search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Train Picket"

    • சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.பி. எஸ்.எஸ். ராமசுப்பு கலந்து கொண்டு பேசினார்.
    • ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து பொது மக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கினர்.

    களக்காடு:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் களக்காடு டி.கே.எஸ். மண்டபத்தில் மாவட்ட தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தலைமை யில் நடந்தது. மாவட்ட பொருளாளர் டாக்டர் பால் ராஜ் முன்னிலை வகித்து வரவேற்று பேசினார்.

    சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.பி. எஸ்.எஸ்.ராமசுப்பு கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் பேசிய மாவட்ட தலைவர் கேபிகே.ஜெயக்குமார், ராகுல்காந்தி எம்.பி.யின் பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் வருகிற 15-ந்தேதி நாங்குநேரியில் ரெயில் மறியல் போராட்டமும், வருகிற 20-ந்தேதி ஏர்வாடி யில் தலைமை தபால் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டமும் நடைபெறும் என்று அறிவித்தார்.

    தொடர்ந்து களக்காடு மெயின் ரோட்டில் காங்கிரஸ் தலைவர்கள் ஊர்வலமாக சென்று ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து பொது மக்களிடம்துண்டு பிரசுரம் வழங்கினர்.பின்னர் காமராஜர், இந்திரா காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து தண்ணீர் பந்தல் திறந்து வைத்து பொது மக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.

    பின்னர் மாவடி சந்திப்பில் காமராஜர் படத் திற்கு மாலை அணிவித்து தண்ணீர் பந்தல் திறக்கப் பட்டது.

    நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் மோகன் குமார ராஜா, கிருஷ்ண குமார், தொகுதி பொறுப் பாளர் சசிகுமார், பொதுக் குழு உறுப்பினர் ஜார்ஜ், வள்ளியூர் யூனியன் துணை சேர்மன் வெங்கடேஷ் தனராஜ், மாவட்ட பொது செயலாளர்கள் செல்வராஜ், ஆறுமுகம், பொறியாளர் அணி தலைவர் தர்மலிங்கம், வட்டார தலைவர்கள் முருகன், அருள்தாஸ், முத்து கிருஷ்ணன், பாலசுப்பிர மணியன், பிராங் கிளின், ராமச்சந்திரன், நகர தலை வர்கள், களக்காடு ஜெபஸ்டின் ராஜ், சுடலைக்கண்ணு, பொன் ராஜ், அபுபக்கர்,

    ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் மருதூர்-மணிமாறன், சுரேஷ்பாபு, ராஜாபுதூர் காமராஜ், களக்காடு கவுன்சிலர் சின்சான் துரை, களக்காடு பால்சால மோன், முத்துக் குட்டி, செல்வராஜ், மேல பெத்த செல்வராஜ் விக்டர், பிரேம் ராஜ்குமார், வாசு, முன்னாள் நகர தலைவர் சேகர், ஜெயபாண்டி, பொன்ராஜ், மனித உரிமை பிரிவு அந்தோணிராஜ், ராபர்ட் சுஜின், மாவடி செல்லப்பாண்டி ஜான்சன், ராபின் டோனாவூர்.. ஜெயக்குமார், நவநீதன், மனோகரன், ரமேஷ். ஐசக் அற்புதராஜ், கோசல்ராம், வில்லுப்பாட்டு முத்து, மகளிர் காங்கிரஸ் பிரியா, முருகன், அன்ன கவுரி, ஜெபசுதா மற்றும் களக்காடு நகராட்சி காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் களக்காடு இந்திரா காந்தி சிலைகள் மாவடி பஸ் நிறுத்தம் அருகிலும் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் மோர் பந்தல் மாவட்டத் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தலைமையில் முன்னாள் எம்.பி. ராமசுப்பு திறந்து வைத்தார்.

    தேவரின கூட்டமைப்பினர் மதுரையில் இன்று ‘பந்த்’ அறிவித்துள்ள நிலையில், வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலை மறிக்க முயன்ற 40 பேரை போலீசார் கைது செய்தனர். #TrainPicket
    மதுரை:

    மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும், தமிழக பாடப்புத்தகத்தில் பசும்பொன் தேவரின் உண்மையான வரலாற்றை இடம்பெற செய்ய வேண்டும், மீண்டும் டி.என்.டி. சான்றிதழ் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தேவரின கூட்டமைப்பினர் மதுரையில் இன்று பந்த் அறிவித்துள்ளனர்.

    இதைத் தொடர்ந்து மதுரையில் அனைத்து பகுதியிலும் இன்று காலை முதல் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மதுரை தெப்பக்குளம் மற்றும் முக்கிய இடங்கள், விமான நிலைய பகுதியிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இன்று காலை 6.30 மணிக்கு மதுரை ரெயில் நிலையத்தில் புறப்பட தயாராக நின்றிருந்த வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலை மறிக்க முயன்ற 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

    பந்த் அறிவிப்பு காரணமாக மதுரையில் சில பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கோரிப்பாளையம் தேவர் சிலை முன்பு ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  #TrainPicket

    வில்லியனூரில் பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச். ராஜாவை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி ரெயில் மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
    வில்லியனூர்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை அவதூறாக விமர்சித்த பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச். ராஜாவை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி வில்லியனூர் தொகுதி விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர்.

    அதன்படி போராட்டம் நடத்த விடுதலை சிறுத்தை கட்சியினர் சுல்தான்பேட்டை ரெயில் நிலையம் அருகே ஒன்று திரண்டனர்.

    அப்போது விழுப்புரத்தில் இருந்து புதுவை நோக்கி வந்த பயணிகள் ரெயிலை மறித்தனர். இதையடுத்து அவர்களை வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன் ஆகியோர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

    விடுதலை சிறுத்தை கட்சியின் முதன்மை செயலாளர் தேவ. பொழிலன், தொகுதி செயலாளர் தமிழ்வளவன், கொள்கை பரப்பு செயலாளர் ஆதவன், எழில்மாறன், வாகையரசு உள்ளிட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

    உப்பளம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அண்ணா சாலை அருகே சாலை மறியல் நடந்தது. தொகுதி செயலாளர் கன்னியப்பன் தலைமை தாங்கினார்.

    போராட்டத்தில் திருக்குமரன், ஜெயசெல்வி, செழியன், கலைச்செல்வன், சந்துரு, நீலமேகம், குமார், வினோத், யுவராஜ், ரமேஷ், காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் செய்தவர்களை போலீசார் கைது செய்தனர். சுமார் 60 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ×