என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ukraine russia war"
- ரஷியா விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐ.நா.சபை பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது.
- ரஷியாவால் கொண்டு வரப்பட்ட எந்த மாற்றத்தையும் உலக நாடுகள் அங்கீகரிக்ககூடாது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
உக்ரைன் மீது ரஷியா கடந்த 8 மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இரு தரப்பிலும் ஏராளமான வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆனாலும் உக்ரைனுக்கு பல்வேறு நாடுகள் ஆயுத உதவி செய்து வருவதால் ரஷியாவை எதிர்த்து கடுமையாக போராட்டம் நடந்து வருகிறது. இதனால் போர் இன்னும் முடிவுக்கு வராமல் உள்ளது.
இந்த நிலையில் உக்ரைனில் உள்ள டானட்ஸ்க், லுசன்ஸ்க், ஸ்பெரெசியா, கெர்சன் ஆகிய 4 பிராந்தியங்கள் ரஷியாவுடன் இணைக்கப்படுவதாக ரஷிய அதிபர் புதின் ரஷியாவின் இந்த நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில் ரஷியா விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐ.நா.சபை பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் ரஷியாவின் இந்த நடவடிக்கை சட்ட விரோதமானது. உக்ரைனில் இருந்து ரஷிய படைகள் உடனே வெளியேற வேண்டும். ரஷியாவால் கொண்டு வரப்பட்ட எந்த மாற்றத்தையும் உலக நாடுகள் அங்கீகரிக்ககூடாது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ரஷியாவுக்கு எதிரான தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 10 நாடுகள் வாக்களித்தது. ஆனால் இந்த வாக்கெடுப்பை இந்தியா, சீனா உள்பட 4 நாடுகள் புறக்கணித்தது. ஐ.நா. சபை தீர்மானத்திற்கு ரஷியா கண்டனம் தெரிவித்து இருக்கிறது.
- ஜபோரிஜியா நகரில் மக்கள் சென்ற வாகனங்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
- ரஷியா நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கீவ்:
உக்ரைனின் ஜபோரிஜியா நகரில் ரஷிய படைகள் நேற்று நடத்திய தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டனர். 28 பேர் காயமடைந்துள்ளனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
இதுதொடர்பான அறிவிப்பை ஜபோரிஜியா பிராந்திய ஆளுநர் ஸ்டாருக் ஆன்லைன் மூலம் வெளியிட்டுள்ளார். மேலும், ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை நோக்கி மக்கள் சென்ற வாகனங்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
தாக்குதலில் சிக்கிய வாகனங்கள் தீப்பற்றி எரிவதையும், சாலையில் உடல்கள் கிடப்பதையும் அந்த படங்களில் காண முடிகிறது.
இந்நிலையில், உக்ரைனின் ஜபோரிஜியா நகரில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. 85க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
- உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வழங்குவோம் என அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.
- புதினின் செயல்பாடுகள் அவர் போராடிக் கொண்டிருப்பதற்கான அறிகுறியாகும் என்றார்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ரஷிய அதிபர் புதின் மற்றும் அவரது பொறுப்பற்ற வார்த்தைகள் மற்றும் அச்சுறுத்தல்களால் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பயப்படப் போவதில்லை.
புதினின் செயல்பாடுகள் அவர் போராடிக் கொண்டிருப்பதற்கான அறிகுறியாகும். அவரால் அண்டை நாட்டின் நிலப்பரப்பைக் கைப்பற்றி அதிலிருந்து தப்பிக்க முடியாது. உக்ரைனுக்கு நாங்கள் தொடர்ந்து ராணுவ தளவாடங்களை வழங்குவோம்.
நேட்டோ பிராந்தியத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாக்க அமெரிக்கா நேட்டோ நட்பு நாடுகளுடன் இணைந்து முழுமையாக தயாராக உள்ளது. எனவே மிஸ்டர் புதின், நான் சொல்வதை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். நான் எங்கள் நட்பு நாடுகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன். இன்றும் புதிய தடைகளை அறிவிக்கிறோம் என தெரிவித்தார்.
- உக்ரைனின் 4 பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்படுவதாக அதிபர் புதின் அறிவித்தார்.
- உக்ரைன் பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைக்கும் திட்டத்திற்கு ஐ.நா. சபை பொதுச் செயலாளர் கண்டனம் தெரிவித்தார்.
நியூயார்க்:
உக்ரைனுடன் 7 மாதங்களுக்கு மேலாக போர் நீடித்துவரும் நிலையில் கைப்பற்றப்பட்ட 4 பிராந்தியங்கள் ரஷியாவுடன் இணைக்கப்பட்டு உள்ளது என மாஸ்கோவின் கிரெம்ளின் மாளிகையின் புனித ஜார்ஜ் அரங்கில் அதிபர் புதின் அறிவித்துள்ளார்.
உக்ரைனில் உள்ள டானட்ஸ்க், லூகன்ஸ்க், ஸ்பெரெசியா, கெர்சன் ஆகிய பகுதிகளை இணைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுளளது.
உக்ரைன் பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைக்கும் திட்டத்திற்கு ஐ.நா. சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில், உக்ரைன் பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் கொண்டு வந்தது. ரஷியா வீடோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்தை நிராகரித்தது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 10 நாடுகள் வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 4 நாடுகள் தீர்மானத்தைப் புறக்கணித்தன.
- உக்ரைனின் 4 பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்படுவதாக அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார்.
- அந்த பகுதிகளில் பொது வாக்கெடுப்பை ரஷியா நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நியூயார்க்:
உக்ரைனுடன் 7 மாதங்களுக்கு மேலாக போர் நீடித்துவரும் நிலையில் கைப்பற்றப்பட்ட 4 பிராந்தியங்கள் ரஷியாவுடன் இணைக்கப்பட்டுள்ளதாக மாஸ்கோவின் க்ரெம்லின் மாளிகையின் புனித ஜார்ஜ் அரங்கில் அதிபர் புதின் அறிவித்துள்ளார்.
உக்ரைனில் உள்ள டானட்ஸ்க், லூகன்ஸ்க், ஸ்பெரெசியா, கெர்சன் ஆகிய பகுதிகளை இணைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுளளது. இந்த பகுதிகளில் இதற்கு முன்பாக பொது வாக்கெடுப்பை ரஷியா நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், உக்ரைனின் பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைக்கும் திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ஐ.நா.சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் விடுத்துள்ள பதிவில், ரஷியாவின் நடவடிக்கைகள் உக்ரைனின் பிராந்தியத்தில் அமைதியைப் பாதிக்கும். இந்த ஆபத்தான தருணத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் சாசனங்களை நிலைநிறுத்த பொதுச்செயலாளர் என்ற முறையில் எனது கடமையை நான் அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் தெளிவாக உள்ளது. ஒரு தேசத்தின் பிரதேசத்தை அச்சுறுத்தல் அல்லது பலத்தைப் பயன்படுத்துவதன் விளைவாக வேறொரு தேசம் தன்னுடன் இணைக்கும் நடவடிக்கையானது ஐ.நா.வின் சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் கோட்பாடுகளை மீறும் நடவடிக்கையாகும் என தெரிவித்தார்.
- மக்கள் சென்ற வாகனங்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆளுநர் கூறி உள்ளார்.
- தாக்குதலில் சிக்கிய வாகனங்கள் தீப்பற்றி எரியும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது
கீவ்:
உக்ரைனின் ஜபோரிஜியா நகரில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதல்களில் 23 பேர் கொல்லப்பட்டனர். 28 பேர் காயமடைந்துள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பை ஜபோரிஜியா பிராந்திய ஆளுநர் ஸ்டாருக் ஆன்லைன் வாயிலாக வெளியிட்டுள்ளார். ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை நோக்கி மக்கள் சென்ற வாகனங்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறி உள்ளார்.
இது தொடர்பாக அவர் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். தாக்குதலில் சிக்கிய வாகனங்கள் தீப்பற்றி எரிவதையும், சாலையில் உடல்கள் கிடப்பதையும் அந்த படங்களில் காண முடிகிறது.
இதுதொடர்பாக ரஷியா தரப்பில் உடனடியாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
- ஏழு மாதமாக நடைபெற்று வரும் போர் மூலம் நான்கு பிராந்தியங்கள் ரஷியா வசம் வந்தன.
- ரஷியாவுடன் இணைவது குறித்து உக்ரைன் மக்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
மாஸ்கோ:
உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷிய படைகள் வசம் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா ஆகிய 4 பிராந்தியங்கள் வந்துள்ளன. கடந்த ஏழு மாதமாக நடைபெற்று வரும் போர் மூலம் இந்த பகுதிகளை ரஷியா கைப்பற்றியது. அவற்றை சுதந்திர பிரதேசங்களாக அங்கீகரிக்கும் ஆணைகளில் ரஷிய அதிபர் புதின் கையெழுத்திட்டுள்ளார். முன்னதாக இந்த 4 பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைத்துக் கொள்வது குறித்து அந்த பகுதிகளை சேர்ந்த மக்களின் விருப்பத்தை தெரிந்து கொள்ள ரஷியா அங்கு பொதுவாக்கெடுப்பை நடத்தியது.
இதில் அந்த பகுதிகளை சேர்ந்த பெரும்பாலான உக்ரைன் மக்கள், ரஷியாவுடன் இணைவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து முதல் கட்டமாக உக்ரைனின் இந்த 4 பிராந்தியங்களையும் சுதந்திர பிரதேசங்களாக ரஷியா அங்கீகரித்துள்ளது.
அடுத்ததாக அவற்றை அதிகாரபூர்வமாக ரஷியாவுடன் இணைத்து கொள்வது தொடர்பான நிகழ்ச்சி ரஷிய அதிபர் மாளிகையில் இன்று கோலகலமாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நான்கு பிராந்தியங்களின் தலைவர்கள் மாஸ்கோ சென்றுள்ளனர். இந்நிலையில் உக்ரைன் பகுதிகளில் ரஷியா நடத்திய வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என்றும், மக்களை கட்டாயப்படுத்தி நடத்தப்பட்ட மோசடி என்றும் உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
- உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 6 மாதத்தைக் கடந்துள்ளது.
- இந்தப் போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
வாஷிங்டன்:
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா தொடங்கிய போர் 6 மாதங்களைக் கடந்துள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு ராணுவ ஆயுத உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகிறது.
இதற்கிடையே, இந்த மாத தொடக்கத்தில் 11.7 பில்லியன் டாலர்களை புதிய அவசர கால ராணுவ மற்றும் பொருளாதார கட்டமைப்புக்காக உக்ரைனுக்கு வழங்குமாறு அமெரிக்க பாராளுமன்றத்தை அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் கேட்டுக் கொண்டார். அவரது வேண்டுகோளை ஏற்று உக்ரைனுக்கு 12 பில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைன் நாட்டிற்கு உதவும் வகையில் மேலும் 12 பில்லியன் டாலர்கள் நிதியுதவி வழங்க அமெரிக்க செனட் சபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
- நடமாடும் வாக்குப்பதிவு மையத்துடன் வீடு வீடாக சென்று வாக்கெடுப்பு நடத்தினர்.
- பொது வாக்கெடுப்பு ஒரு ஏமாற்று வேலை என்று உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. தலைநகர் கிவ், கார் கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.
துறைமுக நகரமான மரியு போலை ரஷிய படைகள் கைப்பற்றியது. அதேபோல் சில நகரங்களையும் ரஷியா தன்வசப்படுத்தியது. தற்போது கிழக்கு உக்ரைனில் ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையே போரில் உக்ரைனின் லுகான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைக்க திட்டமிட்ட ரஷியா, அதற்காக அப்பகுதிகளில் பொது வாக்கெடுப்பை நடத்தியது.
நடமாடும் வாக்குப்பதிவு மையத்துடன் வீடு வீடாக சென்று வாக்கெடுப்பு நடத்தினர். நேற்று வரை 5 நாட்கள் வாக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டது. இதையடுத்து வாக்குகள் எண்ணப்பட்டன.
இந்தநிலையில் உக்ரைனின் பகுதிகளை ரஷியாவுடன் இணைப்பதற்கான வாக்கெடுப்பில் வெற்றி கிடைத்துள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.
ரஷிய கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு லுகான்ஸ்க் பகுதியில் 98.42 சதவீதம் பேர் ரஷியாவுடன் இணைப்புக்கு ஆதரவாக வாக்களித்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜபோரி ஜியாவில் 93.11 சதவீதமும், தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சனில் 87.05 சதவீதமும், டொனெட்ஸ்கில் 99.23 சதவீதமும், ரஷியாவுடன் இணைவதற்கு ஆதரவாக வாக்களித்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாக்கெடுப்பில் ரஷியாவுக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளதாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தநிலையில் உக்ரைன் பகுதிகளை ரஷியாவிடன் இணைத்து கொள்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிபர் புதின் நாளை மறுநாள் (30-ந்தேதி) அறிவித்து உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக இங்கிலாந்து உளவுத்துறை அதிகாரிகள் கூறும்போது, "ரஷிய பாராளுமன்றத்தின் இரு அவைகளும் அதிபர் புதின் 30-ந்தேதி உரையாற்றுகிறார். அப்போது உக்ரைன் பகுதிகளை ரஷியாவுடன் இணைத்து கொள்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை புதின் வெளியிட வாய்ப்பு உள்ளது" என்றனர்.
இந்த பொது வாக்கெடுப்பு ஒரு ஏமாற்று வேலை என்று உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, "ரஷியா கைப்பற்றிய பகுதிகளில் உள்ள மக்களை உக்ரைன் பாதுகாக்கும். இந்த வாக்கெடுப்புகள் ஒரு கேலிக்கூத்தாக உள்ளது. வாக்கெடுப்புக்கு பிறகு ரஷியாவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு ஏதும் இல்லை" என்றார்.
- எல்லையைத் தாண்டினால், பேரழிவு விளைவுகள் ஏற்படும்.
- ரஷியாவிற்கு அமெரிக்கா தீர்மானமாக பதிலளிக்கும்.
வாஷிங்டன்:
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், மேற்கத்திய நாடுகளால் ரஷியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்துவதை தவிர்க்க முடியாது எனவு அந்நாட்டு அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசர் ஜேக் சல்லிவன், உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதலை நடத்துப் போவதாக தெரிவித்துள்ள ரஷியாவிற்கு அமெரிக்கா தீர்மானமாக பதிலளிக்கும் என்றார். நான் தெளிவாகச் சொல்கிறேன், ரஷ்யா இந்த எல்லையைத் தாண்டினால், பேரழிவு விளைவுகள் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உக்ரைனில் ஆக்கிரமித்துள்ள 4 பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைப்பது குறித்த நடத்தப்படும் பொது வாக்கெடுப்பு நிறைவு பெற்றதும் ரஷிய படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து தெரிவித்த சல்லிவன், உக்ரைனில் நடைபெறும் வாக்கெடுப்பு வலிமை அல்லது நம்பிக்கையின் அடையாளங்கள் அல்ல என்றார்.
இது ரஷிய ராணுவத்திற்கான திரும்ப அழைப்பு என்றும், ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் இருந்து அவர்கள் ஓட முயற்சிக்கிறார்கள் என்பதை காட்டுகிறது எனவும் அவர் கூறினார். உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவும் புதினும் எப்படி மோசமாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான அறிகுறிகள் அவை என்றும் சல்லிவன் தெரிவித்தார்.
- ரஷியா-ஜார்ஜியா எல்லையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
- பல கி.மீ. தொலைவுக்கு கார்கள் அணிவகுத்து நிற்கின்றன.
மாஸ்கோ :
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போரை தொடங்கி இன்றுடன் (சனக்கிழமை) 7 மாதங்கள் ஆகிறது. மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் ராணுவம் ரஷிய படைகளை எதிர்த்து தொடர்ந்து சண்டையிட்டு வருகிறது.
இதனால் உக்ரைனை தன்வசப்படுத்தும் ரஷியாவின் எண்ணம் ஈடேறுவதில் சிக்கல் நீடிக்கிறது. எனினும் இலக்கை அடையும் வரை போர் தொடரும் என ரஷிய அதிபர் புதின் திட்டவட்டமாக கூறி வருகிறார்.
அதை உறுதிப்படுத்தும் விதமாக உக்ரைன் மீதான போரை மேலும் தீவிரப்படுத்த 3 லட்சம் ரஷியர்களை அணி திரட்ட உள்ளதாக அண்மையில் அறிவித்தார்.
போருக்காக அணி திரட்டப்படுபவர்கள் யாரும் கட்டாயப்படுத்தப்பட மட்டார்கள் என்றும், ஆயுதப்படைகளில் பணியாற்றியவர்கள், பொருத்தமான அனுபவம் உள்ளவர்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் ரஷிய ராணுவ மந்திரி செர்ஜி ஷோய்கு கூறினார்.
எனினும் போருக்கு அணி திரட்டும் புதினின் அறிவிப்பு வெளியானது முதல் ரஷியாவை சேர்ந்த ஆண்கள் அவசர அவசரமாக நாட்டை விட்டு வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரஷியர்கள் தங்களின் அண்டை நாடான ஜார்ஜியாவுக்கு செல்ல விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் போரில் பங்கேற்பதை தவிர்க்க விரும்பும் ரஷிய ஆண்கள் பலரும் சாலை மார்க்கமாக ஜார்ஜியாவுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.
இதன் காரணமாக ரஷியா-ஜார்ஜியா எல்லையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல கி.மீ. தொலைவுக்கு கார்கள் அணிவகுத்து நிற்கின்றன.
அதேபோல் ரஷியாவின் மற்றொரு அண்டை நாடான பின்லாந்தில் ஒரே இரவில் அந்த நாட்டுக்கு வரும் மக்களின் கூட்டம் அதிகமாகியிருப்பதாக பின்லாந்து அரசு தெரிவித்துள்ளது. சாலை மார்க்கமாக மக்கள் வந்த வண்ணம் இருப்பதாக பின்லாந்து அதிகாரிகள் கூறுகின்றனர்.
புதினின் அறிவிப்பை தொடர்ந்து, ரஷியாவில் இருந்து அண்டை நாடுகளுக்கு செல்லும் விமானங்களில் டிக்கெட் கட்டணம் பன் மடங்கு உயர்ந்ததோடு, குறிப்பிட்ட நாடுகளுக்கு செல்லும் விமான டிக்கெட்டுகள் முற்றிலுமாக விற்று தீர்ந்துவிட்டன.
இது ஒருபுறம் இருக்க 18 முதல் 65 வயது வரையுள்ள ஆண்களுக்கு விமான டிக்கெட் விற்பனை செய்வதை ரஷிய விமான நிறுவனங்கள் நிறுத்திவிட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.
இதனாலேயே ரஷியாவை சேர்ந்த ஆண்கள் சாலை மார்க்கமாக அண்டை நாடுகளை நோக்கி படையெடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே சமயம் நாட்டை விட்டு ஆண்கள் வெளியேறுவது தொடர்பாக வரும் தகவல்கள், மிகைப்படுத்தப்பட்டவை என ரஷிய அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
- ராணுவ ஆள்சேர்ப்பு பற்றிய அறிவிப்புக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.
- புதின் அறிவிப்பு வெளியிட்ட பிறகு பலர் வெளிநாடுகளுக்கு செல்வதில் மும்முரமாக உள்ளனர்.
மாஸ்கோ:
உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்துவதற்காக, 3 லட்சம் வீரர்களை திரட்ட ரஷிய அதிபர் புதின் திட்டமிட்டு உள்ளார். இதுதொடர்பாக தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் புதின், ஆயுதப்படைகளில் பணியாற்றியவர்கள் பொருத்தமான அனுபவம் உள்ளவர்கள் ராணுவத்திற்கு அழைக்கப்படுவார்கள் என்று அறிவித்தார். ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களை மீண்டும் அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் ராணுவ ஆள்சேர்ப்பு பற்றிய அறிவிப்புக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. பொதுமக்கள் பேரணி, போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போர் வேண்டாம். உடனே நிறுத்துங்கள் என்று கோஷங்களை எழுப்பினர். போலீசார் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து போராடுவோர் கைது செய்யப்படுகின்றனர். நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட 1300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இதற்கிடையே ராணுவ ஆள்சேர்ப்பு பற்றி புதின் அறிவிப்பு வெளியிட்ட பிறகு ரஷியாவில் இருந்த பலர் வெளிநாடுகளுக்கு செல்வதில் மும்முரமாக உள்ளனர். போரில் ஈடுபட விரும்பாத மக்கள் நாட்டில் இருந்து வெளியேறுகிறார்கள். ரஷியாவில் இருந்து புறப்படும் விமானங்கள் இந்த வாரம் முழுவதுமாக கிட்டத்தட்ட முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன.
ராணுவச் சட்டம் விதிக்கப்படலாம் என்ற அச்சத்தின் மத்தியில், ரஷிய விமான நிறுவனங்கள் 18 முதல் 65 வயதுக்குட்பட்ட (போருக்கு தகுதியான வயது) ரஷிய ஆண்களுக்கு டிக்கெட் விற்பனை செய்வதை நிறுத்தியுள்ளதாக பல்வேறு செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகத்திடம் அனுமதி பெற்ற இளைஞர்கள் மட்டுமே நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்று ஃபார்ச்சூன் செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரைனின் லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் மாகாணங்களை அதிகாரப்பூர்வமாக இணைத்து ரஷிய பிரதேசமாக மாற்ற, அதிபர் புதினுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில், இந்த வார இறுதியில் இரண்டு மாகாணங்களிலும் வாக்கெடுப்பு நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்