search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teacher missing"

    • உறவினர்கள் சாலை மறியல்
    • கண்டு பிடித்து தர வலியுறுத்தல்

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 23 வயது பட்டதாரிஆசிரியை. இவர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்வதாக பெற் றோரிடம் கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பள்ளியில் விசாரித்தபோது அங்கும் வரவில்லை என பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.

    இதனை தொடர்ந்து நண்பர்கள், உறவினர்கள் வீட்டில் தேடியும் கிடைக் காததால் ஆசிரியரின் தந்தை வந்தவாசி வடக்கு போலீசில் புகார் செய்தார்.

    அதன் போரில் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் வழக்குப் பதிவு செய்து ஆசிரியையை யாரேனும் கடத்தி சென்றார்களாக என்பது உட்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் ஆசிரி யை யின் உறவினர்கள், போலீசார் நடவடிக் க்கை எடுக்கவில்லை எனக்கூறி திடீரென நேற்று மாலை, வடக்கு காவல் நிலையம் முன்பாக அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.

    இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த டி.எஸ்.பி. கார்த்திக், இன்ஸ்பெக்டர் விசுவநாதன் ஆகியோர் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    அதனை தொடர்ந்து உறவினர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பண்ருட்டி அருகே பள்ளிக்கு சென்ற ஆசிரியை மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் ஆசிரியையை தேடி வருகிறார்கள்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த வடக்கு சாந்திபட்டு பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகள் வள்ளி (வயது 22).

    இவர் பண்ருட்டி அருகே உள்ள கீழ்மாம்பட்டு அரசு உயர்நிலை பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த 29-ந் தேதி வள்ளி வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார். மாலையில் பணிமுடிந்து வீடு திரும்பவில்லை. இதனால் கவலையடைந்த பெற்றோர் வள்ளியை பல இடங்களில் தேடினர். எங்கும் காணவில்லை. 

    இதனைத் தொடர்ந்து காடாம்புலியூர் போலீசில் தந்தை வடிவேல் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் குமரய்யா வழக்குபதிவு செய்து மாயமான ஆசிரியையை தேடி வருகிறார்.

    ×