search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tasmac employees"

    • கீழே விழுந்த ஊழியர்கள் எழுந்து மொபட்டில் இருந்த பணத்தை பார்த்த போது அப்படியே இருந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை சாலையில் வாளவாடி பிரிவு மொடக்குப்பட்டியில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இங்கு உடுமலை எஸ்.பி. புரத்தை சேர்ந்த ஜெய ப்பிரகாஷ்(வயது 42), சரவணன் (44) ஆகியோர் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

    சம்பவத்தன்று இரவு வியாபாரம் முடிந்ததும் டாஸ்மாக் கடையை மூடிவிட்டு வசூலான பணம் ரூ.3.50 லட்சத்தை பையில் கட்டி மொபட் இருக்கைக்கு அடியில் வைத்தனர். மேலும் வீட்டிற்கு வாங்கிய தக்காளி பையை முன்பக்கம் மாட்டி க்கொண்டு புறப்பட்டனர்.

    வாளவாடி பிரிவு அருகே செல்லும் போது, பின்னால் வந்த கார் மொபட் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி 2 பேரும் விழுந்தனர்.

    அப்போது காரில் இருந்து இறங்கிய 3பேர் வீச்சரிவாளை காட்டி மிரட்டி பணத்தை தருமாறு கேட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அலறி சத்தம் போட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒருவர் நிலைமையை புரிந்து கொண்டு காரின் முன்பாக தனது பைக்கை நிறுத்தினார். உஷாரான கொள்ளையர்கள் பிரகாஷ், சரவணன் வந்த மொபட்டில் இருந்த பையை பறித்து காரில் தப்பினர்.

    இந்நிலையில் கீழே விழுந்த ஊழியர்கள் எழுந்து மொபட்டில் இருந்த பணத்தை பார்த்த போது அப்படியே இருந்தது. மொபட்டின் முன்பக்கம் தொங்கவிடப்பட்டிருந்த தக்காளி பையை காணவில்லை. அதில் பணம் இருக்கிறது என்று எண்ணி கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர். இதனால் பிரகாசும், சரவணனும் நிம்மதி அடைந்தனர்.

    மேலும் காயமடைந்த அவர்கள் சிகிச்சைக்கக மருத்துவமனையில் சேர்ந்தனர். மேலும் தளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    தற்போது தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், பணத்திற்கு பதிலாக தக்காளி பையை கொள்ளையர்கள் திருடி சென்ற சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த வாரம் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் பார்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
    • திருப்பூர், பல்லடம் ரோடு நொச்சிபாளையத்தில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் டாஸ்மாக் பார்கள் செயல்படுவதாகவும், அனுமதித்த நேரத்தை விட கூடுதல் நேரம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளருக்கு புகார்கள் வந்தன.

    இந்த புகாரின் அடிப்படையில் கடந்த வாரம் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் பார்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 18-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பார்கள் அனுமதி இல்லாமல் செயல்பட்டது தெரியவந்தது. உடனடியாக அந்த பார்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

    இந்தநிலையில் திருப்பூர், பல்லடம் ரோடு நொச்சிபாளையத்தில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த கடையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறியதுடன், பாருக்குள் மதுவிற்பனை செய்ததாக புகார் எழுந்தது. சோதனையில் அது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து கடை விற்பனையாளர்கள் சண்முகநாதன், குமார், பாலசுப்ரமணியம், கார்த்திகேயன், காமராஜ், முருகானந்தம் ஆகியோரை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சுப்ரமணியம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    • பள்ளத்தூர் டாஸ்மாக் கடை விற்பனையாளர் அர்ச்சுனன் படுகொலை செய்யப்பட்டார்.
    • அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு தஞ்சை ரெயிலடியில் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூர் டாஸ்மாக் கடையில் விற்பனை யாளராக பணிபுரிந்த அர்ச்சுனன் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்ப ட்டார்.

    அவரது படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தும், மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று தஞ்சை மாவட்ட டாஸ்மாக் அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் ரெயிலடியில் நடைபெற்றது.

    டாஸ்மாக் தொ.மு.ச சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.

    பின்னர் அர்ச்சுனன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    நிகழ்வில் தமிழ்நாடு முழுவதும் பணிபுரிந்து வரும் டாஸ்மாக் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்.

    அவர்களது பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளிக்கப்பட வேண்டும். பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதில் அனைத்து சங்க நிர்வாகிகள் ஜெமினி, ரங்கராஜ், சக்திவேல், சுரேஷ், ரமேஷ், சரவணன், பாலசுப்பிரமணியன், ராஜசேகர், மில்டன், துரை ரமேஷ், பாக்யராஜ், ரங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கபிஸ்தலம் அருகே நள்ளிரவில் டாஸ்மாக் ஊழியர்களிடம் ரூ.3 லட்சம் வழிப்பறி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கபிஸ்தலம்:

    தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் விற்பனையாளராக வடசறுக்கை கிராமத்தை சேர்ந்த அர்ஜூன் (வயது 43) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் அர்ஜூன் மற்றும் அவருடன் வேலை பார்க்கும் 2 ஊழியர்கள் விற்பனையை முடித்து கொண்டு கடையை பூட்டி விட்டு புறப்பட்டனர். 

    அப்போது கடையில் விற்பனையான பணம் ரூ.3 லட்சத்தை ஒரு பையில் வைத்திருந்தனர். கபிஸ்தலம் அருகே ராமானுஜபுரம் மெயின்ரோட்டில் அவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் திடீரென அர்ஜூன் உள்பட 3 பேரையும் வழி மறித்தனர். இதனால் வண்டியை நிறுத்தினர்.

    அந்த சமயத்தில் திடீரென அந்த கும்பல் அர்ஜூன் உள்ளிட்ட 3 பேரும் மீதும் மிளகாய் பொடியை தூவினர். இதனால் நிலைகுலைந்து போன அவர்கள் கண் எரிச்சலால் அலறினர்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் வைத்திருந்த பையை பிடுங்கி கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

    நள்ளிரவில் நடுரோட்டில் டாஸ்மாக் ஊழியர்களிடம் ரூ.3 லட்சம் வழிப்பறி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த துணிகர சம்பவம் பற்றி டாஸ்மாக் சூப்பர் வைசர் ராஜசேகர் கபிஸ்தலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்- இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மது விலையை விட கூடுதலாக பணம் வாங்கிய தகராறில் டாஸ்மாக் ஊழியரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த வெப்பாலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் சர்தார் என்கிற நூருல்லா (வயது 24). 

    அதே பகுதியைச் சேர்ந்த கமல்பாஷா மகன் ஓஷின் என்கிற இம்ரான் (21). இவர்கள் 2 பேரும் நண்பர்கள். நூருல்லாவும், இம்ரானும் நேற்று மாலை 3 மணியளவில் சந்தூரில் உள்ள அரசு மதுபான கடைக்கு மது குடிக்க சென்றனர். அங்கு பணிபுரிந்த டாஸ்மாக் ஊழியர் மாரப்பனிடம் பணம் கொடுத்து மது பாட்டில்களை வாங்கினர். அப்போது மதுவின் விலையைவிட கூடுதலாக மாரப்பன் அவர்களிடம் பணம் கேட்டுள்ளார். இதனால் இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. 

    இதில் ஆத்திரமடைந்த நூருல்லா, இம்ரான் ஆகிய 2 பேரும் சேர்ந்து மாரப்பனை மார்பிலும், உடலிலும் கல்லை எடுத்து தாக்கினர். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து மாரப்பன் போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து டாஸ்மாக் ஊழியரை தாக்கிய 2 பேரை கைது செய்தனர்.
    சட்டசபையில் இன்று பேசிய அமைச்சர் தங்கமணி, டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு விவரங்களை அறிவித்தார். #TasmacSalaryHike #TNassembly
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று அமைச்சர் தங்கமணி பேசியதாவது:-

    110-வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் 83 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 104 அறிவிப்புகளுக்கான பணிகள் நடக்கின்றன.



    தமிழக அரசின் கொள்கை பூரண மதுவிலக்கு என்பதுதான். தற்போது 3,866 மதுக்கடைகள் உள்ளன. படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.

    டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுக்கு ரூ.750  சம்பள உயர்வு அளிக்கப்படும். டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு ரூ.600, உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.500 என்ற விகிதத்தில் சம்பள உயர்வு வழங்கப்படும்.

    தமிழகத்தில் ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்து மின் இணைப்பை பெறும் நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரே நாளில் 3 லட்சம் மின் இணைப்புகள் வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார். #TasmacSalaryHike #TNassembly

    ×