என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Theft of cell phones"
- நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர்கேட்டில் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி உள்ளது.
- இந்த கல்லூரியின் எதிரில் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் தங்கும் விடுதி உள்ளது. இங்கு 80-க்கும் மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர்கேட்டில் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இங்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 3000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியின் எதிரில் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் தங்கும் விடுதி உள்ளது. இங்கு 80-க்கும் மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.
இதனிடையே பக்ரீத் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை ஒட்டி, பெரும்பாலான மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று விட்டனர். ஒரு சில மாணவர்கள் மட்டுமே விடுதியில் தங்கி இருந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் மர்ம நபர் ஒருவர், விடுதியின் மெயின் கேட்டை திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது, விடுதியில் தங்கி இருந்த மாணவர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.
மெதுவாக உள்ளே நுழைந்த அந்த மர்ம நபர், மாணவர்களின் 3 செல்போன்களை திருடி சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காலையில் எழுந்த மாணவர்கள், தங்கள் செல்போன்கள் காணாமல் போயிருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, விடுதியில் இருந்த சி.சி.டி.வி காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் மர்மநபர் ஒருவர் விடுதியின் உள்ளே வருவதும், வெளியே செல்வதும் பதிவாகி இருந்தது. இதை வைத்து தங்கள் செல்போன்களை மர்மநபர் திருடிச் சென்றதை மாணவர்கள் அறிந்தனர். இதுகுறித்து ராசிபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
- நேற்று இரவு வழக்கம்போல், செல்போன் கடையில் வியாபாரத்தை முடித்துவிட்டு உரிமையாளர்கள் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர்
- அங்கிருந்த சுமார் ரூ.50 ஆயிரத்திற்கும் மேலான செல்போன்கள் மற்றும் உதிரி பாகங்களை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
திருச்சி:
திருச்சி பாலக்கரை பருப்புக்கார தெருவில் பகுதியில் திருச்சியை சேர்ந்த 3 பேர் ஒன்றாக இணைந்து செல்போன் கடையை நடத்தி வருகின்றனர். இங்கு புதிய செல்போன்கள் மற்றும் அதற்கான உதிரி பாகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று இரவு வழக்கம்போல், செல்போன் கடையில் வியாபாரத்தை முடித்துவிட்டு உரிமையாளர்கள் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.
பின்னர் இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, மர்ம நள்ளிரவில் வந்த மர்ம நபர் செல்போன் கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்துள்ளார்.
பின்னர் அங்கிருந்த சுமார் ரூ.50 ஆயிரத்திற்கும் மேலான செல்போன்கள் மற்றும் உதிரி பாகங்களை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. பின்னர் இது குறித்து அவர்கள் திருச்சி பாலக்கரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை நடத்தினார்கள்.
மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போன் கடையில் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இதனால் பாலக்கரை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்