search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "training classes"

    • இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டது.
    • குரூப் 2 முதன்மை தேர்வு

    திருச்சி:

    திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப் 2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்கியது. வேலைவாய்ப்பு அலுவலக இணை இயக்குனர் (சென்னை) அனிதா பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்தார். இதில் திருச்சி மண்டல இணை இயக்குனர் (வேலை வாய்ப்பு) சந்திரன் மற்றும் துணை இயக்குனர் மகாராணி, உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர். இன்று தொடங்கிய இலவச பயிற்சி வகுப்பானது 25.2.2023 வரை நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் இலவச பயிற்சி முகாமில் பங்கேற்று உள்ளனர்.

    • 2-ம் நிலை காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நடத்தப்படுகிறது
    • ராணிப்பேட்டை கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய த்தால் அறிவிக்கப்பட்ட இரண்டாம் நிலை காவலர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பித்த ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் வருகிற 1-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கப்பட உள்ளது.

    இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்பும் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மையத்தில் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04172-291400 வாயிலாகவோ தங்களது விருப்பத்தினை செல்போன் எண்ணுடன் தெரிவிக்கலாம். மேலும் ranipetjobfair@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

    மேலும் மத்திய மாநில அரசு பணியிடங்களுக்கான பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் பிரத்தியேக https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் மென் பாட குறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள் மற்றும் மாதிரி தேர்வுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

    எனவே போட்டித் தேர்வுக்கு தயாராகும் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த அனைத்து மாணவர்களும் தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

    • கடந்த 19 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் இந்த கல்வி மையத்தில் இதுவரை 21 ஆயிரம் பேர் தேர்வு எழுதி வெற்றி பெற்று நாட்டின் பல்வேறு பகுதி–களில் அதிகாரிகளாக, அலுவலராக பணியாற்றி வருகின்றனர்.
    • தினமும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வகுப்புகளைப் பொருத்தமட்டில் நேரடி வகுப்புகளும், ஆன்லைன் வகுப்புகளும் உள்ளன.

    திருச்சி:

    திருச்சி ராம்ஜி நகர் கே. கள்ளிக்குடியில் என்.ஆர்., ஐ.ஏ.எஸ். அகாடமி கல்வி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர.எஸ்., யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி., ரயில்வே உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    கடந்த 19 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் இந்த கல்வி மையத்தில் இதுவரை 21 ஆயிரம் பேர் தேர்வு எழுதி வெற்றி பெற்று நாட்டின் பல்வேறு பகுதி–களில் அதிகாரிகளாக, அலுவலராக பணியாற்றி வருகின்றனர்.

    இங்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஆகிய யு.பி.எஸ்.சி.மெயின் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு நாளை தொடங்குகிறது.

    பயிற்சி வகுப்பு தொடர்பாக என்.ஆர்.,ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குனர் ஆர். விஜயாலயன் கூறும்போது,

    வாரத்தில் ஆறு நாட்கள் தொடர்ச்சியாக சிறந்த கல்வியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். தினமும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வகுப்புகளைப் பொருத்தமட்டில் நேரடி வகுப்புகளும், ஆன்லைன் வகுப்புகளும் உள்ளன.

    தமிழில் மெயின் தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    யுபிஎஸ்சி தேர்வுகளுக்கென தனியாக பயிற்சி வகுப்பு நடத்தப்படும். ஆண்,பெண் இருபாலருக்கும் தனித்தனி விடுதி வசதிகள் கல்வி மைய வளாகத்தில் அமைந்துள்ளன என்றார்.

    • விடுமுறை நாட்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது என அரசிடம் வலியுறுத்தியுள்ளதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
    • கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மறுக்க–ப்பட்டுள்ள சரண்டர் விடுப்பு திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், மயிலாடுதுறை மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு மாநில அமைப்புச் செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, திரு முருகவேல் முன்னிலை வகித்தனர் மாநில பொதுச்செயலாளர் இலா. தியோடர் ராபின்சன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

    அதன் பின்னர் தியோடர் ராபின்சன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும் என்வும் சம வேலைக்கு சம ஊதியம் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.அண்ணாவின் மீது ஆணையிட்டு தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்த தமிழக அரசு தன் பங்கேற்பு திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றார்.

    மேலும் 3 சதவீத அகவிலைப்படியை மத்திய அரசு கடந்த ஜனவரி 1-ஆம் தேதியிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது. அதே போன்று தமிழக அரசு ஊழியர்களுக்கும் அதே தேதியிட்டு 3 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும் எனவும் கேட்டு க்கொண்டார். கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மறுக்க–ப்பட்டுள்ள சரண்டர் விடுப்பு திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் எனவும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலர் வலியுறுத்தினார்.

    அதோடு மருத்துவ கல்லூரியில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது போன்றும் அரசு பள்ளியில் பயின்று மேற்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு ரூ.1000 தொகை வழங்கும் திட்டங்களை அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். விடுமுறை நாட்களில் இடைநிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது மன உளைச்சலையும், மன வேதனையைத் தருகிறது.

    விடுமுறை நாட்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது என அரசிடம் வலியுறுத்தியுள்ளதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார். அரசுப்பள்ளிகளில் எமிஸ் எண் பதிவேற்றம் செய்ய கட்டாயப்படுத்துவது ஆசிரியர்களுக்கு மன உளைச்சலுக்கு ஆளாகிறது. கிராம மற்றும் மலைப் பகுதிகளில் தேவையான அதிக திறன் கொண்ட இணைய வசதி சர்வர் பயன்பாட்டை ஏற்படுத்த வேண்டும். அரசுப் பள்ளிகளில் வைபை ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் கூறினார். இதில் வேல்மணி, பிரபு, செல்வம், வாகீசன், ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ×