search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "trips"

    • மாணவர்களை குறித்து சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்தனர்.
    • தொங்கியபடி சென்றால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்

    கடலூர்:

    பண்ருட்டியில் இருந்து சேந்த நாடு செல்லும் அரசு பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணங்களை மேற்கொண்ட மாணவர்களை குறித்து சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக அரசு பஸ் போக்குவரத்து அதிகாரிகள் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு செட்டிபாளையம், தட்டாஞ்சாவடி பகுதி சேர்ந்த சில மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிபடி சென்றனர்.

    இதனைத் தொடர்ந்து பண்ருட்டி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார், போக்குவரத்து அதிகாரிகள் பஸ்சை நிறுத்தி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். தொடர்ந்து, யாராவது பஸ்சில் தொங்கியபடி சென்றால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்களிடமும், பஸ் டிரைவர், கண்டக்டரிடமும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சீனாவின் கொரோனா கட்டுப்பாடு தளர்த்தப்படுவதற்கு முந்தைய காலகட்டத்தைவிட 48.9% அதிகமாகும்.
    • 2019ம் ஆண்டு அளவுகளில் இது 26.2% மட்டுமே இருந்தது.

    கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்ததை அடுத்து, சீனா தளர்வுகளை அறிவித்தது. சீனாவிற்கு வரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் போன்ற கட்டுப்பாடுகள் ரத்து செய்ததை அடுத்து, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை சீனா தனது எல்லைகளை மீண்டும் திறந்தது.

    இந்நிலையில், சீனாவில் ஜனவரி 8ம் தேதியில் இருந்து 12ம் தேதிக்கு இடையில் மட்டும் தினமும் சுமார் 4,90,000 பயணிகள் பயணம் செய்துள்ளதாக அந்நாட்டின் குடியேற்றப் பணியகத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    இது சீனாவின் கொரோனா கட்டுப்பாடு தளர்த்தப்படுவதற்கு முந்தைய காலகட்டத்தைவிட 48.9% அதிகமாகும். ஆனால் 2019ம் ஆண்டு அளவுகளில் இது 26.2% மட்டுமே இருந்தது.

    அதாவது 4,90,000 எண்ணிக்கையில், 2,50,000 பயணிகள் சீனாவிற்குள் நுழைந்ததாகவும், 2,40,000 பயணிகள் சீனாவில் இருந்து வெளியேறியதாகவும் அதிகாரி கூறினார்.

    ×