search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Things"

    • மேளதாளங்களுடன் சீர்வரிசை எடுத்து வந்தனர்
    • கோவிந்தா கோஷம் எழுப்பி பக்தர்கள் பரவசம்

    ஊட்டி,

    ஊட்டி சீனிவாச பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் சனிக்கி ழமை தோறும் சிறப்பு வழிபாடு மற்றும் ஆராதனை கள் நடைபெறுவது வழக்கம். அதன் ஒருபகுதியாக புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபவம் நடத்துவது என கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.

    இதன்படி ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் தம்பதி சமேதராய் அருள்பாலித்த சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம்-வழிபாடுகள் நடத்தப்பட்டன. முன்னதாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திருக்கல் யாண வைபவத்துக்காக மேளதாளத்துடன் சீர்வரிசை தட்டுகள் எடுத்து வந்திருந்தனர்.

    தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க இறைவனுக்கு திருக்கல்யா ணம் நடைபெற்றது. அப்போது கோவிந்தா... கோவிந்தா கோஷம் எழுப்பி பக்தர்கள் மனமு ருக வழிபட்டனர். தொடர்ந்து சீனிவாச பெரு மாள் தம்பதி சமேதராக பக்தர்களுக்கு அருள்பா லித்தனர்.

    ஊட்டி பெருமாள் கோவில் திருக்கல்யாணத்தில் சுற்றுவட்டார பகுதிக ளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட னர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசா தம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சீனி வாசபெருமாளின் திருவீதி உலா, கோலாகலத்துடன் தொடங்கியது. கோவில் முன்பு தொடங்கிய சுவாமிகள் ஊர்வலம் மார்க்கெட், லோயர்பஜார், பஸ் நிலையம், மெயின்ப ஜார், காபிஹவுஸ் சந்திப்பு வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. அப்போது வழிநெடுகிலும் நூற்றுக்கணக்கான பக்தர் கள் திரண்டு வந்து சுவாமி களை மனமுருக பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

    • பொதுமக்களிடம் விழிப்புணர்வை உருவாக்கிடும் வகையில் இந்த ஆளில்லா கடை திறக்கப்பட்டுள்ளது.
    • வீட்டு உபயோக பொருட்கள், எழுதுபொருட்கள், திண்பண்டங்கள் ஆகியவை கடையில் வைக்கப்பட்டது.

    பாபநாசம்:

    வாழ்க்கையில் எல்லோரும் நேர்மையை கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக பாபநாசத்தில் மகாத்மாகாந்தி பிறந்தநாளில் ஆளில்லா கடை நேற்று ஒரு நாள் மட்டும் திறக்கப்பட்டது.

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பஸ் நிறுத்தத்தில், மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு ரோட்டரி சங்கம் சார்பில் ஆளில்லா கடை திறக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் பாபநாசம் ரோட்டரி சங்கத் தலைவர் அறிவழகன் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் செங்குட்டுவன் ஆளில்லா கடையை திறந்து வைத்தார்.

    முதல் விற்பனையை பாபநாசம் துணை கண்காணிப்பாளர் பூரணி தொடங்கி வைத்தார். நிர்வாகிகள் பிரபாகரன், ஜெயக்குமார், மணிகண்டன், ராஜேந்திரன், ஜெயசேகர், காதர் பாட்ஷா, சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கடையில் வீட்டு உபயோகப் பொருட்கள், எழுதுபொருட்கள், திண்பண்டங்கள் ஆகியவை அதன் விலை அச்சிடப்பட்டு இருந்தது.

    அதன் அருகே ஒரு டப்பா வைக்கப்பட்டிருந்தது. இதில் பொருளை எடுத்துக் கொண்டு அதற்குரிய தொகையை டப்பாவில் வைத்தனர்.

    அதே போல் பணத்தை வைத்துவிட்டு சரியான சில்லறையையும் எடுத்துக் கொண்டனர்.

    இதுகுறித்து ரோட்டரி சங்க தலைவர் கே.எஸ்.அறிவழகன் கூறும்போது, மகாத்மாகாந்தி நேர்மை, உண்மை, நாணயம், நம்பிக்கை நிறைந்த இந்தியாவாக உருவாக்க வேண்டும் என்று கனவு கண்டார். அவர் கண்ட கனவினை நினைவாக்கிட, எங்களது அமைப்பு சார்பில் காந்தி பிறந்த நாளில், நேர்மை குறித்த பொதுமக்களிடம் விழிப்புணர்வை உருவாக்கிடும் வகையில் இந்த ஆளில்லா கடை திறக்கப்பட்டுள்ளது.

    இந்தாண்டு 23 ஆண்டாக பாபநாசத்தில் இந்த ஆளில்லா கடை திறக்கப்பட்டுள்ளது.

    இதில் விற்பனையாகும் தொகையை சேவை திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது என்றார்.

    முடிவில் ரோட்டரி சங்க செயலாளர் சிலம்பரசன் நன்றி கூறினார்.

    ×