என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ukraine russia war"
- உக்ரைன் எதிர்தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ரஷியா அதிரடி தாக்குதல்
- உக்ரைன் அதிபர் ரஷிய கொலைக்காரர்களின் தாக்குதல் என கடும் விமர்சனம்
உக்ரைன்- ரஷியா இடையிலான போர் 475 நாட்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. ரஷியா ஆக்கிரமித்த பகுதிகளை மீட்க உக்ரைன் தீர்மானித்துள்ளது. மேற்கத்திய நாடுகளின் உதவியோடு எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ஏழு கிராமங்களை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரில் ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின் மையப்பகுதியில் இருக்கும் கிரிவி ரிஹ் என்ற இடத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் 3 பேர் பலியானார்கள். 20 -க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை ஐந்து மாடி கட்டிடத்தை தாக்கியதாகவும், இதில் அந்த கட்டிடம் தீப்பிடித்து எரிந்தாகவும் டினிபிரோபெட்ரோவிஸ்க் பிராந்திய கவர்னர் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும், மீட்கும்பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
16 மாதங்களாக நடைபெற்று வரும் தாக்குதலில் தற்போது இந்த ஊர் சிக்கியுள்ளது. ஏவுகணை அடுக்குமாடி குடியிருப்பை தாக்கியது, ஜன்னல்கள் உடைந்தது உள்ளிட்ட படங்களை ஜெலன்ஸ்சி வெளியிட்டுள்ளார். மேலும் பயங்கரவாத ஏவுகணைகள் எனக் குறிப்பிட்டுள்ள அவர், ரஷியாவின் கொலைக்காரர்கள் தொடர்ந்து கட்டிடங்கள், கிராமங்கள் மற்றும் மக்களுக்கு எதிராக போரை தொடர்கின்றனர் எனத் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றிரவு முழுவதும் பல்வேறு இடங்களை குறிவைத்து ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், ஆனால் ஏவுகணைகளை வான் பாதுகாப்பு ஆயுதங்கள் மூலம் முறியடித்துவிட்டதாகவும், சேதம் குறித்து உடனடி தகவல் ஏதும் கிடைக்கவில்லை எனவும் கிவ் ராணுவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் ஏழு கிராமங்களை மீண்டும் கைப்பற்றியதாக அறிவித்த நிலையில் ரஷியா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
- உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்கள் வழங்குவோம் என பிரான்ஸ் அதிபர் தகவல்
- புதின் பேச்சுவார்த்தைக்கு உடன்பட வேண்டும் என விருப்பம்
உக்ரைன் கடந்த சில நாட்களுக்காக ரஷியாவுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. பல முனைகளில் இருந்து தாக்குதல் நடத்துவால் ரஷியப் படைகள் சில இடங்களில் திணறி வருகிறது. இதனால் ஏழு கிராமங்களை மீண்டும் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவது மற்றும் ஜூலை மாதம் நடைபெற இருக்கும் நேட்டோ மாநாடு குறித்து ஆலோசனை நடத்த பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் போலந்து அதிபர்கள் கலந்து கொண்டு பேசினர். மூன்று தலைவர்களின் சந்திப்பு உக்ரைனுக்கு ஆதரவு என்பதை உறுதியளித்தது.
இதுத்தொடர்பாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கூறுகையில் ''இந்த எதிர்தாக்குதல் பல மாதங்கள் இல்லாவிட்டாலும், பல வாரங்கள் நடைபெறலாம். போர் தொடங்கியபோது, நாங்கள் வரையறுத்த எல்லைக்குள் எல்லாவற்றையும் செய்துள்ளோம்.
வரும் நாட்களில், வாரங்களில் தொடர்ந்து உக்ரைனுக்கு ஆயுதங்கள், வெடிப்பொருட்கள், ராணுவ வாகனங்கள் வழங்கப்படும். இந்த எதிர்தாக்குதல் வெற்றிகரமாக இருக்க வேண்டும். அதன்மூலம் புதின் உடன் பேச்சுவார்த்தை தொடங்க முடியும் என பிரான்ஸ் நம்புகிறது'' எனத் தெரிவித்தார்.
போலந்து அதிபர் டுடா உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி போனில் தொடர்ந்து கொண்டு, ''எங்களுடைய ஆதரவுடன் இந்த எதிர்தாக்குதலில் வெற்றி பெற முடியும் என நம்புகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
ஜெர்மன் அதிபர் ஷோல்ஸ் ''இந்த போரில் தனது திட்டம் தோல்வியடைந்து விட்டது, 16 மாதங்களாக நடைபெறும் போரை முடிவுக்கு கொண்டு வரலாம் என புதின் சிந்திக்க வேண்டிய நேரம் இது. அவர் துருப்புகளை திரும்பப் பெற்று இறுதியாக நியாயமான பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும்'' என்றார்.
ஆனால், மூன்று தலைவர்களும் நீண்ட கால பாதுகாப்பு உத்தரவாதம் குறித்து பேச மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
- உக்ரைன் பல முனைகளில் இருந்து தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது
- உக்ரைன் ஏழு கிராமங்களை ரஷியாவிடம் இருந்து மீட்டுள்ளது
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருவது 475 நாட்களை தாண்டியுள்ளது. கெர்சன், டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் பெரும்பாலான இடங்களை ரஷியா கைவசப்படுத்தியது. ஆனால் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கி வருவதால் உக்ரைன் பதிலடி கொடுத்து வந்தது.
தற்போது, இழந்த இடங்களை மீண்டும் மீட்பதற்காக உக்ரைன் அதிரடி எதிர்தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு வெற்றியும் கிடைத்துள்ளது. இன்று காலை நிலவரப்படி ஏழு கிராமங்களை மீட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
எதிர்தாக்குதலில் இது குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் என உக்ரைன் நம்புகிறது. சில இடங்களில் அனைத்து திசையிலும் இருநது உக்ரைன் பதிலடி கொடுப்பதால் ரஷிய வீரர்களால் அதை எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் பின் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிளிங்கன் கூறுகையில் ''உக்ரைனின் வெற்றிகரமான பதிலடி தாக்குதல் ரஷிய அதிபர் புதினை போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைக்கு தள்ளும்'' எனத் தெரிவித்துள்ளா்.
நேற்று பிளிங்கன் இத்தாலி வெளியுறவுத்துறை அமைச்சர் அன்டோனியா தஜானியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்த கருத்தை குறிப்பிட்டார்.
- ரஷியாவின் தாக்குதல்களை உக்ரைன், தனது நட்பு நாடுகளின் உதவிகளோடு எதிர்கொண்டு வருகிறது.
- தெற்கு சபோரிஜியா பகுதியில் உள்ள லோப்கோவோ, லெவாட்னே மற்றும் நோவோடரிவ்கா கிராமங்கள் மீண்டும் கைப்பற்றப்பட்டன.
உக்ரைன் -ரஷியா இடையிலான போர் ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து வருகிறது. ரஷியாவின் தாக்குதல்களை உக்ரைன், தனது நட்பு நாடுகளின் உதவிகளோடு எதிர்கொண்டு வருகிறது. இருப்பினும், ரஷியா தனது போரை முடிவுக்கு கொண்டுவருவதாக இல்லை.
இந்த நிலையில், கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் உள்ள ஏழு கிராமங்களை ரஷியப் படைகளிடம் இருந்து கைப்பற்றியதாக உக்ரைன் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த வார இறுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளில் கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் உள்ள ஏழு கிராமங்களை ரஷியப் படைகளிடம் இருந்து மீட்டுள்ளதாக துணை பாதுகாப்பு அமைச்சர் கன்னா மல்யார் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "தெற்கு சபோரிஜியா பகுதியில் உள்ள லோப்கோவோ, லெவாட்னே மற்றும் நோவோடரிவ்கா கிராமங்கள் மீண்டும் கைப்பற்றப்பட்டன.
கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பிரதேசத்தின் பரப்பளவு 90 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்" என்றார்.
- உக்ரைன் மீது படையெடுப்பதற்கான புதினின் முடிவிற்கு வட கொரியா துணை நிற்பதாக கிம் உறுதியளித்துள்ளார்.
- ரஷியா தனது அண்டை நாடான உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை தொடங்கி, முக்கிய பகுதிகளை ஆக்கிரமித்தது.
ரஷிய அதிபர் விளாடிமிர் புடினுடன், 'கரம்கோர்ப்பதாகவும்', நாட்டை சக்திவாய்ந்ததாக்கும் இலக்கிற்காக, திட்டமிட்ட செயலாக்கத்திற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதாகவும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் உறுதியளித்துள்ளதாக, அந்நாட்டு அரசு ஊடகமான கே.சி.என்.ஏ. செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷியாவின் தேசிய தினத்தையொட்டி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு கிம் வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். அந்த செய்தியில், உக்ரைன் மீது படையெடுப்பதற்கான புதினின் முடிவிற்கு வட கொரியா துணை நிற்பதாகவும், ரஷியாவிற்கு முழு ஆதரவு மற்றும் ஒத்துழைப்பை அளிப்பதாகவும் கிம் உறுதியளித்துள்ளார்.
"நீதி வெற்றி பெறுவது உறுதி என்றும், வெற்றி வரலாற்றிற்கு ரஷிய மக்கள் தொடர்ந்து பெருமை சேர்ப்பார்கள்", என்றும் கிம் தெரிவித்துள்ளார்.
ரஷியாவுடன் நெருக்கமான திறன் வாய்ந்த ஒத்துழைப்பிற்கு அழைப்பு விடுத்திருக்கும் கிம், இரு நாட்டு மக்களின் பொதுவான விருப்பத்திற்கு இணங்க, தத்தம் நாடுகளை சக்தி வாய்ந்த நாடாக கட்டியெழுப்பும் பெரும் இலக்கை நிறைவேற்ற, ரஷிய அதிபருடன் உறுதியாக கரம் கோர்ப்பதாக அவர் தெரிவித்ததாக அச்செய்தி மேலும் கூறுகிறது.
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் எதேச்சதிகார மற்றும் மேலாதிக்க கொள்கைகளை குற்றம் சாட்டி உள்ள வட கொரியா, கடந்த ஆண்டு ரஷியா, உக்ரைனை ஆக்கிரமித்த பின்னரும் அந்நாட்டை ஆதரித்து நெருக்கமான நட்புறவை ஏற்படுத்த முயற்சித்தது.
கடந்த 2021ம் ஆண்டு ரஷியா தனது அண்டை நாடான உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை தொடங்கி, முக்கிய பகுதிகளை ஆக்கிரமித்தது. இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் உக்ரைனை ஆதரிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்ளன. இந்நிலையில் வட கொரிய அதிபர் கிம் ரஷியாவிற்கு ஆதரவளித்திருப்பது உலக அரங்கில் முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது.
- உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி 474 நாட்கள் ஆகிறது
- உக்ரைன் எதிர்தாக்குதல் நடத்தி சில இடங்களை மீட்க கடும் சண்டையிட்டு வருகிறது
உக்ரைன் மீது ரஷியா தாக்குதலை தொடங்கி இன்றோடு சரியாக 474 நாட்கள் ஆகிறது. ரஷியா இந்தப் போரில் முழுமையாக வெற்றி பெற்றதாகவும் சொல்ல முடியாது. உக்ரைன் முழுமையாக தோல்வியடைந்ததாகவும் கூற முடியாது.
ஆனால், ரஷியாவின் தாக்குதலில் உக்ரைனின் தென்கிழக்கு பகுதிகள் பெருமளவில் சேதமடைந்தன. பல இடங்களை ரஷியா பிடித்துள்ளது. போர் தொடங்கிய நாட்களில் இருந்து நாட்கள் செல்லசெல்ல உக்ரைன் மெதுவாக எதிர்தாக்குதலை தொடங்கியது. இதன்காரணமாக ரஷியப் படைகள் சில இடங்களில் பின்வாங்கும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் தென்கிழக்கு பிராந்தியத்தில் உள்ள டொனெட்ஸ்க் பகுதியில் மூன்று நகரங்களை மீண்டும் நாங்கள் கைப்பற்றியுள்ளோம் என உக்ரைன் பெருமிதம் கொண்டுள்ளது. அதேவேளையில் ரஷியா இதை மறுத்துள்ளது.
டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பிளாஹொடேட்னே என்ற பகுதியில் குண்டுகளுக்கு பலத்த சேதம் அடைந்த வீட்டில் உக்ரைன் வீரர்கள் கொடியை ஏற்றியபோது போன்ற ஒரு படம் வெளியாகியுள்ளது.
எதிர்தாக்குதலில் இதை முதல் முடிவாக நாங்கள் பார்க்கிறோம் என உக்ரைன் தவ்ரியா ராணுவ மையத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
நெஸ்குச்னே, மகாரிவ்கா ஆகிய தெற்கு கிராமங்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தள்ளது.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்சி தனது வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், சண்டை நடைபெற்ற இடத்தை குறிப்பிடவில்லை.
ரஷியப்படைகள் தாக்குதல் நடத்தியும் எங்களை கட்டுப்படுத்த முடியவில்லை. யுரோஜாய்னே கிராமம்தான் எங்களது அடுத்த இலக்கு. அதன்பின் தெற்கு நோக்கி செல்வோம் என ஜெகர் படைப்பிரிவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். சண்டையின்போது 6 ரஷிய வீரர்களை பிடித்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், பிளாஹொடேட்னே பகுதியை உக்ரைன் ராணுவம் சுற்றி வளைத்ததால் ரஷிய வீரர்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறியதாக ரஷியத் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.
அதேவேளையில் ரஷிய பாதுகாப்பு அமைச்சகம், ''டொனெட்ஸ்க் மற்றும் ஜபோரிஜியா பகுதியில் உக்ரைன் தாக்குதல் நடத்தி மீண்டும் அந்த இடங்களை கைப்பற்ற முயற்சி செய்தி வருகிறது. ஆனால், அவர்களின் முயற்சி வெற்றி பெறவில்லை'' எனத் தெரிவித்தள்ளது.
- காகோவ்கா நீர்மின் அணையின் உடைப்பு மக்களின் துயரத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
- 7,00,000 மக்களுக்கு முறையான குடிநீரின் பற்றாக்குறை ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருத்திருக்கிறது
உக்ரைனின் காகோவ்கா அணை இடிந்து விழுவதற்கு முன்பு இருந்ததை விட, உக்ரைனில் மனிதாபிமான நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று ஐ.நா. சபையின் உயர் உதவி அதிகாரி எச்சரித்துள்ளார்.
ஐ.நா. சபையின் மனிதாபிமான உதவிகளுக்கான ஒருங்கிணைப்பாளராக பணியாற்றும், துணைச் செயலாளர், ஜெனரல் மார்ட்டின் கிரிஃபித்ஸ், ஒரு வருடமாக நடைபெற்று வரும் ரஷிய-உக்ரைன் போரின் விளைவாக குண்டு வீசி தகர்க்கப்பட்ட காகோவ்கா அணையிலிருந்து வெளியேறும் வெள்ளத்தினால் ஏற்படப் போகும் பாதிப்புகள் குறித்து எச்சரித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "ஒரு அசாதாரண நிலையாக 7,00,000 பேருக்கு உடனடியாக குடிநீர் தேவைப்படுகிறது. உக்ரைன் போன்ற உலகின் மிக முக்கியமான உணவு வழங்கும் பிராந்தியத்தில் பெரிய அளவு வெள்ளப்பெருக்கு ஏற்படுவது, வரும் காலங்களில் குறைந்தளவு தானிய ஏற்றுமதிக்கே வழிவகுக்கும். இது தவிர்க்க முடியாதது. இதனால், உலகம் முழுவதும் உணவுப் பொருட்களின் விலையும் உயரலாம். மேலும் பல லட்சம் மக்களுக்கு அவர்களின் தேவைக்கும் குறைவான அளவு உணவு மட்டுமே கிடைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகலாம்" எனவும் தெரிவித்தார்.
அசோசியேட்டட் பிரஸ்ஸிற்கு பேட்டியளித்த அவர், "இது ஒரு தொடரப்போகும் பெரும் பிரச்சனை. ஆனால், இப்பொழுது வெளிப்படுவது (வெள்ளப்பெருக்கு), ஒரு செயலின் (குண்டு வீச்சு) விளைவுகளினால் ஏற்படும் பாதிப்பின் தொடக்கம் மட்டுமே" என கூறினார்.
புதன்கிழமையன்று காகோவ்கா நீர்மின் அணை உடைந்ததும், அதனைத் தொடர்ந்து நீர்த்தேக்கத்திலிருந்து நீர் டினிப்ரோ நதியில் முழுமையாக வெளியேற்றப்பட்டதும், ஏற்கனெவே பீரங்கி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களால் ஒரு வருடத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டுள்ள ஒரு பிராந்தியத்தின் துயரத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
டினிப்ரோ நதியின் மேற்குக் கரை பகுதியை உக்ரைன் தன்னகத்தே கொண்டுள்ளது. அதே சமயம், ரஷிய துருப்புகள் எளிதில் வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடிய தாழ்வான கிழக்குப் பகுதியைக் கட்டுப்படுத்துகின்றன. அணையும் நீர்த்தேக்கமும் தெற்கு உக்ரைனின் குடிநீருக்கும் நீர்ப்பாசனத்திற்கும் அத்தியாவசியமானது. இந்தப் பகுதி கெர்ஸ்ன் பிராந்தியத்திலுள்ளது. இந்த இடத்தை செப்டம்பர் மாதம் ரஷியா சட்டவிரோதமாக ஒரு வருடமாக ஆக்கிரமித்துள்ளது.
உக்ரேனிய உதவிக் குழுக்கள் மூலம் மட்டுமே ஐ.நா. சபை உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள வெள்ளம் பாதித்த பகுதிகளில் 30,000 மக்களை தேடி சென்றுள்ளதாகவும் ஆனால், ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருக்கும் வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதிகளை அடைய ரஷியா இதுவரை அனுமதிக்கவில்லை, எனவும் கிரிஃபித்ஸ் கூறினார்.
மேலும் இது சம்பந்தமாக கூறிய கிரிஃபித்ஸ், புதன்கிழமையன்று ரஷியாவின் ஐ.நா. தூதரான வாசிலி நெபென்சியாவை தாம் சந்தித்ததாகவும், உக்ரைனில் உள்ள ஐ.நா. குழுக்கள் அந்த பகுதிகளில் நேரிடையாக சென்று அங்குள்ள உக்ரைன் மக்களுக்கு உதவியும், ஆதரவும் தர அனுமதிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும், இது நடக்கும் என தாம் நம்புவதாகவும், அவர் கூறினார்.
"உயிரைக் காப்பாற்றுவதற்கு அவசர கால நடவடிக்கை அத்தியாவசியமானது. அதன் பின்னணியில், உக்ரைன் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளிலும், ரஷியாவின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளிலும் 7,00,000 மக்களுக்கு முறையான குடிநீரின் பற்றாக்குறை ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருத்திருக்கிறது" என்று அவர் கூறினார்.
முக்கிய விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஜியா அணுமின் நிலையத்திற்கு அணையிலிருந்து விநியோகிக்கப்பட்ட குளிர்ச்சியான நீரை தற்பொழுது தொடர்ந்து வழங்குவதிலும் பெரும் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
மேலும், "போரின்போது நிலத்தில் பதிக்கப்பட்ட கண்ணிவெடிகளுடன் கூடிய பகுதிகளிலும் வெள்ள நீர் வேகமாக பாய்ந்துள்ளது. அந்த கண்ணி வெடிகள் மக்கள் சற்றும் எதிர்பார்க்காத இடங்களில் மிதந்து வரலாம்," எனவும் கிரிஃபித்ஸ் குறிப்பிட்டார்.
"இது ஒரு தொடர் சிக்கல். மக்கள் இன்று உயிர் வாழ வழி செய்வதில் தொடங்கி, எதிர்காலத்தில் அவர்களுக்கு நம்பிக்கையூட்டவும் ஏதேனும் செய்ய வேண்டும்" என கூறினார்.
கிரிஃபித்ஸ் கூறுகையில், "அணை உடைப்பு காரணமாக ஏற்பட்டுள்ள பரந்த அளவிலான விளைவுகளின் காரணமாக, 'தவிர்க்க முடியாத காரணங்களால்', மேலும் அதிக நிதி உதவி வேண்டி ஐ.நா. ஒரு சிறப்பு கோரிக்கை வைக்க வேண்டியுள்ளது. ஆனால், அந்த முறையீட்டை கோரி அறிவிப்பதற்கு முன்பு பொருளாதார, சுகாதார, மற்றும் சுற்றுச்சூழல் விளைவுகளைப் பார்க்க சில வாரங்கள் காத்திருக்க விரும்புவதாக அவர் கூறினார்.
"கருங்கடல் தானிய முன்முயற்சியின்" விரிவாக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக, தானும் ஐ. நா. வர்த்தகத் தலைவர் ரெபெக்கா கிரின்ஸ்பானும் இணைந்து பணியாற்றி வருவதாகவும் கிரிஃபித்ஸ் கூறினார். துருக்கியும், ஐ.நா.வும் கடந்த ஜூலையில் உக்ரைன் மற்றும் ரஷ்யாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி உக்ரைனில் தானிய ஏற்றுமதிக்காக மூன்று, "கருங்கடல் துறைமுகங்களை" திறக்கின்றன்.
அந்த உடன்படிக்கையின் ஒரு பகுதியாக, ஒரு குறிப்பாணையை ரஷ்யாவும் ஐ.நா.வும் கையெழுத்திட்டது. இது ரஷியாவின் உணவு மற்றும் உரக் கப்பல்கள் அனுப்புவதில் உள்ள தடைகளை முறியடிப்பதை நோக்கமாகக் கொண்டது.
வோல்கா ஆற்றில் உள்ள ரஷிய துறைமுகமான டோக்லியாட்டியிலிருந்து கருங்கடலுக்கு செல்லும் குழாய் திட்டத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்பதே ரஷியாவின் முக்கிய கோரிக்கையாகும். இந்த தடம் உக்ரைன் மீதான ரஷியாவின் பிப்ரவரி 24, 2022ல் படையெடுப்பிற்கு பிறகு மூடப்பட்டது. உரத்தின் முக்கிய மூலப்பொருளான அமோனியா இந்த குழாய் வழியாக எடுத்துச் செல்லப்பட்டது.
"உலக உணவு பாதுகாப்புக்கு அம்மோனியா அத்தியாவசியப் பொருள். அந்த குழாய் வழியை திறந்து கருங்கடலின் குறுக்கே அமோனியாவை உலகத்தின் தெற்கு பகுதிக்கு வழங்குவதே நம் அனைவருக்கும் முக்கிய கடமை," என்று கிரிஃபித்ஸ் கூறினார்.
செவ்வாயன்று ஷெல் தாக்குதல்கள் நடந்ததாகவும், அதனால் அந்த குழாயில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக தகவல் வந்ததாகவும், ஆனால் குழாய்த்திட்டம் போர்ப்பகுதியின் நடுவில் உள்ள காரணத்தால், ஐ.நா.வால் அதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் கிரிஃபித்ஸ் கூறினார். மேலும், அந்த பழுது எவ்வளவு விரைவாக சரி செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாக சரி செய்யப்பட வேண்டும் என்று தாங்கள் நினைப்பதாகவும், அது மிக மோசமான அளவில் சேதமடைந்திருக்காது என்று தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
- மேற்கத்திய நாடுகளை எச்சரிக்க புதின் இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக தகவல்
- பெலாரஸ் நாட்டின் எதிர்க்கட்சிகள் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன
உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையில் போர் நடைபெற்று வருகிறது. முதலில் உக்ரைனை எளிதாக நினைத்தது ரஷியா. சூழ்நிலை அவ்வாறு அமையவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கி வருவதால் உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது.
உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியபோது கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி, உக்ரைன் நாட்டிற்குள் ஊடுருவ பெலாரஸ் பகுதியை ரஷியப் படைகள் பயன்படுத்தியன. ஆயுதங்களையும் குவித்து வைத்தது.
இந்த நிலையில் இன்று ரஷிய அதிபர் புதின், பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவை சந்தித்தார். அப்போது ஜூலை 7 அல்லது 8-ந்தேதிக்குள் தந்திரோபாய அணுஆயுதங்களை (tactical nuclear weapons) வைப்பதற்கான கட்டிட வேலைகள் முடிந்துவிடும். அதன்பிறகு விரைவாக அணுஆயுதங்கள் கொண்டு வந்து குவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
தந்திரோபாய அணுஆயுதங்கள் எதிரிகளின் துருப்புகள் மற்றும் ஆயுதங்களை அழிக்கவும் பயன்படுத்தப்படும். கண்டம் விட்டு கண்டம் தாண்டி பெரிய நகரத்தையே அழிக்கும் அணுஆயுதம் போன்று அல்லாமல், குறுகிய தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டவையாக இருக்கும்.
ஆனால், எவ்வளவு ஆயுதங்கள் பெலாரஸ்க்கு அனுப்பப்படும் என்பது குறித்து புதின் தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனால், சுமார் 2 ஆயிரம் ஆயுதங்களை அனுப்பி வைக்கலாம் என அமெரிக்க அரசு நம்புகிறது.
மேற்கத்திய நாடுகளை மிரட்டுவதற்காகத்தான் ரஷியா இந்த வேலைகளை செய்கிறது. இதற்கு பெலாரஸ் அதிபர் உடன்போகிறார் என பெலாரஸ் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.
நேட்டோ மாநாடு ஜூலை மாதம் வில்னியஸில் நடைபெற இருக்கிறது. அதற்கு முன் புதின் மற்றும் அவரது கைப்பாவையான லுகாஷென்கா ஆகியோர் பெலாரஸில் ஆயுதங்களை குவிக்க திட்டமிட்டுள்ளனர் என பெலாரஸ் நாட்டின் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்