என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tempo hit
நீங்கள் தேடியது "tempo hit"
கோவையில் இன்று அதிகாலை டெம்போ மோதி சமையல் மாஸ்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை:
நாகை மாவட்டத்தை சேர்ந்தவர் ரங்கராஜ் (வயது 60). இவர் கோவை சரவணம்பட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
இன்று காலை 5 மணியளவில் ரங்கராஜ் அந்த பகுதியில் உள்ள கடைக்கு டீ குடிப்பதற்காக சென்றார். பின்னர் ஓட்டலுக்கு செல்வதற்காக கோவை- சத்தி ரோட்டை கடக்க முன்றார்.
அப்போது அந்த வழியாக கோழிகளை ஏற்றி வந்த டெம்போ ரங்கராஜ் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ரங்கராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்தக்கு விரைந்து வந்து விபத்தில் இறந்த ரங்கராஜின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆரல்வாய்மொழியில் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறிய டெம்போ, டிரான்ஸ்பார்மர் மீது மோதியது. இதில் மின்சாரம் தடைப்பட்டு இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழியை அடுத்த செண்பகராமன்புதூ ரில் ஏராளமான செங்கல் சூளைகள் உள்ளன. செங்கல் சூளையில் செங்கல் ஏற்ற இன்று காலை டெம்போக்கள் வரிசையாக வந்த வண்ணம் இருந்தன. ஆரல்வாய்மொழி-நெடுமங்காடு தேசிய நெடுஞ்சாலையிலும் ஒரு டெம்போ செண்பகராமன்புதூர் நோக்கி வேகமாக வந்தது.
டெம்போவை ஆரல்வாய்மொழி கிறிஸ்து நகரைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 34) என்பவர் ஓட்டினார். மிஷின் காம்பவுண்டு அருகே வந்தபோது டெம்போ டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி சாலையோரம் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் மீது மோதியது.
டெம்போ மோதியதில் டிரான்ஸ்பார்மர் நொறுங்கியது. மின்கம்பிகளும் அறுந்து விழுந்தன. இதில், டிரைவர் மணிகண்டன் படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டனர். பின்னர் அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஆரல்வாய்மொழி பகுதியில் இன்று அதிகாலை மின்சாரம் தடைப்பட்டு இருந்தது. இதனால் மின்சார டிரான்ஸ்பார்மர் மீது டெம்போ மோதியபோது பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மின்சாரம் இருந்திருந்தால் தீ விபத்து ஏற்பட்டு பலத்த சேதம் ஏற்பட்டிருக்கும். அதிர்ஷ்டவசமாக இங்கு நடக்க இருந்த அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X