search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ukraine russia war"

    • போரின் பாதிப்புகள் குறித்து ஜெலன்ஸ்கியிடம் போரிஸ் ஜான்சன் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
    • டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் உக்ரைன் பற்றிய குழு விவாதத்தில் பங்கேற்றார்

    கீவ்:

    ரஷியா நடத்தி வரும் போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் திடீர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். போரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்ட போரிஸ் ஜான்சன், தலைநகர் கீவிற்குச் சென்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியை சந்தித்தார். அப்போது, போரின் பாதிப்புகள் குறித்து செலன்ஸ்கியிடம் போரிஸ் ஜான்சன் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

    தற்போதைய பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், போரிஸ் ஜான்சனின் உக்ரைன் வருகைக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

    போரிஸ் ஜான்சன் பிரதமராக இருந்தபோதும், பதவிக்காலம் முடிந்தபிறகும் உக்ரைனுக்கு பலமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு, டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் உக்ரைன் பற்றிய குழு விவாதத்தில் அவர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

    • உக்ரைன்-ரஷியா போரில் அமெரிக்கா உக்ரைனுக்கு பெரும் பக்கபலமாக இருந்து வருகிறது.
    • உக்ரைனுக்கு மேலும் 2.5 பில்லியன் டாலர் ராணுவ உதவியை அமெரிக்கா வழங்குகிறது.

    வாஷிங்டன்:

    ரஷியா உடனான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா பெரும் பக்கபலமாக இருந்து வருகிறது. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுப்பதற்கான சூழல் தென்பட்டது முதல் இருந்தே உக்ரைனுக்கு அமெரிக்கா ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது.

    அமெரிக்கா வழங்கி வரும் அதிநவீன ஆயுதங்களை கொண்டே உக்ரைன் ராணுவம் கிட்டத்தட்ட ஓர் ஆண்டாக ரஷிய படைகளை துணிவுடன் எதிர்த்து நிற்கிறது.

    இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 2.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவியை வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

    இதுதொடர்பாக, அமெரிக்க ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இருந்து உக்ரைனுக்கு ராணுவ தளவாடங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது 30-வது தொகுப்பாக ராணுவ தளவாடங்கள் வழங்கப்பட்டவுள்ளன. இந்த புதிய தொகுப்பில் 59 பிராட்லி காலாட்படை சண்டை வாகனங்கள், 90 ஸ்ட்ரைக்கர் கவச வாகனங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் அதிநவீன பீரங்கி மற்றும் ராக்கெட் அமைப்புகள் உள்ளிட்டவை அடங்கும் என தெரிவித்துள்ளது.

    • அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளது.
    • ரஷியா பதிலடி கொடுக்கும் என்று அமெரிக்காவிற்கான ரஷிய தூதர் அனடோலி அன்டோனோவ் கூறி உள்ளார்

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷியா படையெடுப்பை தொடங்கி ஓராண்டை நெருங்குகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் ஏராளமான வீரர்கள் பலியாகி உள்ளனர். உக்ரைனின் உள்கட்டமைப்புகள் சிதைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் ரஷியாவுக்கு அடிபணியாமல் உக்ரைன் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகள் வழங்கி வருகின்றன. இதற்கு ரஷியா கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறது.

    இந்நிலையில், ரஷியாவின் தாக்குதலை சமாளிக்கும் வகையில், உக்ரைனுக்கு நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்களை வழங்க மேற்கத்திய நாடுகள் ஆலோசித்து வருகின்றன. உக்ரைனுக்கு கனரக ஆயுதங்களை அனுப்ப உள்ளதாக பிரிட்டன் அறிவித்துள்ளது. இது ரஷியாவை மேலும் ஆத்திரமூட்டி உள்ளது. ரஷியாவை தாக்கும் திறன் கொண்ட ஆயுதங்களை மேற்கத்திய நாடுகள் வழங்கினால், போர் தீவிரமடையும் என ரஷியா எச்சரித்துள்ளது.

    'இது மிகவும் ஆபத்தானது. இது மோதலை ஒரு புதிய நிலைக்கு கொண்டு வருவதற்கு வழிவகுக்கும். உலகளாவிய மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பின் பார்வையில் இது நல்லதல்ல' என ரஷிய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் கூறினார்.

    இதற்கிடையே உக்ரைனை ராணுவரீதியாக ஆதரிப்பது குறித்த புதிய சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்கா தனது நட்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ராம்ஸ்டீனில் உள்ள விமானத் தளத்தில் நாளை இந்த சந்திப்பு நடக்க உள்ளது.

    ரஷியாவையோ அல்லது 2014இல் உக்ரைனில் இருந்து இணைக்கப்பட்ட கிரிமியா தீபகற்பத்தையோ குறிவைத்து மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களைப் பயன்படுத்தினால், ரஷியா பதிலடி கொடுக்கும் என்று அமெரிக்காவிற்கான ரஷிய தூதர் அனடோலி அன்டோனோவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

    • இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
    • இதுவரை ரஷியா 1,16,950 வீரர்களை இழந்துள்ளதாக உக்ரைன் கூறி உள்ளது.

    உக்ரைன் மீது ரஷியா தனது ராணுவ நடவடிக்கையை தொடங்கி கிட்டத்தட்ட 11 மதங்கள் ஆகின்றன. ரஷியாவின் தாக்குதல்களுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு பல உயிர்கள் பலியாகி உள்ளன. ஏராளமானோர் உயிருக்கு பயந்து வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர். உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் உக்ரைன் அரசு தரப்பில் அவ்வப்போது தங்கள் ராணுவ நடவடிக்கைகள் மற்றும் ரஷியா தரப்பில் ஏற்பட்ட சேதம் குறித்து புள்ளிவிவரங்கள் வெளியிடப்படுகிறது. அவ்வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரம் அதிர வைத்துள்ளது.

    உக்ரைனுக்குள் முழு அளவில் படையெடுப்பை தொடங்கிய 2022 பிப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரை ரஷியா 1,16,950 வீரர்களை இழந்துள்ளதாக கூறி உள்ளது. இந்த தகவல் உண்மையாக இருந்தால், முதல் உலகப் போரில் அமெரிக்கா இழந்த வீரர்களை விட ரஷியாவுக்கு இந்த போரில் அதிக வீரர்களை பலி கொடுத்திருப்பதாக அர்த்தம்.

    உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் தனது டுவிட்டர் பக்கத்தில், உக்ரைனில் ரஷிய படைகளுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்த புள்ளி விவரத்தை ஷேர் செய்துள்ளது. அதில், ரஷியாவிற்கு சொந்தமான 3,121 பீரங்கிகள் மற்றும் 4,877 வாகனங்கள் மற்றும் எரிபொருள் பீரங்கிகள், 2,104 பீரங்கி அமைப்புகள் முழு அளவிலான தாக்குதலின் போது அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

    முதல் உலகப் போரில் மொத்தம் 1,16,516 அமெரிக்கர்கள் இறந்துள்ளனர். அவர்களில் 53,402 பேர் போர்க்களத்தில் இறந்தனர், மீதமுள்ள 63,114 பேர் ஐரோப்பாவில் பணியாற்றும்போது, போர் அல்லாத பிற பாதிப்புகளாலும், இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் காரணமாகவும் இறந்தனர் என்று நியூஸ் வீக் தெரிவித்துள்ளது.

    அதேசமயம், உக்ரைன் போரில் இதுவரை 6,000க்கும் குறைவான ரஷிய வீரர்களே இறந்திருப்பதாக ரஷியா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதாகவும் நியூஸ் வீக் தெரிவித்துள்ளது.

    • அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த ஏவுகணை தாக்குதலில் பலி எண்ணிக்கை 35 ஆனது.
    • மாயமான 35 பேரை தேடி வருகிறோம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கீவ்:

    உக்ரைனில் ரஷிய படைகள் தொடர்ந்து உக்கிரமான தாக்குதலை நடத்திவருகின்றன. டினிப்ரோ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தைக் குறிவைத்து ரஷியா நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. பல வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன.

    குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். அங்கு மீட்பு பணி நடைபெறுகிறது.

    இந்த தாக்குதலில் 15 வயது சிறுமி உள்பட 21 பேர் உயிரிழந்திருப்பதாக முதல்கட்ட தகவல் வெளியானது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடைபெறுகிறது.

    இத்தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்பில் பல வீடுகள் சேதமடைந்தன. நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர் என அதிபர் மாளிகையின் மூத்த அதிகாரி கைரிலோ திமோஷென்கோ கூறினார்.

    இந்நிலையில், உக்ரைன் அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்ற ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. இதில் 75 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், மாயமான 35 பேரை தேடி வருகிறோம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • உக்ரைனுக்கு கனரக பீரங்கிகளை வழங்க பிரிட்டன் உறுதி அளித்துள்ளது.
    • புதிய ஆயுதங்கள் போர்க்களத்தில் நிலைமையை மாற்றாது என்று ரஷியா கூறி உள்ளது.

    உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. ரஷியா தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தி, உக்ரைனை நிலைகுலையச் செய்கிறது. இதற்கு உக்ரைன் தரப்பில் பதிலடி கொடுப்பதற்காக கனரக பீரங்கி வாகனங்களை வழங்கும்படி மேற்கத்திய நாடுகளுக்கு கோரிக்கை வைத்தது.

    அதன்படி உக்ரைனுக்கு கனரக ஆயுதங்களை வழங்க மேற்கத்திய நாடுகள் ஆலோசித்து வருகின்றன. முதல் மேற்கத்திய நாடாக கனரக பீரங்கிகளை வழங்க பிரிட்டன் உறுதி அளித்துள்ளது. வரும் வாரங்களில் சக்திவாய்ந்த 14 சேலஞ்சர்-2 பீரங்கிகள் மற்றும் பீரங்கி தாக்குதலுக்கு பயன்படும் நவீன தளவாடங்களையும் அனுப்புவதாக பிரிட்டன் சனிக்கிழமை கூறியது. இது ரஷியாவை மேலும் ஆத்திரமடையச் செய்துள்ளது.

    பிரிட்டன் நாடு தங்களின் ரஷிய எதிர்ப்பு இலக்குகளை அடைவதற்கான ஒரு கருவியாக உக்ரைனை பயன்படுத்துவதாக, ரஷியா குற்றம்சாட்டி உள்ளது. மேலும், பிரிட்டன் உக்ரைனுக்கு அனுப்பும் சேலஞ்சர்-2 பீரங்கிகள், மற்ற கவச வாகனங்களை போன்று தாக்குதலில் தீப்பற்றி எரியும் என்றும் ரஷியா எச்சரித்துள்ளது.

    பிரிட்டன் மற்றும் போலந்து போன்ற நாடுகளில் இருந்து வரக்கூடிய புதிய ஆயுதங்கள் போர்க்களத்தில் நிலைமையை மாற்றாது என்று ரஷிய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் கூறி உள்ளார்.

    • இந்த தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்பில் பல வீடுகள் அழிந்துவிட்டன
    • அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த ஏவுகணை தாக்குதலில் பலி எண்ணிக்கை 29 ஆனது.

    கீவ்:

    உக்ரைனில் ரஷிய படைகள் தொடர்ந்து உக்கிரமான தாக்குதலை நடத்திவருகின்றன. டினிப்ரோ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தைக் குறிவைத்து ரஷியா நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. பல வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன.

    குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். அங்கு மீட்பு பணி நடைபெறுகிறது.

    இந்த தாக்குதலில் 15 வயது சிறுமி உள்பட 21 பேர் உயிரிழந்திருப்பதாக முதல்கட்ட தகவல் வெளியானது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடைபெறுகிறது.

    இத்தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்பில் பல வீடுகள் சேதமடைந்தன. நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர் என அதிபர் மாளிகையின் மூத்த அதிகாரி கைரிலோ திமோஷென்கோ கூறினார்.

    இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்ற ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இந்த தாக்குதல் காரணமாக அடுக்குமாடி குடியிருப்பில் பல வீடுகள் அழிந்துவிட்டன
    • குடியிருப்பில் வசித்த 40க்கும் மேற்பட்டோரின் நிலை என்ன என்பது தெரியவில்லை

    கீவ்:

    உக்ரைனில் ரஷிய படைகள் தொடர்ந்து உக்கிரமான தாக்குதலை நடத்திவருகின்றன. நேற்று இரவு டினிப்ரோ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை குறிவைத்து ரஷியா  ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. பல வாகனங்கள் தீப்பற்ற எரிந்தன. குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். அங்கு மீட்பு பணி நடைபெறுகிறது.

    இந்த கண்மூடித்தனமான தாக்குதலில் 15 வயது சிறுமி உள்பட 21 பேர் உயிரிழந்திருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி நடைபெறுகிறது.

    இந்த தாக்குதல் காரணமாக அடுக்குமாடி குடியிருப்பில் பல வீடுகள் அழிந்துவிட்டதாகவும், நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிப்பதாகவும் அதிபர் மாளிகையின் மூத்த அதிகாரி கைரிலோ திமோஷென்கோ கூறி உள்ளார். 

    • உக்ரைன் ராணுவ வீரர் ஒருவரின் உடலில் கையெறி குண்டு ஒன்று துளைத்துக்கொண்டு மார்பு பகுதியில் சிக்கியது.
    • மின்சார கருவிகளை பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்தால் கையெறி குண்டு வெடிக்க வாய்ப்பு உள்ளது

    கீவ் :

    ரஷியா-உக்ரைன் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இருநாட்டு ராணுவ வீரர்களும் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர். இந்த நிலையில் போரின்போது உக்ரைன் ராணுவ வீரர் ஒருவரின் உடலில் கையெறி குண்டு ஒன்று துளைத்துக்கொண்டு மார்பு பகுதியில் சிக்கியது.

    இதயத்துக்கு அருகில் சிக்கிய அந்த கையெறி குண்டு எந்த நேரத்திலும் வெடித்துவிடும் அபாயம் இருந்ததால், அறுவை சிகிச்சையின்போது வெடித்துவிட்டால் என்ன ஆவது என்ற அச்சத்தில் டாக்டர்கள் ராணுவ வீரருக்கு அறுவை சிகிச்சை செய்ய தயங்கினர். அதேசமயம் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குண்டை அகற்றாமல் விட்டால், குண்டு வெடித்து, அந்த வீரர் உடல்சிதறி இறக்கும் அபாயம் நிலவியது.

    இந்த நிலையில் உக்ரைன் ராணுவத்தில் பணியாற்றும் மிகவும் அனுபவம் வாய்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவரான டாக்டர் ஆண்ட்ரி வெர்பா மிகவும் துணிச்சலுடன் அந்த ராணுவ வீரருக்கு அறுவை சிகிச்சை செய்ய முன்வந்தார். அவரது பாதுகாப்புக்காக வெடிகுண்டு நிபுணர்கள் 2 பேர் அறுவை சிகிச்சை நடந்த அறையில் நிறுத்தப்பட்டிருந்தனர்.

    மின்சார கருவிகளை பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்தால் கையெறி குண்டு வெடிக்க வாய்ப்பு உள்ளது என்பதால் டாக்டர் ஆண்ட்ரி வெர்பா அவற்றை பயன்படுத்தாமல் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து ராணுவ வீரரின் மார்பில் இருந்து கையெறி குண்டை அகற்றினார். இதையடுத்து அங்கு தயாராக இருந்த வெடிகுண்டு நிபுணர்கள் அதை செயலிழக்க செய்தனர். அறுவை சிகிச்சைக்கு பின் ராணுவ வீரர் நலமாக இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆபத்தான சூழலில் துணிச்சலாக உயிரை பணயம் வைத்து ராணுவ வீரரை காப்பாற்றிய உக்ரைன் டாக்டரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    • சட்ட அமலாக்கப் பிரிவினர், செப்டம்பர் மாதம் மார்செல் காந்தரோவை கண்டுபிடித்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.
    • ரஷியாவிலிருந்து ஏராளமான ஆண்கள் ராணுவ பணிக்கு பயந்து வெளியேறினர்.

    மாஸ்கோ:

    உக்ரைனில் போரிட மறுத்த இளம் வீரர் ஒருவருக்கு ரஷிய நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது. மார்செல் காந்தரோவ் (வயது 24) என்ற அந்த வீரர் ராணுவ நடவடிக்கையில் பங்கேற்க விரும்பவில்லை என்றும், மே 2022-ல் பணி தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்ன சட்ட அமலாக்கப் பிரிவினர், செப்டம்பர் மாதம் மார்செல் காந்தரோவை கண்டுபிடித்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    உக்ரைன் மீது நடத்தி வரும் போரில் ரஷிய ராணுவத்துக்காக சுமார் 3 லட்சம் வீரர்களை அணி திரட்ட உத்தரவிடப்பட்டு, அதன்படி புதிதாக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த அறிவிப்பையடுத்து ரஷியாவிலிருந்து ஏராளமான ஆண்கள் ராணுவ பணிக்கு பயந்து வெளியேறினர். பலர் ஆர்மீனியா, ஜார்ஜியா மற்றும் கஜகஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நீண்ட தூர ஏவுகணைகள் மூலம், ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதியில் ஊடுருவி தாக்க முடியும்.
    • மேற்கத்திய நாடுகள் அதிக அளவிலான கனரக ஆயுதங்களை வழங்காவிட்டால், போர் பல ஆண்டுகள் நீடிக்கும்.

    கீவ்:

    உக்ரைன் நாட்டின் மீதான ரஷியாவின் போர் ஓர் ஆண்டை நெருங்கி உள்ளது. ஆனாலும் போர் முடிவுக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் தென்படவில்லை. அமைதிப் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், இருதரப்பும் நாளுக்குநாள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன.

    ரஷியாவின் தாக்குதலை எதிர்கொண்டு உக்ரைன் பதில் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. உக்ரைனுக்கு அமெரிக்கா பல பில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது. மேற்கததிய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது.

    இந்நிலையில், மேற்கத்திய நாடுகள் ஆயுத விநியோகத்தை அதிகரித்தால், குறிப்பாக நீண்ட தூர ஏவுகணை அமைப்புகளை அதிகமாக வழங்கினால், இந்த ஆண்டு போரில் வெற்றிபெற முடியும் என உக்ரைன் அதிபரின் ஆலோசகர் மைக்கேலோ பொடோலியாக் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறியதாவது:-

    100 கிலோ மீட்டருக்கும் அதிகமான இலக்கை தாக்கும் சக்தி கொண்ட ஏவுகணைகளால் மட்டுமே, ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையை துரிதப்படுத்த முடியும், இந்த சூழ்நிலையானது இலையுதிர்காலத்தில் போரை முடிவுக்கு கொண்டுவரும்.

    நீண்ட தூர ஏவுகணைகள் மூலம், ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதியில் ஊடுருவி ரஷிய ஆயுதக் கிடங்குகளை குறிவைத்து தாக்க முடியும். அமெரிக்கா கடந்த ஆண்டு உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணை அமைப்புகளை வழங்கியது. அவை சுமார் 80 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக்கூடிய ஏவுகணைகளை செலுத்தக்கூடியவை. இது பல போர் முனைகளில் போரை உக்ரைனுக்கு சாதகமாக மாற்றியிருக்கிறது.

    சமீபத்தில் இதேபோன்ற பிரெஞ்சு ஏவுகணை அமைப்புகளை உக்ரைன் பெற்றுள்ளது. ஆனால், US ATACMS ஏவுகணைகளை வழங்கும்படி அமெரிக்காவுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. இது சுமார் 300 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கக்கூடியது.

    இந்த ஏவுகணை அமைப்புகள் மூலம், கிழக்கு உக்ரைன் மற்றும் 2014 இல் ரஷியாவால் இணைக்கப்பட்ட கருங்கடல் தீபகற்பத்தில் உள்ள டான்பாஸ் உட்பட ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள அனைத்து ரஷிய ராணுவ உள்கட்டமைப்பையும் அழிக்க முடியும்.

    நாங்கள் ரஷியாவைத் தாக்க மாட்டோம், தற்காப்புப் போரை நடத்துகிறோம். ஆனால் அதிக அளவிலான மேற்கத்திய கனரக ஆயுதங்களை வழங்காவிட்டால், இந்த போர் பல ஆண்டுகள் நீடிக்கும்.

    உக்ரைனுக்கு கவச வாகனங்கள், குறிப்பாக ஜெர்மனின் லியோபார்ட்ஸ் மற்றும் பீரங்கிகள் போன்ற கனரக பீரங்கி வாகனங்கள் தேவைப்படுகிறது. ஐரோப்பாவும் அமெரிக்காவும் விரைவில் ஆயுதங்களை அனுப்பும் பணியை விரைவுபடுத்தக்கூடும். ஏனெனில் இந்த ஆயுதங்கள் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு முக்கியம் என்பதை அவர்கள் புரிந்துகொண்டுள்ளனர். அமெரிக்காவின் பேட்ரியாட்ஸ், அல்லது பிரான்சின் க்ரோடேல் போன்ற புதிய விமான எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்புகள், உக்ரைனின் எரிசக்தி உற்பத்தி மையங்களுக்கு எதிரான ரஷிய வான் தாக்குதல் அச்சுறுத்தலை விரைவில் தடுக்க முடியும்.

    ஆயுதங்கள்  வரப்பெற்றால் ஒரு மாத கால இடைவெளியில் எங்கள் வான் பகுதியை மூடிவிடுவோம். தற்போது ரஷியாவால் ஏவப்படும் ஏவுகணைகளில் 75 சதவீத ஏவுகணைகளை உக்ரைன் சுட்டு வீழ்த்துகிறது. விரைவில் 95 சதவீத ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • உக்ரைனின் அமைதி திட்டத்தை ரஷியா பலமுறை புறக்கணித்துள்ளது.
    • உக்ரைனில் போர் நிறுத்தத்தை அறிவிக்க ரஷிய அதிபர் புதினிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

    கீவ் :

    ரஷியா மற்றும் உக்ரைனில் வாழும் ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்தவர்கள் இன்று (சனிக்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். இதையொட்டி உக்ரைனில் போர் நிறுத்தத்தை அறிவிக்க ரஷிய அதிபர் புதினிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்று, வெள்ளிக்கிழமை நண்பகல் தொடங்கி சனிக்கிழமை நள்ளிரவு வரை 36 மணி நேரத்துக்கு தாக்குதல்களை நிறுத்தும்படி ரஷிய படைகளுக்கு அவர் உத்தரவிட்டார். ரஷிய படைகளின் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு போர்நிறுத்தம் பொருந்துமா, உக்ரைன் தொடர்ந்து சண்டையிட்டால் ரஷியா திருப்பித் தாக்குமா என்பது அந்த உத்தரவில் தெளிவுப்படுத்தவில்லை.

    இந்த நிலையில் ரஷியாவின் இந்த போர் நிறுத்தத்தை ஏற்க முடியாது என தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இது உக்ரைன் படைகளின் முன்னேற்றத்தை தடுக்கும் ஒரு தந்திரம் எனவும் குற்றம் சாட்டினார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், "உக்ரைனின் அமைதி திட்டத்தை ரஷியா பலமுறை புறக்கணித்துள்ளது. அவர்கள் இப்போது கிறிஸ்துமசை ஒரு மறைப்பாகப் பயன்படுத்த விரும்புகிறார்கள்.

    ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் டான்பாசில் உக்ரைன் படைகளின் முன்னேற்றத்தை தடுக்கவும், ராணுவ தளவாடங்களை எங்கள் துருப்புகளுக்கு நெருக்கமாக கொண்டு வருவதற்கும் ரஷியாவின் தந்திரம் இது.

    புதிய பலத்துடன் போரைத் தொடர ரஷியா எவ்வாறு போரில் குறுக்கீடுகளைப் பயன்படுத்துகிறது என்பது முழு உலகமும் அறிந்ததே. ரஷிய துருப்புக்கள் உக்ரைனை விட்டு வெளியேறும்போது அல்லது வெளியேற்றப்படும்போது போர் முடிவடையும்" என்றார்.

    ×