என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "thunderstorm"
- மயிலம் பகுதியில் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்க ப்பட்டது.
- திடீரென ஏற்பட்ட மின்தடையால் குடிநீர் விநியோகம் செய்ய ப்படவில்லை.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியில் நேற்று இரவு 9 மணி முதல் லேசான மழை பெய்தது. அப்போது நள்ளிரவு 11 மணியளவில் திடீரென மின்னலுடன் கூடிய இடி இடித்தது. இதில் மயிலம் பகுதியில் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்க ப்பட்டது. தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு மின் விநியோகம் செய்யப்பட்டது. இருந்த போதும் கீழ் மயிலம், ராஜீவ்காந்தி நகருக்கு மின்சாரம் வரவில்லை. இது தொடர்பாக இன்று காலை மின் வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது, பலத்த இடி, மின்ன லால் கீழ் மயிலத்தில் இருந்த டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டுள்ளது.
இதனை சரிசெய்ய நடவடி க்கைகள் எடுக்க ப்பட்டு வருகிறது. இன்று மாலை 3 மணிக்குள் மின் விநியோகம் வழங்கப்படும் என கூறினர். திடீரென ஏற்பட்ட மின்தடையால் குடிநீர் விநியோகம் செய்ய ப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு ள்ளாயினர்.
- தற்போது சித்திரை மாதம் என்பதால் கடும் வெயிலால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர்.
- இன்று காலை கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரலுடன் தொடங்கி மழை பெய்து வந்தது
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் சுட்டெரிக்கும் வெயில் தொடங்கி தற்போது சித்திரை மாதம் என்பதால் கடும் வெயிலால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தில் 101 டிகிரி வெயில் பதிவானது குறிப்பிடத்தக்கதாகும். இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பொதுமக்கள் சாலை ஓரங்களில் உள்ள தர்பூசணி கிருனிப்பழம் நுங்கு பழ வகைகள் பழச்சா றுகள் குளிர்பானங்கள் கரும்பு சாறுகள் போன்றவற்றை வாங்கி குடித்து வெயிலின் தாக்கத்தை குறைத்து வந்ததை காண முடிந்தது. மேலும் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக இரவு நேரங்களில் அதிக அளவில் புழுக்கம் ஏற்பட்டு வருவதால் தூக்கம் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருவதையும் காணமுடிந்தது இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடும் வெயிலை தணிக்கும் விதமாக மழை பெய்யாதா? என பொதுமக்கள் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் ஏங்கி க் கொண்டிருந்தனர்,
இந்த நிலையில் கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தனர். அதன்படி, இன்று காலை கடலூர் மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது வழக்கமான வெயிலின் தாக்கம் அதிகளவில் இல்லாமல் குளிர்ந்த காற்றும் வீசி வந்தன இந்த நிலையில் காலை கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரலுடன் தொடங்கி மழை பெய்து வந்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் குடைபிடி த்தபடி சென்றதையும் காண முடிந்தது மேலும் ஒரு சில மக்கள் மழையை அனுபவிக்கும் விதமாக நனைந்தபடி சென்றதையும் காணமுடிந்தது மேலும் திடீர் மழை காரணமாக பொதுமக்கள் ஆனந்தத்தில் மிதந்ததையும் அவர்களது மகிழ்ச்சியில் காண முடிந்தது மேலும் சாலை வியாபாரிகள் திடீர் மழை காரணமாக சற்று பாதிப்படைந்தனர். ஆனால் கோடை வெயில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் திடீர் மழை பெய்த காரண த்தினால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சி அடைந்ததை காண முடிந்தது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ இன்று (புதன்கிழமை) பெய்யக் கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும்.
மேலும் தமிழகம், புதுச்சேரி கடலோரத்தில் தென்மேற்கு திசையில் இருந்து, மேற்கு நோக்கி மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். காற்றின் வேகம் 55 கிலோ மீட்டர் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே மீனவர்கள் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) அந்தமான் கடல் பகுதி, மத்திய வங்கக்கடல், தென் வங்கக்கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
இவ்வாறு கூறினர்.
நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-
ஜி.பஜார், ஆலங்குடி, மாதவரம் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழையும், செம்பரம்பாக்கம், செங்குன்றம், ஸ்ரீபெரும்புதூர், மீனம்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழையும், தாம்பரம், கோலப்பாக்கம், புழல், பூந்தமல்லி, தாமரைப்பாக்கம், விரிஞ்சிபுரம், மேலாலத்தூர், சோழிங்கர் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது. மேலும் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. #TNRain #WeatherCentre
வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக இடி மின்னல் தாக்கி பலர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் மரங்கள், வீடுகள் இடிந்து விழுகின்றன. இதனால் பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்வை இழந்து தவிக்கின்றனர். அரசும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இந்த மழை காரணமாக மொராதாபாத், முசாபர்நகர், மீரட், அம்ரோஹா மற்றும் சம்பால் ஆகிய மாவட்டங்களில் இடி தாக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட 9 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #rainkills
பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றும் வீசி வருவதால் பல்வேறு இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. இதன் காரணமாக குடிநீர் சப்ளை, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இடி மின்னல் மற்றும் மழை தொடர்பான விபத்துகளில் பலர் உயிரிழந்துள்ளனர். பீகாரில் மட்டும் பல்வேறு இடங்களில் இடி மின்னலுக்கு 17 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதேபோல் ஜார்க்கண்டில் 12 பேர் உயிரிந்துள்ளனர். 28 பேர் பலத்த காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாநிலத்தில் ஜூன் 12-ம்தேதி வரை பலத்த காற்று, இடி மின்னலுடன் கூடிய கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மற்றும் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு ஏற்பட்ட மின்னல் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 6 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து, மீட்பு பணிகளை விரைவுபடுத்துமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. #UPthunderstorm
திண்டுக்கல் நகரில் நேற்று மாலை பலத்த சூறாவளி காற்றுடன் சாரல் மழை பெய்தது. பின்னர் இடி-மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. விண்ணை பிளக்கும் வகையில் ஒலித்த இடியினால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அதிர்ச்சியடைந்தனர்.
சிறிது நேரத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஒரு மணி நேரம் மழை பெய்து ஓய்ந்த பின் மின் இணப்பு மீண்டும் வந்தது. அதன்பின் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. இரவுவரை இநத மழை நீடிக்கவே மின் இணைப்பு துண்டானது.
இதனால் நகர் முழுவதும் இருளில் மூழ்கியது. பலத்த சூறாவளி காற்றினால் மரங்கள், மின்சார வயர்கள் முறிந்தும், அறுந்தும் விழுந்தன. திண்டுக்கல் மட்டுமின்றி புறநகர் பகுதியிலும் கன்னிவாடி, நிலக்கோட்டை, வத்தலக்குண்டு,, பழனி, நத்தம் போன்ற பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
திண்டுக்கல் அருகே உள்ள ராமையன்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெயராஜ் (வயது 50). இவர் நேற்றிரவு தனது வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சூறாவளி காற்றுடன் மழை பெய்ததில் மின்சார வயர் அறுந்து விழுந்தது.
இதனை கவனிக்காமல் சென்ற ஜெயராஜ் மின்சார வயர் மீது கால் வைத்ததில் தூக்கி வீசப்பட்டார் இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தாடிக்கொம்பு போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்