என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "teenager missing"
ராஜபாளையம்:
ராஜபாளையம் நட்டுக்கால் ராஜா தெருவை சேர்ந்தவர் தினேஷ் (வயது 25). இருவருக்கும் அதே பகுதியைச்சேர்ந்த குருலட்சுமி (22) என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
சம்பவத்தன்று நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் உள்ள அக்கா வீட்டுக்கு செல்வதாக குருலட்சுமி கணவர் வீட்டாரிடம் கூறி விட்டு சென்றார். ஆனால் குருலட்சுமி அங்கு செல்லாமல் மாயமானார்.
இதனால் பதறிப்போன தினேஷ் மற்றும் உறவினர்கள் குருலட்சுமியை பல்வேறு இடங்களில் தேடினர் பலன் இல்லை.
இதுகுறித்து குருலட்சுமியின் தாய் மகேசுவரி ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் லிங்குசாமி வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்.
பேரையூர்:
திருமங்கலம் மாயாண்டி நகரைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டி. இவருக்கு சுப்புலட்சுமி (வயது 24) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
சம்பவத்தன்று சுப்புலட் சுமி தனது 2-வது மகன் கிஷோருடன் (11/2) வெளியே செல்வதாக கூறிவிட்டுச் சென்றார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த சுந்தரபாண்டி தனது மனைவி, மகனை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். பலன் இல்லை.
இது குறித்த புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் திருமங்கலம் அருகே உள்ள மேலக்கோட்டையைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் அஸ்வினி (19). கல்லூரி மாணவியான இவர் சம்பவத்தன்று வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றார். அதன்பின்னர் வீடு திரும்பவில்லை.
இது குறித்த புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.
அரியாங்குப்பம்:
புதுவை பூரணாங்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவரது மனைவி வள்ளி. இவர்களது மகள் தமிழரசி (வயது24). இவர் நோணாங்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் ஊழியராக வேலைபார்த்து வந்தார்.
சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிசென்ற தமிழரசி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் எங்கும் தமிழரசி இல்லை.
இதையடுத்து வள்ளி தனது மகள் மாயமானது குறித்து தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதல் கட்ட விசாரணையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பூரணாங்குப்பத்தில் ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்த தமிழக வாலிபர் ஒருவருடன் தமிழரசி பழகி வந்தது தெரியவந்தது. இதனால் தமிழரசியை அந்த வாலிபர் கடத்தி சென்றிருக்கலாமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்