலைநகராகவும், கிழக்கின் டெட்ராய்டகாவும் மாற்றியதற்கு முதல்வர், உதயநிதிக்கு வாழ்த்துகள்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    தொடர்ந்து, ஏ.ஆர்.ரகுமான் தனது எக்ஸ் பக்கத்தில், " சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடைபெற உள்ளது இந்தியாவிற்கே உற்சாகம் அளிப்பதாக உள்ளது. நாட்டில் முதன்முறையாக பார்முலா 4 கார் பந்தயத்தை சென்னையில் நடத்துவதற்கு உதயநிதி ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    சென்னையில் நடைபெறவுள்ள பார்முலா 4 கார் பந்தயத்தை ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கிறேன்" என்றார்.

    • மகாபாரத யுத்தமான குருசேத்திரம் நடந்து 6000 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கதையாக அமைந்துள்ளது கல்கி.
    • திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை குறித்து தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது.

    'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடிப்பில் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.

    மகாபாரத யுத்தமான குருசேத்திரம் நடந்து 6000 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கதையாக அமைந்துள்ளது கல்கி. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். வெளியான முதல் நாளிலேயே ரூ.180 கோடி வசூலுடன் ஆட்டத்தைத் தொடங்கிய 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது.

    கல்கி திரைப்படம் இதுவரை உலகமெங்கும் 1100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் இரண்டாம் பாகத்தை நோக்கி மக்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

    திரைப்படம் கடந்த 22 ஆம் தேதி ஓடிடி-யில் வெளியாகி மக்கள் பலரால் பார்க்கப்பட்டது. திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை குறித்து தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பாகம் கமல்ஹாசனின் யாஸ்கின் கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருக்கும்.

    திரைப்படம் எடுக்க காலவகாசம் 3 ஆண்டுகள் ஆகும் என படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார். இதனால் அடுத்த பாகம் 2028 ஆம் ஆண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியாக பெரு முயற்சிக்கு கமல் வாழ்த்து.
    • அருமை நண்பர் மக்கள் நீதி மய்யம் தலைவர் 'கலைஞானி' கமல்ஹாசனின் வாழ்த்துக்கு நன்றி.

    மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    "கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியாக பெரு முயற்சி எடுத்த முதலமைச்சருக்கு பாராட்டுகள்" என கமல்ஹாசன் குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், கருணாநிதியின் நெஞ்சத்தில் தனக்கெனத் தனி இடம்பெற்றவரும், என் மீது அளவறற அன்பு கொண்டவருமான கமல்ஹாசனுக்கு நன்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தலைவர் கலைஞரின் நெஞ்சத்தில் தனக்கெனத் தனி இடம்பெற்றவரும் - என் மீது அளவற்ற அன்புகொண்டவருமான அருமை நண்பர் மக்கள் நீதி மய்யம் தலைவர் 'கலைஞானி' கமல்ஹாசனின் வாழ்த்துக்கு நன்றி.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தலைவர்கள் சமூக வலைதளத்தில் புகழாரம் சூட்டியுள்ளனர்.
    • திரையுலகிலும், அரசியலிலும் தனக்கென தனி இடம் பிடித்திருந்தவர்.

    சென்னை:

    நடிகர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி தலைவர்கள் சமூக வலைதளத்தில் புகழாரம் சூட்டியுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை:-

    தே.மு.தி.க. நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, அமரர் கேப்டன் விஜயகாந்த் பிறந்த தினம் இன்று. திரையுலகிலும், அரசியலிலும் தனக்கென தனி இடம் பிடித்திருந்தவர்.

    நேர்மையும் துணிச்சலும் உடைய தலைவராக விளங்கியவர். எளிய மக்கள் மீது பேரன்பு கொண்டிருந்த பண்பாளர், அமரர் கேப்டன் விஜயகாந்த் புகழ் என்றும் நிலைத்தி ருக்கும்.


    பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு:-

    விஜயகாந்த் நல்ல நடிகர் என்பதை விட நல்ல மனிதர். எல்லோரும் நல்லா இருக்க வேண்டும் என்று மனதார விரும்புபவர். கள்ளங்கபடம் இல்லாத சொக்கத் தங்கம் அவர்.

    யாருக்கு என்ன பிரச்சினை என்றாலும் எதை பற்றியும் யோசிக்காமல் முதல் ஆளாக வந்து நிற்கும் மனிதநேயம் நிறைந்த தலைவர். அவர் புகழ் என்றும் மக்கள் மனங்களில் நிலைத்து நிற்கும்.


    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்:-

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர்போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்ற வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்தவர் எனது நண்பர் கேப்டன் விஜய காந்த். ஈகையும், வீரமும் இதயத்தில் ஏந்திய நண்பரின் நினைவுகளை அவரது பிறந்த நாளில் போற்று கிறேன்.

    இவ்வாறு அவர்கள் பதிவிட்டுள்ளனர்.

    • சினிமா பணிகள் காரணமாக, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
    • விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படுகிறது.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

    கடந்த 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் திடீரென இம்முடிவை எடுத்துள்ளார்.

    சினிமா பணிகள் காரணமாக, பிக் பாஸ் தமிழ் சீசனின் வரவிருக்கும் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை" என்று கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டிருந்தார்..

    இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் அடுத்த தொகுப்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    முந்தைய சீசன்களில், கமல் ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அவருக்கு பதில் நடிகர் சிம்புவும், மற்றொரு எபிசோடில் ரம்யா கிருஷ்ணனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

    அதனால், கமல் பிக்பாஸில் இருந்து விலகியதை அடுத்து நடிகர் சிம்பு பிக்பாஸ் 8 சீசனை தொகுத்து வழங்குவார் என்று தகவல் பரவியது.

    இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பெரிய தொகையை வழங்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்து நடிகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படுகிறது.

    நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் மறுபடியும் தொலைக்காட்சிக்கு திரும்ப விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. அதே சமயம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் விஜய் சேதுபதி ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. பெரும்தொகை என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நயன்தாராவும் ஆர்வம் காட்டுகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால், இருவரில் ஒருவரை இறுதி செய்து விரைவில் பிக்பாஸ் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    ×