search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "train"

    • அடுத்தடுத்த அதி வரைவு ரெயில்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
    • ராமேஸ்வரம் சிறப்பு ரெயில்களும் தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    விழுப்புரம் ரெயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு காரணமாக அடுத்தடுத்த அதி வரைவு ரெயில்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

    தாதர் சாளுக்கியா, அனந்தபுரி எக்ஸ்பிரஸ், செங்கோட்டை எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ் ஆகிய 4 ரெயில்கள் 40 நிமிடம் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    அடுத்தடுத்து பொதிகை எக்ஸ்பிரஸ், கம்பன் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் சிறப்பு ரெயில்களும் தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    • ரெயில் சென்றபோது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. முதலில் ஒரு பெட்டியில் பிடித்த தீ மற்ற பெட்டிகளுக்கும் பரவ தொடங்கியது.
    • ரெயில் விபத்துக்கான காரணம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஐதராபாத்:

    மேற்கு வங்காள மாநிலம் அவுராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்திற்கு பலக்னுமா எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. இன்று பகலில் ஐதராபாத் அருகே பொம்மைபள்ளி, பகிடிபள்ளி இடையே ரெயில் சென்றபோது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. முதலில் ஒரு பெட்டியில் பிடித்த தீ மற்ற பெட்டிகளுக்கும் பரவ தொடங்கியது.

    இதையடுத்து உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டது. அதில் இருந்த பயணிகள் உடனடியாக கீழே இறக்கிவிடப்பட்டனர். இதனால் அதில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினார்கள்.

    இந்த ரெயில் விபத்துக்கான காரணம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான நெரிசல் காணப்படுகிறது.
    • மின்சார ரெயில்களில் பயணிகள் கூட்டத்தை சமாளிக்க காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக ரெயில்களை இயக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை கடற்கரை-தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி, சென்ட்ரல்-திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் தினமும் 450-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்கிறார்கள்.

    தற்போது பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான நெரிசல் காணப்படுகிறது.

    எனவே பயணிகளின் நெரிசலை குறைக்க ரெயில் சேவையை அதிகரிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறியதாவது:-

    மின்சார ரெயில்களில் பயணிகள் கூட்டத்தை சமாளிக்க காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக ரெயில்களை இயக்க வேண்டும். மற்ற நேரங்களிலும் ரெயில் சேவையை அதிகரிக்க வேண்டும்.

    தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை உள்ள புறநகர் பகுதிகள் தற்போது வளர்ச்சி அடைந்து வருகின்றன. இங்கு தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், குடியிருப்புகள் பெருகி விட்டன.

    தாம்பரம்-செங்கல்பட்டு இடையே புதிய ரெயில் பாதை பயன்பாட்டுக்கு வந்ததும் ரெயில்களின் சேவை அதிகரிக்கப்பட வில்லை. இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி பயணிகள் அவதிப்படுகிறார்கள். எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த வழித்தடத்தில் ரெயில் சேவையை அதிகரிக்க வேண்டும்.

    அதேபோல் சென்னை-திருவள்ளூர் இடையே காலை நேரத்தில் 20 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி மாணவ-மாணவிகள் அவதிப்படுகிறார்கள். இந்த வழித்தடத்தில் 10 நிமிடத்துக்கு ஒரு ரெயில் இயக்க வேண்டும். கொரோனா பாதிப்புக்கு முன்பு இருந்த சென்ட்ரல்-திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி நள்ளிரவு ரெயில் சேவையையும் மீண்டும் தொடங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதுகுறித்து சென்னை கோட்ட ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னையில் நெரிசலான நேரங்களில் மின்சார ரெயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரி பயணிகளிடம் இருந்து மனுக்கள் வந்துள்ளன. இந்த மனுக்களை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். எனவே கூட்ட நெரிசல் உள்ள வழித் தடங்களில் கூடுதலாக 10 மின்சார ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதற்கான அறிவிப்பு ஆகஸ்டு மாத இறுதியில் வெளியாக உள்ள புதிய கால அட்டவணையில் இடம்பெறும். அதன்மூலம் பயணிகளின் நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • காலை 10.45 மணிக்கு பதிலாக 55 நிமிடங்கள் முன்னதாக காலை 9.50 மணிக்கு புறப்படும்.
    • பகல் 12.30 மணிக்கு பதிலாக 50 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 1.20 மணிக்கு புறப்படும்.

    தஞ்சாவூர்:

    திருச்சியில் இருந்து காரைக்காலுக்கு முன்பதிவு இல்லா விரைவு ரெயில் (வண்டி எண்: 06880) தினமும் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நாளை முதல் ( திங்கள் கிழமை ) திருச்சியிலிருந்து வழக்கமாக காலை 10.45 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 55 நிமிடங்கள் முன்னதாக காலை 9.50 மணிக்கு புறப்படும்.

    இந்த ரெயில் காரைக்காலுக்கு பிற்பகல் 3 மணிக்குப் பதிலாக, 2.05 மணிக்கு சென்றடையும்.

    அதேபோல காரைக்காலில் இருந்து தஞ்சாவூருக்கு இயக்கப்படும் முன்பதிவு இல்லா விரைவு ரெயில் (வண்டி எண்: 06457) நாளை ( திங்கள் கிழமை) முதல் வழக்கமாக பகல் 12.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 50 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 1.20 மணிக்கு புறப்படும்.

    மேற்கண்ட தகவலை தெற்கு ரயில்வே சாா்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • நெல்லையிலிருந்து வியாழக்கிழமை புறப்பட்டு வெள்ளிக்கிழமை பொள்ளாச்சி வந்து மேட்டுப்பாளையம் வரை இயக்கப்பட்டது.
    • இரவு 7:45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் ெரயில் பொள்ளாச்சிக்கு இரவு 10:03 மணிக்கு வந்து 10:05க்கு புறப்படும். செவ்வாய்க்கிழமை காலை 7:45 மணிக்கு இந்த ெரயில் நெல்லை சென்றடையும்.

     உடுமலை:

    நெல்லை - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ெரயில் இயக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் 3மாதங்களாக இயக்கப்பட்ட iயில் நெல்லையில் வியாழக்கிழமை புறப்பட்டு வெள்ளிக்கிழமை பொள்ளாச்சி வந்து மேட்டுப்பாளையம் வரை இயக்கப்பட்டது.

    அதன்பின் மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டு பொள்ளாச்சி வழியாக மீண்டும் நெல்லைக்கு சனிக்கிழமை சென்றடைந்தது.தற்போது ஜூலை 2-ந் தேதி முதல் செப்டம்பர் 25-ந் தேதி வரை இந்த ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரயில் இயக்கப்படும் நாட்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

    ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு நெல்லையில் புறப்படும் சிறப்பு ரெயில் திங்கட்கிழமை காலை 4:45 மணிக்கு பொள்ளாச்சி அடையும். அதன்பின் 4:47 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையம் சென்றடையும்.மறு மார்க்கத்தில் திங்கட்கிழமை இரவு 7:45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் ரயில் பொள்ளாச்சிக்கு இரவு 10:03 மணிக்கு வந்து 10:05க்கு புறப்படும். செவ்வாய்க்கிழமை காலை 7:45 மணிக்கு இந்த ரயில் நெல்லை சென்றடையும். மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, போத்தனூர், பொள்ளாச்சி, உடுமலை, பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லுார், தென்காசி, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ரெயில்நிலையங்களில் நிறுத்தப்படும். இத்தகவலை தெற்கு ெரயில்வே பாலக்காடு கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ரயில்வே அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பில், பொள்ளாச்சிக்கு அடுத்ததாக போத்தனூர் ரயில்வே சந்திப்பில் வாராந்திர ரயில் நிற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த முறை கிணத்துக்கடவில் நிறுத்தப்பட்ட இந்த ரயில், தற்போது அங்கு நிறுத்தம் செய்ய அறிவிப்பு இல்லை.கிணத்துக்கடவில் ரயில் நிற்காமல் செல்வதால் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.இங்கும் ரயில் நிறுத்தம் செய்ய வேண்டும் என கிணத்துக்கடவு ரயில் பயணியர் வலியுறுத்தியுள்ளனர்.

    • பெங்களுர்-ராமேசுவரம் ெரயில் பரமக்குடி, மானாமதுரையில் நின்று செல்ல வேண்டும்.
    • ெரயில்வே துறை நடவடிக்கை எடுக்க பயணிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் உள்ள ஏராளமானோர் பெங்களூரில் வசித்து வருகின்றனர்.ராமேசுவரம் முதல் ஹூப்ளி வரை இயக்கப்படும் வாராந்திர ெரயில் (ெரயில் எண்.07355) தமிழ்நாடு வழியாக கர்நாடக மாநிலம் பெங்களூர் வழியாக சென்று இறுதியாக ஹூப்ளி ெரயில் நிலையத்தை அடைகிறது.

    அவ்வாறு செல்லும் போது பெங்களூரில் உள்ள கார்மேலராம் மற்றும் தமிழ கத்தில் பரமக்குடி, சிவகங்கை ஆகிய ெரயில் நிலை யங்களின் நிறுத்தங்களில் நிற்காமல் செல்கிறது. இதனால் அங்கு பணிபுரியும் தென் மாவட்ட பயணிகள் மிருந்த சிரமத்திற்குள்ளாகிறார்கள்.

    தமிழ்நாட்டில் ஓசூர் ெரயில் நிலையத்தில் நின்று செல்வதால் அங்கிருந்து கார்மேலராம், கண்டோன்மென்ட், மெஜஸ்டிக் செல்லும் பயணிகள், ெரயில்கள் இல்லாததால் பெங்களூர் பனஸ்வாடி, எஸ்வந்த்பூர் ெரயில் நிலையங்களுக்கு சென்று அதன்பிறகு கார்மேலராம், கண்டோன்மென்ட், மெஜஸ்டிக் ெரயில் நிலையங்களுக்கு வர வேண்டி உள்ளது. இதன் காணமாகவும், பயணிகள் மிகவும் சிரமம் அடைகிறார்கள்.

    பனாஸ்வாடி, எஸ்வந்த் பூர் ெரயில் நிலையங்களில் இருந்து மெஜஸ்டிக், கண்டோன்மென்ட், கார்மேலராம் 3 ெரயில் நிலையம் செல்வதற்கு பயணிகள் ெரயில் சரியான நேரத்திற்கு இல்லை.

    ஓசூரில் இருந்து காலை 9 மற்றும்9½ மணி அளவில் 16212/06592 வண்டிகள் கார்மேலராம் வழியாக பனாஸ்வாடி, எஸ்வந்த்பூர் செல்கின்றன. ஆனால் ஹூப்ளி வாராந்திர ெரயில் ஓசூர் வரும்போது காலை 9 மணி அளவில் வருவதால் பயணிகள் ெரயிலை ஓசூரில் இறங்கி கன்டோன்மென்ட், கார்மலெராம், மெஜஸ்டிக் செல்லும் பயணிகள் பயணிகள் ெரயிலை பிடிக்க முடியவில்லை.

    அதேபோல் ஹுப்ளியில் இருந்து ராமேசுவரம் வரும்போது மெஜஸ்டிக், கண்டோன்மென்ட், கார்மேலராம் பகுதி மக்கள் வாராந்திர ெரயிலை பிடிக்க எஸ்வந்த்பூர், பனாஸ்வாடி ெரயில் நிலையங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது.

    சரியான நேரத்திற்கு இந்த ெரயில் நிலையங்களில் இருந்து பயணிகள் ெரயில் குறித்த நேரத்தில் இல்லை. கார்மேலராம் ெரயில் நிலையத்திலிருந்து காலை 9 மணி அளவில் எஸ்வந்த்பூர் ெரயில் நிலையத்திற்கு சென்று ராமேசுவரம்- ஹூப்ளி வாராந்திர ெரயிலை பிடிக்க 3 மணி நேரம் எஸ்வந்த்பூர் ெரயில் நிலையத்தில் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது.

    ஆதலால் மெஜஸ்டிக் மற்றும் கண்டோன்மென்ட், கார்மேலராம் ெரயில் பயணிகளுக்காக ராமேசுவரம்-ஹூப்ளி ெரயிலை கார்மேலராம் ெரயில் நிலையத்தில் நிறுத்தி சென்றால் தமிழ்நாடு மற்றும் பெங்களூர் பயணிகள் பயனடைவார்கள். ெரயில்வே துறை நடவடிக்கை எடுக்க பயணிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தென்னக ரெயில்வே சார்பில் எர்ணாகுளம்- வேளாங்கண்ணி வாராந்திர சிறப்புக்கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
    • பணிகளின் வசதிக்காக எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு ரெயிலின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தென்னக ரெயில்வே சார்பில் எர்ணாகுளத்தில் இருந்து தென்காசி, விருதுநகர், மாணாமதுரை வழியாக வேளாங்கண்ணிக்கு வாராந்திர சிறப்புக்கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    இந்த ரெயில் சேவை கடந்த 15-ந் தேதியுடன் முடிவ டைந்தது.

    இதற்கிடையே, பணிகளின் வசதிக்காக எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு ரெயிலின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, இந்த ரெயில் (வ.எண்.06035) அடுத்த மாதம் 8-ந் தேதி, 15,22,29 மற்றும் ஆகஸ்டு மாதம் 5-ந் தேதிகளில் சனிக்கிழமை தோறும் எர்ணாகுளத்தில் இருந்து மதியம் 1.10 மணிக்கு புறப்பட்டு தென்காசிக்கு இரவு 8.13 மணிக்கும், விருதுநகருக்கு இரவு 10.28 மணிக்கும் வந்தடைகிறது.

    மறுநாள் அதிகாலை 5.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

    மறுமார்க்கத்தில் வேளாங்கண்ணி-எர்ணாகுளம் சிறப்புக்கட்டண ரெயில் (வ.எண்.06036) அடுத்த மாதம் 9-ந் தேதி, 16,23,30 மற்றும் ஆகஸ்டு மாதம் 6-ந் தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை தோறும வேளாங்கண்ணியில் இருந்து மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு விருதுநகருக்கு நள்ளிரவு 1.58 மணிக்கும், தென்காசிக்கு நள்ளிரவு 3.50 மணிக்கும் வந்தடைகிறது.

    மறுநாள் பகல் 11.40 மணிக்கு எர்ணாகுளம் சென்றடைகிறது.

    இந்த ரெயில்கள் கோட்டயம், சங்கனாச்சேரி, திவல்லா, செங்கனூர், மாவேலிக்கரா, காயங்குளம், கருநாகப்பள்ளி, சாஸ்தான் கோட்டா, கொல்லம், குண்ட்ரா, கொட்டாரக்கரா, அவனீஸ்வரம், பனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளயைம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டிணம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்னம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    • ரெயிலின் வசதியை தவறாகப் பயன்படுத்துவது ரெயில்வே விதிகளின்படி குற்றச் செயலாகும்.
    • ரெயில்வே சட்டத்தின் 141-வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை :

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து நேற்று முன்தினம் (27-ந்தேதி) சென்னை சென்டிரல் நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று வந்துகொண்டிருந்தது. ரெயில் சூல்லூர்பேட்டை - அக்கம்பேட்டை இடையில் உள்ள கலிங்க ஆற்று பாலத்தில் வந்து கொண்டிருந்த போது அதிகாலை 4 மணியளவில் முன்பதிவில்லா பெட்டியில் இருந்த பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார். உடனடியாக ரெயில் பாலத்தின் நடுவிலேயே நிறுத்தப்பட்டது.

    இதனால், என்ஜினில் இருந்து அந்த குறிப்பட்ட ரெயில் பெட்டிக்கு செல்ல முடியாமல் ரெயில் ஓட்டுனர் தவித்தார். மேலும், முன்பதிவில்லா பெட்டியில் அபாய சங்கிலியை சரி செய்ய ரெயில் பெட்டிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில், ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால், பாலத்தின் மேலே செல்ல முடியவில்லை.

    இதனால், அங்கே ஆற்றுப்படுகையில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒரு பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் ரெயில் பெட்டிக்குள் நுழைந்த ரெயில்வே போலீசார் அபாய சங்கிலியை சரி செய்தனர்.

    இந்த சம்பவத்தால் சிறிது நேரம் தாமதத்திற்கு பின்னர், ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த நிலையில், ரெயில் பயணிகள் சரியான காரணமில்லாமல் அபாய சங்கிலியை இழுக்க வேண்டாம் என்று தெற்கு ரெயில்வே எச்சரித்துள்ளது

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'அபாய சங்கிலி மற்றும் ரெயிலின் வசதியை தவறாகப் பயன்படுத்துவது ரெயில்வே விதிகளின்படி குற்றச் செயலாகும். அவசரத் தேவை இல்லாமல் ரெயிலில் சங்கிலியை இழுத்தால், ரெயில்வே சட்டத்தின் 141-வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விதியின் கீழ், போதுமான காரணமின்றி ஒரு பயணி அபாய சங்கிலியைப் பயன்படுத்தினால், அவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்' என்று கூறப்பட்டுள்ளது.

    • புளியமங்கலம் ரெயில் நிலையத்திற்கு சற்று கால தாமதமாக வந்த மின்சார ரெயில் நிற்பது போல் மெதுவாக ஓடியது.
    • ரெயில் பெட்டிகளின் இருக்கைகளில் பயணம் செய்தவர்கள் இறங்க முடியவில்லை.

    அரக்கோணம்:

    சென்னை கடற்கரை ரெயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் வழியாக மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு இரவு 8.30 மணிக்கு வரும் மின்சார ரெயில் தினமும் அரக்கோணத்திற்கு முன்னால் உள்ள புளியமங்கலம் ரெயில் நிலையத்தில் இரவு 8.20 மணிக்கு நின்று, பயணிகளை ஏற்றிச் செல்லும்.

    அதன்படி நேற்று இரவு மின்சார ரெயில் ஒன்று சென்னையில் இருந்து, அரக்கோணம் செல்ல புறப்பட்டது. புளியமங்கலம் ரெயில் நிலையத்திற்கு சற்று கால தாமதமாக வந்த மின்சார ரெயில் நிற்பது போல் மெதுவாக ஓடியது.

    ரெயில் நிலையத்தை கடந்து நிற்காமல் சென்றது.

    அப்போது வாசற்படியில் இருந்தவர்கள் மட்டும் இறங்கினர். ரெயில் பெட்டிகளின் இருக்கைகளில் பயணம் செய்தவர்கள் இறங்க முடியவில்லை. அவசரமாக இறங்க முயன்ற பயணிகள் சுதாரித்துக் கொண்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    பயணிகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை.

    இரவு 8.30 மணிக்கு அரக்கோணம் ரெயில் நிலையம் வந்ததும், புளியமங்கலத்தில் இறங்க வேண்டிய பயணிகள் ரெயில் என்ஜின் முன்பு குவிந்தனர்.

    புளியமங்கலத்தில் ஏன் ரெயிலை நிறுத்தவில்லை?, இரவு நேரம் என்பதால் நாங்கள் எப்படி திரும்பிச் செல்வோம்? என ரெயிலை முற்றுகையிட்டு டிரைவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது டிரைவர் புளியமங்கலத்தில் நிறுத்தம் உள்ளதா? இல்லையா? என என குழப்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக ரெயிலை நிறுத்த மறந்து விட்டதாக கூறினார்.

    இது குறித்து பயணிகள் ரெயில் நிலைய அதிகாரியிடம் புகார் கொடுத்தனர்.

    இரவு நேரத்தில் குழந்தைகளுடன் பயணித்த பெண்கள், முதியவர்கள் என அனைவரும் சிரமத்துடன் பயணிகள் பஸ்சில் தங்கள் ஊருக்கு சென்றனர்.

    இந்த சம்பவம் அரக்கோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மதுரை கோட்டத்தில் நெல்லைக்கு பிறகு அதிக வருமானம் ஈட்டி தருவது கோவில்பட்டி ரெயில் நிலையம் ஆகும்.
    • வியாபாரிகள் தொழில் சம்பந்தமாக, வர்த்தக ரீதியாக ரெயில் போக்குவரத்தையே நம்பியே உள்ளனர்.

    கோவில்பட்டி:

    முன்னாள் தெற்கு ரெயில்வே மதுரை கோட்ட ஆலோசனை குழு உறுப்பினர் மகேந்திரன், ரெயில்வே கோட்ட மேலாளருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    அதிக வருமானம்

    மதுரை கோட்டத்தில் நெல்லைக்கு பிறகு அதிக வருமானம் ஈட்டி தருவது கோவில்பட்டி ரெயில் நிலையம் ஆகும். இந்த சுற்று வட்டாரத்தில் விவசாயத்தை நம்பி அதிகம் பேர் வசித்து வருகின்றனர். மேலும் வியாபாரிகள் தொழில் சம்பந்தமாக வர்த்தக ரீதியாக ரெயில் போக்குவரத்தையே நம்பியே உள்ளனர்.

    கோவில்பட்டி ரெயில்வே நிலையம் ஏ கிரேடு அந்தஸ்தில் உள்ளது. ஆண்டுக்கு சுமார் ரூ. 10 கோடி வருவாய் ஈட்டி தருகிறது. கடந்த கொரோனா காலகட்டத்தில் இங்கு ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டு தற்போது மீண்டும் ரெயில்வே போக்குவரத்தை தொடங்கிய போதும் கொரோனா காலகட்டத்திற்கு முன்பு கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நின்று சென்ற ரெயில்கள் தற்போது நிற்காமல் செல்கிறது.

    உடனடியாக நடவடிக்கை

    இதனால் இந்த பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் விவசாயிகள், மாணவர்க ள்பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். எனவே தாங்கள் பொதுமக்களின் நலன் கருதி மீண்டும் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் கோவில்பட்டி ரெயில்நிலையத்தில் நிற்காமல் செல்லும் தினசரி ரெயில்களான மதுரை- புனலூர், சென்னை- கன்னியாகுமரி, வாரந்திர ரெயில்கள் கன்னியா குமரி- ராமேஸ்வரம், நிஜாமுதீன்- கன்னி யாகுமரி, நாகர்கோவில்- சென்னை எழும்பூர், செங்கோட்டை- சென்னை உள்ளிட்ட ரெயில்களை கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதேபோல் கோவில்பட்டி ரெயில்வே நிலையத்தில் உள்ள 2-வது நடைமேடையில் கழிப்பறை வசதி இல்லாமல் பொதுமக்கள் சிரம படுகின்றனர். மேலும் ரெயில் பெட்டிகள் நிற்கும் இடம் தெரியவில்லை. முதியோர்களை அழைத்துச் செல்ல பேட்டரி வாகனம் போன்ற வசதிகளை இல்லாமல் உள்ளது. எனவே இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    • தண்டவாள பணிகள் நடப்பால் நாளை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக ெரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    • எர்ணாகுளம் ெரயில் நிலையத்திற்கு மாலை 3:40 மணிக்கு சென்றடையும்.

    திருப்பூர்:

    தண்டவாள பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை 22-ந்தேதி பாட்னா - எர்ணாகுளம் ெரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ெரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    பாட்னா - எர்ணாகுளம் (22644) வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் பாட்னாவில் நாளை 22-ந் தேதி புறப்பட்டு, கோவைக்கு 24ந்தேதி காலை 10:27 மணிக்கு வந்தடையும். எர்ணாகுளம் ெரயில் நிலையத்திற்கு மாலை 3:40 மணிக்கு சென்றடையும்.இந்நிலையில் ஒடிசா அருகே உள்ள பஹானகா பஜாரில் தண்டவாள பணிகள் நடப்பால் நாளை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக ெரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    • முருகன் இன்று காலை தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
    • நெல்லை வழியாக செங்கோட்டைக்கு சென்ற ரெயிலில் முருகன் அடிபட்டு இறந்தது விசாரணையில் தெரியவந்தது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த சுத்தமல்லி அருகே உள்ள பட்டன் கல்லூர் வடக்கு காலனி தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 40). இவர் இன்று காலை பட்டன் கல்லூருக்கு சற்று தொலைவில் நெல்லை - செங்கோட்டை ரெயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்த சுத்தமல்லி போலீசார் நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சந்திப்பு ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்யதாஸ், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் இன்று காலை தாம்பரத்தில் இருந்து நெல்லை வழியாக செங்கோட்டைக்கு சென்ற ரெயிலில் அடிபட்டு இறந்தது தெரியவந்தது.

    மேலும் அவர் தற்கொலை செய்வதற்காக தண்டவாளத்தில் தலைவைத்து படுத்திருந்ததும், ரெயில் மோதியதில் தலை துண்டிக்கப்பட்டு இறந்ததும் தெரிய வந்தது.

    அவரது உடலை மீட்டு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×