என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 98745"

    கள்ளிக்குடி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பெண்கள்.
    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எஸ்.வெள்ளாகுளம் பஞ்சாயத்து சுந்தரங்குண்டு கிராமத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் கண்மாய் பகுதியை சுத்தம் செய்து மரக்கன்றுகள் நடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு பணிபுரியும் பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் இன்று கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 100 நாள் வேலை திட்டத்தில் மோசடி செய்யும் ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஒவ்வொரு குடும்பத்தின ருக்கும் பணிகள் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து போரா ட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறியதாவது:-
     
    தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின்கீழ் பணி புரிபவர்களுக்கு பழைய அட்டையை புதுப்பித்து புதிய அட்டை வழங்கு வதற்கான ஏற்பாடுகள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற்று வருகிறது.

    இதேபோல் சுந்தரங் குண்டு கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்  களுக்கான பதிவு புதுப் பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

    இதில் பழைய அட்டைக்கு பதிலாக புதிய அட்டை வழங்க 200 ரூபாய் வழங்க வேண்டு மெனவும், புதிதாக பணியில் சேர்பவர்கள் அட்டைக்கு 500 ரூபாய் வழங்க வேண்டுமெனவும்  நிர்பந்திக்கப்படுகிறார்கள். மேலும் பணி நடைபெறும் நாட்களில் பணிக்கு வரும் ஒவ்வொருவரும் 5 ரூபாய் கொடுத்து விட்டுத்தான் வேலையை பார்க்க வேண்டும் என கூறி ஒவ்வொருவரிடமும்  ஐந்து ரூபாய்க்கு பெறுகிறார்கள்.  

    இதன் மூலம் குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான ரூபாய் செல்கிறது. இதற்கு ஊராட்சி செயலாளர் தான் காரணம்.

    அதோடு ஊராட்சி செய லாளர் மற்றும் பொறுப்பா ளர்கள் 100 நாள் வேலை செய்வோரின் பணிகளை குறை செல்வதோடு, பெண்கள் என்றும் பாராமல் தகாத வார்த்தைகளால் திட்டுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது கலெக்டர் விசாரண நடத்தி  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
     
    போராட்டம் தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் முற்றுகை கைவிடப்பட்டது.
    • பசுந்தேயிலை கொள்முதலில் கோட்டா முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இத்தொழிற்சாலையில் அங்கத்தினர்களாக உள்ளனர்

    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள பிக்கட்டியில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை இயங்கி வருகிறது. பிக்கட்டி, முள்ளிகூர், பாரதியார்நகர், கெரப்பாடு, குந்தாகோத்தகிரி, சிவசக்திநகர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இத்தொழிற்சாலையில் அங்கத்தினர்களாக உள்ளனர்.

    இவர்களிடம் இருந்து தினசரி கொள்முதல் செய்யப்படும் பசுந்தேயிலையை கொண்டு தொழிற்சாலையில் தேயிலைதூள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் பிக்கட்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் தற்போது தேயிலை மகசூல் அதிகரித்துள்ளதால் கூட்டுறவு தொழிற்சாலைக்கு பசுந்தேயிலை வரத்து கூடியுள்ளது. இதையடுத்து கடந்த சில தினங்களாக விவசாயிகளிடம் இருந்து பசுந்தேயிலை கொள்முதல் செய்வதில் கோட்டா முறை அமல்படுத்தப்பட்டது.

    இந்த நடைமுறையால் குறிப்பிட்ட அளவில் மட்டுமே தொழிற்சாலைக்கு பசுந்தேயிலை விநியோகிக்க முடியும். தேயிலை மகசூல் அதிகரித்துள்ள நிலையில் தங்களிடம் இருந்து குறைந்த அளவு பசுந்தேயிலை கொள்முதல் செய்யப்படுவதால் விவசாய உறுப்பினர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் பசுந்தேயிலை கொள்முதல் செய்வதில் மேலும் குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மேலும் அதிருப்தி அடைந்த விவசாயிகள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று பிக்கட்டி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை வளாகத்தில் திரண்டு முற்றுகையிட்டனர்.

    தொடர்ந்து பசுந்தேயிலை கொள்முதல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து மஞ்சூர் சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் தொழிற்சாலை நிர்வாக இயக்குனர் விவசாயிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசம் அடைந்த விவசாயிகள் தொழிற்சாலை நுழைவு கேட் அருகே சென்று தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தினார்கள். விவசாய உறுப்பினர்களை அவமதிக்கும் வகையில் பேசிய நிர்வாக இயக்குனரை இடம் மாற்றம் செய்ய வேண்டும். பசுந்தேயிலை கொள்முதலை முறைபடுத்த வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

    இந்நிலையில் நிர்வாக இயக்குனரை இடமாற்றம் செய்ய வேண்டும். பசுந்தேயிலை கொள்முதலை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நிர்வாகத்தரப்பில் சுமுக பேச்சுவார்தை நடத்தாவிட்டால் இன்று முதல் தொழிற்சாலைக்கு பசுந்தேயிலை விநி யோகிப்ப தில்லை என விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றினார்கள். 

    இந்தி மொழியை கட்டாயமாக திணிக்கும் மத்திய அரசை கண்டித்தும் கடலூர் புதுப்பாளையம் நேரு யுகேந்திரா அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நேரு யுவகேந்திரா சார்பில் கடலூர் தனியார் கல்லூரியில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டும் பேச்சுப்போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதை கண்டித்தும், இந்தி மொழியை கட்டாயமாக திணிக்கும் மத்திய அரசை கண்டித்தும் கடலூர் புதுப்பாளையம் நேரு யுகேந்திரா அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவித்தனர்

    அதன்படி ஒருங்கிணைப்பாளர் திருமார்பன் தலைமையிலும் தலைவர் குழந்தைவேலனார் முன்னிலையிலும் தி.க பொதுச்செயலாளர் துரை சந்திரசேகர், மாவட்ட செயலாளர் சிவகுமார், திமுக மாநகர துணை செயலாளர் அகஸ்டின் பிரபாகரன், தமிழ் மாநில காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் பி.ஆர்.எஸ். வெங்கடேசன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுநல அமைப்பினர் திரண்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருப்பு கொடி ஏந்தி கண்டன கோஷம் எழுப்பிக் கொண்டு அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

    அங்கு இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது, உடனடியாக சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காரணத்தினால் போராட்டம் நடத்தியவர்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக வருவாய் கோட்டாட்சியரிடம் நேரில் சென்று மனு அளிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

    பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், கடலூரில் நடைபெற உள்ள பேச்சு போட்டியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ரத்து செய்யாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் நடைபெறும் என திட்டவட்டமாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • சேலம்-ஓமலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பெரியார் பல்கலைக்கழகம் அருகில் சுங்கச்சாவடி உள்ளது.
    • பள்ளி களில் குழந்தைகளை ஏற்று செல்லும் வாகனங்க ளுக்கு (லோக்கல்) உள்ளூர் கட்டணம் ரூ.15. வசூலிக்கப்பட்டு வந்தது.

    கருப்பூர்:

    சேலம்-ஓமலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பெரியார் பல்கலைக்கழகம் அருகில் சுங்கச்சாவடி உள்ளது. இந்த சுங்கச்சாவ டியில் ஓமலூர் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து சேலம் மாநகர் பகுதியில் உள்ள பள்ளி களில் குழந்தைகளை ஏற்று செல்லும் வாகனங்க ளுக்கு (லோக்கல்) உள்ளூர் கட்டணம் ரூ.15. வசூலிக்கப்பட்டு வந்தது.

    இதில் பாஸ்ட் ட்ராக் மூலமாக வங்கி கணக்கில் இருந்து ரூ.60 ரூபாய் தானா கவே எடுத்துக் கொள்கிறது. உள்ளூர் வாகனங்கள் நாள் ஒன்றுக்கு 4. முறை ஓமலூர் சேலத்திற்கு மாணவர்களை அழைத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.240 கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது.

    இந்த கட்டணத்தை குறைக்க கோரி சேலம் மேற்கு மாவட்ட த.மா.கா. தலைவர் சுசீந்திர குமார், தலைமையில் மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் ரகு நந்தகுமார் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட வாகன உரிமையாளர் மற்றும் ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் சுங்கச்சாவடி முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் டோல் பிளாசா மேலாளர் சாம்பலை சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அவர் நிறுவன உரிமையாளரிடம் தெரிவித்து கட்டணம் குறைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் சேர்க்காமல் காலம் தாழ்த்து வதை கண்டித்து பாட்டாளி மக்கள் நிர்வாகிகள் விவசாயிகளுடன் சங்கத்தை முற்றுகையிட்டனர்.
    • இதனையடுத்து தகவல் அறிந்து வந்த கூட்டுவு சங்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள பருவாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் சேர்க்காமல் காலம் தாழ்த்து வதை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் எம்.மனோகரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் விவசாயி களுடன் சங்கத்தை முற்றுகையிட்டனர்.

    இதனையடுத்து தகவல் அறிந்து வந்த கூட்டுவு சங்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஏற்கனவே விண்ணப்பம் கொடுத்தவர்களை உடனடியாக உறுப்பினராக சேர்த்துக்கொண்டதாலும், புதிதாக கொடுப்பவர்களின் விண்ணப்பங்கள் அனைத்தும் ஏற்றுக்கொ ள்ளப்பட்டு பரிசீலி க்கப்பட்டு உறுப்பினர்களாக ஏற்றுக்கொள்ளப்படும் என்று உறுதி அளித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர்.

    இதில் மாவட்ட செய லாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநில துணைத்தலைவர் எஸ்.எல்.பரமசிவம், மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் சேக் மொய்தீன், மாவட்ட இளைஞர் சங்கத் தலைவர் எம்.முனுசாமி, மாவட்ட துணைச் செயலா ளர்கள் ஆண்டவர், ஆர்.பி.நடராஜ்,

    மாவட்ட துணைத் தலைவர் அந்தியூர் கார்த்தி, முன்னாள் ஒன்றிய தலைவர் கண்ணன், முன்னாள் தெற்கு ஒன்றிய செயலாளர் சுதந்திர ராஜ், முன்னாள் மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கல்வி அதிகாரிகள் மீது பரபரப்பு புகார்
    • சுமூக தீர்வு காணப்பட்டது

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு பள்ளிகளில் துப்புரவு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஏராளமானோர் இன்று கோட்டார் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர்.

    அவர்கள் போலீஸ் நிலைய நுழைவாயில் முன்பு அமர்ந்து திடீரென முற்றுகை போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீஸ் நிலையத்தில் இருந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் கூறுகையில், துப்புரவு பணியாளர்களான எங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி கோர்ட்டு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டும், குமரி மாவட்ட கல்வி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனை கண்டித்து போராட்டம் நடத்திய போது கல்வி அதிகாரிகள் சிலர் எங்களை ஆபாசமாக திட்டினார். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதுதொடர்பாக நாகர்கோவில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி கோட்டார் போலீசாருக்கு உத்தரவிட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யாததை கண்டித்து இந்த முற்றுகை போராட்டம் நடக்கிறது என கூறினர்.

    இதனைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் தலைமையில் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    இதில் சுமூக தீர்வு காணப்பட்டதை தொடர்ந்து போராட்டக்காரர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • இந்து கோவில் மீதான தாக்குதலுக்கு இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்தது.
    • துபாயில் நடந்த ஆசிய கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு பிரச்சினை ஏற்பட்டது.

    இங்கிலாந்தின் லீசெஸ்டர்ஷையர் பகுதியில் வசிக்கும் இந்து- முஸ்லீம் இடையே மோதல் ஏற்பட்டது. சமீபத்தில் துபாயில் நடந்த ஆசிய கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு பிரச்சினை ஏற்பட்டது.

    அங்குள்ள இந்து கோவிலில் இருந்த கொடி கிழிக்கப்பட்டதால் வன்முறை உண்டானது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்து கோவில் மீதான தாக்குதலுக்கு இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்தது.

    இந்தநிலையில், இங்கிலாந்தில் வெஸ்ட் மிட்லாண்ட்சில் உள்ள ஸ்மெத்விக் நகரில் இந்து கோவிலை 200-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது சிலர் கோவில் சுவர்களில் ஏற முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    • காரைக்குடியில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
    • வீட்டிற்குள் முருங்கை மரம் விழுந்தது தொடர்பான பிரச்சினையில் செல்வி மகன் பாலாஜி மற்றும் சிலர் மகாலிங்கத்தை தாக்கினார்களாம்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் அசோக் நகர் பகுதியில் வசிப்பவர் மகாலிங்கம் (வயது 55). இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் செல்வி (42) என்பவருக்கும் வீட்டிற்குள் முருங்கை மரம் விழுந்தது தொடர்பான பிரச்சினையில் செல்வி மகன் பாலாஜி மற்றும் சிலர் மகாலிங்கத்தை தாக்கினார்களாம். இதுகுறித்து கடந்த 11-ந் தேதி வடக்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் செல்வி, பாலாஜி மற்றும் சிலர் மீது வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட சட்டபிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் வழக்கில் தொடர்பில்லாத பொறியியல் கல்லூரி மாணவர் தமிழ்ச்செல்வன் (20) மீது வன்கொடுமை வழக்குப்பதிவு செய்து கைது செய்ததை எதிர்த்து 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தை 

    • இந்த நிறுவனத்தில் 60 க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகின்றனர்.
    • இதில் வேலை செய்பவர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்காததால் சிலர் வேலையை விட்டு நின்று விட்டனர்.

    சேலம்:

    சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியில் தனியார் கட்டுமான அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 60 க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகின்றனர். இதில் வேலை செய்பவர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்காததால் சிலர் வேலையை விட்டு நின்று விட்டனர்.

    இதையடுத்து அந்த நிறுவனத்தினரிடம் ஊழியர்கள் சம்பளம் கேட்டு வந்துள்ளனர். பல முறை கேட்டும் சம்பளம் வழங்கப்படாதால் நடவடிக்கை எடுக்க வேண்டி சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் கட்டுமான நிறுவனத்தினரிடம் விசாரணை நடத்தி ஊழியர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த நிலையில் உரிய தேதியில் சம்பளம் வழங்கப்படாததால் நேற்று இரவு 10-க்கும் மேற்பட்டோர் கட்டுமான அலுவலகத்திற்கு வந்து நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கட்டுமான நிறுவனத்தினரிடமும் பாதிக்கப்பட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    • சாக்கடை வசதி அமைக்க கோரி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
    • அதைத்தொடர்ந்து ஐ.யூ.டி.எம் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்து சாக்கடை கால்வாய் அமைக்க ஆக்கிரம்புகள் செய்யப்பட்டன.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட தீவட்டிப்பட்டி காலனி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் சாக்கடை வசதி அமைக்க கோரி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதைத்தொடர்ந்து ஐ.யூ.டி.எம் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்து சாக்கடை கால்வாய் அமைக்க ஆக்கிரம்புகள் செய்யப்பட்டன.

    இந்த நிலையில் குடியிருப்புகள் முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. அன்று முதல் இன்று வரை எந்த பணியும் செய்யாமல் இருப்பதால் குடியிருப்புகள் முன்பு தோண்டப்பட்ட பள்ளத்தில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் மக்கள் நடமாட்டம் செய்ய முடியாமல் அவதியில் உள்ளனர்.

    நேற்று அப்பகுதி மக்கள் காடையாம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேரூராட்சி அலுவலர் மயில்வாகனத்திடம் கால்வாய் அமைக்க மனு வழங்கினர். பேரூராட்சி தலைவர் குமார் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாய் அமைத்து தரப்படும் என்று கூறினார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    • சிலர் இது சம்பந்தமாக தட்டிகேட்ட போது இது தரப்பினருக்குள் வாய் தகராறு ஏற்பட்டு கடும் மோதலாக மாறியது.
    • மோதலில் ஊர் பொதுமக்கள் மற்றும் காலனியை சேர்ந்த 8 பேர் காயம் அடைந்தனர்.

     கடலூர்:

    கடலூர் அருகே நடுவீரப்பட்டு காலனி அருகே அய்யனார் கோவில் உள்ளது. நேற்று சஞ்சீவிராயன் கோவில் பகுதி சேர்ந்த ஊர் பொதுமக்கள் கோவிலில் ஊரணி பொங்கல் விழாவை முடித்துவிட்டு ஊர்வலமாக தங்களது ஊருக்கு நடுவீரப்பட்டு காலனி வழியாக சென்றபோது ஒரு குறிப்பிட்ட ஜாதி பாடலை ஒலி பெருக்கிக் கொண்டு ஒரு சில வாலிபர்கள் ஆடிக்கொண்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு தரப்பை சேர்ந்த சிலர் இது சம்பந்தமாக தட்டிகேட்ட போது இது தரப்பினருக்குள் வாய் தகராறு ஏற்பட்டு கடும் மோதலாக மாறியது. இதன் காரணமாக இரு தரப்பினரும் மாறி மாறி கல் வீசி தாக்கிக் கொண்டனர். இதனை கண்டித்துஒரு தரப்பை சேர்ந்த பொதுமக்கள் அப்பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த மோதலில் ஊர் பொதுமக்கள் மற்றும் காலனியை சேர்ந்த 8 பேர் காயம் அடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் நடுவீரப்பட்டு காலனி தரப்பில் கொடுத்த புகாரின் பேரில் சஞ்சீவிராயன் கோவில் சேர்ந்த 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென்று போலீசார் சஞ்சீவிராயன் கோவில் பகுதியில் இருந்த 8 நபரை பிடித்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். தகவல் அறிந்த பாமக மாவட்ட தலைவர் தட்சிணா மூர்த்தி தலைமையில் பொதுமக்கள், பெண்கள் காவல் நிலையத்திற்கு சென்று முற்றுகையிட்டனர். அப்போது பண்ருட்டி துணை போலீஸ் சூப்பி ரண்டு சபியுல்லா பொது மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். பொதுமக்கள் கூறுகை யில், இந்த மோதல் சம்பவத்தில் இருதரப்பி னரும் பாதிக்கப்பட்டு ள்ளனர். ஆனால் போலீ சார் ஒரு தரப்புக்கு வழக்கு பதிவு செய்து சம்பந்தமில்லாத நபர்களை போலீஸ் நிலையத்திற்கு நள்ளிரவில் அழைத்துச் சென்றது ஏற்புடையதல்ல. நாங்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும்.

    மேலும் தற்போது பிடித்து வைத்துள்ள நபர்களை விடுவிக்க வேண்டும் என கூறினர். இதனை தொடர்ந்து போலீசார் நீங்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தற்போது பிடித்து வரப்பட்ட நபர்களை உரிய விசாரணை செய்து அவர்கள் மீது குற்றம் இல்லாத பட்சத்தில் விடுவி க்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து அதி காலையில் பிடித்து சென்ற வெளி மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பேரை போலீ சார் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அதிகாலையில் மீண்டும் 4 பேர்களை போலீசார் பிடித்து விசாரணைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் சஞ்சீவிராயன் கோவில் தரப்பு சேர்ந்தவர்கள் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருவதோடு, ஏராளமான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதால் பகுதி முழுவதும் பதற்றமாக காணப்பட்டு வருகின்றது.

    • மாணவர்களுக்கான அடிப்படை தேவைகளான கழிவறை வசதி, அவற்றில் போதிய அளவு தண்ணீர் வசதி செய்து கொடுக்கக் கோரியும் 12 ஆண்டுகளாக பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் மாற்றப்படாததை கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது.
    • இதனால் பள்ளியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள பாலப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 600-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் மாணவ மாணவிகளுக்கான கழிப்பிட வசதி, போதிய அளவு தண்ணீர் வராமல் இருப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆகியோரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

    இதையடுத்து 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் தலைமையாசிரியரை அவரது அறையில் வைத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

    மாணவர்களுக்கான அடிப்படை தேவைகளான கழிவறை வசதி, அவற்றில் போதிய அளவு தண்ணீர் வசதி செய்து கொடுக்கக் கோரியும் 12 ஆண்டுகளாக பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் மாற்றப்படாததை கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது. செப்டம்பர் 10-ந் தேதிக்குள் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மாணவ மாணவியர்களின் கழிவறைக்கள் குறித்த பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தலைமை ஆசிரியர் உறுதியளித்ததை அடுத்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர். இதனால் பள்ளியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    ×