என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "train hit"
- தொழிலாளி மது போதையில் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
- ரெயில் மோதியதில் தொழிலாளியின் கால்கள் துண்டானது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ஆசாரி தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் சுப்புராசு (45). சென்ட்ரிங் தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக மது போதைக்கு அடிமையாகி, திண்டுக்கல் ஆர்.எம். காலனியில் உள்ள போதை அடிமை மீட்பு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சீலப்பாடி டாஸ்மாக் கடை அருகே மீண்டும் மது போதையில் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு 2 கணுக்கால்கள் துண்டானது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற மருத்துவ உதவியாளர்கள் இவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராயர் விருத்தாசலம் அருகே நாச்சியார் பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார்.
- திருச்சியிலிருந்து சென்னை மார்க்கமாக சென்ற ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
கடலூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நத்தங்குழி கிராமத்தை சேர்ந்தவர் ராயர் (வயது 42). இவர் விருத்தாசலம் அருகே நாச்சியார் பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் இன்று காலை 5:30 மணியளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக நாச்சியார்பேட்டை ரயில்வே கேட் அருகே ராயர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது திருச்சியிலிருந்து சென்னை மார்க்கமாக சென்ற ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராயர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தண்டவாளத்தை கடந்தபோது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
வாணியம்பாடி- கேத்தாண்டப் பட்டி ரெயில் நிலையங்களுக்கிடையே கொடையாஞ்சி பகு தியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் இறந்த வர் வாணியம்பாடியை அடுத்த கொடையாஞ்சி பகுதியை சேர்ந்த எட்வின் தாமஸ் (வயது 40) என்பதும், சற்று மனநிலை பாதிக்கப்பட்ட இவர் தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதி பலியானதும் தெரியவந்தது. இவருக்கு திருமணம் ஆகி ஜோதி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
- தண்டவாளத்தின் நடுவில் தந்தை நிற்பதைக் கண்ட மகன் காப்பாற்ற ஓடியுள்ளார்.
- வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பிந்த் நகர ரயில் நிலையத்தின் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் ஹரி சிங் நர்வாரியா(55). நேற்று தனது குடும்பத்தில் ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து விரக்தியில் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்வதற்காக ரயில் பாதையில் நின்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த அவரது மகன் முன்னேஷ் (19), தண்டவாளத்தின் நடுவில் தனது தந்தை நிற்பதைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்தார். அவரைக் காப்பாற்ற டிராக்கில் அவர் ஓடியுள்ளார். ஆனால் விரைவாக வந்த ரயில் இருவரும் மீது மோதியது.
இதில் உடல் துண்டான நிலையில் தந்தையும் மகனும் உயிரிழந்ததாக ரயில்வே பாதுகாப்புப் படை இன்ஸ்பெக்டர் அஜய் குமார் மீனா தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
- கங்கைகொண்டான் அருகே உள்ள ஆலடிப்பட்டி பகுதியில் ரெயில் தண்டவாளம் செல்கிறது.
- ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது நெல்லை-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் மோதி பெண் இறந்துள்ளார்.
நெல்லை:
நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் அருகே உள்ள ஆலடிப்பட்டி பகுதியில் ரெயில் தண்டவாளம் செல்கிறது.
இந்த பாதையில் இன்று காலை சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து சந்திப்பு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மூதாட்டியின் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அந்த மூதாட்டி யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் அந்த மூதாட்டி ஆலடிப்பட்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மனைவி எமிலி ரத்தினபாய்(வயது 52) என்பது தெரியவந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்வராஜ் இறந்துவிட்டார். இவர்களுக்கு குழந்தை கிடையாது என்பதால், எமிலி ரத்தினபாய் அப்பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் வசித்து வந்துள்ளார். அவருக்கும் வயது முதிர்வின் காரணமாக தடுமாறி நடந்துள்ளார்.
இந்தநிலையில் அவர் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது நெல்லை-தூத்துக்குடி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி இறந்துள்ளார் என்பது தெரியவந்தது.
- தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
வாணியம்பாடி அருகே காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் இவரது மகன் குமார் (வயது 62) இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார்
இந்நிலையில் நேற்று விண்ணமங்கலம் வாணியம்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே வளையாம்பட்டு என்ற இடத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றார் அப்போது சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி வந்த ஏதோ ஒரு ரெயிலில் அடிப்பட்டு சம்பவம்
இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவக் மனைக்கு அனுப்பி வைத்தனர் இறந்தவருக்கு அமுதா என்கிற மனைவியும் 2 மகளும் உள்ளனர்.
இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை வாடிப்பட்டி அருகேயுள்ள இடையப்பட்டி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 22). பூ கட்டும் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் சரவணனுக்கும், அவரது தாயாருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சரவணன் கோபித்துக் கொண்டு மதுரைக்கு வந்து விட்டார். இந்த நிலையில் செந்தில் குமார் சம்பவத்தன்று இரவு செல்லூர் ரெயில்வே பாலம் வந்தார். அப்போது அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக செந்தில் குமாரின் சகோதரர் பாண்டி, ரெயில்வே போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பெரியகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 49). எலக்ட்ரீசியனான இவர் அயோத்தியாப்பட்டினம் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் கடந்த சில நாட்களாக ஒப்பந்த பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை வீட்டில் இருந்து பணிக்கு சென்ற அவர் அயோத்தியப்பட்டணம் பகுதியில் உள்ள தண்டவாளத்தைக் கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற சேலம்-விருத்தாச்சலம் ரெயில் அவர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் இறந்த மணிமாறனுக்கு வளர்மதி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் ரெயில்வே கேட் அருகே நேற்று அதிகாலை ஒரு வாலிபர் ரெயில் மோதி பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன், உதவி சப்-இன்ஸ் பெக்டர் விநாயகம் ஆகி யோர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுபற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் ரெயில் மோதி பிணமாக கிடந்த வாலிபர் வில்லியனூர் பெருமாள் புரத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 26) என்பதும், இவர் வில்லியனூர் மார்க்கெட்டில் கறிவேப்பிலை வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது.
அதிகாலை வேளையில் ரமேஷ் இயற்கை உபாதை கழிக்க தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற போது ரெயில் மோதி பலியாகி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரெயில் மோதி பலியான ரமேசுக்கு திருமணாகி அஞ்சலை என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்