என் மலர்
நீங்கள் தேடியது "Travel"
- காசி தமிழ் சங்கம விழாவை நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
- காசி தமிழ் சங்கம விழாவிற்கு செல்லும் தமிழர்களை ரயில்வே நிலையங்களில் உற்சாகமாக வரவேற்று உபசரித்து அனுப்பி வைக்கும் பணி யில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
சேலம்:
காசி தமிழ் சங்கம விழாவை நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிலையில், தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் காசிக்கு செல்ல வசதியாக சிறப்பு ரயில்களை காசி தமிழ் சங்கம எக்ஸ்பிரஸ்களாக ரயில்வே நிர்வாகம் இயக்கத் தொடங்கியுள்ளது. காசி தமிழ் சங்கம விழாவிற்கு செல்லும் தமிழர்களை ரயில்வே நிலையங்களில் உற்சாகமாக வரவேற்று உபசரித்து அனுப்பி வைக்கும் பணி யில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வகையில், சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கோவை, சேலத்தில் இருந்து காசி தமிழ் சங்கம விழாவிற்கு ஆன்மீகவாதிகள், முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் செல்ல வசதியாக எர்ணாகுளம்- பாட்னா எக்ஸ்பிரசில் (22669) சிறப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டு இன்று முதல் இயக்கப்படுகிறது. எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு வரும் இந்த ரயிலில் இணைக்கப்பட்டுள்ள சிறப்பு பெட்டிகளில், கோவையில் இருந்து 81 பயணிகளும், சேலத்தில் இருந்து 51 பயணிகளும் என 132 பேர் புறப்பட்டு சென்றனர். சேலம் ஜங்ஷன் ரெயில்வே ஸ்டேஷனுக்கு இன்று காலை 7.20 மணிக்கு காசி தமிழ் சங்கம சிறப்பு எக்ஸ்பிரஸ் சேலத்தில் இருந்து 51 பேர் புறப்பட்டனர்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகரிக்கும் விபத்தால் பொதுமக்கள் அச்சத்தில் பயணம் செய்து வருகின்றனர்.
- இந்த வழித் தடத்தில் குடி போதையில் வாகனங்களை ஓட்டிச் செல்வோரின் எண்ணிக்கையும் அதி கரித்து வருகிறது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், தேவிபட்டினம், ஏர்வாடி, உத்தரகோசமங்கை, திருப்புல்லாணி, சேதுக்கரை ஆகிய இடங்களில் புண்ணிய தலங்கள் உள்ளன. இதன் காரணமாக வெளி மாநி லங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்துக்களை தவிர்ப்பதற்காக தொடங்கப்பட்ட ''ஹைவே பேட்ரோல்'' போலீசார் பணியை முறையாக மேற்கொள்ளாததால் வாகனங்களின் விதி மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த வழியாக செல்லும் லாரிகள் அசுர வேகத்தில் செல்வதால் ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த வழித் தடத்தில் குடி போதையில் வாகனங்களை ஓட்டிச் செல்வோரின் எண்ணிக்கையும் அதி கரித்து வருகிறது. செக் போஸ்ட்டில் போலீசார் இல்லாதால் விபத்துகளை ஏற்படுத்தும் டிரைவர்கள் எளிதில் தப்பிச் சென்று விடுகின்றனர்.
இரவில் நடந்து செல்ப வர்கள் மீது வாகனம் மோதுவதும், அதி வேகத்தில் செல்லும் வாகனங்கள் தலை குப்புற கவிழ்வதும், அசுர வேகத்தில் வாகனங்கள் செல்வதும், இந்த சாலையில் தொடர்கதையாக உள்ளது. நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்துக்களை தவிர்ப்பதற்காக தொடங்கப்பட்ட ரோந்து போலீசார் தலை காட்டுவதே கிடையாது.
இதனால் இந்த பகுதியில் உயிர்பலி எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் செப்டம்பர் மாதம் வரை 262 வாகன விபத்துகள் ஏற்பட்டு, அதன் மூலம் 281 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் 123 விபத்துகள் இருசக்கர வாகனங்களால் ஏற்பட்டு 126 பேர் உயிரிழந்துள்ளனர். கண் துடைப்பு நடவடிக்கையாக மாதத்திற்கு ஒரு முறை போக்குவரத்து போலீசார் ஆய்வு என்ற பெயரில் இரண்டொரு வழக்குப் பதிவு செய்து 'சாதனை' செய்கின்றனர்.
இதை தடுக்க ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
- பொதுமக்கள் அனைவரும் நலமுடனும் வளமுடனும் வாழ வேண்டும்.
- கடந்த 8-ம் தேதி சென்னை வில்லிவாக்கத்தில் இருந்து சபரிமலைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருக்கின்றேன்.
கும்பகோணம்:
சென்னை வில்லிவா க்கத்தை சேர்ந்தவர் பழனிசாமி.
இவர் கும்பகோணம் அருகே சாலையில் இருமுடி தலையில் வைத்து சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அவரிடம் பொதுமக்கள் விசாரித்தபோது, நான் தினக்கூலி அடிப்படையில் எலக்ட்ரிகல் வேலை செய்து வருகிறேன்.
சபரிமலை ஐயப்பன் துணையாலேயே நல்ல விதமாக எனது குடும்பத்தை நடத்தி வருகின்றேன்.
17-வது வருடமாக சபரிமலை செல்லும் நான் பொதுமக்கள் அனைவரும் நலமுடனும் வளமுடனும் வாழ வேண்டும் என்பதற்காக சுமார் 650 கிலோமீட்டர் வரை சைக்கிளில் செல்ல முடிவு செய்து கடந்த 8-ம் தேதி சென்னை வில்லிவாக்கத்தில் இருந்து சபரிமலைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருக்கின்றேன் என்றார்.
நேற்று இரவு உணவை சோழபுரத்தில் முடித்துவிட்டு சைக்கிள் பயணத்தை தொடர்ந்தார். இன்று காலை தஞ்சாவூர், திருச்சி, கரூர், திண்டுக்கல் வழியாக சபரிமலை செல்கிறார்.
- பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.
- சேலம் கோட்டத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட தில் 8 நாட்களில் 1.11 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.
சேலம்:
சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 1900 பஸ்கள் இயக்கப்படுகிறது. பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.
அதன்படி பொங்கல் பண்டிகையொட்டி சேலம் கோட்டத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மதுரை, கோவை, கடலூர், வேலூர், திருச்சி உள்பட பல இடங்களுக்கு 500 சிறப்பு பஸ்கள் கடந்த 12-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை இயக்கப்பட்டது.
சேலம் கோட்டத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட தில் 8 நாட்களில் 1.11 கோடி
பேர் பயணம் செய்துள்ள தாகவும், 2 கோடி கூடுதல் வருமானம் கிடைத்து உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மாணவர்கள் ஆபத்தான நிலையில் படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணம் செய்கின்றனர்.
- பஸ்கள் சரியான நேரத்தில் வராததால் மாணவர்கள் கடும் அவதி.
அதிராம்பட்டினம்:
பட்டுக்கோட்டை மற்றும் அதிராம்பட்டினத்திற்கு இடைப்பட்ட ஊர்க ளான முதல்சேரி, பள்ளிக்கொ ண்டான், சேண்டாக்கோட்டை, மாளியக்காடு போன்ற பகுதிகளில் பல்வேறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் தினமும் தங்கள் அத்தியாவசிய தேவைக்கா கவும், பணி நிமித்தமாகவும் பட்டுக்கோட்டைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில், அதிராம்பட்டினத்தில் இருந்து பட்டுக்கோட்டைக்கு செல்ல இடைநில்லா பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் மேற்கண்ட கிராமங்களில் நின்று செல்வதில்லை.
இதனால் அந்த கிராமங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால் அரசு மற்றும் தனியார் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் ஆபத்தான நிலையில் படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணம் செய்கின்றனர்.
அந்த பஸ்களும் சரியான நேரத்தில் வராததால் மாணவர்களும், பொதுமக்களும் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
எனவே, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி இடைப்பட்ட ஊர்களில் நின்று செல்லும் வகையில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மாணவர்கள் பஸ் படிகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்யும் நிலை இருந்தது.
- வடரெங்கம் வழிதடத்தில் பஸ்கள் இயக்கப்பட்டது.
சீர்காழி:
சீர்காழியிலிருந்து கொண்டல் வழியாக வடரெங்கத்திற்கு 2 நகர அரசு பேருந்துகள் இயக்கப்பட்டுவருகிறது.இதனிடையே பள்ளி நேரங்களில் பேருந்துகளில் அதிகளவு பயணிகள், மாணவர்கள் பயணம் செய்யும் நிலையால் மாணவர்கள் பேருந்து படிகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்யும் நிலை இருந்தது.
இதனையடுத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சீர்காழி கிளை மேலாளர் வடிவேல் உத்தரவின்படி வடரெங்கம் கிராமத்திற்கு பள்ளி நேரத்தில் கூடுதல் அரசுபேருந்து இயக்கப்பட்டது.
சென்னை மற்றும் புறநகர் செல்லும் மாற்று பேருந்துகளை வடரெங்கம் வழிதடத்தில் இயக்கி மாணவ -மாணவிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டதுள்ளது.
- ரெயிலில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பயணம் செய்தனர்.
- ரெயில் நிலையங்களில் ரெயிலுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, நாகை மாவட்டம் வேதார ண்யம் அருகே உள்ள அகஸ்தியம்பள்ளி இடையே ரெயில் போக்குவரத்து 20 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கியது. மீட்டர் கேஜ் பாதையில் இருந்து அகல ரெயில் பாதையாக ரூ.480 கோடி மதிப்பீட்டில் மாற்றப்பட்ட நிலையில் நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக இந்த ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
அதனை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி ரெயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி கோட்ட ரெயில்வே பொதுமேலாளர் மணீஷ் அகர்வால், செல்வராஜ் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் பூண்டி கலைவாணன், மாரிமுத்து, ஓ.எஸ் மணியன், ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர், நகராட்சி தலைவர் கவிதா பாண்டியன், வர்த்தக சங்கத் தலைவர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு திருத்துறைப்பூண்டி ரெயில் நிலையத்தில் அகஸ்தியம்பள்ளிக்கு புறப்பட்ட ரெயிலுக்கு கொடி அசைத்து வழியனுப்பி வைத்தனர். அந்த ரெயிலில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பயணம் செய்தனர்.
கரியாப்பட்டினம், குரவப்புலம், தோப்புத்துறை, வேதாரண்யம், அகஸ்தியம்பள்ளி ஆகிய ரெயில் நிலையங்களில் ரெயிலுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அந்தந்த ரெயில் நிலையங்களில் இனிப்பு வழங்கப்பட்டது.இந்த ரெயிலானது, தினசரி காலை 6 மணிக்கு திருத்துறைப்பூண்டியில் இருந்து புறப்பட்டு 6.45 மணிக்கு அகஸ்த்தியம் பள்ளியையும், மீண்டும் காலை 7 மணிக்கு அகஸ்தியம்பள்ளியில் இருந்து புறப்பட்டு திருத்துறைப்பூண்டியை காலை 7.45 மணிக்கும் வந்தடையும். அதேபோல், மாலை 6 மணிக்கு திருத்துறைப்பூண்டியில் இருந்தும், மீண்டும் 7 மணிக்கு அகஸ்தியம்பள்ளியில் இருந்தும் இந்த இயக்கப்படுகிறது.
- மதுரையில் இருந்து 50 வாகனங்களில் 1500 பேர் பயணம் செய்தனர்.
- மாநில தலைவர் முத்துக்குமார் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.
மதுரை
தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மதுரை மண்டல தலைவர் மைக்கேல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் 40-வது வணிகர் தின விழாவை முன்னிட்டு நாளை (5-ந் தேதி) சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வி.ஜி.பி. தங்க கடற்கரையில் சுதேசி விழிப்புணர்வு மாநாடு நடைபெறுகிறது. நாளை காலை 9 மணிக்கு கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
இதில் நான் (மைக்கேல்ராஜ்) தலைமை தாங்குகிறேன். சங்கத்தின் பல்வேறு நிர்வாகிகள் முன்னிலை வகிக்கிறார்கள். மாநில தலைவர் முத்துக்குமார் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுகிறார். தொடர்ந்து நாளை காலை 9.30 மணிக்கு கலைநிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து சுதேசி விழிப்புணர்வு மாநாடு கூட்டம் நடைபெறுகிறது.
இதில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றுகிறார். த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் நலத்திட்ட உதவி களை வழங்கி பேசுகிறார். இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
சென்னையில் நடக்கும் இந்த மாநாட்டில் மதுரை மண்டலத்தின் சார்பில் நிர்வாகிகள் சூசை அந்தோணி, தங்கராஜ், சில்வர் சிவா, குட்டி என்ற அந்தோணி ராஜ், ஸ்வீட் ராஜன், ஜெயக்குமார், தேனப்பன், வக்கீல் கண்ணன், , சுருளி, ஆன்ந்த், அப்பாஸ், ராமர், கரன்சிங், வாசுதேவன், மூங்கில் கடை ரவி, பிச்சைப்பழம், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.
மதுரை மண்டலத்தில் இருந்து தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையினர் 50 வாகனங்களில் 1500-க்கும் மேற்பட்டோர் இன்று மாலை மாநாட்டிற்கு புறப்பட்டு செல்கின்றனர்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.
- திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் கூட்ரோடு அருகே சென்ற போது எதிரே வந்த கார் பஸ் மீது மோதியது.
- இதில் பஸ்சில் பயணம் செய்த புதுவை சுத்திக்கேணி பகுதியைச் சேர்ந்தவர்கள் படுகாயம் அடைந்தனர்.
விழுப்புரம்:
செஞ்சியில் இருந்து நேற்று காலை அரசு பஸ் திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ் கடலாடி குளம் கூட்ரோடு அருகே சென்ற போது எதிரே திருவண்ணா மலை யில் இருந்து செஞ்சி நோக்கி வந்த கார் பஸ் மீது மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த புதுவை சுத்திக்கேணி பகுதியைச் சேர்ந்த சிவபெருமான் மகன் கல்விக்கரசன் (வயது 26) சிவபெருமான் மனைவி ஆதிலட்சுமி வயது( 50), அன்பரசன் மகன் தனிய ரசன் (வயது 30)மண்ணாங் கட்டி மகன் செல்வகுமார் (வயது 43) செல்வகுமார் மனைவி கவுசல்யா (வயது 35) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காரில் வந்தவர்கள் திருவண்ணா மலையில் கிரிவலம் முடித்துக் கொண்டு மீண்டும் புதுவைக்கு திரும்பும்போது விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இச்சம்பவம் குறித்து நல்லாண் பிள்ளை பெற்றால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை செய்து வருகி றார்கள்.
- விழிப்புணர்வு நடை பயணத்தை அமைச்சர்கள் மூர்த்தி, மதிவேந்தன் தொடங்கி வைத்தனர்.
- அரிய வகை உயிரினங்கள் இந்த பகுதியில் உள்ளன.
மதுரை
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் இடையபட்டி தெற்கு பகுதி அம்முர் உள்ளடக்கிய வெள்ளிமலை ஆண்டவர் கோவில் பகுதியில் சர்வதேச பல்லுயிர் பெருக்க நாளை முன்னிட்டு இயற்கை நடைபயணம் நடந்தது. இதனை அமைச்சர்கள் மூர்த்தி, மதிவேந்தன் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.
இந்த நடை பயணத்தில் சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன், ஒன்றிய தலைவர்கள் மற்றும் வழக்கறிஞர் கலாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் மதிவேந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-
உலகம் முழுவதும் நாளை (22-ந் தேதி) சர்வதேச பல்லுயிர் பெருக்க நாளாக கடைப்பிடிக் கப்படுகிறது. அதனை முன்னிட்டு தமிழ்நாடு வனத்துறை ஒவ்வொரு ஆண்டும் பல்லுயிர் வாழும் இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு இடைய பட்டியை தேர்வு செய்து இங்கு இந்த விழிப்புணர்வு பயணத்ைத நடத்துகிறோம். இது கடம்ப மரம் உள்ளிட்ட பல மரங்கள் கொண்ட சமவெளி காடு ஆகும்.
இங்கே பல்லுயிர்கள் இருக்கிறது. இதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் இந்த நடை பயணத்தை தொடங்கி உள்ளோம். இந்த பகுதியில் பல்வேறு மரங்கள், மூலிகை செடிகள் மற்றும் தேவாங்கு உள்ளிட்ட பல்லுயிர்கள் வாழுகின்ற இடமாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் சமவெளி காட்டில் கடம்பவனம் என்பது குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் தான் இருக்கிறது. இங்கு கடம்ப மரம் மட்டுமின்றி உசிலை, குறுந்தம், நெய் குறுந்தம், பூவந்தி போன்ற மரங்களும் இருக்கிறது. இங்கு மருத்துவ குணம் கொண்ட காந்தன், விருது விராலி, மருள், சிறு குஞ்சன் போன்ற மூலிகை செடிகளும் உள்ளன.
இது தவிர தேவாங்கு, முள் எலி, எறும்புத்தின்னி, புள்ளிமான், காட்டுப்பன்றி போன்ற அரிய வகை உயிரினங்களும் இந்த பகுதியில் உள்ளன.
எனவே இந்த பகுதியை பாதுகாக்க வேண்டும். இதில் உள்ள முக்கியத்துவம் கருதி இங்குள்ள காட்டு பகுதிகள் அழிந்து விடாமல் பாதுகாக்கப்பட வேண்டும், இங்குள்ள நீர் நிலைகள், மரங்கள், பூச்சிகள் எல்லாமே நாம் வாழுகின்ற உலகத்தில் அனைத்து உயிர்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களை நேரில் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- மாடலாக முடிவெட்டி இருந்தால் தலைமை ஆசிரியரிடம் புகார் கூறுவோம் என விழிப்புணர்வு செய்தனர்.
சென்னை:
சென்னையில் பள்ளி செல்லும் மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்யாதிருத்தல் மற்றும் பாதுகாப்பான முறையில் பயணம் செய்வது குறித்து போக்குவரத்து போலீசார் பல்வேறு விழிப்புணர்வுகளை வழங்கி வருகின்றனர்.
புரசைவாக்கம் கங்காதீசுவரர் கோவில் சாலையில் வேப்பேரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு தலைமையில் போலீசார் சென்னை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களை நேரில் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பள்ளிக்கு குறித்த நேரத்திற்கு வர வேண்டும். படிக் கட்டில் பயணம் செய்யக் கூடாது. ஸ்டைலாக முடி வைக்க கூடாது. பெற்றோருக்கும், பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்க்கும் நோக்கில் நன்கு படிக்க வேண்டும்.
உலகில் ஒருவருக்கு பெரிய சொத்து என்பது கல்விதான். எனவே கல்வியை நன்றாக கற்க வேண்டும்.
மாடலாக முடிவெட்டி இருந்தால் தலைமை ஆசிரியரிடம் புகார் கூறுவோம் என விழிப்புணர்வு செய்தனர். போலீசாரின் இந்த முயற்சிக்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் பாராட்டினர்.
- காலை 10.45 மணிக்கு பதிலாக 55 நிமிடங்கள் முன்னதாக காலை 9.50 மணிக்கு புறப்படும்.
- பகல் 12.30 மணிக்கு பதிலாக 50 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 1.20 மணிக்கு புறப்படும்.
தஞ்சாவூர்:
திருச்சியில் இருந்து காரைக்காலுக்கு முன்பதிவு இல்லா விரைவு ரெயில் (வண்டி எண்: 06880) தினமும் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நாளை முதல் ( திங்கள் கிழமை ) திருச்சியிலிருந்து வழக்கமாக காலை 10.45 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 55 நிமிடங்கள் முன்னதாக காலை 9.50 மணிக்கு புறப்படும்.
இந்த ரெயில் காரைக்காலுக்கு பிற்பகல் 3 மணிக்குப் பதிலாக, 2.05 மணிக்கு சென்றடையும்.
அதேபோல காரைக்காலில் இருந்து தஞ்சாவூருக்கு இயக்கப்படும் முன்பதிவு இல்லா விரைவு ரெயில் (வண்டி எண்: 06457) நாளை ( திங்கள் கிழமை) முதல் வழக்கமாக பகல் 12.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 50 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 1.20 மணிக்கு புறப்படும்.
மேற்கண்ட தகவலை தெற்கு ரயில்வே சாா்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.