என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Temple Kodai Vizha"
- கன்னிமார்கூட்டம் கிராமத்தில் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
- போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 31 ஜோடி மாடுகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே உள்ள கன்னிமார்கூட்டம் கிராமத்தில் காளியம்மன், பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. சின்ன மாடு, பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 31 ஜோடி மாடுகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.
மாட்டு வண்டி பந்தயத்தை விளாத்திகுளம் ஒன்றிய சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி சார்பாக பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
- கச்சேரியை பார்க்க பூலத்தை சேர்ந்த விவசாயி முருகன் சென்றிருந்தார்.
- வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த முத்துக்குமார் உள்பட 4 பேரும் சேர்ந்து, முருகனை சரமாரியாக தாக்கினர்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு சுடலைமாடசுவாமி கோவில் கொடை விழா நடந்தது. விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக இன்னிசை கச்சேரி நடந்தது. கச்சேரியை பார்க்க பூலத்தை சேர்ந்த விவசாயி முருகன் (வயது 45) சென்றிருந்தார். கச்சேரி நடந்து கொண்டிருந்த போது, மூன்றடைப்பை சேர்ந்த வானுமாமலை மகன் முத்துக்குமார், பிச்சைக்கண்ணு மகன் கார்த்திக், பூலத்தை சேர்ந்த இசக்கிபாண்டி மகன் முருகன், முத்துராக்கு மகன் முத்துராஜ் ஆகிய 4 பேரும் ஆட்டம் போட்டனர். இதுசம்பந்தமாக அவர்களுக்கும், முருகனுக்கும் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த முத்துக்குமார் உள்பட 4 பேரும் சேர்ந்து, முருகனை சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி மூன்றடைப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முத்துக்குமார் உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.
- பிள்ளையார்நத்தம் கிராமத்தில் கோவில் கொடை விழாவை முன்னிட்டு தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் சார்பில் 4-ம் ஆண்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
- மாட்டுவண்டி பந்தயத்தை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வும், விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனிய சக்தி ராமச்சந்திரனும் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
விளாத்திகுளம்:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிள்ளையார்நத்தம் கிராமத்தில் உள்ள பதினெட்டாம்படி கருப்பசாமி, பேச்சியம்மாள் கோவில் கொடை விழாவை முன்னிட்டு தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் சார்பில் 4-ம் ஆண்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. விளாத்திகுளம்-கோவில்பட்டி சாலையில் நடைபெற்ற மாட்டு வண்டி போட்டியில் தேன்சிட்டு, பூஞ்சிட்டு, சின்னமாடு என 3 பிாிவுகளில் போட்டி நடத்தப்பட்டது.
3 மைல் தூரம் கொண்ட தேன்சீட்டு மாட்டுவண்டி பந்தயத்தை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வும், பூஞ்சிட்டு மாட்டுவண்டி பந்தயத்தை விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனிய சக்தி ராமச்சந்திரனும் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
இதில் முதல் பரிசு ரூ.8 ஆயிரத்தை பூசனூர்-எட்டையபுரம் மாட்டு வண்டியும், 2-வது பரிசு ரூ.6 ஆயிரத்தை கூத்தலூரணியை சேர்ந்த சுந்தரபாண்டி அய்யனார் மாட்டு வண்டியும், 3-வது பரிசு ரூ.4 ஆயிரத்தை பல்லாகுளம் பொன்முனியம்மாள் மாட்டு வண்டியும்,4-வது பரிசு ரூ.3 ஆயிரத்தை எப்போதும் வென்றானை சேர்ந்த தங்கமுத்துமாரி மாட்டு வண்டியும் பெற்றது.
இதனைத்தொடர்ந்து நடு மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்