search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ukraine russia war"

    • உக்ரைன் மீது பிப்ரவரி 24-ம் தேதி அன்று ரஷியாவின் படையெடுப்பு தொடங்கியது.
    • இதுவரை 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என ஐ.நா. தெரிவித்துள்ளது.

    கீவ்:

    உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 150-வது நாளை நெருங்கி வருகிறது. இந்த போர் உலக அளவில் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போரினால் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

    ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் விதித்துள்ளன.

    இந்நிலையில், போர் தொடங்கியதில் இருந்து உக்ரைனில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 5,110 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6,752 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    உக்ரைன் மீது இரவு, பகல் பாராமல் ஏவுகணைகள் மற்றும் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு கூறி உள்ளது.

    • உக்ரைன் மீது ரஷியா தொடுத்து வரும் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
    • இந்தப் போரில் பல்வேறு வகையான ஏவுகணைகளை ரஷியா ஏவியுள்ளது.

    கீவ்:

    உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடுத்து வரும் போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. உக்ரைன் நகரங்கள் மீது இரவு, பகல் பாராமல் ஏவுகணைகள் மற்றும் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன ரஷிய படைகள்.

    இந்நிலையில், உக்ரைன் விமானப்படை தனது முகநூல் பக்கத்தில், ரஷியா 3000-க்கு மேற்பட்ட ஏவுகணைகளை வீசியுள்ளது என குற்றம் சாட்டியுள்ளது.

    குரூஸ் ஏவுகணைகள், வான் மேற்பரப்பு ஏவுகணைகள், பாலிஸ்டிக் ஏவுகணை அமைப்புகள், பாஸ்டன் கடலோர அமைப்பின் ஓனிக்ஸ் ஏவுகணைகள் உள்ளிட்ட பல்வேறு ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தின.

    கப்பல் கட்டும் தளம் உள்பட தொழில்துறை கட்டமைப்புகள், பொது உள்கட்டமைப்புகளை குறிவைத்து தொடர்ச்சியாக ஏவுகணைகள் வீசப்பட்டன என தெரிவித்துள்ளது.

    • உக்ரைன் பாதுகாப்பு படையின் உளவுப்பிரிவு தலைவரை பணிநீக்கம் செய்யப்பட்டார்.
    • இதேபோல் அந்நாட்டு அரசு வழக்கறிஞரும் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 5 மாதத்தை நெருங்கியுள்ளது. இந்தப் போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

    ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் விதித்துள்ளன.

    இதனிடையே, உக்ரைனில் ஆக்கிரமித்த பகுதிகளை ரஷியா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர்.

    இந்நிலையில், உக்ரைன் உளவுப்பிரிவு தலைவர் மற்றும் அரசு பொது வழக்கறிஞர் ஆகியோரை பணிநீக்கம் செய்து அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உத்தரவிட்டுள்ளார். அரசு பொது வழக்கறிஞரின் அலுவலகங்களில் பணியாற்றி வருபவர்கள், உக்ரைன் உளவுப்பிரிவு தலைவர் உள்பட மூத்த அதிகாரிகளை அதிபர் ஜெலன்ஸ்கி பணிநீக்கம் செய்துள்ளார்.

    இந்த இரு பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள், வீரர்கள் ரஷியாவுக்கு ஆதரவாக செயல்பட்டதால் அந்தப் பிரிவுகளின் தலைவர்களை நீக்கியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அணுமின் நிலைய வளாகத்தில் ரஷியா பல்வேறு ஆயுதங்களை குவித்து வைத்துள்ளது
    • பதற்றமான சூழல் நிலவுவதாக உக்ரைன் அணுசக்தி நிறுவன தலைவர் கூறி உள்ளார்.

    கீவ்:

    தென் கிழக்கு உக்ரைனில் டினிப்ரோ ஆற்றங்கரையில், ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஜியா அணு மின் நிலையம் அமைந்துள்ளது. தொடர் தாக்குதல்களுக்கு பிறகு இந்த அணுமின் நிலையத்தை ரஷிய படைகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தன. அங்கு உக்ரைன் ஊழியர்கள் இன்னும் பணியாற்றி வந்தாலும், அணு மின் நிலைய வளாகம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் முழுவதும் ரஷிய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளன.

    இந்நிலையில், அணு மின் நிலையம் மற்றும் அந்த வளாகம் முழுவதையும் ரஷிய படைகள் தனது ராணுவ தளமாக பயன்படுத்திவருகிறது. அங்கு ஏவுகணை அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை குவித்து வைத்துள்ள ரஷியா, அங்கிருந்தபடி சுற்றி உள்ள பகுதிகள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    பயங்கர ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பதால் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதாகவும், சுமார் 500 ரஷிய வீரர்கள் அப்பகுதியில் முகாமிட்டிருப்பதாகவும் உக்ரைன் அணுசக்தி நிறுவன தலைவர் கூறி உள்ளார். ரஷிய வீரர்கள் அப்பகுதியை விட்டு வெளியேறுவதற்கான அழுத்தம் போதுமான அளவில் இல்லை என்றும், இந்த விஷயத்தில் உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையே சமமான நிலைப்பாட்டை எடுத்து சர்வதேச அணுமின் நிறுவனம் அரசியல் செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

    • ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 23 பேர் கொல்லப்பட்டனர்.
    • அப்பாவி பொதுமக்களை குறிவைத்து ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது என உக்ரைன் அதிபர் குற்றம்சாட்டினார்.

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி 5 மாதத்தை நெருங்கினாலும் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

    ரஷியாவின் மும்முனை தாக்குதலுக்கு உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் சின்னாபின்னமாகிவிட்டது. ஆனாலும் உக்ரைன் வீரர்கள் அசராமல் எதிர்த்துப் போரிட்டு வருவதால் இன்னும் சில நகரங்களைப் பிடிக்க முடியாமல் ரஷியா திணறி வருகிறது.

    இந்நிலையில், ரஷியா ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களில் 70 சதவீதம் ராணுவம் அல்லாத இலக்குகள் மீதுதான் என உக்ரைன் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷியா நடத்தி வரும் தாக்குதல்களில் 30 சதவீதம் மட்டுமே ராணுவ இலக்குகளை கொண்டுள்ளது. மக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்தே மற்ற 70 சதவீத தாக்குதல்களை நடத்தி வருகிறது.எனவே ரஷியாவை பயங்கரவாத நாடாக அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    • உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 4 மாதத்தைக் கடந்துள்ளது.
    • இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

    கீவ்:

    மத்திய உக்ரேனிய நகரமான வின்னிட்சியாவின் மையப்பகுதியில் இன்று 3 ரஷிய ஏவுகணைகள் தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 22 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 100 பேர் காயமடைந்தனர் என மாநில அவசர சேவை தெரிவித்துள்ளது.

    ஏவுகணைகள் அலுவலகக் கட்டிடங்கள் மீது தாக்கி அருகிலுள்ள குடியிருப்பு கட்டிடங்களை சேதப்படுத்தியது. இதனால் ஏற்பட்ட பெரிய தீ விபத்து கார் நிறுத்துமிடத்திற்கு பரவி வாகனங்களை எரித்தது என போலீசார் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக, அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், உக்ரைனில் உள்ள குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்களை குறிவைத்து ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது என குற்றம் சாட்டினார்.

    • உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்யா பயன்படுத்திய முக்கிய தந்திரத்தில் ஒன்று பொருளாதார நெருக்கடி உருவாக்குவதாகும்.
    • உலகம் முழுவதும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

    உக்ரைன் படையெடுப்பின் போது உணவுப் பொருட்கள் தடைப்பட்டதால் இலங்கை மட்டுமின்றி உலகம் முழுவதும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

    உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்யா பயன்படுத்திய முக்கிய தந்திரத்தில் ஒன்று பொருளாதார நெருக்கடி உருவாக்குவதாகும். விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட இடையூறு காரணமாக உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறையை அனுபவிக்கும் பல நாடுகள் ரஷியாவின் நிகழ்ச்சி நிரலை அனுபவித்துள்ளனர் என்று ஜெலென்ஸ்கி கூறினார்.

    சியோலில் நடைபெற்ற ஆசிய தலைமைத்துவ மாநாட்டில் அண்மையில் உரையாற்றியபோது, ​​இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை எடுத்துரைத்த அவர், "அதிர்ச்சியூட்டும் உணவு மற்றும் எரிபொருள் விலையேற்றம் ஒரு சமூக பிளவுக்கு வழிவகுத்தது. அது எப்படி முடிவடையும் என்பது இப்போது யாருக்கும் தெரியாது" என்றார்.

    • உக்ரைன் மீது ரஷியா 139-வது நாளாக போர் தொடுத்து வருகிறது.
    • இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா 139-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

    ரஷியாவை எதிர்த்து தொடர்ந்து போராடி வரும் உக்ரைனில் இருந்து பல மருத்துவ ஊழியர்கள் வெளியேறிய நிலையில், சில மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ள்ன. மற்ற மருத்துவமனைகள் குண்டுவீசி தாக்கப்பட்டுள்ளன. உக்ரைனில் இருக்கும் சுகாதாரப் பணியாளர்கள் இக்கட்டான சூழ்நிலையில் தங்கள் வேலையைச் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், அமெரிக்கா மற்றும் உலக வங்கியிடமிருந்து கூடுதலாக 1.7 பில்லியன் டாலர் நிதி உதவியை உக்ரைன் பெற்றுள்ளது. இந்த நிதியின் மூலம் பாதிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளை வழங்க முடிவு செய்துள்ளது.

    இதுதொடர்பாக, உக்ரைன் சுகாதார மந்திரி கூறுகையில், போரின் பெரும் சுமை காரணமாக ஒவ்வொரு மாதமும் சுகாதார ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது மிகவும் கடினமாகி வருகிறது. 1.7 பில்லியன் டாலர் என்பது மற்றொரு நிதி உதவி மட்டுமல்ல, இது ஒரு முதலீடாகும். இது எங்களை வெற்றிக்கு ஒரு படி நெருங்க வைக்கிறது என தெரிவித்தார்.

    • ஆயுதம் தாங்கும் திறன் கொண்ட டிரோன்களை ரஷியாவிற்கு ஈரான் வழங்குகிறது.
    • டிரோன் பயன்பாடு குறித்து ரஷிய படைகளுக்கு பயிற்சி அளிக்க ஈரான் தயாராகி வருகிறது.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா அந்நாட்டின் பல நகரங்களைக் கைப்பற்றியபோது, உக்ரைன் ராணுவம் தொடர்ந்து ரஷிய படையை எதிர்த்து சண்டையிட்டு வருகிறது. இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம், நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றன.

    இதற்கிடையே, ரஷியாவுக்கு ஈரான் ஆயுத உதவி வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்பில் பயன்படுத்துவதற்கு ஆயுதம் தாங்கும் திறன் கொண்ட டிரோன்கள் உள்பட நூற்றுக்கணக்கான ஆளில்லா வான்வழி வாகனங்களை ரஷியாவிற்கு ஈரான் வழங்கி வருகிறது. தங்களுக்கு கிடைத்த தகவலின்படி அவற்றை பயன்படுத்துவது குறித்து ரஷிய படைகளுக்கு பயிற்சி அளிக்கவும் ஈரான் தயாராகி வருகிறது என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அடுத்த வாரம் ஈரான் செல்கிறார். சிரியா விவகாரம் குறித்து ஈரான், துருக்கியுடன் நடைபெற உள்ள முத்தரப்பு பேச்சுவார்த்தையில் அதிபர் புதின் பங்கேற்க உள்ளார் என கிரெம்ளின் மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ரஷியாவுக்கு ஈரான் ஆயுத உதவி வழங்குவதாக அமெரிக்கா குற்றம் சுமத்திய நிலையில், அதிபர் புதினின் ஈரான் பயணம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

    • ஆயுதம் தாங்கும் திறன் கொண்ட ட்ரோன்களை ரஷியாவிற்கு ஈரான் வழங்குகிறது.
    • ட்ரோன் பயன்பாடு குறித்து ரஷிய படைகளுக்கு பயிற்சி அளிக்க ஈரான் தயாராகி வருகிறது.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா அந்நாட்டின் பல நகரங்களை கைப்பற்றிய போது, உக்ரைன் ராணுவம் தொடர்ந்து ரஷிய படையை எதிர்த்து சண்டையிட்டு வருகிறது. இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம், நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் ரஷியாவுக்கு ஈரான் ஆயுத உதவி வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், உக்ரைன் மீதான படையெடுப்பில் பயன்படுத்துவதற்கு ஆயுதம் தாங்கும் திறன் கொண்ட ட்ரோன்கள் உட்பட நூற்றுக்கணக்கான ஆளில்லா வான்வழி வாகனங்களை ரஷியாவிற்கு ஈரான் வழங்கி வருவதாக கூறினார். தங்களுக்கு கிடைத்த தகவலின்படி அவற்றை பயன்படுத்துவது குறித்து இந்த மாதத்தில் ரஷிய படைகளுக்கு பயிற்சி அளிக்கவும் ஈரான் தயாராகி வருகிறது என்றும் அவர் கூறினார்.

    முன்னதாக சவுதி அரேபியாவைத் தாக்க ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் இதேபோன்ற ஆளில்லா வான்வழி வாகனங்களை வழங்கியதாக சல்லிவன் குறிப்பிட்டிருந்தார். அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியாவிற்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து தமது சுற்றுப்பயணத்தின் போது பைடன் ஆலோசிக்க உள்ள நிலையில், ஈரான் குறித்த சல்லிவன் குற்றச்சாட்டு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ==

    • உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷிய படைகள் வெடிகுண்டு தாக்குதல்களில் ஈடுபட்டன.
    • டொனெட்ஸ்க் நகரில் ரஷிய படை நடத்திய ஏவுகணை தாக்குதலில் 5 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு சேதமடைந்தது.

    கீவ்:

    உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷிய படைகள் வெடிகுண்டு தாக்குதல்களில் ஈடுபட்டன. 20-க்கும் மேற்பட்ட பீரங்கி, மோட்டார் மற்றும் ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் எல்லையை நோக்கி ரஷிய படைகள் முன்னேறி வருவதாகவும் கிழக்கு லுஹான்ஸ்க் பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் நகரின் மீது ரஷிய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 5 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று பலத்த சேதமடைந்தது. இந்த தாக்குதலால் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி 15 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும் 15-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியில் உக்ரைன் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

    • உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கும் அமெரிக்கா ராணுவம், நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது.
    • உக்ரைனுக்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் ராணுவ உதவிகளை வழங்குவதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீது ரஷியா தொடுத்து வரும் போர் 150-வது நாளை நெருங்கியுள்ளது. போரில் உக்ரைனின் பல நகரங்கள் ரஷியாவிடம் வீழ்ந்தபோதும், உக்ரைன் ராணுவம் தொடர்ந்து ரஷிய படையை எதிர்த்து சண்டையிட்டு வருகிறது.

    இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்கா ராணுவம், நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை உக்ரைனுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது.

    இந்நிலையில், உக்ரைனுக்கு 400 மில்லியன் டாலர் மதிப்பில் ராணுவ உதவிகளை வழங்குவதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். அதிநவீன ஏவுகணை அமைப்புகள், பீரங்கி குண்டுகள், ராணுவ கவச வாகனங்கள், ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள் உள்ளிட்ட திறன்மிக்க ஆயுதங்கள் இத்தொகுப்பில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டது.

    ×