என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "transgender murder"
- நெல்லை சுத்தமல்லியை சேர்ந்தவர் பிரபு திருநங்கையான இவர் நேற்று ரெட்டியார்பட்டி நான்கு வழிச்சாலையில் காயங்களுடன் மயங்கி கிடந்தார்.
- பிரபு மற்றும் அவருடன் வந்தவர்கள் லாரியில் இருந்த ரூ.5 ஆயிரத்தை எடுத்தனர்.
நெல்லை:
நெல்லை சுத்தமல்லியை சேர்ந்தவர் பிரபு ( வயது 35). திருநங்கையான இவர் நேற்று ரெட்டியார்பட்டி நான்கு வழிச்சாலையில் காயங்களுடன் மயங்கி கிடந்தார்.
கொலை
அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இந்த கொலை குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விசாரணையில் கோவில்பட்டி அருகே உள்ள திட்டங்கு ளத்தை சேர்ந்த லாரி டிரைவர் ரமேஷ்குமார் என்பவரை பிரபுவை கொலை செய்தது தெரியவந்தது.
டிரைவர் கைது
இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசர் அவரிடம் விசா ரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:-
ரெட்டியார்பட்டி நான்கு வழிப்பாதையில் எனது லாரியை நிறுத்தி விட்டு நானும், லாரி கிளீனரும் டீ குடிக்க சென்றோம். அப்போது அங்கு பிரபு மற்றும் அவருடன் வந்தவர்கள் லாரியில் இருந்த ரூ.5 ஆயிரத்தை எடுத்தனர்.
இதைப்பார்த்த நான் அவர்களை கண்டித்தேன். அப்போது ஆத்திரம் அடைந்த அவர்கள் பணத்தை திரும்பி தர மறுத்ததுடன் என்னை ஆபாசமாக திட்டினர். இதனால் ஆத்திரம் அடைந்த நான் சுத்தியலால் பிரபுவை தாக்கிவிட்டு அங்கிருந்து சென்று விட்டேன். இதில் அவர் இறந்து விட்டார். என்று கூறினார்.
அவர் கூறிய தகவல்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி எஸ்.எஸ்.மாணிக்கப்புரத்தை சேர்ந்தவர் ராஜாமான்சிங் என்ற ராசாத்தி (வயது 38). திருநங்கையான இவர் தாளமுத்துநகர் முருகன் தியேட்டர் அருகே உள்ள சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் பூசாரியாகவும், கோவில் நிர்வாகத்தை கவனித்தும் வந்தார்.
இவருக்கும், அந்த கோவிலில் ஏற்கனவே பூசாரியாக இருந்த பூபால்ராயர்புரத்தை சேர்ந்த பாண்டி மகன் மருது(26) என்பவருக்கும் கோவிலில் பூஜை செய்வது, நிர்வாகத்தை கவனித்து கொள்வது தொடர்பாக முன்விரோதம் இருந்தது. தற்போது அந்த கோவிலில் கொடை விழா நடக்க உள்ளது. அதற்காக ராசாத்தி தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து நன்கொடை வசூல் செய்து கோவில் கொடை விழாவிற்கு பத்திரிகை அடித்துள்ளார்.
அந்த பத்திரிகையில் மருதுவின் பெயரை போடவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த மருது தனது நண்பருடன் நேற்று முன்தினம் மாலையில் கோவிலுக்கு சென்றார். அங்கு கோவில் முன்பு நின்று கொண்டிருந்த ராசாத்தியிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்டி தலையை துண்டித்து படுகொலை செய்தார்.
இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா உத்தரவின் பேரில் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் மேற்பார்வையில், வடபாகம் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜாமணி, சங்கர், ஞானராஜ், ஜீவமணி தர்மராஜ் ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள ஒரு காட்டு பகுதியில் கொலையாளிகள் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்றனர். ஆனால் அதற்குள் கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
தலைமறைவாக உள்ள பூசாரி மருது மற்றும் அவரது நண்பரை தனிப்படை போலீசார் தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்