search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Urge"

    • போலீஸ்நிலையப் பணிகளை கவனிக்க உதவி ஆய்வாளர் ஒருவர், தேவை படுகிறது.
    • பொதுமக்கள் புகார் மனு கொண்டு வந்தால், சம்பந்தப்பட்ட எதிரியை அழைத்து வரக் கூட போலீசார் இருப்பது இல்லை.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் போலீஸ் நிலையம் இடைப்பாடி சாலையில், பாறையூர், பள்ளிபாளையம் சாலையில் குப்பாண்டபாளையம், சேலம் சாலையில் 4 வழிச்சாலை, மேற்கில் பவானி காவிரி ஆற்றின் பாலம் ஆகியவை எல்லையாக உள்ளது.

    தொழில் நிறுவனங்கள்

    மிகப்பெரிய பரப்பளவு கொண்ட இந்த பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள்,

    500-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறை கள், இதர தொழில் நிறுவனங்கள், அரசு, மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், சேலம்-கோவை புறவழிச்சாலையில் இரவு பகலாக செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் என குமாரபாளையம் போலீஸ் நிலையத்தின் எல்லை விரிவடைந்து கிடக்கிறது.

    குமாரபாளையம் நகராட்சி பகுதி தவிர தட்டான்குட்டை, குப்பாண்டபாளையம், பல்லக்காபாளையம் ஆகிய 3 ஊராட்சி பகுதிகளும் உள்ளன. நகராட்சியில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையும், 3 ஊராட்சிகளில் சேர்ந்து மேலும் ஒரு லட்சம் மக்கள் தொகை என சுமார் 2 லட்சம் மக்கள் தொகை கொண்ட பகுதியாகவும் , குமாரபாளையம் போலீஸ் நிலையம் அதிகார வரம்புக்குள் இருந்து வருகின்றன.

    கூடுதல் போலீஸ்

    இந்நிலையில்,போலீஸ் நிலையத்தில் நுழைவு வாயில் காவலர், எழுத்தர், நீதிமன்றத்துக்கான தலைமைக்காவலர், ஆய்வாளரின் வாகன டிரைவர், புறவழிச்சாலையில் இரு போலீசார், போலீஸ்நிலையப் பணிகளை கவனிக்க உதவி ஆய்வாளர் ஒருவர், தேவை படுகிறது. சமீப காலமாக அத்தியாவசிய பணிகளில் போலீசார் இல்லாமல் எழுத்தர், தன் பணியுடன் போலீஸ்(சென்ட்ரி) பணியை கவனிக்கிறார். அதிக பட்சம் 4 அல்லது 5 பேர் மட்டுமே இருக்க வேண்டிய நிலையில் 2 போலீசார் மட்டுமே பணியில் இருக்கக்கூடிய நிலை இருந்து வருகிறது.

    பொதுமக்கள் அதிருப்தி

    பொதுமக்கள் புகார் மனு கொண்டு வந்தால், சம்பந்தப்பட்ட எதிரியை அழைத்து வரக் கூட போலீசார் இருப்பது இல்லை. புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் அதிருப்திக்கு ஆளாகும் நிலை உள்ளது. போலீஸ் நிலையத்தில் இருக்கும் போலீசார் எண்ணிக்கை பார்த்தால் சுமார் 40 பேர் இருப்பதாகக்கூறப்படு கிறது. ஆனால் அதிக பட்சம் 5 பேருக்கு மேல் இருப்பது இல்லை.

    ஆகவே போதிய அளவில் புதிய போலீசாரை நியமித்து சட்ட ஒழுங்கு குற்றங்களை தடுக்கவும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருமங்கலம் அரசு பெண்கள் பள்ளி வளாகத்தில் கழிவுநீர் செல்லும் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
    • துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக மாணவிகள் தலைமை ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1800 மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    திருமங்கலம் கல்வி மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக விளங்கக்கூடிய அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கழிவுநீர் செல்லும் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் கழிவுநீர் செல்ல வழி இன்றி பாதாள சாக்கடை வழியாக பள்ளி வளாகத்திற்குள் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    கழிவுநீர் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது என்று மாணவிகள் தலைமை ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து தலைமை ஆசிரியர், நகராட்சி ஆணையாளருக்கு புகார் தெரிவித்தார். அதன் பின்னரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மாணவிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    இது குறித்து மாணவிகள் கூறியதாவது:-

    கடந்த ஒரு வாரமாக கழிவுநீர் செல்லக்கூடிய பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவறையில் இருந்து வரக்கூடிய தண்ணீர் அனைத்தும் வெளியேறி பள்ளி வளாகத்தில் தேங்கி உள்ளது. அங்கிருந்து துர்நாற்றம் வீசுவதால் மதிய வேளையில் உணவு உண்ண கூட முடியாத சூழ்நிலை உள்ளது.

    மைதான பகுதியில் தண்ணீர் தேங்கி இருப்பதால் கடும் அவதிக்குள்ளாகி வருகிறோம். எனவே சம்பந்தப்பட்டநகராட்சி அதிகாரிகள் பாதாள சாக்கடை அடைப்பை நீக்கி கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×