search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tourist spots"

    • ஊட்டிக்கு வருபவர்கள் மழையால் வெளியில் சென்று சுற்றி பார்க்க முடியாமல் விடுதிக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
    • கடும் குளிர் நிலவியதால் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டு பருவமழை தாமதமாக தொடங்கி உள்ளது.

    ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் இதமான காலநிலை நிலவி வருகிறது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது.

    மழை காரணமாக முக்கிய சாலைகளில் தண்ணீர் வடிந்தோடுகிறது. தாழ்வான இடங்களில் தேங்கி நிற்பதையும் காண முடிகிறது.

    இந்த மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அப்பர் பவானி, அவலாஞ்சி உள்பட அனைத்து அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    தொடர் மழை பெய்து கொண்டே இருந்தால் அணைகள் தங்களது முழு கொள்ளளவை எட்டிவிடுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது.மஞ்சூர், ஊட்டி, கூட லுார், பந்தலுார், அவலாஞ்சி பகுதிகளில் நள்ளிரவில், 7 இடங்களில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீயணைப்பு மீட்பு குழு, நெடுஞ்சாலைத்துறை, மின்வாரிய ஊழியர்கள் சென்று சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.

    கடந்த சில தினங்களாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வரத்து கணிசமாக குறைந்து காணப்படுகிறது. அப்படி வருபவர்கள் மழையால் வெளியில் சென்று சுற்றி பார்க்க முடியாமல் விடுதிக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

    ஊட்டி படகு இல்லம் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. ஊட்டி படகு இல்லத்தில் நிறுத்தப்பட்ட படகுகளில் தண்ணீர் தேங்கியதால், துடுப்பு மற்றும் பெடல் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது.

    தண்ணீரை வெளியேற்றி படகுகளை சுத்திகரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். சில மோட்டார் படகு மட்டும் இயக்கப் பட்டன.

    இதேபோல் தாவரவியல் பூங்கா உட்பட சுற்றுலா மையங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. கடும் குளிர் நிலவியதால் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    • சுற்றுலா தலங்களில் இன்று 3-வது நாளாக மக்கள் குவிந்தனர்.
    • கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா தலங்களில் இன்று 3-வது நாளாக மக்கள் குவிந்தனர்.

    சத்தியமங்கலம் அருகே பவானிசாகர் அணை உள்ளது. அதன் அருகே பூங்கா அமைந்துள்ளது.

    இந்த பூங்காவுக்கு சத்திய மங்கலம், கோபிசெட்டி பாளையம் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் மட்டுமின்றி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள்.

    அதே போல் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து அணையை ரசித்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழ் புத்தாண்டு மற்றும் நேற்று சனிக்கிழமை என்பதால் ஏராளமான பொதுமக்கள் பவானிசாகர் அணை பூங்காவுக்கு வந்து ரசித்து சென்றனர். கடந்த 2 நாட்களாக அணை பகுதியில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

    இந்த நிலையில் 3-வது நாளாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) பவானிசாகர் அணை பூங்காவுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

    காலை முதலே ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி திருப்பூர், கோவை, சேலம் என தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர்.

    இதை தொடர்ந்து நேரம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.

    அணைப் பூங்காவுக்கு தங்கள் குடும்பத்துடன் வந்த பொதுமக்கள் அங்கு ஊஞ்சல் விளையாடி மகிழ்ந்தனர். மேலும் சிறுவர், சிறுமிகள் மற்றும் பெண்கள் சறுக்கு விளையாடி குதுகளித்தனர்.

    இதை தொடர்ந்து பொது மக்கள் பூங்காவின் இயற்கை அழகை கண்டு களித்தனர். மேலும் அணையில் கொட்டும் தண்ணீரின் அழகை ரசித்தப்படி சென்றனர்.

    இதையொட்டி அணையின் வெளி பகுதியில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அணையை ரசித்த பொதுமக்கள் அங்கு விற்பனை செய்யப்படும் மீன் வகைகளையும் ருசித்தனர்.

    அதே போல் தாங்கள் கொண்டு வந்த உணவு வகைளையும் ரோட்டோரம் அமர்ந்து சாப்பிட்டனர்.

    இதனால் இன்று காலை முதலே அணை பகுதியில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காணப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலாக காணப்பட்டது.

    தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறையால் பவானிசாகர் பகுதி மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

    இதே போல் கோபிசெட்டி பாளையம் அடுத்த கொடி வேரி தடுப்பணைக்கு இன்று 3-வது நாளாக பொது மக்கள் அதிகளவில் வந்திருந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். இதனால் கொடுவேரி தடுப்பணை பகுதியில் இன்றும் மக்கள் கூட்டம் அலை மோதியது.

    மேலும் ஈரோடு வ.உ.சி. பூங்காவில் இன்று காலை மக்கள் குறைந்து காணப்ப ட்டாலும் நேரம் செல்ல செல்ல பொதுமக்களின் கூட்டம் அதிகரித்தது.

    குடும்பத்துடன் பூங்காவுக்கு வந்த மக்கள் அங்கு ஊஞ்சல், சறுக்கு விளையாடி மகிழ்ந்தனர்.

    மேலும் பண்ணாரி யம்மன் கோவில், பாரியூர் கொண்டத்து காளியம்மன், சென்னிமலை முருகன் கோவில், வெள்ளோடு பறவைகள் சரணாலயம் உள்பட மாவட்டத்தின் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் கடந்த 3 நாட்களாக மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

    • உழவர் திருநாளில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது
    • பெருவுடையார் கோயிலில் வழக்கத்தைவிட மக்களின் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட முழுவதும் உழவர் திருநாள் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. உழவர் திருநாளையொட்டி, அலங்காரத்துடன் தொழுவத்தில் அடைக்கப்பட்டிருந்த காளைகள், பசுமாடுகள், எருமைகள் உள்ளிட்ட மாடுகளும், ஆடுகளும் அவிழ்த்து விடப்பட்டன. சிறுவர் சிறுமியர்களுக்கு ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், சாக்கு ஓட்டம், எலுமிச்சை கரண்டி, பாட்டுப்போட்டி, கவிதை போட்டி, பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன.

    இதே போன்று இளைஞர்களுக்கு கபடி, மட்டைப்பந்து, ஓட்டப்பந்தயம், சைக்கிள் போட்டி, வழுக்கு மரம் ஏறுதல், பானை உடைத்தல் போட்டி களும்,பெண்களுக்கு கோ கோ, கும்மியடித்தல் உள்ளிட்ட போட்டிகளும் நடைப்பெற்றது. முன்னதாக பெண்கள், சிறுவர், சிறுமியர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, பெரியவர்களிடம் ஆசி வழங்கி தங்களுக்கு அருகிலுள்ள விளையாட்டு திடல்களில் சென்று உழவர் திருநாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். காணும் பொங்கலையொட்டி, ெஜயங்கொண்டம் அருகேயுள்ள கங்கை கொண்ட சோழபுரத்திலுள்ள சுற்றுலா தலமான பெருவுடையார் கோயிலில் வழக்கத்தைவிட மக்களின் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

    பெல்ஜியம், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்திருந்து காணும் பொங்கலை கொண்டாடினர். இதே போல் திருமானூர் அருகேயுள்ள கரைவேட்டி பறவைகள் சரணாலயத்தில் மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. அரியலூர் செட்டி ஏரி பூங்கா, கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயில், அணைக்கரை, உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு, பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் சென்று காணும் பொங்கலை கொண்டாடினர்.


    ×