என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "VAO Murdered"
- கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி அன்று மதியம் லூர்து பிரான்சிஸ் தனது அலுவலகத்தில் பணியில் இருந்தார்.
- வழக்கில் மொத்தம் 51 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்ட நிலையில் 31 பேர் விசாரிக்கப்பட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சூசைபாண்டியாபுரத்தை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் (வயது 53). இவர் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர் அப்பகுதியில் நடைபெற்று வந்த ஆற்று மணல் கடத்தல் குறித்து போலீசுக்கு புகார் அளித்து வந்தார். கலியாவூரைச் சேர்ந்த ராமசுப்பு என்ற ராமசுப்பிரமணியன் மற்றும் மாரிமுத்து ஆகியோர் மீதும் தாமிரபரணி ஆற்றில் மணல் கடத்துவது தொடர்பாக போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில், அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் கடந்த 27.10.2022 அன்று ஒரு வழக்கும், 13.4.2023 அன்று மற்றொரு வழக்கும் பதிவு செய்து உள்ளனர். இதனால் லூர்து பிரான்சிஸ் மேல் அவர்களுக்கு விரோதம் ஏற்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி அன்று மதியம் லூர்து பிரான்சிஸ் தனது அலுவலகத்தில் பணியில் இருந்தார். அப்போது ராமசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகிய 2 பேரும் அலுவலகத்துக்குள் புகுந்து லூர்து பிரான்சிசை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.
பட்டப்பகலில் அலுவலகத்துக்குள் புகுந்து கிராம நிர்வாக அதிகாரி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராமசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இதில் ராமசுப்பிரமணியன் மீது 3 கொலை முயற்சி, சாராயம் காய்ச்சியதாக 5 வழக்குகள், வழிப்பறி உட்பட மொத்தம் 15 வழக்குகளும், மாரிமுத்து மீது மணல் திருட்டு உட்பட 6 வழக்குகளும் ஏற்கனவே நிலுவையில் உள்ளன.
இந்த கொலை வழக்கை முறப்பநாடு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், புதுக்கோட்டையைச் சேர்ந்த பொன் காந்திமதி நாதன் என்பவர் வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என்று கோரி மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கை முறப்பநாடு இன்ஸ்பெக்டர் ஜமால் விசாரிக்கக்கூடாது என்றும், அதற்கு பதிலாக தூத்துக்குடி ரூரல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் விசாரிக்க வேண்டும் என்றும் கடந்த மே மாதம் 25-ந்தேதி உத்தரவு பிறப்பித்தார். மேலும் ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, 2 மாதங்களில் விசாரித்து தீர்ப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் மொத்தம் 51 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்ட நிலையில் 31 பேர் விசாரிக்கப்பட்டனர். தொடர்ந்து ஜூன் 21-ந்தேதி ஸ்ரீவைகுண்டம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு ஜூலை 17-ந்தேதி ஸ்ரீவைகுண்டம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இருந்து தூத்துக்குடி செசன்சு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மாவட்ட முதன்மை நீதிபதி செல்வம் முன்னிலையில் சாட்சிகள் விசாரணை நடந்து வந்தது. தொடர்ந்து இருதரப்பினரிடமும் குறுக்கு விசாரணை நடந்தது. பின்னர் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த வழக்கில் நீதிபதி செல்வம் நேற்று பிற்பகல் 1.15 மணிக்கு தீர்ப்பு கூறினார். அதில் ராமசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பு அளித்தார்.
வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டதையொட்டி, ராமசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகிய 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மோகன்தாஸ் சாமுவேல் ஆஜரானார்.
மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இந்த வழக்கில் கொலை நடந்த 4½ மாதங்களில் தீர்ப்பு கூறப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
- முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ் சேவியர்.
- வி.ஏ.ஓ. கொலை தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ் சேவியர் (வயது 54). கடந்த ஏப்ரல் 25-ந் தேதி இவரை மணல் கடத்தல் கும்பல் அவர் பணியாற்றி வந்த வி.ஏ.ஓ. அலுவலகத்தில் வைத்து வெட்டிக்கொலை செய்தது.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு கலியாவூரை சேர்ந்த ராமசுப்பு, மாரிமுத்து ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையின்பேரில், கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இதற்கிடையே இந்த வழக்கில் முறப்பநாடு போலீஸ் நிலைய ஏட்டு சரவணன், எஸ்.பி. தனிப்பிரிவு காவலர் மகாலிங்கம், முறப்பநாட்டில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி தற்போது சாயர்புரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் சுரேஷ் ஆகியோர் உரிய முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்தது.
இது தொடர்பாக ரூரல் டி.எஸ்.பி. சுரேஷ் விசாரணை நடத்தி நடத்தி வந்தார்.
இந்நிலையில் ஏட்டு சரவணன், தனிப்பிரிவு காவலர் மகாலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகிய 3 பேரும் நீலகிரி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கடந்த 25-ந்தேதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- வழக்கை முறப்பாடு இன்ஸ்பெக்டர் ஜமால் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்துங்கநல்லூர்:
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கடந்த 25-ந்தேதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மணல் கடத்தல் தொடர்பாக லூர்து பிரான்சிஸ் போலீசில் புகார் செய்தததால் அவரை கலியாவூரை சேர்ந்த ராமசுப்பு, அவரது நண்பரான மாரிமுத்து ஆகிய 2 பேர் வெட்டிக்கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் போலீசார் அவர்கள் இருவரையும் விசாரணைக்காக காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இந்த வழக்கை முறப்பாடு இன்ஸ்பெக்டர் ஜமால் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த கொலை வழக்கை விசாரணை நடத்தும் சிறப்பு புலனாய்வு அதிகாரியாக தூத்துக்குடி ஊரக டி.எஸ்.பி. சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கர்க் பிறப்பித்துள்ளார்.
- தமிழகத்திற்கு ஆந்திராவில் இருந்து கஞ்சா சப்ளை செய்யப்படுவதாக தெரிய வந்துள்ளது.
- தூத்துக்குடி மாவட்டத்தில் 450 கிலோ கஞ்சாவும், அம்பாசமுத்திரத்தில் 100 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஸ்ரீவைகுண்டத்தில் கிராம நிர்வாக அதிகாரி கொலை வழக்கில் 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அதில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் மீது ஏற்கனவே 4 வழக்குகள் உள்ளன. மீதமுள்ள மற்றொரு குற்றவாளியை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மணல் கடத்தல் விவகாரம் தொடர்பாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. தற்போது கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி மணல் கடத்தல் தொடர்பாக ஏற்கனவே புகார் அளித்திருந்தார். அந்த புகார் மனு மீது விசாரணை நடத்தப்பட்டு வந்தது. சம்பந்தப்பட்ட 2 பேரும் கேரளாவில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. அவர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வந்தோம். அதற்குள் அவர்கள் 2 பேரும் இங்கு வந்து மதுபோதையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
கஞ்சா மற்றும் குட்கா தொடர்பாக ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பல வழக்குகளில் தொடர்புடையவர்களின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. தமிழகத்திற்கு ஆந்திராவில் இருந்து கஞ்சா சப்ளை செய்யப்படுவதாக தெரிய வந்துள்ளது. அதன்படி விசாரணை நடத்தி வருகிறோம். சிலரை எல்லையில் வைத்து பிடித்துள்ளோம்.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் 450 கிலோ கஞ்சாவும், அம்பாசமுத்திரத்தில் 100 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- லூர்து பிரான்சிஸ் உடல் பிரேத பரிசோதனை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் இன்று நடந்தது.
- புதுக்கோட்டையில் உள்ள கல்லறை தோட்டத்தில் லூர்து பிரான்சிஸ் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
செய்துங்கநல்லூர்:
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சூசைபாண்டியாபுரத்தை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் (வயது 55). இவர் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார்.
நேற்று அவர் வழக்கம் போல் அலுவலகத்துக்கு வந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது, அங்கு வந்த 2 மர்ம நபர்கள் அலுவலகத்துக்குள் புகுந்து அவரை கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர்
இதில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை பொதுமக்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்திலேயே லூர்து பிரான்சிஸ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், துணை சூப்பிரண்டு (பொறுப்பு) சத்யராஜ், முறப்பநாடு இன்ஸ்பெக்டர் ஜமால், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தாமிரபரணி ஆற்றில் இருந்து கலியாவூரை சேர்ந்த ராம சுப்பிரமணியன் என்பவர் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ளார்.
இதுதொடர்பாக முறப்பநாடு போலீசில் லூர்து பிரான்சிஸ் புகார் அளித்ததன்பேரில், கடந்த 13-ந்தேதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த முன்விரோதத்தில் ராமசுப்பிரமணியனும், அவரது கூட்டாளி மாரிமுத்து என்பவரும் சேர்ந்து லூர்து பிரான்சிசை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ராமசுப்புவை போலீசார் கைது செய்தனர்.
தலைமறைவாக இருந்த மாரிமுத்துவை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு அவரை தீவிரமாக தேடி வந்தனர். செல்போன் சிக்னல் மூலம் மாரிமுத்துவை தேடி வந்த நிலையில், அவர் நெல்லை தாழையூத்து பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, லூர்து பிரான்சிஸ் உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து அறிந்த கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும், கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த சம்பவத்தை அறிந்து, உயிரிழந்த லூர்து பிரான்சிஸ் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கவும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டார். மேலும், வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆஸ்பத்திரிக்கு வந்து, லூர்து பிரான்சின் ஈமச்சடங்கிற்காக ரூ.1 லட்சம் வழங்கினார்.
இந்நிலையில் லூர்து பிரான்சிஸ் உடல் பிரேத பரிசோதனை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் இன்று நடந்தது. பின்னர் அவரது உடல் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதா கிருஷ்ணன் முன்னிலையில் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் உடல் அவரது சொந்த ஊரான புதுக்கோட்டை அருகே உள்ள சூசை பாண்டியா புரத்தில் அடக்கம் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ள புனித ராயப்பர் ஆலயத்தில் நல்லடக்க திருப்பலி நடைபெறுகிறது. அதன்பின்னர் புதுக்கோட்டையில் உள்ள கல்லறை தோட்டத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
- விஏஓ கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த துயரத்தை அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
- கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கோவில்பத்து பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் இன்று மதியம் புகுந்த மர்ம நபர்கள் இருவர், விஏஓ லூர்து பிரான்சிசை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த லூர்து பிரான்சிஸ் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொலை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விஏஓ லூர்து பிரான்சிஸ் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த துயரத்தை அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். கொல்லப்பட்ட விஏஓ குடும்பத்தினருக்கு தனது இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், விஏஓ லூர்து பிரான்சிஸ் குடும்பத்திற்கு அரசு சார்பாக உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 கோடி நிதியுதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
- விஏஓ லூர்து பிரான்சிசை கொலை செய்த இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- விஏஓ கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பத்து பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் இருவர், விஏஓ லூர்து பிரான்சிசை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
படுகாயம் அடைந்த லூர்து பிரான்சிஸ் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விஏஓ லூர்து பிரான்சிசை கொலை செய்த இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்